ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மிகவும் நல்லதொரு மனிதர். அவருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வடக்கில் நிலவும் பல பிரச்சினை களுக்கு இலகுவாகத் தீர்வுகளைக் காணமுடியும் எனத் தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப் படுகொலை தீர்மானம் மற்றும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கம் தொடர்பாகக் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகத் தங்களது கருத்து என்ன என வினவிய போதே ஜனா திபதி இவ்வாறு பதிலளித்தார். வட மாகாணசபையைப் பொறுத்தவரையில் அதன் முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மிகவும் நல்லவர்.அவரை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரியும். கொழும்பில் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். அவருக…
-
- 0 replies
- 328 views
-
-
பெண்களை ஆட்டோ சாரதிகளாக அங்கீகரிப்போம் ''எங்களால் முடியும் பெண்க ளால் முடியும்'' எனும் தொனிப்பொருளில் பெண்களை ஆட்டோச் சாரதிகளாக அங்கீகரிப்போம் எனும் நடவடிக்கை மட்டக்களப் பில் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் டேவிட் பீரிஸ் மோட் டர்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை அனுசரணையுடன் மட்டக்களப்பு கல்லடியில் நடாத்தப்பட்ட இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது ஆட்டோ சாரதிகளாக பயிற்சியை முடித்த மட்டக்களப்பைச் சேர்ந்த இரு பது பெண்கள் ஆட்டோக்களை செலுத்திக் காட…
-
- 0 replies
- 327 views
-
-
கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் இதுவரை 60.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிர்மாணங்களை தற்காலிகமாக நிறுத்த கடந்த 6ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. இந்தநிலையில் நிர்மாண அமைப்புக்கள் நிறுத்தப்பட்டமையால், நீர்தடுப்புகளில் ஏற்படும் கடல் அரிப்பு உட்பட்ட சேதங்களை பாதுகாக்க அனுமதிக்க வேண்டும் என்று கட்டுமாண சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுமதியை அளித்துள்ளது. இதன்படி நீர்தடுப்பு சேதப்புனரமைப்புக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சீனாவில் இருந்து மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. பணிகள் முடிவடைந்தது…
-
- 0 replies
- 247 views
-
-
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வுத் துறையினர் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வடமராட்சி சுண்டிக்குளம் கடலோரத்தில் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களின் அனுமதியில்லாமல், இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் நீரியல் வள அமைச்சு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகளும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் இராணுவமும் புலனாய்வுத்துறையினரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பாக பேசியதுடன், அப்பகுதி மீனவர்களுடன் முரண்பட்டு அச்சுறுத்தி தாக்க…
-
- 1 reply
- 345 views
-
-
வலிகாமம் வடபகுதியிலுள்ள காணி விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் சாதகமாகக் கூறுகின்றது. ஆனால், நேரில் செல்லும் போது இராணுவம் மக்களை அனுமதிக்க மறுக்கின்றது. இதனால், வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரையில் உண்மை நிலை என்ன என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் யரழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதையிட்டு மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். வலிகாமம் வடக்கில் 100 நாட்களில் 1100 ஏக்கர் காணியை விடுவிக்கவிருப்பதாக கூறப்பட்டது. மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அமைவாகவே இத…
-
- 1 reply
- 1.9k views
-
-
திருகோணமலை சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 9 வருடங்களாக சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.அதற்கு நல்லதொரு தீர்வு இப்பொழுது கிடைத்துள்ளது. சம்பூர் குடியேற்றம் சம்பந்தமாக நல்லதொரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் த…
-
- 34 replies
- 941 views
-
-
மோடியுடனான சந்திப்பில்… இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது திரைமறைவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இப்போது மெல்லமெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமது பிடிக்குள் வைத்திருந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அந்தப் ‘பிடி’யை இழந்துவிட்டார்கள் என்பதும், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு விக்கினேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் என்பது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக விக்னேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவின் துணையை நாடும் நிலை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. முதலமைச்சரின் ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தையடுத்தே இந்த விரிசல் தீவிரமடைந்திருக்கின…
-
- 45 replies
- 2.9k views
-
-
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார் என நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தற்போது அவரை வியட்நாமில் தேடி வருவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் திஸநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக லலித் திஸாநாயக்க எம்.பி. தமது கேள்வியில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் யார் என்றும், மேற்கூறப்பட்ட நபருக்கு இலங்கையில் பிரஜாவுரிமை உள்ளதா என்றும், ஆம் எனில், …
-
- 1 reply
- 973 views
-
-
