Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுழிபுரம் நெல்லியன் பிரதேசத்தில் உள்ள கிரியோலைச் சந்தி பற்றைக்காடு விசமிகளால் எரியூட்டப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து வலி மேற்கு பிரதேச சபைக்கு மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்று பார்வையிட்ட தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் சுற்றுப்புற சூழல் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது இயல்பு நிலையும் பாதிப்புக்கு என அவர் மேலும் தெரிவித்தார். http://www.e-jaffna.com/archives/31175

  2. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடத்திச் சென்ற மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் வாடி வீட்டில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி 6 மாணவர்களும் நேற்று மாலை விரிவுரைகளை முடிந்தவுடன் விடுதிகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை அவதானித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவர்களைப் பின்தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதமும் இவ்வாறே சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டில் பயின்ற தமிழ் மாணவர் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட…

  3. யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் முஸ்லீம் மாணவர்கள் நிகாப் அணிய தடையில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட முஸ்லீம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளமை தொடர்பாக வெளிவந்த செய்திகளில் எந்த விதமான உண்மையும் இல்லை. அவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=702803393103461617#sthash.SGYnJ7VI.dpuf

  4. வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இந்திய பிரதமர் மோடியை சந்திக்க செல்வதாயின், இலங்கை அரசுக்கு அறிவித்துவிட்டு, அரசின் அனுமதியுடனேயே செல்ல வேண்டும் என்ற கருத்து தூரதிஷ்டவசமானது. அரசின் பிரதான கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இக்கருத்தை கூறியுள்ளார். இது விக்னேஸ்வரனை நோக்கி சொல்லப்பட்ட கருத்து என்பதைவிட, மோடியை நோக்கி சொல்லப்பட்ட கருத்தாகவே இருக்கின்றது. எங்களிடம் சொல்லிவிட்டு, எங்கள் அனுமதியுடன் எங்கள் நாட்டு மாகாண முதல்வரை அழையுங்கள் என மோடிக்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக சொல்கிறதா? இதன்மூலம் அரசாங்கம் மோடி அரசுடன் மோதலுக்கு தயாராகிறதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்ப…

  5. அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொண்டு மிருக பலி பூஜைகளை செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் மிருகப் பலிப் பூஜைகளுக்கு அனுமதிப்பத்திரம் அவசியமானது என தெரிவித்துள்ளது. சிலாபம் பிரதேச சபையில் இதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவத்துள்ளது. எந்தவொரு மத வழிபாட்டுத்தளத்திலும் மிருக பலி பூஜைகளை நடாத்த அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ம் திகதி அறிவித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக முன்னேஸ்வரம் ஆலய பரிபாலனசபையினர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தல…

  6. ஐஸ் கிரீம் கேட்ட குழந்தையை காலால் மிதித்துக் கொல்ல முயன்ற தாய்! - செல்வச்சந்நிதி ஆலயத்தில் சம்பவம். [Tuesday 2014-09-02 07:00] தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தனது 4 வயதுப் பெண் குழந்தையை பெற்ற தாயே நிலத்தில் போட்டு கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனைக் கண்ட பொதுமக்கள் தாயிடம் இருந்து குழந்தையைப் பறித்துக் காப்பாற்றினர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் தாயும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இளவாலை பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த பெண் செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் அர்ச்சனைப் பொருட்களை விற்று வருகிறார். அவருடன் கூடவே 4 வயது மற்றும் 2 வயதுடைய இரு குழ…

    • 12 replies
    • 1.1k views
  7. இலங்கை பெளத்தர்களுக்கு எதிராக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிநாடுகளுக்கு விநியோகிப்பதற்கு இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. இத் தேசத்துரோகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பான் கீ மூன், நவிப்பிள்ளை மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பெளத்தர்களுக்கு எதிரான சதித்திட்டத்தை தகர்க்க உலகின் பெளத்த நாடுகளுடன் இணைந்து செயற்படும் திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம் என்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கலக…

  8. வடக்கு கிழக்கு மீள் இணைப்பு என்பது தற்போதைக்கு சாத்தியப்படாத ஒன்று என சிரேஷ்ட ஊடகவியலாளரும்இ அரசியல் ஆய்வாளருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் என்றும், தென் இலங்கையில் தற்போதுள்ள அரசியல் களநிலைமையும் இதற்கு சாதமாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்திருந்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோதே ஊடகவியலாளர் அமீன் இதனைத் தெரிவித்தார்.

