ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விவரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி தான் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் இந்த விவரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு…
-
- 2 replies
- 419 views
-
-
முன்னாள் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் 14 பேரையும் வெளியேறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாமாக வெளியேற வேண்டுமெனவும் அவர்களை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களெனவும் அவர்கள் தாமாக வெளியேறாவிடின் யாழ். பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களில் அரசியல் செல்வாக்குடன் ஈபிடிபியிலிருந்து அக்கட்சி சார்ந்தவர்களாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அரசியல் பின்னணியிலேயே நியமிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தால் பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டது. வெளிவாரி உறுப்பினர்கள் வெளி…
-
- 0 replies
- 386 views
-
-
-ற.றஜீவன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் சபை உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரது மோட்டார் சைக்கிள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தீவைக்கப்பட்டதாக மருதங்கேணி உப-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன்பக்கத்தில் விடப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்;டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி உப-பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலும் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137917
-
- 8 replies
- 989 views
-
-
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களை யாழ்ப்பாண பொலிஸார் அழைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே.ஆனைமுகன் ஆகியோரையே விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட…
-
- 1 reply
- 447 views
-
-
நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது காலம். என் அயல்வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்த பட்டாசுச் சத்தங்கள் உழவர் திருநாளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. மிகுந்த கோலாகலத்துடன் சூரியனை வரவேற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். நான் பேஸ்புக்கில் கடும்பிசி. அப்போதுதான், 077705……. என்று ஆரம்பிக்கும் என் தொலைபேசியில் பதிவிடப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு. பிறகென்ன வாழ்த்துச்சொல்ல தொடங்கீட்டாங்கள், நினைத்துக்கொண்டே, “ஹலோ”.. “நான் மாலினி, நினைவிருக்கா உங்களுக்கு”.. “எந்த மாலினி……….” என்று வசனத்தை இழுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தக் குரலை இதற்கு முதல் எங்கே கேட்டேன் என்பதை நினைவுக்குள் கொண்டுவர முயற்சித்தேன். “ஆ என்னோட பள்ளிக்கூடத்தில படிச்ச மாலினி தானே“ – முயற்சி வீண்போகவில்லை. “ ஓம்“ …
-
- 0 replies
- 431 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்படத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ரோம் பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து விடயங்களும் உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் கீழே மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்துசெயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆசிய சட்ட மா அதிபர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறு…
-
- 0 replies
- 286 views
-
-
முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய மாநாடொன்றில் கலந்து கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் கலந்துகொண்டால் தாங்கள் அதனை புறக்கணிக்கவேண்டியிருக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாநாட்டிற்பு அவரிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இரத்துச் செய்ய வேண்டும்,அவர் கலந்துகொண்டால் மாநாட்டிலிருந்து வெளியேறுவோம் என எச்சரித்திருந்தோம் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEdit…
-
- 1 reply
- 555 views
-
-
இலங்கைத்தமிழரசுகட்சியின் தலைவர் அவர்களே!! தமிழ்மக்களாகிய நாம் வார்த்தைகளால் வர்னிக்கமுடியாத அளவு வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கி என்றோ ஒருநாள் எமது நியாயமான போராட்டம் வெற்றிபெறும் சுதந்திரக்காற்றினை நாமும் சுவாசிக்கலாம் என்று ஆவலோடும் ஒரு பாரிய எதிர்பார்ப்போடும் காத்திருக்கின்றோம். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் தமிழர்களுக்காக பேசும் ஒரு சக்தியாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை மட்டுமே தமிழ்மக்கள் நம்புகின்றார்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றால் அதன் அர்த்தம் என்ன? அதற்கும் எத்தனை கட்சிகள் இருக்கின்றன அந்த கட்சிகளுக்குள் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி அடிமட்ட பாமர மக்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் தம்ழ்த்தேசியக்கூ…
-
- 53 replies
- 3.6k views
-
-
