ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த JAN 27, 2015 | 0:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவை, கட்சியின் காப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கிய பங்காற்றிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகள், மகிந்த ராஜபக்சவை புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்குத் …
-
- 0 replies
- 587 views
-
-
[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்பட…
-
- 5 replies
- 1.4k views
-
-
சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது. மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு தேங்காய்களை திருடினார் எனும் குற்றசாட்டில் ஒருவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். http://globaltamilnews.com/
-
- 0 replies
- 501 views
-
-
ஞாயிறு 15-04-2007 15:47 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் 4 புதிய படைமுகாம்களை அமைக்க படையினர் திட்டம். மட்டக்களப்பு பதுளை நெடுஞ்சாலையை மையப்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்ட சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் மக்களின் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டதை யாவரும் அறிந்ததே. தமிழீழ மக்களை மீளக்குடியேறவிடாது அங்கு சிங்கள மயமாக்கும் நவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் தற்பொழுது மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள தாண்டியடி, சோலையகம் அமைந்துள்ள கொக்கட்டிச் சோலை, தேனகம் அமைந்துள்ள கனடியனாறு மற்றும் மணற்பிட்டி போன்ற இடங்களில் பாரிய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளில் சிறீலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளனர். மூலம் - பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக- சமூகங்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை பரிந்துரை செய்ய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார். இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த கால மோதல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை குறைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை செய்யவுள்ளது.மேலும் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டயெழுப்புது குறித்…
-
- 2 replies
- 356 views
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 06:54 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வ…
-
- 45 replies
- 2.4k views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் எச்சரிக்கை குறித்து தீவிர பரிசீலனையில் தூதரகங்கள் இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் நேற்று தீவிர பரிசீலனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவோர் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் நாடுகள், சமாதான மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அதிகளவு நிதிவழங்கும் நாடுகள…
-
- 2 replies
- 1k views
-
-
வடமாகாண சபை தீர்மானம்! இலங்கை அரசு அதிருப்தி! முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு!! Feb 11, 20150 இலங்கை தொடர்பான போர்க் குற்ற அறிக்கை மார்ச் மாத கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுவதை ஒத்திவைக்கும் முயற்சியில் இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவரும் இலங்கை அரசாங்கத்துக்கு வடமாகாண சபை நேற்று நிறைவேற்றியிருக்கும் இனப்படுகொலை குறித்த தீர்மானம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இதனையடுத்து கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அவலசர உத்தரவையடுத்து வடமாகாண ஆளுநர் பாளிகார வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்திருப்பதாகத் தெரிகின்றது. நேற்றிரவே விக்கினேஸ்வரனை ஆளுநர் அழைத்திருந்தபோதிலும், இன்று காலையில் முதலமைச்சர் ஆளுனரைச் சந்திப்பார் எனத் தெரியவருகின்றது…
-
- 1 reply
- 687 views
-
-
கடற்படையினரால் மூடப்பட்ட முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதி மக்களின் எதிர்ப்பினால் திறப்பு October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற் கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை மறித்து அடைத்தமையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் கடற்படையினருக்கும்,முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.குறித்த சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கைக்கு எதிராக நாளை தமிழகத்திலும் பிற மாநில தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் [Thursday, 2011-07-07 09:08:17] இலங்கைக்கு எதிராக நாளை தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநில தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள விழிப்புணர்வு பிரசாரத்தில் தமிழரினை கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- இலங்கைத் தலைவர் யுத்தகுற்றவாளி என ஐ.நா. விசாரணை குழு அளித்த பரிந்துரையை ஏற்று, அவர் மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன்வர வேண்டும் என்று…
-
- 0 replies
- 459 views
-
-
புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஏனைய தமிழ் இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்கள் நலன்கருதி தொழில்வாய்ப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தான் கடந்த அரசுகளிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாகவும், எமது மக்கள் நலன்கருதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்துவரும் சுயலாப தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே இத்திட்டமும் செயல்வடிவம் பெறாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இயக்கங்களில் ஆரம்பந்தொட்டே தங்களை இணைத்துக் கொண்டிருந்த பல உறுப்பினர்கள், உரிய கல்வித்தகைமைகள் உட்பட ஏனைய தகைமைகளைக் கொண்டிராத நிலையில் காணப்படுகின்றனர…
-
- 1 reply
- 349 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=103363886622273572
-
- 0 replies
- 327 views
-
-
மாகாண சபை சட்ட சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் 27 AUG, 2023 | 12:04 PM 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தில் சீர்திருத்தத்துக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் வகையில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகளை மையப்படுத்திய கலந்துரையாடலொன்று வன் டெக்ஸ்ட் இன்னிஷேர்டிவினால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 13ஆவது சீர்திருத்தத்தில் காணப்படுகின்ற யாப்பு ரீதியிலான கட்டமைப்புக்கு அமைவாக உள்வாங்கப்பட்டிருக்கும் செயல்முறைகளை அப்புறப்படுத்தும் வகையில் மாகாண சபைகளின் செயற்பாடுகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்துதல் மற்றும் மாகாண சபை சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட…
