ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
யாழில், வாள்வெட்டு தாக்குதல். யாழ்ப்பாணத்தில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகத்தர் மீதே குறித்த வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பின் பக்கத்தால் வந்த நால்வரே தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது கைத்தொலைபேசியையும் அபகரித்து சென்றதாக தாக்குதலுக்கு இலக்கானவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெட…
-
- 1 reply
- 867 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து பயணங்களும் இரத்து! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது கீழ் இயங்கிய அமைச்சரவை அமைச்சர்கள் மேற்கொள்ளவிருந்த அரச வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சந்திப்புக்கள் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளும் நேற்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், தங்களின் பதவி நிலைகளில் தொடர்ந்து இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததை தொடர்ந்தே இப்பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் …
-
- 0 replies
- 416 views
-
-
தனது உயிருக்காக ஜனாதிபதி நாட்டை பணயம் வைத்துள்ளார் – அப்துர் ரஹ்மான் சாடல் நாட்டைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது உயிருக்கு அச்சுறுத்தல் என காரணம் கூறி முழு நாட்டையும் பணயம் வைத்திருப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சாடியுள்ளார். அத்தோடு நாட்டில் நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி நிலைக்கு பொதுத்தேர்தல் தீர்வாக முடியாது என தெரிவித்த அவர் அரசியல் சாசனத்தையும் நாட்டின் சட்டத்தையும் மதித்து ஜனாதிபதி நடந்தால் மாத்திரமே இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் நாட்டில் தற்போது நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைய…
-
- 0 replies
- 262 views
-
-
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் குறித்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது. இந்த நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்ணான்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். மேலும் குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு தொடர்பில், இலங்கையிலுள்ள மக்கள் மாத்திரமின்றி சர்வதேசமும் அறிந்துகொள்வதற்…
-
- 0 replies
- 291 views
-
-
எலிக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு. பொலன்னறுவை மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரச் சேவை அறிவித்துள்ளது. எலிக் காய்ச்சலினால் அதிகரித்துள்ள உயிரிழப்பு தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க நேற்று (திங்கட்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 3 வாரங்களில் இப்பகுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு முனையாதமையே ஆகும். எனவே தான், எலிக்காய்ச்சல் தொடர்பில் பொலன்னறுவை சேர்ந்த மக்கள்…
-
- 0 replies
- 294 views
-
-
முகம்மட் நிசாம்டீன் குற்றவாளியல்ல - சோடிக்கப்பட்டவர், ஆஸ்த்திரேலியப் போலீஸ் அவுஸ்த்திரேலியாவின் முன்னாள்ப் பிரதமர் மல்க்கம் டேர்ன்புள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் ஆகியோரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டியது மற்றும் சிட்னியின் மக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்த முயன்றது ஆகியவை தொடர்பாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனான முகம்மட் நிசாம்டீன் கைதுசெய்யப்பட்டு அதிதீவிர பாதுகாப்புச் சிறைச்சாலையொன்றில் ஒருமாதகாலம் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் அவர்மேல் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் மீளப்பெறப்பட்டு அவர் இலங்கை திரும்பியது நினைவிலிருக்கலாம். தற்போது இது தொடர்பாக விசாரித்துவந்த பொலிஸார், அவுஸ்த்திரேலியாவின் முன்னணித் துடு…
-
- 0 replies
- 483 views
-
-
வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள் Editorial / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, பி.ப. 08:09 Comments - 0 எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார், எம்.ஏ.றமீஸ் மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டங்கள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. திருக்கோவில் ஆர்ப்பாட்டம், திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பாலும், அக்கரைப்பற்று ஆர்ப்பாட்டம், மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருக்கோவிலில், திருகோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக கண்டன ஆர்பாட்டம் …
-
- 1 reply
- 577 views
-
-
“அன்று விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவி தேவைப்பட்ட வேளையில் பிள்ளையான், கருணா ஆகியோரை இணைத்துக் கொண்டதாகவும் அது ஒரு போர் வியூகம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன குறிப்பிட்டுள்ளார் எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுவிக்க கோரும், அரசியல் கைதிகள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய பின்னர், கருணாவும் பிள்ளையானும் ஆயுதத்தினை கைவிட்டு ஜனநாயக வழிக்கு மாறியதாகவும் அவர்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார். வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது நலன்களுக்காக பொட்டு, அம்மான் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 4 replies
- 1.2k views
-
-
மேல்முறையீட்டு நீதிமன்று இடைக்காலத்தடை விதித்தது மகிந்த பிரதமராக தொடரவும், அவரது அமைச்சரவை செயல் படவும் மேல்முறையீட்டு நீதிமன்று இடைக்காலத்தடை விதித்தது http://www.dailymirror.lk/article/Interim-order-against-PM-Cabinet-159266.html ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராண்மை மனு தொடர்பான தீர்ப்பு, இன்று (03) பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியகட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
- 2 replies
- 808 views
-
-
"எனது தந்தை தமிழர் என்பது குறித்து நான் பெருமையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா எனது தந்தை தமிழர் என்பது குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவரது பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிரசன்ன கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்பரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டிற்காக சேவை செய்தவர்களாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெருமைப்படுகின்றேன். …
