Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மஹிந்த தரப்பு தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவராக ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பு தீர்மானித்துள்ளது. பாராளுமன்றில் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக தற்காலிக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கைப்பற்றும் தமது முயற்சியை கைவிட்டதாக அர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 36 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 உறுப்பிர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்காக த…

  2. இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம்:- 20 செப்டம்பர் 2015 அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு- செப்டம்பர் மாத இறுதிக்குள் சிறைச்சாகைளில் விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், அந்தக் கைதிகளையும் உள்ளடக்கி சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிலித்துள்ளது. அந்தக் கடிதத்தின் முழு வடிவம் வருமாறு: அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, 03ம் குறுக்குத…

  3. அமெரிக்கத் தீர்மானம் - ஜெனிவாவில் இன்று முக்கிய கலந்துரையாடல்! [Monday 2015-09-21 07:00] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் …

  4. அரசியலில் இருந்து மஹிந்த விரைவில் ஓய்வு? [ திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2015, 03:53.26 AM GMT ] எதிர்வரும் காலத்தினுள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி ஓய்வு பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆயத்தமாக இருக்கின்றார் எனவும், மீண்டும் தேர்தல் மேடையில் ஏறுவதற்கு விரும்பவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களுக்காக புதிய முன்னணியில் போட்டியிடுவதற்காக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டமையினால் அம் முயற்சி தோல்வியடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய முன்னணி அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது, …

  5. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கச் சார்பற்றது என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிகஹெல உறுமயவின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த மேற் போந்த கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அமைச்சர் சம்பிக்கவின் மற்றைய கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பினும் ஆணையாளரின் அறிக்கை பக்கச் சார்பற்றது என்ற கருத்து ஒரு முக்கியமான செய்தியை நமக்குத் தெரிவிக்கின்றது. அதாவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நியாயமானது என்பதுடன் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச வி…

  6. வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிப்பு கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு சேவையில் ஈடுபடும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.50க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவிருந்த ரயில் சேவையே இரத்துசெய்யப்பட்டுள்ளது. கிரவஸ்திபுர மற்றும் தலாவவுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டதையடுத்து வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலே இன்று பிற்பகல் 2.15க்கு தடம்புரண்டுள்ளது. இதனால், வடக்கு பாதையூடான ரயில் சேவைகள் தலாவ ரயில் நிலையம் வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/154592/வட…

  7. மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல் [ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 12:53.54 AM GMT ] மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார். திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், ய…

  8. ஐக்கிய நாடுகள் சபையின் "ஓப்பரேஷன்’ ஹொட் பொட்டட்டோ" - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்:- 20 செப்டம்பர் 2015 இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் பிரதியை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு ஓப்பரேஷன் ஹொட் பொட்டட்டோ என பெயரிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்பிருந்தே மனித உரிமை ஆணையாளரும், இலங்கை வெளிவிவகார அமைச்சரும் தொடர்ச்சியாக தொலைபேசி தொடர்புகளை பேணிவந்தனர். அவ்வாறான ஓரு தொலைபேசி உரையாடலின் போது விசாரணை அறிக்கையை உத்தியோகபூர்வ வெளியிடுவதற்கு ஐந்து நாட்களிற்கு முன்னர் அதனை இலங்கை அரச…

  9. 5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!! 5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி ச…

  10. கலப்பு நீதிமன்றப் பொறிமுறையானது, ஐ.நாவினால் தலைமை தாங்கப்படுவதாகவும், சர்வதேச சட்ட ஆணையின் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப் பேச்சாளர் எழில் ராஜன் ராஜேந்திரம் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐ.நா. அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இலங்கையில் தகுதி வாய்ந்த நீதிபதிகள் இல்லை என்றும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=140849&category=TamilNews&language=tamil

  11. போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். உள்ளூர் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்துகின்றோம். ஏனெனில் இந்த விடயத்தை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பிற நாடுகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள் இணைந்து கலப்பு நீதிமன்றங்கள் எவ்வாறு வெற்றிகரமாக செயற்பட்டன என்பதை அறிந்து அந்த நடைமுறைகளை கற்…

  12. வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரத்தில் சிக்கி பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் குறித்து முகாம் பொறுப்பதிகாரிக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா செட்டிக்குளம், அடப்பன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில் பெண் ஒருவர் வீட்டிற்குப் பின்புறமாக இருக்கும் வேலியில் நின்ற வேப்பமரத்தில் கிளை பறிப்பதற்குச் சென்ற போது, அடம்பன் குளம், குருஸ் அதிரடிப்படை முகாமின் வேலியில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியது. ஆபத்தான நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி ராஜேஸ்வரி (வயது 55) என்ற பெண் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் …