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே அதனை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும்.தமிழ் மொழியில் பாடுவது தடைசெய்யப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று பாராளுமன்றத்தில் கூறியதால் சபையில் பெரும் சர்ச்சையும் களேபரமும் ஏற்பட்டது. சரத்வீரசேகரவின் மேற்படி கூற்றினையடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்ட வகையிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சரத் வீரசேகரவைப் பார்த்து எம்.பிக்களான டிலான் பெரேரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் …
-
- 9 replies
- 882 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது அங்கு அவரின் பாதுகாப்பு நடவடிக்கையில் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுவதை இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பரூதீன் மறுத்துள்ளார். மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இந்திய பிரதமருடன் கைக்குலுக்க முற்பட்டார் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின்போது சுமார் 25 கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவரின் நிகழ்வுகள் யாவும் படமாக்கப்பட்டன, இதன்போது யாரும் அவரின் அருகில் வந்தமை தொடர்பில் எந்த ஆதாரங்களும் இருக்கவில…
-
- 0 replies
- 720 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த பெருந்தொகை பணத்தை கண்டுபிடிக்க இந்தியாவும் அமெரிக்காவும் உதவியளிப்பதாக இக்கோனோமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத பணம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. டுபாயில் மாத்திரம் இவர்கள் 2 பில்லியன் டொலர்கள் வைப்பை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் 1.064 பில்லியன் டொலர் வைப்பையும் ஏனைய இருவர் 500 மில்லியன் டொலர் வைப்புக்களையும் கொண்டிருப்பதாக இந்திய செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. டுபாயில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் ராஜபக்ச குடும்பம் வெளிநாடுகளில் வைப்பு செய்துள்…
-
- 0 replies
- 481 views
-
-
கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் மனம் விட்டு பேசிய சுமந்திரன் தனது கவலையினை வெளியிட்டுள்ளார். நான் அரசுடன் பேசி பல நல்லவிடயங்களை செய்துவருகின்றேன். அந்தவகையில் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியலை பெற்றுக்கொண்டுள்ளேன். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். ஆனால் சுரேஸ் போன்றவர்கள் தேவையற்றவற்றை கிழறுகின்றனர். கோத்தா முகாம் தொடர்பினில் சாட்சிகளை நிறுத்தப்போவதாக சவால்விடுகின்றார். இப்பிடி…
-
- 31 replies
- 2.5k views
-
-
பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பயணம், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என அது கருத்து தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 தேதிகளில் நமது அண்டை நாடான இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது 14-ந் தேதி, உள்நாட்டு போரில் பெரிதும் பாதிப்புக்குள்ளானதும், தமிழர்கள் பெருவாரியாக வாழக்கூடியதுமான யாழ்ப்பாணத்துக்கு அவர் சென்றார். அவருடன் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவும் சென்றிருந்தார். அங்கு உலகப்பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நூலக வளாகத்தில் ரூ.60 கோடியில் கட்டப்படும் கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் மத்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை ப…
-
- 9 replies
- 765 views
-
-
சிங்கள பௌத்த நாட்டில் எதற்காக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடவேண்டும்? 8 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் கூட தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று தமிழில் தேசிய கீதம் கேட்பவர்கள் நாளை தமிழ் தேசத்தினை கேட்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையின் அரசியல் அமைப்பினுள் அரச கரும நிகழ்வுகளில் தமிழ்மொழி மூலம் தேசிய கீதத…
-
- 0 replies
- 759 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்துள்ள வசாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டு, அழைக் கப்பட்ட மக்கள் நேற்று ஏமாற்றப்பட்டனர். அதனால் ஆத்திர மடைந்த அவர்கள் இராணுவத்தினருடனும், அரச அதிகாரி களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 25 வருடங் களின் பின்னர் சொந்தக் காணிகளில் கால் வைக்கலாம் என்ற ஆசையுடன் வந்த மக்களை, இராணுவத்தினரும் அரசும் சேர்ந்து நேற்று ஏமாற்றித் திருப்பி அனுப்பியது. வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை, வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரி வுக்கு உட்பட்ட வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட் டது. இந்த நிலையில்…
-
- 1 reply
- 870 views
-
-
சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் மனிதருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சு மாசுகள், எண்ணெய், கிறீஸ் போன்றவை இல்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது என்று நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை யால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு கூறுகின்து. சுன்னாகம் மின் நிலையத் தைச் சூழ ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்துக்குள் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிபு ணர் குழு தெரிவித்தது. தூயகுடிதண்ணீருக்கான செயலணியின் அமர்வு வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகா தார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தி யாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 446 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த நிலங்களிலேயே குடியமர்த்தப்படுவார்கள் என்று அரசு தெரிவித்து வரும் நிலையில், வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்குப் பிரதேசங்களில், மக்களின் கண்முன்பாகவே இராணுவத்தினர் புதிய நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வசாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட காணிகள் பொதுமக்களிடம் விடுவிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு அமைய, மக்கள் நேற்று குறித்த பகுதிக்குச் ஆனால் இராணுவத்தினர், 2012 ஆம் ஆண்டு ஒட்டகப்புலத்தில் அமைத்த நிரந்தர பாதுகாப்பு வேலிகளைப் பின்நகர்த்தாமல் அப்படியே வைத்திருந்தனர். வல்லை அராலி பிரதான வீதியை மாத்திரம் திறந்து விட்டிருந்தனர். அதனூடாக மக்கள் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் மாத்…
