Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போக்குவரத்து நோக்கத்திற்காக 14 ஹெலிகொப்டர்கள் ரஸ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 30 பேர் பயணம் செய்யக் கூடிய புதிய எம்.ஐ 17 ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்கள் பதினான்கு இவ்வாறு கொள்வனவு செய்பய்பட உள்ளது. ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்வதற்காக ரஸ்ய அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.இந்த ஹெலிகொப்டர்களுக்கான பராமரிப்பு செலவுகளையும் ரஸ்யா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர்களை ரஸ்ய நிறுவனமொன்று இலங்கைக்கு விற்பனை செய்ய இணங்கியுள்ளது. முதல் தடவையாக ஒரே நேரத்தில் பதினான்கு ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது http://www.seithy.c…

  2. 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது திருகோணமலை சினக்குடா பகுதியில் 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 2 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவினை கல்முனை பகுதிக்கு கடத்த முற்பட்ட போதே பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14367

  3. வீரகேசரி வாரவெளியீடு - பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரிய நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளதாக லண்டனில் உள்ள வழக்கறிஞர் நிசான் பரஞ் சோதி கேசரி வார இதழுக்கு நேற்றுத் தெரிவித்தார். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மொத்தமாக 140பேர் அடங்குவதாக தெரிவித்த அவர் இவர்கள் அனைவரும் பிரித்தானியாவிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அங்கிருந்து சார்ட்டட் விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானியா போன்று பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தத்தம் நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொண…

    • 4 replies
    • 1.5k views
  4. 140 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்து நுழைவிசைவு வழங்கும் இலத்திரனியல் பயண அனுமதித் திட்டத்தை இந்திய அரசாங்கம் வரும் ஒக்ரோபர் 2ம் நாள் ஆரம்பிக்கவுள்ளது. திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில், இதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை செய்யும்படி, குறிப்பிட்ட 9 விமான நிலையங்களிலும் உள்ள குடிவரவுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, 180 நாடுகளின் பயணிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், தற்போது, 140 நாடுகளில் இருந்து வரும் பணிகளுக்கே இந்த வசதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விளக்கங்களுக்காக காத்திருப்பதாக, குடிவரவு…

  5. 140 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் உலக வங்கி இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலரை குறைந்த வட்டி அடிப்படையில் கடனை வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/14465

  6. 140 மில்லியன் ரூபாய் இழப்பு – இலங்கை போக்குவரத்துச் சபையின் மனுவுக்கு, பதில் வழங்க மகிந்தவுக்கு உத்தரவு.. October 10, 2018 140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (10.10.18) வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை …

  7. 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்ட…

  8. இந்த ஆண்டின் இறுதி பகுதியில் எடுக்கப்பட இருக்கும் ஜி.எஸ்.பி க்கான இறுதி முடிவு பெரும்பாலும் இலங்கைக்கு சாதகமாக இருக்காது என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 1400 கோடி ரூபாய்களை இலங்கை அரசு இழப்பதோடு 250,000 பேர் இலங்கையில் வேலை வாய்ப்பினையும் இழக்க நேரிடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கை அரசு தொடர்ந்தும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் கவனம் செலுத்தாது அதனை புறக்கணிப்பதாகவும் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசு அனுமதியினை மறுத்து வருவதுமே வரிசலுகை நீக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important

  9. 1400 மில்லியன் ரூபா பெறுமதியான நீர்விநியோகத் திட்டங்களை திசைதிருப்ப முயலும் சிங்கள பொறியியலாளர்! Posted by admin On February 21st, 2011 at 10:07 pm / No Comments வடபகுதியில் 1400 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட 2 பாரிய நீர் விநியோகத் திட்டம் பெரும்பான்மையின பொறியியலாளர் ஒருவரினால் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியிலும், பருத்தித்துறையிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜேகாப் நிறுவனத்தினரால் 1400 மில்லியன் ரூபா செலவில் பாரிய குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்ப கட்ட வேலைகள் பூத்தியாக்கியுள்ள நிலையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு உரிய ஆவணங்களை, கோவைகளை அடுத்த படிநிலைக்கு அனுப்பப்படாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுன…

  10. வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. 10 மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 3ஆயிரத்து 785 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். குறிப்பாக வட மாகாணசபைக்கு 36 உறுப்பினர்களை தெரிவு…

  11. 142 ஏக்கர் காணிகள் கிளிநொச்சியில் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6 ஏக்கர் காணியும் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபரிடம் கையளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடுவிக்கப்பட்ட காணியில் ச…

  12. 143 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்…

  13. 1443 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 1443 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்விவகார அமைச்சு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களமும் கூட்டாக இணைந்து இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. பத்தரமுல்ல சுஹூருபாயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/9604

  14. 146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் …

  15. 147 வருடங்களுக்கு முன்பு காலி கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!!! வரலாற்று சிறப்புமிக்க கப்பல் ஒன்று இலங்கை கடல் தொல்பொருளியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி துறைமுகத்திற்கு ஏழு கடல் மைல்கள் தொலைவில், 30 மீற்றர் ஆழ் கடலிலேயே பிரித்தானிய ரோயல் தபால் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட "RMS RANGOON" என்ற மிக பழமையானதும், தொல்லியல் மதிப்பு கொண்ட கப்பலே தொல்பொருளியல் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "ROYAL MAIL SHIP" என்பதனை குறிக்கும் வகையிலேயே இந்த கப்பல் "RMS" என்று அழைக்கப்படுகின்றது. நீராவி சக்தியில் இயங்கும் இந்த கப்பல் 1871ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி கா…

