Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுவோர் குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் ஹிக்கடுவை பிரதேசத்தில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், தேசிய கிறிஸ்தவ தேவாலய பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தூதரகப் பேச்சாளர் ஜூலியானா ஸ்பவன் தெரிவித்துள்ளார். …

  2. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தீர்மானித்துக்கொண்டிருக்கின்ற அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகிய மூவரை கொண்ட எஸ்எம்எஸ் அணியை புறக்கணிக்குமாறும் அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்களிக்குமாறு பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இக்கூட்டமைப்பானது பிரான்சிலுள்ள 64 சங்கங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பெரிய கட்டமைப்பாகும் அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமை…

  3. ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை குறித்து ஜப்பான் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளியான பின்னரே பிரேரணை குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான பிரேரணை நகல் வெளியாகிய பின்னர், அது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், இதுதொடர்பில் டோக்கியோ அதிக கரிசனை செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 160 மில்லியன் ரூபாவை அ…

  4. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  5. இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை ரொய்ட்டர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள…

    • 11 replies
    • 690 views
  6. மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை - தென்செய்தி திகதி: 18.03.2010 // தமிழீழம் இந்திய - இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும், அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிரு…

    • 0 replies
    • 591 views
  7. சிலிண்டர்களின் விலை, 21,000 ரூபாவாக.... அதிகரிப்பு ! லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது . தலை நகரிலும் அதை தாண்டி பல மாவட்டங்களின் பல மாதங்கள் கடந்தும் சிலிண்டரின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இந்த நிலையில் வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் 16,000 ரூபா வரையிலும், 5 கிலோ சிலிண்டர் 9,900 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274583

    • 4 replies
    • 397 views
  8. சென்னை,​​ மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் ​(சி.பி.ஐ.)​ இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை ராணுவத்துக்கும்,​​ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.​ 2009 மே 18}ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன்,​​ இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நா…

    • 53 replies
    • 3.6k views
  9. யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை யாழ் நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010 எமது மண் ஆக்கிரமிக்கப்படுகின்ற அதேவேளை, எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து வளங்களும் சுரண்டப் படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு எமது மண்ணில் இருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் எமது மக்கள் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தமது சொந்தங்களைப் பிரிந்து மீள முடியாத சோகத்தில் வாடும் எமது மக்கள் தமது சொந்த …

    • 20 replies
    • 1.6k views
  10. 99.38 விகிதமான அவுஸ்திரெலியாத் தமிழர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மொத்த வாக்குகள் - 8272 நிராகரிக்கப்பட்டவை - 67 நிராகரிக்கப்படாதவை - 8205 ஆம் என வாக்களித்தோர் - 8154 (99.38%) இல்லை என வாக்களித்தோர் - 51 (0.62%)

    • 6 replies
    • 946 views
  11. ‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’ “எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார்…

    • 4 replies
    • 509 views
  12. அரசாங்கத்திற்கு எதிராக.... வாக்களிக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு! தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். https://athavannews.com/2022/1278351

  13. சக்தி டிவி செய்திகள் 15-10-2017

  14. நாட்டில்... இன்று, மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதிகளில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி? குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. …

  15. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான பலத்தைக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அரசியலமைப்புக்கு சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்திருக்கிறது. இரு திருத்தங்கள் முதலில் கொண்டுவரப்படுமென்று அண்மையில் செய்தியாளர் மகாநாடொன்றில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். எதிரணிக் கட்சிகளின் சில உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசியலமைப்புக்கான திருத்தங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட முடியுமென்று அரசாங்கம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அரசியலமைப்புத் திருத்தத்தையே முதலில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்…

    • 0 replies
    • 536 views
  16. Sri Lanka Tamil killings 'ordered from the top' சனல் நியூஸ்.. திகைக்கவைக்கும் படங்கள்.. http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687 untitled.bmp

    • 20 replies
    • 2.5k views
  17. இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser,…

    • 4 replies
    • 868 views
  18. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தென்கொரிய குழுவுடனான சந்திப்பின் போது, நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. இந்த உயர்நிலைக் கலந்தாய்வின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கூட ஜெனிவாவில் தங்கியிருந்தார். வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடு…

