ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 23 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரணைக்கு எடுத்த நீதிவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 40லட்சம் ரூபா அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்…
-
- 0 replies
- 255 views
-
-
இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 291‚267 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 172‚746 ஆண்களும் 118‚521 பெண்களும் அடங்குகின்றனர். அதிகளவானோர் குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 71,210 ஆகும். இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 48 083 பேரும், சவுதி அரேபியாவிற்கு 45,008 பேரும், கத்தாருக்கு 43,104 பேரும், இஸ்ரேலுக்கு 9,146 பேரும், ஜப்பானுக்கு 7,983 தென் கொரியாவுக…
-
- 0 replies
- 181 views
-
-
சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது: இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம் - சிறீதரன் சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை பங்களார்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள அரசியல் பேச்சுகளை சிங்கள மக்களுடன் நடத்த தயாரக உள்ளோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் ம…
-
- 1 reply
- 173 views
-
-
பௌத்தர்களை பிரிக்க பெரும் சதி முயற்சி; புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிதி உதவி பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்தொகை நிதியளித்து வருகின்றனவென கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சில கட்டுக்கதைகளால் மத நம்பிக்கைகளை மட்டுப்படுத்த முடியாது . இவ்வாறான மட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு சில சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .இந்த வேலைத்திட்டத்தின் முதற்படியாக பௌத்தர்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பௌத்த…
-
- 2 replies
- 382 views
-
-
ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது:பிரதமர் ஹரிணி December 3, 2024 அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது என்பதுடன், அதனை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வில் விசேட உரையை நிகழ்த்திய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”இனவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவே பொதுத…
-
- 0 replies
- 154 views
-
-
திருகோணமலை உவர்மலையில் 36 வருடங்களுக்குப் பின் வீதி ஒப்படைப்பு எஸ்.கீதபொன்கலன் திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தின் முகாம் இவ்விடத்தில் இயங்கி வருகின்றது.இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான இவ் சுற்றுவட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையின் மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக…
-
- 0 replies
- 175 views
-
-
தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது - டக்ளஸ் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர…
-
- 0 replies
- 100 views
-
-
வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களிடம் விசாரணை! adminDecember 1, 2024 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், புலிகளின் தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் கேக் வெட்டி, மரநடுகை மேற்கொள்ளப்பட்டு, பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதன் போது நிகழ்விடத்தில், புலிகளின் தலைவரின் புகைப்படத்துடனான பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வேளை அங்கு சென்ற வல்வெட்டித்துறை காவற…
-
- 1 reply
- 209 views
-
-
மன்னாரில் 7,500 ஹெக்டேயர் விவசாய நில பயர்ச்செய்கை அழிவு ; வங்கிக் கடன்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை! 03 Dec, 2024 மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 1100 ஹெக்டேயர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168 விவசாய நிலங்களும், நானாட்டானில் 768 ஹெக்டேயர் விவசாய நிலங்களுமாக மொத்தம் 7603 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்புகளில் செய்கையிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. …
-
- 0 replies
- 126 views
-
-
அனர்த்த நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் December 3, 2024 12:19 pm கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திறைசேரியில் இருந்து அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். நிலவிய சீரற்ற …
-
- 0 replies
- 470 views
-
-
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று December 3, 2024 06:56 am பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 202…
-
- 0 replies
- 465 views
-
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு! கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் சென்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பட…
-
-
- 7 replies
- 637 views
-
-
பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, பலஸ்தீன மக்களுக்கு இலங்கையின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, காசாவின் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை தொடர்ச்சியாக கடுமையான அதிருப்திகளை தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பையும் ஆதரித்துள்…
-
-
- 14 replies
- 718 views
- 1 follower
-
-
தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது. சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த …
-
- 1 reply
- 191 views
-
-
மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிடம் இன்றைய தினம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக உடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர். மாவீரர் நிகழ்வு எனினும் இந்த மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு என் கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கெலும் ஹர்ஷன என்…
-
- 1 reply
- 347 views
-
-
கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொதித்தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். பெங்கால் புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெங்கால் புயல் 2008 நவம்பரில் தாக்கிய நிசா புயலைவிட வீரியம் குறைவானது. ஆயினும், நிசாவைவிட மிக மோசமான வெள்ளப் பெருக்கை ஏற்…
-
- 1 reply
- 234 views
-
-
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், சம்பந்தனுக்கு இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில…
-
-
- 8 replies
- 761 views
-
-
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பல அரிசி ஆலைகள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் கடந்த அரசாங்கங்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/sri-lanka-weather-change-economy-effects-1733135297
-
- 0 replies
- 284 views
-
-
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அழைப்பு இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே இலங்கை பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. https://tamilwin.com/article/60-year-old-woman-questioned-by-crime-stoppers-1733163593
-
- 0 replies
- 303 views
-
-
26 NOV, 2024 | 09:16 PM காரைதீவில் ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து குழந்தைகளுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் தற்போது காணவில்லை. இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/articl…
-
-
- 26 replies
- 1.8k views
- 2 followers
-
-
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியல் சாசனத்திலே 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதன் நோக்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடாக அமையும். ஒரு அரசியல் சாசனம் வருகின்றபோது, தமிழ் தரப்பையும் ஆலோசனையைய…
-
- 1 reply
- 283 views
-
-
Published By: Digital Desk 7 02 Dec, 2024 | 05:50 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, கற்கோவளம் பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் வெள்ளம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களில் சில குடும்பத்தினருக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01) கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கிராம சேவையாளர், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செ…
-
- 1 reply
- 291 views
-
-
தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலைகளில் மக்களுக்கு தொடர்ச்சியாக அரிசி விநியோகிப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார். மக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள…
-
- 0 replies
- 85 views
-
-
அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும். கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார். "தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுக…
-
- 2 replies
- 381 views
- 1 follower
-
-
2025ஆம் ஆண்டில் அநுர அரசாங்கம்: சந்திக்கப்போகும் சவால்கள்! 2025ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் , சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்புக்களை சமநிலைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் கடுமையான நிதி சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளை பூரணப்படுத்துவதற்கும் இடையே உள்ள கடுமையான சவால்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தலை இடியாக இருக்கப் போகிறது. பல எதிர்க்கட்சிகளும், பழைய அரசியல் தலைமைகளும் தேசிய மக்கள் சக்தியின் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது என்பது தொடர்பில் உற்று நோக்கி வ…
-
- 0 replies
- 343 views
-