ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142791 topics in this forum
-
வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம் வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும், வடமாகாண நிதி மற்றும் திட்ட …
-
- 0 replies
- 447 views
-
-
மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர் நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்த…
-
- 3 replies
- 682 views
-
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதின் ஈரானுக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். எனினும் இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கிழக்கு முதலமைச்சரின் ஈரானுக்கான விஜயம் நாட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதனாலேயே இந்த இரத்து செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பொதுபலசேன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் முறையிடவே முதலமைச்சரி…
-
- 4 replies
- 574 views
-
-
திவுலபிட்டியவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். இன்றுவரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கொரோனா பரவல் குறித்து கூறும் போது அது குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எப்படியிருப்பினும் இது உண்மை என்றால் எதிர்கட்சி என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இட…
-
- 1 reply
- 634 views
-
-
மீனவர்களுக்கு கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..! மீறினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும்.. இலங்கை மீனவர்கள் வெளி நாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண கூடாது. பேணினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும். என கடற்றொழில் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்றோழில் அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாவிடின், எதிர்காலத்தில் மீன் பிடி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://jaffnazone.com/news/20961
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது. சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
62 சந்தேக நபர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க நீதி மன்று உத்தரவு 40 Views இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 08பேர் இன்று மட்டக்களிப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பாகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழை…
-
- 0 replies
- 361 views
-
-
அண்ணன் சம்பந்தனின் கோரிக்கைகளை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்த நான்; பதவிகள், அதிகாரங்களை அடைய வேண்டும் என என்றுமே அவாக் கொண்டதில்லை எனத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைத்தமை ஒரு சிலரின் மனதை பாதித்திருந்தால் அதற்கும் சம்பந்தனே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். காலைக்கதிர் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தன் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவேளை, வடக்கு முதலமைச்சர் பதவி ஏதோ வகையில் என் மடியில் வந்து விழுந்தது. அது ஒ…
-
- 1 reply
- 459 views
-
-
ஈழத்தமிழ் மக்கள் நாளாந்தம் கொன்றொழிக்கப்படும் கொடும் போரை சிறீலங்கா அரசு அன்றி, இந்தியாவே நடத்தி வருவதாக, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அரசும் வெறும் பொம்மைகளாக இருக்க, அவர்கள் மூலம் இந்தியாவே போரை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், இதனாலேயே அனைத்துலக நாடுகள் இதில் தலையிடுவதில் இராசரீக சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலகின் இடதுசாரிகள், மற்றும் தொழிற்கட்சிகளை உள்ளடக்கிய நான்காம் மண்டல அமைப்பின் அனைத்துலக மாநாடு கடந்த 21ஆம் நாள் முதல் 25ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெறும் போர் பற்றி ப…
-
- 0 replies
- 849 views
-
-
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், சின்னஞ்சிறு சிறார்கள் கூட விட்டு வைக்கப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டதும் படக் காட்சிகளாக அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றை கண்டு நெஞ்சு பதறாமல் யாராலும் இருக்க முடியாது. குறிப்பாக விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன் அப்பாவித்தனமாக இருப்பதும், பிறகு அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் மனித உள்ளம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணை குழுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்…
-
- 8 replies
- 730 views
-
-
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற போதும், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்து கொள்கின்றது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்…
-
- 0 replies
- 269 views
-
-
மட்டக்களப்பு சிறைச்சாலை மாந்தீவுக்கு மாற்றம்: முரளிதரன் வியாழக்கிழமை, 14 மார்ச் 2013 07:40 -ஏ.எச். அப்துல் ஹுஸைன் மட்டக்களப்பு சிறைச்சாலையை மாந்தீவுக்கு அகற்றுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இது மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 318 views
-
-
புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான…
-
- 0 replies
- 2.7k views
-
-
வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடலு. இடம் பெற்றது. சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 638 views
-
-
கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மரணச்சடங்கொன்றில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிரபல ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று புறக்கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வித்தியாதரன் மீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவரது தடுப்புக் காவலை நீடிக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியதை அடுத்து நீதவான் ஜெகான் பலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவுஸ்ரேலிய எஸ்பிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் வித்தியாதரன் பயங்கரவாதி எனவும் அவரைக் காப்பாற்…
-
- 1 reply
- 809 views
-
-
‘தமிழக முதல்வர்கள் வந்த வரலாறு இல்லை’ அழகன் கனகராஜ் “இந்தியாவைப் போன்றே, தமிழகத்துடனும் நாங்கள் நல்லுறவை வளர்க்கவேண்டும். தமிழக முதலமைச்சர்களில் ஒருவர்கூட இலங்கைக்கு உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட வரலாறு இல்லை” என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கம…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கையிடம் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது? “உயிர்களைக் காப்பாற்றுவதில், இலங்கை ஆயுதப்படைகள் நிபுணத்துவத்தையும், அக்கறையையும் காண்பித்தனர். இந்த அவசர சூழ்நிலைகளில் அவர்கள் வழங்கிய உதவிகள் ஆழமாகப் பாராட்டப்பட வேண்டியது.” இவ்வாறு இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார், அட்மிரல் ஹரி பி ஹரிஸ். இவர் 70 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி. கடந்தவாரம், கொழும்பில் கோல்பேஸ் விடுதியில் நடந்த காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது தான் அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் இவ்வாறு கூறியிருந்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைக் க…
-
- 0 replies
- 429 views
-
-
உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும். இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62 ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வரவு–செலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின் செலவின தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14285
-
- 0 replies
- 143 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிடக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/140447/dada.jpg பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்.பி, வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில…
-
- 1 reply
- 350 views
-
-
இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலேயே இந்தக் கருத்தை தமிழக மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 497 views
-
-
பாராளுமன்றத்தில் இடம்பிடித்த மலையக மக்களின் காணி விவகாரம் Parliament is nothing but talking என்று சொல்வார்கள். அதாவது பாராளுமன்றத்தினால் பாரிய விடயங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. ஆனாலும் அங்கு பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகவுள்ளது. ஊடகவியலாளராக செய்தி சேகரிக்க பல தடவைகள் பாராளுமன்றம் சென்றதுண்டு.எனினும் ஒரு ஊடகவியல் மாணவராக கடந்த வாரம் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஒழுங்கும் செய்யப்பட்டிருந்தது. அதன்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்தனர். இந…
-
- 0 replies
- 295 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் வடக்கு - கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்க நிர்வாகத்தில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற பொய்யான பிரசாரத்தை செய்வதற்காக சித்திரை புத்தாண்டு நாளன்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பலாத்காரமான ஏற்பாடுகள் அங்கு இடம்பெறுவதாக யாழ். அரச அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 606 views
-
-
மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் – அகிலன் 164 Views பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துப் போட்டி இப்போது யாழ். மாநகர சபையை இழக்கும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இது மாவை. சேனாதிராஜாவின் தலைமைக்கு ஏற்பட்ட கடும் சோதனை. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய சவால் ஒன்றைச் சந்தித்திருக்கின்றது. மாநகர சபையில் அதற்கிருந்த 13 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பது கஜேந்திரன்களுக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்றது. எந்தக் கட்சியிலிருக்கின்றார் என்பதே தெரியாமல் தனித…
-
- 9 replies
- 1.4k views
-
-
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-