ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்பன் அறிக்கைக்காக காத்திருக்கும் இலங்கை? கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) குறித்த அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என அகழ்வுக்குப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த காபன் ஆய்வு அறிக்கை, குற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படும் காலத்தை மாத்திரம் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரும் இந்த அறிக்கையினை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், குறித்த அறிக்கை இன்று இலங்கைக்கு அனுப்…
-
- 0 replies
- 183 views
-
-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 168 views
-
-
யாழ். நல்லூரில் இடம்பெற்ற கல்வி ஆய்வுக் கருத்தரங்கு (Videos) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் “மனித வள அபிவிருத்தியில் கல்வியின் பங்கு” எனும் தொனிப் பொருளிலான கல்வி ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வொன்று யாழ். நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-09.30 மணி முதல் இடம்பெற்றது. சாதனைத் தமிழன் கலாநிதி எதிர் வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கு நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதாராஜப் பெருமா…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலை…
-
- 14 replies
- 983 views
-
-
பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச. பெங்களூருவில் செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். “பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். இசைப்ப…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரதமர் நாளை யாழ் செல்கின்றார் February 13, 2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் எதிர்வரும் சனிக்கிழமை வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்தநிலையில் நாளைய தினம் வலிகாமம், கோப்பாய், யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் காங்கேசன் துறை போன்ற பிரதேசங்களுக்கு செல்லவுள்ள பிரதமர் வலிகாமம் கிழக்குப் பகுதிக்கான பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறப்புவிழா, யாழ்பாண மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடலில…
-
- 2 replies
- 464 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சர்வாதிகார குடும்ப ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரச திணைக்களங்களை ஆட்சி மாற்றத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களாக ஸ்தாபித்தமையின் ஊடாகவே போதைப்பொருள் ஒழிப்பினை வெற்றிக் கொள்ளவும், பாதாள குழுக்கக்களை கட்டுப்படுத்தவும் முடிந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஸார இதுனில் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில். பாதாள குழுவின் தலைவனுக்கு…
-
- 1 reply
- 376 views
-
-
நாயாறில், கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்! முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன ஏற்கனவே இருந்ததென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோயிலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் பௌத்த மதகுரு ஒருவர் ஆக்கிரமித்தமை தொடர்பான வழக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணையின்போது தொல்பொருள்…
-
- 4 replies
- 638 views
-
-
உறவுக்காக போராடி, உயிர் நீத்த தாய்! காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடியலைந்த தாயார் மாரடைப்பால் காலமாகியுள்ளார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமாகியுள்ளார். இவர், வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார் ஆவார். கடற்புலி போராளியான சுவித்தா எனும் அவரது மகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். காணாமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், தற்பொழுது மரணத்தை தழுவியுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் அதற்கு பிற்ப…
-
- 1 reply
- 372 views
-
-
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரின் வார்த்தையை நம்பி புதிய வீடு கட்டுவதற்காக 7 ஆண்டுகளாக வாழ்ந்த கொட்டிலை அகற்றிய குடும்பத் தலைவர், அந்தக் கொட்டில் சரிந்து வீழ்ந்ததில் கால் முறிவடைந்து படுக்கையில் உள்ளார். இந்த நிலையில், வீட்டுத் திட்டம் உங்களுக்கு (அந்தக் குடும்பம்) கிடைத்துள்ளது என்று தவறுதலாகக் கூறியுள்ளோம் எனப் பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இருப்பதற்கு இருப்பிடம் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு வழிதெரியாமல் குடும்பத்தினர் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 30, கார…
-
- 0 replies
- 433 views
-
-
February 13, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செய…
-
- 0 replies
- 199 views
-
-
“கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்” February 12, 2019 கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே இன்று கருத்துத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிங்கள, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு காணப்பட்டமையினாலேயே அந்த அமைப்பு வலிமைப்படுத்தப்பட்டதாகவும் எனினும், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் யுத்தத்தின் இறுதிப்பாதியில் சர்வதேச ஒத்துழைப்பு இலங்கை்கு கிடைத்து என்றும் அவர் கூறியு…
-
- 5 replies
- 1k views
-
-
எப்போதோ வெளியிட்ட ஆவணத்தையே யாழ் மகாநாட்டில் விநியோகித்தோம்: தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈ.பீ.ஆர்.எல்.எவ் விளக்கம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தமது மகாநாட்டில் வெளியிடப்பட்ட ஆவணம் 21.06.2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆவணமே என்றும் அந்த ஆவணம் வெளியிடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் அந்த ஆவணம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள ஈ. பீ. ஆர். எல். எவ் அமைப்பு, எப்போதோ வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள விடயங்கள் குறித்து இப்போது விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சில அரசியல் சக்திகள் எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கும் ப…
-