-
- 0 replies
- 530 views
-
-
வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும் -அருஸ்- வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவசரமாக பிரித்தது ஏன்? வலிந்த தாக்குதல்களின் மூலம் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் என்ற முயற்சிகளை முடக்கியது ஏன்? விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை இல்லாதொழிக்கப்போகின்றோம் என கங்கணம் கட்டிக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில் கடந்த ஏப்பிரல் 30 ஆம் நாள் வெளிவந்துள்ளது. அன்று நடைபெற்ற மேதின பேரணியின் போது அரசின் பிரதான அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அதில் தற்போதைய மாகாண சபைகள் கூட மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதாவது இருந்த உலக்கையும் தேய்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:- 15 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:- வீட்டுத்த தோட்டங்களை அபிவிருத்தி செய்ய படைத்தரப்பு முனைப்புக் காட்டி வருகின்றது. தற்போது படையினரின் முழுக் கவனமும் அதன்மீது திரும்பியிருப்பதாக யாழ் மாவட்ட இராணுவத் தலைமை கூறுகின்றது. இன்று யாழ் நகரில் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. யாழ் நகரில் படையினரின் முயற்சியால் வீடுகளுக்கு வீட்டுத் தோட்டங்களை அமுல்ப்படுத்தும் திட்டம் ஒன்றைத் தாம் அமுல்ப்படுத்தியிருப்பதாக படை அதிகாரிகள் ஊடகவியலாளர் மாநாட்…
-
- 0 replies
- 258 views
-
-
சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 86 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்ய உள்ள நிலையில், இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது. பெரும்பாலும் இந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=127335&category=TamilNews…
-
- 0 replies
- 293 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள 'நாய்கள்' தமிழ் உணர்வு மிக்கவை: அவை அரசும் அமைச்சர்களும் போடும் எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை [Tuesday, 2011-07-19 09:00:07] நாய் நன்றி உள்ள மிருகம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை. காரணம் அரசாங்கம் அதன் அமைச்சர்களும் போடுகின்ற எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை. இதன் காரணமாக இன்று நாய்களின் தலைகளை வெட்டி இனவெறியை காண்பிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உற…
-
- 1 reply
- 667 views
-
-
தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1980ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை ஒன்று யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ளது என்பதை நினைவூட்டுகிறேன். அது இன்னும் மீள்நிர்மாணம் செய்யப்படவில்லை. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வருவது, ஜனாதிபதி செயலகத்திற்கு கீழ் வரும், சர்வதேச மாநாட்டு…
-
- 2 replies
- 495 views
-
-
வெள்ளி 18-05-2007 16:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ் ஊர்காவற்துறையில் மோதல் இன்று காலை 3.40 மணியளவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இரு இளைஞர்களின் உடலங்களை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பதிவு
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் Friday, July 22, 2011, 19:32 சிறீலங்கா மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கீழுள்ள அரசியல் கைதிகளான ஆறுமுகம் சந்திரகுமார் (வயது : 23) விலாசம் : பதுளை கைதுசெய்யப்பட்ட திகதி : 21.01.2007 தங்கராசா காண்டீபன் (வயது : 29) விலாசம் : பேத்தாளை வாழைச்சேனை கைதுசெய்யப்பட்ட திகதி : 15.07.2007 தேவதர்சன் (வயது : 24) விலாசம் : கறுவாக்கேணி மட்டக்களப்பு கைதுசெய்யப்பட்ட திகதி : 21.06.2005 …
-
- 0 replies
- 299 views
-
-
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பாரியாரும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu6G.html
-
- 1 reply
- 580 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’ எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதன்படி டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யானை சின்னத்திற்குப் பதிலாக ஒரு புதிய சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சின்னம் தொடர்பில் கட்சிக்குள் இருதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது டைமண்ட் சின்னத்…
-
- 0 replies
- 354 views
-
-
Published By: VISHNU 26 SEP, 2023 | 05:10 PM ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ் மாவட்டச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியுள்ளது. தமிழர் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இக்கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. ஆனால், அரசதரப்பு எத்தகைய தீவிரங்காட்டினாலும் போரில் உயிரிழந்த அனைவருக்கம் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்குப் பேரினவாதம் உயிரோடிருக்கும்…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்! மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 26ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள்,வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆட்சி மாற்றம் பற்றி இலங்கை தூதரகங்கள் மூலம், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது, எனினும், எந்தவொரு நாடும், வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை அரசாங்கத்துக்கு அதிர்…
-
- 0 replies
- 396 views
-
-
உளுத்துப் போன திட்டங்கள் தீர்வு யோசனை வடிவத்தில்! இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசுப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே தத்தமக்கு இராணுவ வெற்றி கிட்டும் என்பதில் அதீத நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதனால் இலங்கையில் வரும் வாரங்களில் வன்முறை கட்டவிழ்ந்து, போர் வெடித்து, இரத்த ஆறு ஓடுவது நிச்சயம். இலங்கை நிலைவரம் குறித்து இராஜதந்திரிகள் இவ்வாறு கணிப்பீடு செய்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. ஒரு பக்கத்தில் போர் முரசம் அறையப்படுகையில், மறுபக்கத்தில், அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சர்வதேச சமூகத்துக்குக் காட்டும் ஏமாற்று நாடகமும் அரங்கேறுகின்றது. இந்த அபத்த நாடகத்தின் ஓர் அங்க…
-
- 0 replies
- 851 views
-