  9. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த நடைமுறை திங்கட்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவபீடத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் நிகாப் அணிந்து வருவதையிட்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இல்லாமல், மாணவிக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/125222-2014-09-03-03-41-02.html

    • 4 replies
    • 865 views
  10. முன்னேஸ்வரம் ஆலயத்தின் பிரதான பூசகர் கடத்தப்பட்டார் திகதி: Sep 3, 2014 | இணைத்தவர்: மாலதி நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் (கப்பு மாத்தயா) மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். ஆண்டி அம்பலமவில் அமைந்துள்ள புஞ்சி முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசாரியான வர்ணகுலசூரிய கம்கானாம்லாகே மனோஜ் துலாஞசன் என்பவரே கடத்தப்பட்டவராவார். இது தொடர்பாக பூசாரியின் மனைவியான மல்காந்தி என்பவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிய வருவதாவது, தேவாலய வேலைகள் முடிவடைந்தும் எங்களது இரண்டு குழந்…

  11. சிலந்தியை வைத்து வவுனியா அரசஅதிபரை கொல்ல முயற்சி? [Wednesday 2014-09-03 07:00] வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவின் வவுனியா இல்லத்தில் கடும் விஷத்தன்மையுடைய சிலந்தி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சிலந்தியை வனவல அதிகாரிகள் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று அங்குலம் நீளமான சிலந்தியொன்று மாவட்ட செயலாளரின் அறையில் இருப்பதை அவரது இல்லத்தில் கடமையாற்றுபவரே முதலில் கண்டுள்ளார். காலி பிரதேசத்தில் வைத்து தனக்கு கொலை அச்சுறுத்தல் விக்கப்பட்டதாக அவர், ஓகஸ்ட் 31ஆம் திகதி, பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். காலியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போது, அவரது வீட்டு வாசலை மறித்து நிறுத்தி வை…

  12. இந்தியா செல்வதா? – விக்கிக்கு நிபந்தனை விதிக்கிறது அரசு?! இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்பவே விக்கினேஸ்வரன் வட மாகாணத்துக்கு முதலமைச்சராக இருக்கின்றார். எனவே அவர் அரசியலமைப்புக்கு ஏற்பவே செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வட மாகாண சபை முதலமைச்சராக இருக்கும் சி.வி. விக்கினேஸ்வரன் ஓய்வுபெற்ற நீதியரசர். எனவே சட்டம் பற்றியும் அரசியலமைப்பை பின்பற்றவேண்டிய தேவை குறித்தும் அவருக்கு நன்றாக தெரியும் என்று…

  13. யாழ்ப்பாணத்தில்... அமையவுள்ளது. அடுத்த சரணாலயம்! இலங்கையிலேயே காட்டுக் குதிரைகள் வாழும் ஒரேயொரு இடமாக யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களுள் தலையாயதான நெடுந்தீவு விளங்குகின்றது. தீவின் தென்பகுதியெங்கணும் இக்குதிரைகள் பரந்துவாழ்கின்றன. இருப்பினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்குதிரைகளைப் பாதுகாப்பதற்கான முனைப்புக்கள் இதுவரை மேற்கொள்ளப்படாமலேயே இருந்துவந்துள்ளன. இரு வாரங்களின்முன் இலங்கையின் வன ஜீவராசிகள் திணைக்களம் முதற்கட்ட முனைப்பாக இக்குதிரைகள் பற்றிய ஆய்வினை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களோடு இணைந்து மேற்கொண்டிருந்தது. அதன்படி நெடுந்தீவில் மொத்தம் 503 குதிரைகள் வாழ்வதாகவும் அவற்றினைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் நேற்று அற…

  14. வலி.தெற்கு பிரதேச சபை எல்லைக்குள் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து வியாபாரத்தை மேற்கொள்ளும் நடைபாதை வியாபாரிகளை உடன் அப்புறப்படுத்த வேண்டும். இவர்களால் எமது வர்த்தகர்கள் பெரும் இடர்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர். - இவ்வாறு தெரிவித்தார் வலி.தெற்கு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமான லயன் சி.ஹரிகரன். வலி.தெற்கு பிரதேச வர்த்தகர்கள் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் பிரதேசசபை மண்டபத்தில் வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தலைமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- எமது பி…

    • 1 reply
    • 581 views
  15. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யோன் ரங்கினிடம் வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவரும் வலிவடக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமாகிய சண்முகலிங்கம் சஜீவனால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த மகஜரில் வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தைத் தடுத்து வேறு பிரதேசங்களில் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. சீமெந்து ஆலை உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் வேலை வாய்ப்பின்றி முகாம்களில் வாழ்வதாகவும், முகாம் காணி உரிமையாளர்களால் முகாம் மக்களை வெளியேற்ற முற்படும் நடவடிக்க…

  16. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் 'இந்த அரசாங்கத்தை இனி யாரும் அசைக்க முடியாது. நாங்கள் கொஞ்சப் பேர் இருந்துகொண்டு கூச்சல் போட்டுப் பயனில்லை. நாங்கள் நினைத்தாலும் அரசைக் கவிழ்க்க முடியாது. இந்த அரசாங்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கோலோச்சும். இந்த யதார்த்தங்களை புரிந்து இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.' இவ்வாறு உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமுல்செய்யப்படும் அபிவிருத்திப் பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர், ஓட்டுப்பள்ளியடியில் திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஏறாவூர் கொடுத்துவை…

