Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சங்க சம்மேளனக்கூட்டம் நடைபெற்றால் பர்மாவில் பிக்குகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்று மகிந்த எச்சரிக்கை .பெளத்த பிக்குகளின் சங்க சம்மேளனக் கூட்டம் நடத்தப்பட்டால் பௌத்தர்கள் வாழும் பர்மாவில் ஏற்பட்ட சம்பவம் இலங்கையிலும் ஏற்படக் கூடும் எனவும் இந்த நிலைமையில் பௌத்த தேரர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் அரச தலைவர் மகிந்த நேற்று முற்பகல் மல்வத்தை மாநாயக்க தேரருக்கு அறிவித்திருந்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சங்க சம்மேளக் கூட்டம் நடைபெற்றால் அங்கு புகுந்து பாரிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு பெருமளவிலான பிக்குகள் தயாராகியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் அரசதலைவர் மகாநாயக்கருக்கு கூறியுள்ளார். பர்மாவில் ஏற்ப…

    • 2 replies
    • 1.1k views
  2. ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார சிற்றூழியர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரை இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது இவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகளாக, 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்துமாறும்,சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்குமாறும்,08மணித்தியால காலவரையறைக்கு மேலதிகப் பெற்றுக் கொள்ளப்படும் கடமைக்கான உரிய மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறும்,சீருடைக் கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குமாறும்,05நாட்களைக் கொண்ட வேலை வாரத்தை…

  3. “தயார் நிலையில் 89 இராணுவக் குழுக்கள்; தேவைப்பட்டால் களமிறங்கும்” - இலங்கை இராணுவம் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அவ்வாறு உதவி கோரப்படும் பட்சத்தில் அனுப்புவதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய 89 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், எந்த வித இடையூறு ஏற்பட்டாலும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ள…

  4. நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். நான் மிகவும் யோசித்து பேசுகிறேன். இப்படி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அரசியல் என்பது முற்றிலும் வெறுத்து போயுள்ளது. தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்களிப்பை செய்தேன். சரள மொழியில் கூறுதென்றால் கடைக்கு போனேன்.…

    • 0 replies
    • 134 views
  5. எரிபொருள் விநியோகத்தை... துரிதப்படுத்துமாறு, நாமல் கோரிக்கை! மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1272971

    • 3 replies
    • 198 views
  6. சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார். கனடாவின் வெளிநாட்டலுவல்கள் நாடாளுமன்ற செயற்குழு செயலர் தீபக் ஒபராய் மேற்கண்ட கருத்தை சிறிலங்காவின் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்காவின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஒபராய் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் தே…

  7. சமல் ராஜபக்ஷவின்... வீட்டினையும், சுற்றி வளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்! திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1274899

  8. இடைக்­கால அறிக்­கையில் புதிய சொற்கள் சந்­தே­கங்­களைத் தோற்­று­வித்­துள்­ளன -நிலைப்­பாடு குறித்து இவ்­வாரம் அறி­விப்பு என்­கி­றது அஸ்­கி­ரியபீடம் லியோ நிரோஷ தர்ஷன் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக வழி நடத்தும் குழுவின் இடைக்­கால வரைவில் புதிய சொற்கள் உள்­வாங்­கப் பட்­டுள்­ளமை சந்­தே­கங்­களை தோற்­று ­வித்­துள்­ளது. மேலும் இடைக்­கால வரைவு குறி த்த தேவை­யான யோச­னை­க­ளை யும் பரிந்­து­ரை­க­ளையும் இவ்­வா­ரத்தில் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங் கள் அர­சாங்­கத்­திற்கு அறி­விக்கும் என அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக மெத­ கம தம்­மா­னந்த தேரர் குறிப்­பிட்டார். சமஷ்டி முறை­மைக்கு நாட்டை நகர்த்தக் கூடிய வகையில் பல்­வேறு விட­யங்கள்…

  9. இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக கொந்தளிப்பே மிகப்பெரும் ஆபத்து இதன…

  10. "தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" சார்பாக சைக்கிள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டு போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. செல்வராசா கஜேந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் எமது அடிப்படைக்கொள்கையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை இலட்சியமாகக் கொண்டு அன்று தொட்டு இன்று வரை எமது தேசத்திற்காக குரல் கொடுத்து வருகின்றார்கள். அதன் தொடராக இன்று நாடாளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகின்றார்கள். அன்பான எம் தேசத்தின் உறவுகளே! நாம் அனைவரும் ஓர் அணியாக திரண்டு எமது பொன்னான வாக்குகளை சைக்கிள் சின்னத்திற்கே அளித்து வெற்றியடையச்செய்வதன் மூலம் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்கு உறுதி எடுத்துக்க…

