ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல Sri Lanka.4 hours ago தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல. “இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும். ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டம…
-
-
- 9 replies
- 615 views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி அறிக்கை எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிட…
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார். பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார். இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://thinakkural.lk/article/312232
-
-
- 14 replies
- 900 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான எதிர்க்கட்சியாக மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவாகியுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையுடைய ஆளுங்கட்சியுடன் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அ…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம் கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம் https://thinakkural.lk/article/312253
-
-
- 68 replies
- 8.6k views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார். மேலும், சுமந்த…
-
-
- 13 replies
- 805 views
-
-
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை…
-
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
மட்டக்குளிய பிரதேசத்தில் 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிபட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மற்றைய இரு சந்தேக …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அவரது அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இது தொடர்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார். இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பய…
-
- 1 reply
- 910 views
- 1 follower
-
-
தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள். இதனை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றைமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும…
-
- 1 reply
- 804 views
- 1 follower
-
-
எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம்.…
-
-
- 3 replies
- 608 views
- 1 follower
-
-
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று …
-
- 0 replies
- 161 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும…
-
-
- 17 replies
- 812 views
- 2 followers
-
-
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு! November 17, 2024 02:45 pm தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது. இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்…
-
-
- 11 replies
- 651 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பம்! 10வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. https://athavannews.com/2024/1408793
-
- 0 replies
- 625 views
-
-
தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்! பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும். அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார். சமன்மலி குணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 59,657 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளதோடு, அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டத்தில் 58,201 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹெச்சிகே 13…
-
- 0 replies
- 161 views
-
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை ! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. …
-
-
- 27 replies
- 1.8k views
-
-
ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே NPP இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக…
-
- 1 reply
- 486 views
-
-
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும். எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்…
-
- 1 reply
- 448 views
- 1 follower
-
-
ரில்வின் சில்வாவின் கருத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்தை தெளிவாக புலப்படுத்துகின்றது; ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (16) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த - தமிழ் மக்களுடைய இருப்பு சார்…
-
- 2 replies
- 389 views
- 1 follower
-
-
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய கப்பலை வரவேற்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி, 155.2 மீற்றர் நீளம் கொண்ட, மொத்தம் 333 பணியாளர்களை கொண்ட ‘USS Michael Murphy’ என்ற Arleigh Burke class guided missile destroyer போர்க்கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகிறார். மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Michael Murphy' கப்பல் இன்று (17) நாட்டை விட்டு புறப்பட உள்ளது. https://t…
-
- 2 replies
- 497 views
- 1 follower
-
-
2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று சனிக்கிழமை (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் தடவையாக வைத்தியர் அர்ச்சுனா சனிக்கிழமை பிற்பகல் யாழ். சாவகச்சேரி சென்றிருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர். https://www.virakesari.lk/article/198956
-
- 1 reply
- 762 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196012
-
-
- 3 replies
- 591 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196011
-
- 2 replies
- 244 views
- 1 follower
-