போதைப்பொருள் கடத்தல் மன்னனிடம் மாதம் 1 கோடி ரூபா கப்பம் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் JAN 20, 2015 | 1:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், வேலெ சுதா, தன்னிடம் கிரமமாக பணம் பெற்று வந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து சிறிலங்காவுக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்து விநியோகித்த, வேலெ சுதா, கடந்த வாரம் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவரை மூன்று மாதங்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் …
-
- 1 reply
- 430 views
-
-
மீறல்கள் குறித்து வெளியார் எவரும் விசாரிக்க முடியாது – என்கிறார் ரணில் JAN 20, 2015 | 2:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடாததால், நாட்டில்இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய முடியாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்கா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமாக ஆசிய சட்டமா அதிபர்களின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் 16 நாடுகளின் சட்டமா அதிபர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, “ எமது நாட்டின் சட்ட கட்டமைப்பு 200 வருடங்கள் பழமையானது. என்றாலும் கடந்த ஐந்து ஆண…
-
- 0 replies
- 389 views
-
-
முன்னாள் இராணுவ அதிகாரியிடம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் JAN 20, 2015 | 2:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு கட்டமாகவே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 42,000 பேரைக் கொண்ட சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், போரின் போது முப்படைகளுக்கும் உதவியாகச் செயற்பட்டு வந்தது. சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் இதற்கு முன்னர், சி…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் செலிடப்பட்ட முழு விபரங்களை ஆராயும் வரை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகள் தற்காலிகமான இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்தார். வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கான முதற்கட்ட பணி கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்நட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவிருந்தது. முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்…
-
- 3 replies
- 688 views
-
-
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. குறித்த கப்பலில் இருந்த ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதிப் பத்திரம் உள்ளதா? அந்த அனுமதிப் பத்திரம் எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும்? எந்த ஆயுதங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த ஆயுதக் களஞ்சியத்தித்தில் சுமார் 3,000 துப்பாக்கிகள் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் காலி துறைமுக ப…
-
- 3 replies
- 548 views
-
-
வடக்கில் மக்களுக்கு மாத்திரமல்லாது, இராணுவத்தினருக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரை நேற்று சந்தித்து ஆசி பெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் இதுவரை இராணுவம் முன்னெடுத்த சில செயற்பாடுகள் ஊடாக அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிருந்தது. அரசியல் செயற்பாடுகள் காரணமாக இராணுவத்தினரால் தமது கடமைகளை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கு பிறகு பல்வேறு வதந்திகள் பரப்பட்டன. இந்த நாட்டை இரண்டாக பிளவுப்படுத்த போகிறார்கள், வடக்கில் இருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட உள்ளது இப்படி பல வதந்திகள் பரப்…
-
- 4 replies
- 822 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிர்ப்பு JAN 20, 2015 | 1:00 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக உள்ள, முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இன்றைய கூட்டத்தில், சபாநாயகரை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொ…
-
- 1 reply
- 944 views
-
-
வடக்கு மாகாணசபைக்கு இடையூறாக இருந்த பிரதம செயலரும் மாற்றப்பட்டார் JAN 20, 2015 | 0:37 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த வடக்கு மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி செயற்பட்டு வந்தார். அவரது நேரடி வழிநடத்தலில், மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ் மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. ஆளுனரையு…
-
- 0 replies
- 459 views
-
-
மோடியைச் சந்தித்தார் மங்கள சமரவீர JAN 19, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று மதியம் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.(இரண்டாம் இணைப்பு) இந்தச் சந்திப்பு புதுடெல்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் ரேஸ்கோஸ் வீதி இல்லத்தி்ல் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 30 நிமிடங்கள் வரை நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கு வருகை தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மங்கள சமரவீர அழைப்பு விடுத்தார். அதேவேளை, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்ன…
