ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம…
-
-
- 23 replies
- 1.2k views
-
-
'அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா" -கிளிநொச்சியிலிருந்து இ.தமிழ்நேசன்- சிறிலங்கா கடற்படையின் தாக்குதல் கலமான பி-438 முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் 22.03.08 அன்று தாக்கியழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையுமே தகர்;த்தெறிந்து விட்டோம், கடற்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம், கடற்புலிகளால் இனிமேல் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்த முடியாது, அவர்களின் ஆயுதப்பாதை - வழங்கல் பாதை - முழுமையாகவே துண்டிக்கப்பட்டது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருந்தது சிறிலங்கா கடற்படை. அந்தப் பெருமிதத்துடன் தனது 60 ஆவது ஆண்டு விழாவையும் கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த நிகழ்வில் கடற்படையின் பெருமை பேசிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=4]கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுலாக்குவது தொடர்பில் வெளியுறவு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், அமைச்சின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இதில் வெளிநாடுகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் ராஜதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.[/size] [size=4]இதன் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க…
-
- 1 reply
- 695 views
-
-
கனகராசா சரவணன் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இமேஷ முத்துமால, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திஸாந…
-
-
- 2 replies
- 173 views
- 1 follower
-
-
.வீரகேசரி நாளேடு - இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் உண்மையை கண்டறிவதற்காகவும் இலங்கைக்கு வந்திருந்த பொதுநலவாய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சஞ்சே பட்டேல் குற்றப் புலனாய்வு துறையினரால் (சி.ஐ.டி) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் தெரிவித்தார். குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன் அமரதுங்க எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சஞ்சே பட்டேல் இந்திய அரசாங்கத்தினால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு கனவான். இந்தியாவில் ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உரிமைகளை வழங்க…
-
- 0 replies
- 737 views
-
-
[size=2] [size=4] [/size][/size] [size=4](சுபுன் டயஸ்)[/size] [size=2][size=4]மட்டக்களப்பிலிருந்து 13 மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்ததாகத் கூறப்படும் 37 சீனப் பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 200 மைல்களுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தமொன்று மீன்பிடி அமைச்சுடன் சீனா செய்துகொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சீனர்களுடன் ரோலர் படகுகளில் இருந்து மீன்பிடித்ததாகத் தெரிவிக்கப்படும் 2 இலங்கையர்களும்; கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr.../4615…
-
- 4 replies
- 791 views
-
-
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தகவல் தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்பு அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் வழியாகவும் தரை மார்க்கமாகவும் நடத்திய தாக்குதல்களில் 10 விமானங்கள் முற்றாக அழிந்ததோடு, ஆறு விமானங்கள் பகுதியளவில் சேதமடைந்தன. புலிகளின் தற்கொலை போராளிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்நத 14 பேர் பலியாகியிருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=15292…
-
- 0 replies
- 358 views
-
-
26 MAY, 2025 | 10:44 AM வவுனியா ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந…
-
-
- 10 replies
- 733 views
- 1 follower
-
-
ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வவுனியா நெளுக்குளம், மரக்காரம்பளை ஆகிய பகுதிகளில், ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு, தனது வேலைத்தலத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நெளுக்குளம் பகுதியில் வைத்து ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம், கைகள், கால்கள் கட்டப்பட்டு, துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நேற்று முற்பகல் மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள அரிசியாலை ஒன்றுக்கு முன்பாக, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதியை சேர்ந்த, சிறீ என்றழைக்கப்…
-
- 0 replies
- 787 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்! by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனப்பெண் சிகிச்சைகளை அடுத்து குணமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பாரிய திட்டங்க…
-
- 0 replies
- 308 views
-
-
04 Jun, 2025 | 01:37 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவு…
-
- 0 replies
- 156 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை நலன்புரி நிலையங்கள் என்ற பேரில் தடுத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தின் செயலை நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 629 views
-
-
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி யாழ்ப்பாணத்தை அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இடம்சார் அமைவிட ரீதியில் சமநிலையான பொருளாதார வாய்ப்புக்களை பரவலடையச் செய்வதற்கும், முழுமையான பொருளாதார வசதியை விரைவுபடுத்துவதற்கும், வட பகுதியிலுள்ள வறுமையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக …
-
- 1 reply
- 344 views
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம் by : Dhackshala தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை ம…
-
- 8 replies
- 1.3k views
-
-
பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை June 17, 2025 10:29 am பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றார். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் வெற்றிபெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்ப…