-
- 8 replies
- 1.6k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும்இராணுவத்தினரும் , காவல்துறையினரும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில் , சிங்கள மக்களுக்கும் சரி இராணுவத்திற்கும் சரி தமிழ் மக்களுடன் நல்…
-
- 7 replies
- 1.4k views
-
-
மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக நாளை உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த நீதிப் பேரணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் …
-
- 0 replies
- 485 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், தமிழ் அரசியல் கைதிகள…
-
- 0 replies
- 471 views
-
-
வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள இராணுவ முகாமில் விடிய விடிய நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியால்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. குறித்த இராணுவ முகாமில் நேற்று இரவு தொடக்கம் அதிகாலை வரை இராணுவத்தினர் இசை நிகழ்ச்சியை நடாத்தியுள்ளனர். அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதேவேளை கா.பொ.த. சாதாரண தர பரீடசை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்குத் தயார் படுத்திய மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்த பிரசேத மக்கள் விசன…
-
- 0 replies
- 549 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் சுமார் 3 ஆண்டுகள் 6 மாதங்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற சிறப்பு நீதாய விளக்கம், கடந்த ஆண்டு செப்ரெம்பர் 27ஆம் திகதி தீர்ப்பளித்து விடுவித்தது. எனினும் மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தரான கோபி என்பவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு பூபாலசிங்…
-
- 0 replies
- 967 views
-
-
மகிந்த ராஜபக்ச உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த நீதிப் பேரணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும்…
-
- 0 replies
- 630 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. -மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (3) 109 ஆவது நாளாக -மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இந்தநிலையில் தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில்…
-
- 0 replies
- 293 views
-
-
December 3, 2018 ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் பிரதமர்…. ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்றுகாலை கூடிய கட்சித்தலைவர்கள், மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்பதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்றுமாலை சந்திக்கும் போது, அதனை வலியுறுத்தவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தகூட்டத்தின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் ஆராய்ந்துள்ளனர். http://globaltamilnews.net/20…
-
- 0 replies
- 368 views
-
-
கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஆறடி குழிக்குள் தள்ளி இருப்பார் எனக் கூறியது அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தவிர அதில் எந்த உண்மையும் இல்லை. என்னைக் கொல்வதற்கு ராஜபக்ஷ முயற்சித்தமைக்கான எந்த அறிக்கையும் இல்லை. அது அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அரசியல் மேடைகளிலேயே அதனைக் கூறினேன் என சிரித்தவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய கேள்விகளும் பதில்களும் வருமாறு: …
-
- 0 replies
- 753 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு தமிழர் பகுதிகளில் அவை முழுமை பெற்றுவிட்டது. அண்மையில் விடுவிக்கப் பட்ட சில பகுதிகளிலேயே வீடமைப்பு தேவைப் படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் கடந்த 8 வருடங்களாக 2100 குடும்பங்கள் வீடமைப்புத் திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்திருந்த போதிலும் அவர்களில் 200 குடும்பங்களுகே வீடுகள் கட்டுவதற்கான பண உதவி வழங்கப் பட்டுள்ளது. இன்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு 200 வீடுகள் கட்டுவதற்காக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட 160 மில்லியன் ரூபா திருப்பி அனுப்பப் பட்டுள்ளது. இந்த வருடமும் வடக்கின் பல்வேறு அரசாங்க அதிபர் செயலகங்களில் இருந்து வடக்…
-
- 0 replies
- 510 views
-
-
தென்கொரியாவில் இலங்கை முஸ்லிம்களால் சொந்தமாக வாங்கப்பட்ட மஸ்ஜித் கட்டிடம். அஸ்ஸலாமு அலைக்கும் South Korea Incheon ( இஞ்சியோன்) நகரில் இலங்கை முஸ்லிம்களால்சொந்தமாக வாங்கப்பட்ட மஸ்ஜித். நேற்று 2018/12 மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அலவில் உமர் ஃபாரூக் மஸ்ஜித் திறப்பு விழா சிரப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தென் கொரிய (South Korea) வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கும் நன்றிகள்.குறிப்பாக சொந்த கட்டிடம் வாங்கும் முயற்சியை ஆரம்பித்துச் சென்று தற்பொழுது இலங்கையில் வசிக்கும் அனைத்து சகோதர்கள்கும் நன்றிகள்.தகவல்: அக்ரர் இக்பால் https://www.…
-
- 1 reply
- 619 views
-
-
பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். ரிவிரவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை…
-
- 10 replies
- 2k views
-
-
ஐதேமுவை வெட்டிவிட்டு பசில் குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபருடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு மீண்டும் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. இதற்கமைய நேற்றிரவு ஐதேமு தலைவர்கள் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கத் தயாராகியிருந்த நி…
-
- 1 reply
- 959 views
-
-
கால்களை இழந்து எதிர்காலத்துக்காக காத்திருக்கும் சிறுவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்படுகளுடன் காணப்படுகின்றனர். இறுதியுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த சமயம் குறித்த சிறுவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது எறிகணை வீச்சில் தமது கால்களை இழந்தனர். தற்போது கால்களை இழந்த நிலையில் வட்டக்கச்சி இராமநாதபும் பகுதியில் தமது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்ற போதும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றை தீர்த்துக்கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகளை கொண்ட குடும்பங்களாக இவ்விரு குடும்பங்களும் இல்லாத நிலையில் அன்றாடம் கூலிவேலைகள…
-
- 1 reply
- 458 views
-