Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலசலகூடத்துக்குள் மகிந்த! – அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண். [saturday 2014-12-13 10:00] மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என ஐதேக எம்.பி. சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றில் கிண்டலடித்தார். பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவின் பதாகைகளை அரச தரப்பினர் ஒட்டிவிடுகின்றனர். மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என ஐதேக எம்.பி. சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றில் கிண்டலடித்தார். பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தலைவர் ஒருவரே நாட்டுக்கு அவசியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அனுராதபுரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிரணியின் பொது வேட்ப்பாளர் மைத்திரிபாலசிறிசேன ரணில் விக்ரமசிங்கவை ஐயா என அழைக்கிறார். இவ்வாறு ஐயா என அழைக்கும் சிறிசேனவால், எவ்வாறு நாட்டை கொண்டு செல்ல முடியுமென இதன் போது கேள்வி எழுப்பினார். சமஷ்ட்டி தீர்வை ஏற்படுத்த முயன்ற சந்திரிக்கா, நாட்டை பிரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ரணில் விக்ரமசிங்க, சுயநிர்ணய உரிமையை வலியுறத்தும் ராஜித்த ஆகியோருடன் இணைந்து சிங்கள பௌத்த வாக்குகளை உடைப்பதற்காகவே சிறிசேன களத்தில் இறங்கி இருப்பதாகவும்…

  3. அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு குறித்து விசாரிக்க முடியாது! - கைவிரிக்கிறது மனித உரிமை ஆணைக்குழு [sunday 2014-12-14 09:00] இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லையா என்று யாழ்.மாவட்ட சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவினரால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் சமூகத்தினருக்கான மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி நெறியில் வைத்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லையா என்று யாழ்.மாவட்ட சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவினரால் நேற்று ஏற்பாடு…

  4. மகிந்தவும் மைத்திரியும் பகிரங்க நேரடி விவாதம்! – இலங்கை வரலாற்றில் புது முயற்சி. [sunday 2014-12-14 09:00] ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேரடி விவாதமொன்றை ஏற்பாடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தொழில்சார் நிபுணர்களும், சில புத்திஜீவிகள் அமைப்புகளும் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும் இந்த விவாதத்தில் ஜனநாயகம், சீரான நிர்வாகம், நீதிமன்றங்களில் சுயாதீனம் ஆகியவை பிரதான கருப்பொருள்களாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேரடி விவாதமொன்றை ஏற்பாடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்…

  5. மகிந்த கூட்டிலிருந்து வெளியேறும் மு.கா news ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மகிந்த அரசிலிருந்து வெளியேறும் முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகிறது. 14 டிசெம்பர் 2014, ஞாயிறு 8:50 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=658323725914508430#sthash.PJ34dric.dpuf

  6. குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ரணில் 14 டிசம்பர் 2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்பபடும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் சாதாரண சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய புலனாய்வுத் துறையினர்…

  7. திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். நம் நாட்டில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் மக்களுக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, பௌத்த சகோதரர்களுடன் நமக்கு இருக்கின்ற நல்லுறவை கெடுக்கும் தீவிரவாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி விட்டு, இப்போது வெங்கடாசலபதியின் அருளை கோருவது நியாயமாகுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பி…

  8. -பொ.சோபிகா சுன்னாகம் பகுதியில் எண்ணெய்க்கலப்புள்ள குடிநீரில் பார உலோகங்கள் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சனிக்கிழமை (13) தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் தலைமையில் சுன்னாகம் பிரதேச சபையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கழிவு எண்ணெய் தொடர்பான பிரச்சனை கலந்துரையாடப்பட்டு, இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 18 பேர் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டது. இக்குழு பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் களநிலை மாற்றங்களை அவதானித்து வாராந்த கூட்டத்தில் எமக்கு…

  9. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலொன்றை நடத்துவதற்காகவே இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததாக இந்திய தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் மற்றும் பெங்களுரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தீவிரவாதிகளையும், ஆயுதங்களையும் அனுப்பிவைக்கவும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் இருவரும் திட்டமிட்டிருந்ததாக இந்திய தேசிய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இகோனமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக…

  10. ஆளும் கட்சியின் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். வத்தளையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அர்ஜூன ரணதுங்க இந்த செயல் குறித்து கிரிகெட் வீரர்கள் தமக்கு முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுவதால் விரைவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கத்தை போன்று…

  11. அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம் DEC 12, 2014by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு) இன்றுகாலை 6.20 மணியளவில், அத்துருகிரிய ஹோக்கந்தர பகுதியில் உள்ள வனகுரு மாவத்தை இறப்பர் தோட்டம் ஒன்றிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. வீடுகளுக்கு மேல் விமானம் வீழ்ந்துள்ளதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனினும், வீடு ஒன்றுக்கு அருகிலேயே விமானம் வீழ்ந்ததாகவும…

    • 14 replies
    • 1.5k views
  12. பாடசாலை விடுமுறையை முன்னிட்டு, கண்டி- யாழ் நகரங்களுக்கிடையில் விசேட ரயில் சேவை இன்று ஆரம்பமானது. முதலாவது ரயில் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11.35 யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/135854-2014-12-13-06-59-17.html

  13. புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்? Dec 12, 2014 | 15:59 by கார்வண்ணன் போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது. “குற்றச்செயல்களின் வீதம் மிக அதிகமாக உள்ளது. யாழ்.நகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான மிதிவண்டிகள் திருடப்படுகின்றன. 70 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது. பெரும்பாலும், தமிழரல்லாத சிறிலங்கா காவல்துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் இருக்கின்றனர். சிறைச்சாலையில் இ…