  16. கொள்கைப் பிரகடனத்தின் பின் ஒருநாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்… எதிர்வரும் 14ம் திகதி சட்டரீதியாக கூடவுள்ள நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் புதிய கொள்கைப் பிரகடணம் வாசிக்கப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் பாராளுமன்றம் ஒரு நாளைக்கு பிற்போடப்பட உள்ளதாகவும் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க தேவையில்லை என்றும், அன்றைய தினம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  17. 14ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதர…

    • 5 replies
    • 418 views
  18. 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்தவுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு November 7, 2018 எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடப்படும் என என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கட்சிதலைவர்களின் சந்திப்பின் போது ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்றத்தில் சம்பிரதாய அமர்வொன்று மாத்திரமே இடம்பெறவேண்டும் எனவும் பாராளுமன்ற பாரம்பரியத்தினை பின்பற்றி அன்று அதனை ஒத்திவைக்கவேண்டும் எனவும் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்…

  19. 14ம் நாள் உணவு தவிர்த்து அன்னை அம்பிகை விடுத்த உருக்கமான வேண்டுகோள்

    • 0 replies
    • 441 views
  20. 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவி சிறிலங்காவின் அதிபருக்கு ஈரானில் நடைபெறவுள்ள 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவியை சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீ-15 நாடுகளின் உச்சிமாநாடு எதிர்வரும் 17ம் திகதி ஈரானில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு ஆரம்பமாகவுள்ள 14வது ஜீ-15 உச்சி மாநாட்டின் போது சிறிலங்காவின் அதிபருக்கும் ஈரான் ஜனாதிபதிக்குமிடையே முக்கிய சந்திப்பும் இடம்பெறவுள்ளது. ஜீ-15 உச்சிமாநாட்டில் இலங்கை கென்யா, சிம்பாவே, ஈரான், அல்ஜீரியா ஆஜென்ரீனா, பிறேசில், சிலி, எகிப்து இந்தியா, இந்தோனேசியா ஜமெய்க்கா, நைஜீரியா, மலேசியா, மெற்சிக்கோ, பெரு, செனகல் மற்றும் வேனிசுவேலா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.13வது ஜீ-15 உச்சிமாநாட்டின…

    • 4 replies
    • 430 views
  21. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 14வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் தொடர்ந்துவரும் நிலையில், அவருடன் இத்தாலியில் இருந்தும் மக்கள் இணைகின்றனர். இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நோக்கி தற்பொழுது சென்றுகொண்டிருக்கும் மக்கள் இன்னும் சில மணிநேரங்களில் தம்மையும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைத்துக்கொள்ள இருக்கின்றனர். அதேவேளை, பிரான்ஸ் மக்கள் 12 பேர் வரையில் தற்பொழுது சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்வதுடன், இன்று காலையில் இருந்து இவர்கள் இதுவரை 14 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளனர். நேற்றும் பலர் இணைந்து நடந்திருந்ததுடன், நடை பயணம் நிறைவுபெறும் வேளையிலும் சுமார் 50 பேர் வரையில் இந்த மனிதநேயப் பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர். Provins …

    • 0 replies
    • 885 views
  22. 14வயது பள்ளி மாணவனை வதைத்த பௌத்த பிக்கு ! ஆசிய மனித உரிமைகள் ஆணையம் பௌத்த சரித்திர பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பதில் அளிக்க மறுத்த 14வயது கத்தோலிக்க பள்ளி மாணவனை, பௌத்த பிக்கு ஒருவர் வதைத்த சம்பவத்தினை, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் நிலையில் இவ்விவகாரத்தினை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. http://www.humanrights.asia/news/urgent-appeals/AHRC-UAC-102-2012 குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிய மனித உ…

    • 3 replies
    • 774 views
  23. களுத்துறை பிரதேசத்தில் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த 14வயது மாணவி ஒருவர் மீது மிகமோசமான பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வடக்கு களுத்துறை காவல்துறைப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் குறித்த காவல்துறை உயர்அதிகாரி தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது நேற்றையதினம் சட்டத்தரணி மூலம் குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் குறித்த சந்தேகநபர் கடமைக்கு சமூகமளிக்காது வீட்டிலிருந்து தப்பியோடியிருந்தது குறிப்பிடதக்கது. http://puspaviji.blogspot.com/

  24. 15 அடி விட்டத்தில் உழவனூரில் நில இறக்கம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தருமபுரம் உழவனூரில் நேற்று அதிகாலை 15 அடிவிட்டத்தில் நில இறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. உழவுனூர் தம்பிராசபுரத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்காணி ஒன்றிலேயே 10 அடி ஆழமும் 15 அடி விட்டமும் கொண்டதாக நில இறக்கம் காணப்படுகிறது. இது தொடர்பாக இக்குடியிருப்பு மக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது நேற்று அதிகாலை பெரிய சத்தம் ஒன்றுகேட்டது எங்களால் அச்சத்தை ஊகித்தறிய முடியவில்லை. விடிந்தபின்பு பார்த்தபோது எமது குடியிருப்புக் காணியிலுள்ள சமதரையில் திடீரென குழிஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் நீர் காணப்பட்டது. பின்னர் இதுகொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிவிட்டது. இது இப்பொழுது பெரிய …

    • 1 reply
    • 4.6k views
  25. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15 அமைச்சுக்களின் செயலாளர்கள் வருமாறு, பிரதமரின் செயலாளர் -சபுநந்திரி அமைச்சரவை செயலாளர் - எம்.டி.ஜே. பெர்னான்டோ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் - டி.எஸ்.ருவன் சந்திர, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் - கே.எம்.எம். சிறிவர்தன, வெளிவிவகார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.