    • 6 replies
    • 898 views
  11. மாடு வெட்டுவதை நாட்டில் தடை செய்யவேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு இன்று 18 ஆம் திகதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் தாம் எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் தான் முழு பொறுப்பு என்று கடும்போக்கு சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . மாடு வெட்டும் பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்கப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தெரிவித்துள்ளார். மாடு வெட்டுக்கு எதிராக பௌத்த பிக்கு தீக்குளித்தால் அதன் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மாடு வெட்டு சர்ச்சைக்கு தீர்வு காண எட்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி. கொழும்பு நோக்கிய…

  12. 4 1/2 கோடி ரூபா பெறு­ம­தி­யான மது­பான போத்­தல்கள் மீட்பு வெலிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ராஜ­கி­ரிய -மொர­கஸ்­முல்ல பகு­தியில் இரு மாடி­களைக் கொண்ட சொகுசு வீடொன்­றினை சுற்றி வளைத்த பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் (எஸ்.ரி.எப்.) விஷேட நட­வ­டிக்கை பிரிவு சுமார் நாலரை கோடி ரூபா பெறு­ம­தி­யான வெளி­நாட்டு மது­பான போத்­தல்­களை கைப்­பற்­றி­ய­துடன் சந்­தேக நபர் ஒரு­வ­ரையும் கைது செய்­துள்­ளது. இச்­சம்­பவம் நேற்று காலை இடம்­பெற்­றுள்­ளது. குற்றம், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள், விஷ போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீபின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சிறப்பு அதி­ரடிப் படை­யி­ன­ருக…

  13. Started by வீரா,

    நளினிஅக்கா பற்றி ஓர் விவாதம் போய்ட்டிருக்கு... Dear J, What is your opinion about the ongoing drama about Nalini’s release? Do you think she should be released? I feel the whole purpose of jail & punishment is to reform a person and NOT a state-sponsored revenge. Rajiv’s murder is terrible but so are the Kovai blasts. If the terrorists responsible for Kovai blasts can be released after 10 years why not Nalini? Knowing well how carefully the LTTE plans a secret operation, Nalini definitely may not be a part of conspiracy, but might have got some clue at the end just before the incident. In her youthful enthusiasm at that time, she even might have been…

  14. இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சகல இலங்கையர்களையும் நாடு கடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான வீ.வைத்திலிங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வரும் சகல இலங்கையர்களும் நாடு கடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். ராஜீவ் கொலை வழக்குடன் n;தாடர்புடையவர்களை விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசாங்கம் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பல்வேறு வழகளில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். …

  15. ‘மனோபாவம் மாற வேண்டும்’ “தேர்தல் காலங்களில் வீராப்புப் பேசும் தலைமைகளை மக்கள் ஆதரித்து, அவ்வாறானவர்களுக்கு, வாக்களிக்கும் நிலைமை மாறவேண்டும்” என்று கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எமது முஸ்லிம் சமூகம், கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக, எமது சமூகம் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் தொண்டு நிறுவனத்தின் உதவியின் ஊடாக, பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்துக்கான, அங்குரார்ப்பண நிக…

  16. புதிய அமைச்சரவை நியமனம் – ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில்... முறுகல்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கக் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களிடையே பல வாரங்களாக கடுமையான அரசியல் ஸ்திரமின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பலர் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்து 11 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அண்மைய அமைச்சரவை நியமனங்கள் மற்றும் அரச அமைச்சு நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தெரிவினால் மாத்திரமே இடம்பெற…

  17. கொடைக்குக் கர்ணன் என்றுதான் நாம் அறிந்துள்ளோம். அந்தக் கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் துரியோதனன். இராஜகுமாரர்களுக்கான வில்வித்தைப் போட்டியில் கர்ணனும் கலந்து கொள்கின்றான். போட்டியில் கலந்து கொள்ள வந்த இராஜ குமாரர்கள் அத்தனை பேரும் கர்ணனைப் பார்த்து தேரோட்டியின் மகன் என ஏளனம் செய்கின்றனர். இராஜகுமாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய வில்வித்தைப் போட்டியில் தேரோட்டியின் மகன் எங்ஙனம் பங்கேற்ற முடியும் என சர்ச்சை எழுகின்றது.கர்ணன் நாணிக்கோணி தலைகுனிந்து நிற்கிறான். அந்த நேரத்தில் சபை நடுவே எழுந்து கர்ணனை நான் இராஜகுமாரன் ஆக்குகின்றேன் என துரியோதனன் முழுங்குகின்றான். கர்ணனை இராஜகுமாரனாக்கினால் அவனுக்கு தேசம் எங்கே என்று வினா எழுகிறது.‘அங்கததேசம்’ என்று துரியோதனன் மொழி கி…