  14. 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும், இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை. இந்த நிலையில், நானே உணர்ந்து யுத்தத்தை நிறுத்தினேன். நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள். இப்போதுள்ள அரசாங்கத்தை பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மை அடையவேண்டும். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் மிக கவனமாக சிந்தித்துச் செயற்படவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஆளும் கட்சியில் 25 நாடாளுமன்ற உறுப…

    • 5 replies
    • 779 views
  15. இலங்கை அரசின் ஊத்தியோகபூர்வத் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட அரச ஊடகங்களில் யுத்தம் ஓர் விளம்பரமாக காண்பிக்கப்படுகின்றது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த விளம்பரக் கட்சி ஒளிபரப்பாகின்றது என்றும் இதனைப் பார்க்கும் வடகிழக்கு மக்கள் பதறுவதாகவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தின் சூடுபிடித்துள்ள நிலையில் தன்னை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கில் அரச வளங்களை தீவிரமாகப் பயன்படுத்தி வரும் இலங்கை ஜனாதிபதி தனது தேர்தல் தேவைகளுக்காக அரச ஊடகத்தை அதிகமாக பயன்படுத்துகின்றார். அரச தொலைக்காட்சிகளில் யுத்த விளம்பரம் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பப்டுகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி என்ற தோரணையில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம் தொடர்ந…

  16. இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையும் இணைந்துள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, அருகம்பை முதலான பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் தரவு சேகரிப்பு திட்டம் விரைவில் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதென கூகிள் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஆன் லின் தெரி…

  17. யாழ்.எப்.எம் பெண் அறிவிப்பாளர் மீது நபர் ஒருவர் நேற்றிரவு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அரியாலை பகுதியில் வைத்து நேற்றிரவு 7.00 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதான தெய்வேந்திரம் டிலானி என்பவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அரியாலை பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளை தள்ளி விழுத்தியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் அருகில் இருந்தவர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://seithy.com/breifNews.php?newsID=122576&category=TamilNews&language=tamil

  18. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளி;ப்பது என்பது தொடர்பிலான குழப்ப நிலைமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார். எனினும்,இந்த தீர்மானத்திற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கட்சியின் ஊவா மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை த…

  19. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்ற 81 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த 81 பேரும் அவர்கள் தொழில் புரியும் இடங்களில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்தே வேலைவாய்ப்பு திணைக்களம் அவர்களை இலங்கைக்கு வரவழைத்துள்ளது. இதன்போது கட்டார் நாட்டிலிருந்து 31 ஆண்களும் சவுதி அரேபியாவிலிருந்து 21 பெண்களும் குவைத் நாட்டிலிருந்து 29 பேரும் இன்று 3 விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வேலைவாயப்பு திணைக்களம் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. http://virakesari.lk/articles/2014/12/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் 1500 ஏக்கர் காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு மாற்று சமுகத்தினருக்கு மாகாண காணி ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக நடைபெறும் 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதிமாதமான இம்மாதத்தில் இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தமிழர்களுக்கு பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளர்களிற்கு உத்தரவிட்டார். குறிப்பாக கரைதுறைப்பற்று கொக்குத்தொ…

  21. காணாமல் போன நபர் 25 வருடங்களாக சிறையிலிருந்து வீடு திரும்பினார்! [saturday 2014-12-13 09:00] குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நபர் 25 வருடங்களாக சிறையிலிருந்தவர் நேற்று மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பினார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும் சொந்த இடத்துக்குத் திரும்பியவராவார். தொழில் நிமித்தமாக இவர் கொழும்பு சென்றிருந்த போது இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து இவர் காணாமல் போயிருந்தார். குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நபர் 25 வருடங்களாக சிறையிலிருந்தவர் நேற்று மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பினார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும்…

  22. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இப்போது கிடைத்திருக்கும் ஆதரவு தனக்கு அன்றைக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அவ்வாறு கிடைத்திருந்தால் அதை அன்றே நீக்கியிருப்பேன். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே எனது ஒற்றை கண்ணை இழந்தேன். அத்துடன் இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வந்துள்ளது. அன்று அவ்வாறு யாரும் ஒத்துழைக்கவில்லை. அவ்வாறு ஒரு இணக்கமான சூழல் வாய்த்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்திருப்பேன். நான் நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. எனக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தால் ஆபத்து நேரும் என்று அறிந்திருந்தேன். நான் அன்று அவ்வாறு நினைத்தது இன்று நடந்துகொண்டிருக்கிற…

  23. முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தோட நிண்டு டிமான்ட் பண்ணி விசயங்களை முடித்துக் கொள்ளுற மாதிரி TNA யும் செய்யலாம் தானே, எண்டு சொல்லுறார் அம்மான். உண்மையில அம்மான், தடங்கல் இன்றி வடிவா சொல்ல வந்ததை சொல்லுறார்... குறை சொல்லக் கூடாது....

  24. வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சுன்னாகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன…

  25. அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன் வாக்குறுதி Dec 12, 2014 | 9:51 by யாழ்ப்பாணச் செய்தியாளர் சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை தாமே வடக்கு மாகாணசபையில் முன்மொழிந்து விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வின்போது, இந்த தீர்மானம் குறித்து விவாதம் எழுந்தது. கடந்த வாரம் நடந்த முந்திய அமர்வின் போது, இனப்படுகொலை குறித்த தமது தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கி வீசியிருந்தார்.இதனால் செங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.