  19. பஷிலின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது - திஸ்ஸ விதாரண (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கர…

  20. இறுதிப்போருக்காக படையில் சேர்க்கப்பட்டவர்களால் இராணுவத்துக்கு களங்கம்! – என்கிறார் இராணுவப் பேச்சாளர். [Thursday, 2014-04-03 07:20:02] விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அவசர அவசரமாக இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவத்தினரால், தற்போது இராணுவம் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கேகாலை பகுதியில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான, ஐயாயிரம ரூபா போலி நாணயதாள்கள் 520 ஐ வைத்திருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்த இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய இராணுவ பேச்சாளர், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ ஒழுக்கங்கள…

  21. புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்! தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்று ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் அவர் தெரிவித்தார். எதிர்பார்ப்புக்களை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்த…

    • 32 replies
    • 2.1k views
  22. மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது... பேருந்து கட்டணம்? வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது அண்மையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அது போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்துக் கட்டண உயர்வினால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக பேருந்து தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத்தொழிலுக்கு டீசல் மானியம் வழங்கினால், பழைய கட்டணத்திலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் …

  23. சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...! - பார்த்தசாரதி திகதி: 02.07.2010 ஃஃ தமிழீழம் அன்புடன், புலத்தின் புத்திசீவிகள் என்ற நினைப்பில் கொழும்புக்கு பின் கதவு வழியாக போய் வருபவர்களுக்கு.! (இனிமேல் செல்ல இருப்பவர்களுக்கும்தான்)!! நாங்களெல்லாம் நலம்விசாரிக்கும் இடத்தில் இப்போது நீங்கள் எல்லோரும் இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எழுதவேண்டிய தேவை. அதனால் இதை எழுதுகிறோம். ஏதோ உங்களுக்கு லங்காமாதாவின் அபிவிருத்திபற்றி சிந்தித்து மிச்சமாக இருக்கும் நேரத்தில்தன்னும் இதை படியுங்கள். சரி! போனவருடத்தின் அவலப்பொழுதுகளில் உங்களில் சிலர் எங்களுடன் தெருக்களில் நின்றீர்கள். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் உங்களில் சிலர்தோன்றி…

    • 26 replies
    • 3.2k views
  24. இலங்கை அணி வென்ற உலகக்கிண்ண பரிசளிப்பு விழாவை இருட்டடிப்பு செய்தது கனேடிய தொலைக்காட்சி? [Wednesday, 2014-04-09 09:09:18] ஐசிசி 20க்கு 20 உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கான விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்ப முடியாமல் போனதற்காக கனடா வின் ஸ்போட்ஸ்நெட் தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி, வெற்றி பெற்ற பின்னர் குறித்த நிறுவனம் தமது நேரலை ஒளிபரப்பை நிறுத்தி வேறு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இது தொடர்பாக ரசிகர்களிடம் இருந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து, கனடாவின் ஸ்போட்ஸ்நெட் நிறுவன பேச்சாளர் செபஸ்டியன் காட்டியா, இந்த தவறு குறித்து தாம் ரசிகர்களிடம் மன்னிப்பை கோருவதாக தெரிவித்துள்ளார். எனினும் ஒளிபரப்பு நிறுத்…

  25. பாது­காப்புக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­த­மைக்கு காரணம் என்ன? சீனா போன்று இலங்­கையும் வல்­ல­ர­சா­கி­விட்­டதா - கூட்­ட­மைப்பு கேள்வி ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் பாது­காப்பு அமைச்­சுக்கு கடந்த ஆண்­டை விடவும் 6.667பில்­லியன் ரூபா அதி­க­மாக ஒதுக்­கப்­பட்­ட­மைக்­கான காரணம் என்­ன­வென கேள்­வி­யெ­ழுப்பி அதி­ருப்­தியை வெளி­யிட்ட பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சீனா­போன்று இலங்­கையும் வல்­ல­ர­சா­கி­விட்­டதா என்றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு- -- செல­வுத்­திட்­டத்தின் மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.