  18. சீனாவிடமிருந்து... மற்றுமொரு கடனுதவியைப் பெற, திட்டம் – நாலக கொடஹேவா சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வாக கடனை மறுசீரமைப்பது சிக்கலாக இருப்பதால் சீனா இந்த முடிவை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சீனா ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடனை வழங்கியுள்ள நிலையில், ஒரு நாட்டிற்கு மட்டும் கடனை மறுசீரமைப்பது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சீனா கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278654

  19. சிங்கள அரச படைகளால் தாய் மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்டு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான ஒரு நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை ஜனநாயக வழியில் தேர்வு செய்வதற்கான தேர்தலில் உலக நாடுகள் பலவற்றில் நேற்றைய தினம் வாக்களித்திருந்தனர். கனடாவில் குறிப்பாக ரொரண்டோவில் பெருமளவு மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் கனடாவுக்கான சிறீலங்காவின் சிங்களத் தூதுவன் இந்தத் தேர்தல் சட்டவிரோதம் என்று கூறி இருக்கிறார். எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் அது சட்டவிரோதம் என்று சொல்கிறார் என்று புரியவில்லை. சிங்கள தேசத்தின் அராஜசட்டங்கள் கனடாவிலும் அமுல்படுத்தப்படுகிறது என்ற நினைப்பில் அல்லத…

    • 34 replies
    • 2.8k views
  20. அமெரிக்க பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சி - இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் - வாசுதேவ அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காலம் தாழ்த்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கடுமையான தொனியுடன் அமெரிக்கா முன்வைக்கவிருந்த பிரேரணை இறுதி நேரத்தில் அதன் 'கடும் தொனி' குறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதோடு இது ஜனாதிபதி மஹிந…

  21. ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை... பலர் வேண்டுமென்றே, மறைக்கிறார்கள் – பேராயர் தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை பலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவிர பலர் அறிந்திருந்தார்கள் என்றும் அதனை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அந்த மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும் சிலர் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பிய காரணத்தினால் மக்கள் பலியாக்கப்பட்டனர் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகவே ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அனைத…

  22. மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து! ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம். இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்! வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் …

  23. அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வரும் பிணைமுறி விவகாரத்தில், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை அர்ஜூன் அலோஷியஸுக்கு அனிகா விஜயசூரிய வாடகைக்குக் கொடுத்திருந்தார். அர்ஜூன் அலோஷியஸ் அந்த வீட்டை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியிருந்ததுடன், அதற்கான வாடகையையும் அர்ஜூனே செலுத்தியதாகக் கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் விளக்கமளித்த …

  24. சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் இன்று அமெரிக்கா பகிரங்க முறைசாரா கலந்துரையாடலை நடத்தவுள்ள நிலையில், இன்றும் நாளையும் இரண்டு மேலும் இரண்டு முறைசாராக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தீர்மான வரைவு குறித்து, இன்று காலை 10 மணி தொடக்கம், 12 மணி வரை, கலந்துரையாட வருமாறு அமெரிக்க வதிவிடப் பிரதிநிதியால் உறுப்பு நாடுகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மற்றொரு முறைசாரா கலந்துரையாடல் இன்று பிற்பகல், 2 மணி தொடக்கம், 4 மணி வரை, சிறிலங்காவில் மனிதஉரிமைகள் என்ற தலைப்பில், நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை, அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் சமூகம் என்ற மனிதஉரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.…

  25. கடும் மழையால் குளிர்ந்தது வலிகாமம் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இன்று நண்பகல் சுமார் 45 நிமிடங்கள் பெய்த கடும் மழையால் வெள்ளம் நிரம்பியதைக் காண முடிந்தது. இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்ததால் வயல்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகள் சில வெள்ளத்தில் மூழ்கின. எதிர்பாரத மழை பெய்ததால் விவசாயிகள் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. http://newuthayan.com/story/40176.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.