  13. இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்SEP 18, 2015 | 12:45by நித்தியபாரதிin கட்டுரைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது. இவ்வாறு dailyo ஊடகத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லி அரசியல் வட்டாரத்திற்கு அந்நியமானவரோ அல்லது இந்திய அரசாங்கத்தின் மத்தியில் பரீச்சயமற்ற ஒருவரோ அல்லர். எனினும், கடந்த ஒராண்டாக, ரணில் விக்க…

  14. உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது – நிஸா பிஸ்வால் 19 செப்டம்பர் 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கையின் புதிய அரசாங்கம் வலுவான முனைப்பைக் காட்டி வருவதாக தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். நீதி மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் குறிப்பிடத்தக்களவு சர்வதேச பங்களிப்புடன் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்பது மாதங்களாக புதிய அரசாங்கம் ஆரோக்கியமான …

  15. இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மாலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இலங்கை - ஜேர்மனி தொழில்நுட்பக் கல்லூரியை பார்வையிடுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=72751

  16. நாடளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் 10 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 795 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். தலவத்துகொட, மாதிவல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அத்துடன் கடந்த 9 மாதங்களில் சிறுவர்கள் கடுமையாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த 84 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் 27 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டமை தொடர்பில் 197 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 2014ம் ஆண்டில் ச…

  17. சத்திரசிக்சையின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சம்பத்நுவர என்னும் வைத்தியசாலையில் இரண்டாவது பிள்ளை பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாய் உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சத்திரசிக்சை நடைபெற்று பிள்ளை பெறப்பட்ட போதிலும் பிள்ளை இறந்துள்ளது. இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை…

  18. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 12-ஆம் பதிவு தமிழ்ப் புத்தாண்டு புரிதல் – முன்னோட்டம் நாள்: 17.09.2015 அழகிய இளம் பாடினி ஒருத்தியைக் களிறுகள் வழங்கும் காட்டு வழியில் இசைக் குழுவினருடனும் ஆள் உயர யாழுடனும் நடத்திச் செல்கிறான் பாணர் குழுத் தலைவன் ஒருவன். பேரூர் ஒன்றில் விழாவினை முடித்துக் கொண்டு அங்கே தங்கி ஓய்வெடுக்காமலும் விருந்துணவை ஏற்காமலும் மிகவும் பொறுப்பாக எங்கோ செல்கிறான். வழியில் இன்னொரு பாணன் எதிர்ப்படுகிறான். நல்லவேளை வழியில் என்னைச் சந்தித்தாய். நீ வேறெங்கும் சென்று விடாதே! ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கும் கரிகாலனைச் சென்று பார்! என்று அறிவுரை கூறுகிறான். பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்…

    • 0 replies
    • 624 views
  19. அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறதுSEP 19, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது. இதில், போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. போரின் போது இழைக்கப்பட்டதாக தனது பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ப…

  20. தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் உள்நாட்டு பொறிமுறையொன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான மாற்றங்கள் ஏற்படவில்லை அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் சூடான விவாதம்:- இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் உள்நாட்டு பொறிமுறை ஒன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸ் குழுவின் கூட்டம் செப்டம்பர் 17 ம் திகதி இடம்பெற்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்…

  21. அப்பாவை சுட வேண்டாம் என கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ் பெண்! (வீடியோ) "2009 பிப்ரவரி மாதம் எனது கணவர் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார். எனது பிள்ளைகளின் கண் முன், ராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன், அப்பாவை சுட வேண்டாம் (dont shoot uncle, I want my father) என அழுதான்" என்று ஐ.நா. மன்றத்தில் தாய் ஒருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதன் வீடியோ பதிவு இங்கே... நன்றி: லங்காஸ்ரீ

  22. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவரான குமரன் பத்மநாதன் (கே.பி.)குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்குப்பணிப்புரை விடுத்துள்ளார். கே.பியின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் கருத்து நிலைப்பாட்டுக்கு அமைய சுடுகலன்கள் சட்டத்தின் கீழ் கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்ய இயலாதெனத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய கே.பிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பிக் குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசி…

  23. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாடு இந்த மாதம் 30ஆம் திகதி நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் பிரேரணை எதிர்வரும் 24ம் திகதி முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி …

  24. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிசமைக்கும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சியடைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையும். இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும். ஒன்பது மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ஒப்பீட்டளவில் 7 முதல் 8 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது சீனி, பருப்பு, கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உயர்வடையும். இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு பாரியளவில் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரி…

  25. கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகுSEP 18, 2015 | 14:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரித்துள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல. அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை. 2005 அதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.