-
- 0 replies
- 392 views
-
-
புதிய அரசு தேசிய தமிழ்மக்கள் பிரச்சினைத் தீர்வு காண்பதற்கு கால அவகாசத்தை எம்மிடம் கோரியுள்ளனர். எனவே தமிழ் மக்கள் தமது தீர்வு திட்டத்திற்காக சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தற்போது தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ள சர்வதேச அரசியல் கொள்கை மாறிவிட வாய்ப்புள்ளது. கடந்த ஆட்சியின் போது நாட்டில் ஒட்டுமொத்தமாக ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி அலரிமாளிகைக்கு சென்று வந்து சொன்னாராம் 47 கடற்படை வீரர்கள் அங்கு சமையல் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று. இதிலிருந்து அலரி மாளிகையில் எத்தனை மில்லியன் ரூபா ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மஹிந்தவின் இரண்டாவது மகனின் செருப்பின் விலை ஒன்றரை இலட்சம் ரூபா. அந்த அளவிற்க…
-
- 0 replies
- 658 views
-
-
புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஆயுதப் போராட்டத்திற்கு உதவியமை தொடர்பாக கே.பி. க்கு எதிராக முன்னைய அரசாங்கம் எதுவித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவரிடமிருந்ததாக கூறப்படும் கப்பல்கள் தங்கம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை என கூறியுமே ஜே.வி.பி. உயர்நீதிமன்ற்ததில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/01/19/கேபிக்கு-எதிராக-வழக்குத்-தாக்கல்-செய்தது-ஜேவிபி
-
- 1 reply
- 849 views
-
-
3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம் JAN 19, 2015 | 2:23by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில், சுமார் 3 மணிநேரமாக சந்திப்பு இடம்பெற்றது. வழக்கத்துக்கு மாறான முறையில் மிக நீண்டநேரமாக நடந்த இந்தச் சந்திப்பில், இந்திய – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுகுறித்துதக…
-
- 4 replies
- 760 views
-
-
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அப்பதவிக்கு தற்போதைய ஆளுநர் சந்திரசிறியுடன் பணியாற்றிய ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. வுடமாகாண சபையின் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்ட விஜயலட்சுமி றமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் வடமாகாண பிரதம செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு பெருந்தோட்ட கைத்தொழில் இ…
-
- 0 replies
- 739 views
-
-
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல், கொலைக்குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/37096/57//d,article_full.aspx
-
- 1 reply
- 853 views
-
-
பிலியந்தலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து, பிரபல அரசியல்வாதி ஒருவருடைய மகனுக்கு சொந்தமானது என நம்பப்படும் லம்போகினி கார் பிலியந்தலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பிலியந்தல பகுயில் மக நெகும வேத்திட்டத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்தே குறித்த லம்போகினி கார் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபரின் மகன் தன்னுடைய நண்பர் ஒருவரின் கார் எனவும் குறித்த கார் தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியமையடுத்தே குறித்த காரை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/01/18/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%…
-
- 9 replies
- 1.8k views
-
-
வடக்கு கிழக்கில் உள்ள ஆயுதக் குழுக்களின் எதிர்கால நிலை என்ன? எதிர்வரும் காலங்கள் எப்படி அமையும் என ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார் நேரு. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் தீர்ப்பு வேறு யாரிடமும் இல்லை. தீர்ப்பை வரையறுக்க வேண்டியவர்கள் நாம். அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன, எப்படி செயற்பட வேண்டும் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் கனடாவில் உள்ள சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் விபரிக்கிறார். http://www.tamilwin.com/show-RUmtyBSdKcmv3.html
-
- 1 reply
- 682 views
-
-
சிறிலங்காவில் ஓர் ஆச்சரியமளிக்கும் அரசியல் மாற்றம் JAN 16, 2015 | 7:10by நித்தியபாரதிin கட்டுரைகள் கடந்த வியாழனன்று சிறிலங்காவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அதிபர் தேர்தல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போது முதற் தடவையாக பதவி வகித்துக் கொண்டிருந்த அதிபர் ஒருவர் தேர்தல் மூலம் அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலையில், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஊடக நிறுவளங்கள் மற்றும் செய்தி வலைப்பின்னல்கள் போன்றன அதிபர் தேர்தல் தொடர்பான பெறுபேறுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. மகிந்த ராஜபக்ச இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார் என்ற செய்தியை சிறிலங்கர்கள் அறிந்து கொள்வதற்குப் பெரும் பிரய…
-
- 9 replies
- 1k views
-