  17. கூட்டமைப்பின் சுகாதார அமைச்சு வசமுள்ள வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவி வந்த தாதியர் வெற்றிடங்களிற்கு புதிதாக நியமனம் பெற்ற தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாதியர்களாக தேர்வுசெய்யப்பட்ட 92 பேரில் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்ட தென்னிலங்கையை சேர்ந்த 84 பெண் தாதியர்களும் நாளை முதல் வடமாகாணத்தின் கடமையாற்றவுள்ளனர். இவர்கள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்ட வைத்தியசாலைகளிற்கும், பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதாராவைத்தியசாலைகளிற்கும், வடமாகாணத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சௌ;ளவுள்ள 46 தாதியர்களின் வெற்றிடங்களிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வடக…

  18. இலங்கையில் சிறுநீரகநோய் பாதிப்பு அதிகமாகவுள்ள மாவட்டங்களில் இரண்டாமிடத்தில் வவுனியா மாவட்டம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாண சுகாதார அமைச்சின் 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடுகளிலிருந்து மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளத்திலும் வவுனியா மாவட்டத்தின் நவ்வியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனையிலும் 3 புதிய வைத்தியசாலைகளை ஆரம்பித்துள்ளோம். இவை ஒவ்வொன்றுக்கும் 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டது. புதுக்குடியிருப்பில் ப…

  19. கொழும்பு-3, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 60 வயதான ஒருவர் தனக்கு தானே தீ வைத்துகொண்டதாகவும் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான அவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பொலிஸ் நிலையத்தில் இருந்தவர்கள், கொழும்பு மாநகரசபை தீ அணைக்கும் பிரிவினருக்கு உடனடியாக அறிவித்ததையடுத்து தண்ணீர் பௌசர்களுடன் விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை அணைந்துள்ளனர். இருந்த போதிலும், குறித்த நபரின் உடலின் 75 வீதமான பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தீ வைத்து கொண்ட நபர், முன்னாள் இராணுவ வீரர் என்றும் தலவத்து கொடையைச்சேர்ந்தவர் என்றும், ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்கா…

  20. கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து, இலங்கை பிரச்னை தொடர்பாக பேசினர். அப்போது தன்னை சந்திக்க வருமாறு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனிடையே, பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள விக்னேஸ்வரன், மோடியுடன் வடக்கு மாகாண சபை மற்றம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1056840

    • 89 replies
    • 3.8k views
  21. புலிகளின் பிரதிநிதிகள் தாமே எனக் கூறி தேர்தல் 2004இல் விஞ்ஞாபனம்; புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும் விரைவில் பல உண்மைகளை வெளியிட உள்ளேன் என்கிறார் சங்கரி 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும். அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதே…

    • 14 replies
    • 918 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ இலக்கிற்கு இந்தியாவின் புதிய அரசாங்கமும் துணைபோகிறது என ஆளும் கட்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்றபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்னவென்பது வெளிப்பட்டு விட்டது. இந்நிலையில் சுய உரிமைகள், தனி அதிகாரங்கள் என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவது தனி தமிழீழத்தினை உருவாக்குவதற்காகவே கூட்டமைப்பின் இந்த நோக்கம் என்னவென்பதை தெளிவாக புரிந்து கொண்ட இந்தியாவின் புதிய அரசாங்கமும் இவர்களுக்கு துணை போகும் வகையில் செயற்படுவது எமக்கு ஏமாற்றமளிக்கின்றது. இலங்கையின் தேசிய விடயங்களில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது நாட்டிற்குள…

  23. -எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளில், சாட்சியாளர்களை சாட்சியளிக்கவிடாமல் தடுக்கும் வகையில் இராணுவப் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, காணாமற்போனோரை மீட்கும்படி கோரி ஆட்கொணர்வு மனுவொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு தொடர்பில் உறவினர்களை சாட்சியளிக்க விடாமல் தடுக்கும் நோக்குடனேயே, அண்மையில் வழக்கு விசாரணைக்கு எடுத்த…

  24. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சயித் அல் ஹூசெய்ன், இலங்கைக்கு சார்பாக செயற்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என கனடாவிலுள்ள சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வலருமான கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனடாவில் வசித்து வரும் கெரி ஆனந்த சங்கரி, இம்முறை கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் ஸ்காப்ரோ ருச் தொகுதியில் போட்டியிட உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகள் பொறிமுறைமகள் மிகவும் வலுவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். INTERTAM செய்திகளுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார். - INTERTAM.net

    • 0 replies
    • 956 views
  25. வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வடக்கு மாகாண சபை செயலற்று இருப்பதாகப் பொதுமக்களை எண்ண வைப்பதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்மீது பொதுமக்களை அதிருப்தி கொள்ள வைப்பதே இந்தப் பரப்புரையின் நோக்கம். ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும். ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது என உறுதியாகக் கூறுகிறேன் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இழையவளர்ப்புத் தொழில்நுட்பத்தின் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.