- 9 replies
- 892 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ள…
-
- 51 replies
- 5k views
-
-
மன்னார் மனித புதைகுழியில் இருந்து இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகள் இன்று144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.தற்போது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்கள…
-
- 0 replies
- 143 views
-
-
முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம் முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது. செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார். 9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன. ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்க…
-
- 13 replies
- 1.8k views
-
-
விக்னேஸ்வரனின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது! February 13, 2019 வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த வழக்கினை தக்கல் செய்திருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த…
-
- 0 replies
- 519 views
-
-
விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு February 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கொள்ளையர்கள் இருவர் விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுசெவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழில். இருந்து அராலியை நோக்கி அராலி வீதி வழியாக இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , தமது முகத்தினை மறைத்து துணிகட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு கொள்ளையர்கள் , பெண்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர். விபத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் எழுந்து விபத்தினை ஏற்படுத…
-
- 0 replies
- 369 views
-
-
February 12, 2019 பரந்தனில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையில், இரசாயன தொழிற்சாலையை மீளவும் ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் இரண்டுமணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு சென்று, அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பற்றிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி உள்ளார். அத்துடன் ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தையும் பார்வையிட்டுள்ளார். இதன் பின் கருத்து வெளியிட்ட அவர், ஐந்து மாடிகளை கொண்ட ப…
-
- 5 replies
- 757 views
-
-
ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்னரே இராணுவ வீரர்கள் கைது!- ஜயந்த சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே யுத்தத்தை வெற்றிக்கொண்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்படும் நிலைமை காணப்படுவதனால், அதனை தடுக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜயந்த சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா கூட்டத்…
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கையின் மற்றுமொரு முக்கிய திட்டத்தில் சீனா! இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் சீனாவிடம், கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணி வழங்கப்படவுள்ளது. குறித்த ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. கரவெலப்பிட்டியவில் அமையவுள்ள குறித்த இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக, 350 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துச்செல்லும் மின்சார பாவனையை, 2019ஆம் ஆண்டில் பூர்த்திசெய்யலாம் என அரசாங்கம் கூறியிருந்தது. அத்தோடு, சூழலுக்கு மாசு ஏற்படாத இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதற்கு உலக நாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்தவகையில், இ…
-
- 0 replies
- 314 views
-
-
ரிஸானா விடயத்தில் அக்கரை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன்?- உதித தேரர் சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்டிக் கொள்ளவில்லையெனவும், மாகந்துரே மதூஷுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார். தேசிய சங்க சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) இடம்பெற்றது. இதில் மதூஷ் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார். போதை ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் சகலரும் ஒன்றிணைய வேண்…
-
- 0 replies
- 461 views
-
-
ஐ.நாவின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில் – ஜெனிவா அறிக்கைக்கு முன்னோடி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பணியகத்தின், கள நடவடிக்கை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் ஜோர்ஜெட் காக்னன், ஐ.நா மனித உரிமைகள் பணியகத்தின் சட்ட ஆட்சி, சமத்துவம், பாகுபாடுகளின்மைக்கான பிரிவின் தலைவர் மோனா றிஸ்மாவி உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவே சிறிலங்கா வந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்துக்கு அமைய, இந்த தீர்மானத…
-
- 0 replies
- 205 views
-
-
உலக வங்கி துணைத் தலைவர் இன்று சிறிலங்கா வருகிறார் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவர் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் ஏனைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்கவையும் சந்தித்து, வேலைப் படையில் பெணகளின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். இந்தப் பயணம் தொடர்பாக ஹார்ட்விக் ஸ்காபர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், “இலங்கைத்தீவு எதிர்கொள்ளும் அபிவிருத்திச் சவால்கள் மற்றும்…
-
- 0 replies
- 313 views
-
-
பசிலின் அறிவிப்பால் மகிந்த அணிக்குள் வெடித்தது மோதல் அதிபர் வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, மகிந்த ஆதரவு தரப்பினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரே அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும், வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்கமாட்டோம் என்றும் பசில் ராஜபக்ச கம்பகாவில் நடந்த கூட்டத்தில் கூறியிருந்தார். பசில் ராஜபக்சவின் இந்தக் கருத்து தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடுகையில், அதிபர் வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அத்துடன்,…
-
- 0 replies
- 562 views
-