-
- 0 replies
- 134 views
-
-
பாய்களில் படுத்துறங்கிய கைதிகளுக்கு மெத்தைகள் [ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2016, 04:01.54 AM GMT ] பாய்களுக்கு பதிலாக சிறைக் கைதிகளுக்கு மெத்தைகள் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இலகுவாக உபயோகப்படுத்தும் வகையில் இந்த மெத்தைகள் கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களமே தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதன் முதற் கட்டமாக கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கொழும்பில் மட்டுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சா…
-
- 0 replies
- 343 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுக்கு கடந்த வாரம் ஊடுருவ முயற்சித்த சிறிலங்காவின் கொமோண்டோப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பலியான படையினருக்கு அந்நாட்டு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 635 views
-
-
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம் நிறைவு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய குறித்த காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்டிருந்தது. 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ், 2009ஆம் ஆண்டின் 58 இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலும் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில், புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக இதுவரையில் 77க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் …
-
- 0 replies
- 306 views
-
-
கிழக்கில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கோரப் போவதில்லை! - பசில் ராஜபக்ச 'கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறப் போவதில்லை. எம்மால் கிழக்கு மாகாணசபையில் தனித்து ஆட்சியமைக்க முடியும். அந்த அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்' என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் என்பனவற்றை விரும்பும் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல் நிலைமைகள் குறித்து கருத்துத் தெ…
-
- 2 replies
- 504 views
-
-
மே தின நிகழ்வுகளிலும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு! மைத்திரி தலைமையில் சமரசப் பேச்சுக்கள் மும்முரம்! மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் அடங்கிய பெருமளவிலான உறுப்பினர்கள் மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் ஏற்பாடு செய்யவுள்ள மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும், இதனைத் தடுத்துக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான பேச்சுக்கள் - முயற்சிகளில் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சு.க. மத்திய செயற்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த முறை நடைபெற்ற மே தின நிகழ்வுகள…
-
- 0 replies
- 190 views
-
-
17 JUL, 2025 | 05:16 PM தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்துக்காக அரச நிறுவனமொன்று நிலத்தை பகிர்ந்தளித்தமையானது அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே முறுகல் நிலையை உருவாக்கியுள்ளது. தங்கள் விவசாய நிலங்களை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்கள் புதிதாக காடழிப்பிலும் ஈடுபடுவதாக தமிழ் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில், சிங்கள மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தும் காணி தமது பரம்பரைக் காணி எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் அந்தக் காணியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்தக் காணியில் விவசாயம் செய்துவரும் ஒரு சிங்கள வி…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
சமாதானப் பேச்சு நடத்துவதற்கு, அரசாங்கம் விதித்துள்ள நிபந்த னைகளை விடுதலைப் புலிகள் ஏற்காவிடில் ஏனைய தமிழ் அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கம் கொண்டுவரும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, தமிழீழ கோட்பாட் டையும் கைவிட்டுவிட்டு சமாதான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தால் அவர்களு டன் பேச்சு நடத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயார் என்றும் பிரதமர் கூறினார். நேற்றுக் காலையில் தியத்தலாவ இரா ணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றபின் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் …
-
- 0 replies
- 865 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சாத்திரி ஒரு பேப்பர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சாரத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து அங்கு வந்திருந்த தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணித்தலைவர் கஜதீபனுடன் தொர்பு கொண்டு கதைத்திருந்தேன். அவருடன் தொலைபேசியில் உரையாடியவற்றின் சுருக்கத்தினை செவ்வி வடிவில் இங்கு தருகிறேன். சாத்திரி. வணக்கம் கஜதீபன் நீங்கள் கிழக்கிற்கு வந்திருக்கும் நோக்கம் என்ன எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள் கஜதீபன். வணக்கம் தமிழரசு கட்சியின் இளைஞரணி சார்பாகவும் யாழ் பல்கலைக்கழக ஒன்றியம் சார்பாக அதன் செயலாளர் தர்சானந் உட்பட யாழ் பல்கலைக்கழக மா…
-
- 18 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாணசபையின் தீர்வு யோசனை 30ஆம் திகதி சம்பந்தனிடம் கையளிப்பு! [Wednesday 2016-04-13 08:00] வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வுத் திட்ட இறுதி வரைவு எதிர்வரும் 22 ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும், 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வுத் திட்ட இறுதி வரைவு எதிர்வரும் 22 ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும், 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அரசியல…
-
- 0 replies
- 448 views
-
-
08 Aug, 2025 | 09:57 AM நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக…
-
- 0 replies
- 124 views
-