-
- 0 replies
- 387 views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி நேற்றிரவு (18-03-2015) கொலை முயற்சியொன்றிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டருந்தது. இந்தநிலையில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இருப்பினும் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக …
-
- 32 replies
- 2.3k views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. இந்நிலையில் கொடியேற்றத்தின் போது பின்பற்றப்படும் மரபை ஆலய நிர்வாகத்தினர் சிலர் பின்பற்றாது தவிர்க்க முயல்கின்றனர். இதனால் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் புறந்தள்ளி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. இந்த ஆலய கொடியேற்றத் திருவிழாவன்று கோயிலுக்கு அண்மித்ததாக இருக்கின்ற குறிப்பிட்டதொரு சமூகத்தவர்கள் கொடிச்சீலை வழங்குவதுடன் அன்றைய தினம் தர்ப்பை அணிந்து அர்ச்சகர்களுக்கு தட்சணை கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நீண்ட கால மரபாக உள்ளது. ஆனால், திருத்த வேலைகளுக்காக ஆலயம் இடிக்கப்பட்டு, பலகோடி ரூபா…
-
- 6 replies
- 650 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைப்பினூடாக நீதி கிடைக்குமென்ற எதிர்பார்க்க முடியாது. அத்துடன், இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் செய்யக் கூடிய அனைத்தையும் நாங்கள் செய்ய வேண்டும். கோபத்தினால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. அழிந்து போனவர்கள் போய்விட்டார்கள். ஏனையவர்கள் நிதானமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் தமிழர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி உள்ளது என குறிப்பிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=128694&category=TamilNew…
-
- 2 replies
- 519 views
-
-
தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் நாளை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். கொழும்பில் உள்ள கூட்டணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்று அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;சகலதமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்துநம் கோரிக்கைகளைமுன் வைப்பதன் மூலமே எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதோடு நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் எமது இனப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வினையும் பெற்றுக் கொள்ளமுடியும். சமீபகாலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள்…
-
- 32 replies
- 1.7k views
-
-
சிகிரியாவில் கிறுக்கிய பெண்ணை மன்னித்து விடுவிப்பது சாத்தியமா? என பரிந்துரைக்குமாறு சட்ட அமைச்சை ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளதாம். http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=121670
-
- 19 replies
- 2.1k views
-
-
நடைபெற்று உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததையடுத்து இரு அணிகளின் இரசிகர்கள் இடையே இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று சிட்னியில் நடைபெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையான போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனையடுத்து இப்போட்டியை பார்த்த கிளிநொச்சியைச் சேர்ந்த தென்னாபிரிக்க அணியின் ரசிகர்கள் இலங்கை அணியின் ரசிகர்களை கேலிக்கை செய்துள்ளனர். பின்னர் இரு குழுக்கள் இடையும் மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகிய இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்திய…
-
- 12 replies
- 2.3k views
-
-
சிறுவர் இல்லத்தில் இருக்கும் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியுடன் இணைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் அனுமதி மறுத்துள்ளார். மகா தேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் தனது மகளை விடுவித்து, தன்னுடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ஜெயக்குமாரி. இந்த மனு மீதான விசாரணை இன்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டு பிற்பகலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜெயக்குமாரி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், என்.சுந்தர சர்மா, எச்.றைகான், எஸ்.துஸ்ஸியந்தி ஆகியோர் மன்றில் ஆஜராகினர். சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமி விபூசிகாவை விடுவித்து தாயாருடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் தமது வாதத்தில் எடுத்துக் கூறி…
-
- 2 replies
- 445 views
-
-
ஏழாலை மயிலங்காடு சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 26 பாடசாலை மாணவர்களும் பூச்சிமருந்து கலந்த நீரை அருந்தியதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்.எனினும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.சிலர் தண்ணீரை அருந்தவில்லை.சிலர் தண்ணீர் அருந்தியுள்ளனர்.தண்ணீர் அருந்தாத மாணவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக உடனடியாக அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நீர்த்தாங்கியின் மேல் ஏறி பார்த்த பொழுது பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிமருந்து போத்தல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக பூச்சிமருந்து கலந்த நீரை அருந்திய மாணவர்கள் 26 பேரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாழ்…
-
- 15 replies
- 2.2k views
-