ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தெல்லிப்பழையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணகல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை விசாளர்கள், உறுப்பினர்களும் கலந்திருந்தனர். இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இலட்சியப் பாதை என்னும் நூலினை இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையினர் வெளியிட்டு வைத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=38445336…
-
- 67 replies
- 3.3k views
-
-
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடதம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி நாளை கண்டியில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர். எனினும், இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தம்புள்ள மஸ்ஜிதுள் கஹய்ரா என்னும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் அணி வீரர்கள் தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டமைக்கு அணி வீரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியை வெளிய…
-
- 0 replies
- 330 views
-
-
15 வருட ஆய்வுக்குபின் !!! 16 புத்தகங்களிலிருந்து குறிப்பு எடுத்து !!! திலீபனுடன் இருந்தவர்களின் குறிப்புடன் !!! 2006ல் இயக்கத்தின் ஒப்புதலுடன் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இருங்கினென் !!! இன்றைய நிலை இது தான் !!! 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று திலீபன் !!!
-
- 4 replies
- 2.7k views
-
-
கௌதாரிமுனையில் ஒரு உண்மைக் கஜினி! [Friday 2014-08-29 09:00] நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப் போயுள்ளது. அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின் ஒருவன் தான் கௌதாரிமுனையைந் சேர்ந்த சுயன். படிப்பில் படு சுட்டியாகவும், துடிதுடிப்போடும் இருந்த சுயனின் வாழ்வை போர் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. செல் ஒன்று அவன் தலையை பிளந்ததில் அவன் உயிர் தப்பியதே அதிசயம் தான் என்றாலும், இப்போது அவனை அங்கவீனமும், இயலாமையும் துரத்திக் கொண்டே இருக்கின்றன. கஜினி என்ற திரைப்படத்தில் நினைவை அடிக்கடி மறக்கின்ற பாத்திரத்தை போல, இவனும் அடிக்கடி மறதி வியாதியால் அவதிப்படுகிறான்.http://www.seithy.com/breifNews.php?newsID=115786&category=TamilNews&language=t…
-
- 6 replies
- 731 views
-
-
தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்னர் வடமாகாண கொடியும், யாழ்.மாவட்ட கணக்காய்வாளர் திணைக்கள கொடியும் ஏற்றப்பட்ட சம்பவம் இன்று கணக்காய்வாளர் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ். மாவட்ட கணக்காய்வாளர் தலைமை அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம் பெற்ற போது வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமியினால் தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்னர் வடமாகாண கொடி ஏற்றப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=876613375429350673#sthash.gCcotUjQ.dpuf
-
- 2 replies
- 959 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேச சிறப்பு பிரதிநிதி ஒருவரை மோடி கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக தகவல்? 26 ஆகஸ்ட் 2014 இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயங்களை கையாள இந்திய பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் சார்பில் நியமிக்கப்படவுள்ள பிரதிநிதி விரைவில் கொழும்ப்புக்கு செல்வார் என்றும் 1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கை மற்றும் அந்த உடன்படிக்கை மூலமான 13 ஆவது திருத்தச்சட்டம் …
-
- 7 replies
- 769 views
-
-
இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம் கிரமமான நிரந்தர வருமானத்திற்கு வழியற்ற நிலையில் உள்ளபோது, தமது வளர்ந்த பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான அபராதத் தொகையைச் செலுத்த முடியாதிருப்பதாக நாடு திரும்பியுள்ள குடும்பங்கள் கூறுகின்றன. இத்தகைய குடும்பங்களுக்கு தம்மால் நிதியுதவி செய்ய முடியாதிருப்பதாகக் கூறும் சட்ட உதவி ஆணைக்குழுவினர், இந்த விடயத்தில் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது அரசியல்தலைவர்கள் மட்டத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பிறக்கு…
-
- 0 replies
- 403 views
-
-
போராட்டம் நடத்தப்படாமல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.. பிரச்சினைக்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும், போராட்டம் நடத்தப்படாமல் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார். தமிழ்ச் சமூகம் பாரிய அழிவொன்றை சந்தித்துள்ள நிலையில், யாரும் தற்போது ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் எனத் தான் நம்பவில்லை எனவும், இதனால் அகிம்சை வழியிலான போராட்டத்தை வலுப்பெறச் செய்வதன்மூலமே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரச…
-
- 27 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 'யாழ்ப்பாணம், கந்தர்மடப் பகுதியிலுள்ள வீடுகளில் வான் ஒன்றில் வந்த சிலர், தாம் யாழ்ப்பாணப் பொலிஸார் என தெரிவித்து, கொழும்பில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி பணம் வசூலித்து வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியாது' என அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண பொலிஸார் அவ்வாறு எந்தச் சிறுவர் இல்லங்களையும் நடத்தவும் இல்லை அத்துடன், அவ்வாறு பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடுபடவும் இல்லையென அவர் கு…
-
- 1 reply
- 354 views
-
-
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை - வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் இவர்களே நந்திபோன்று தடையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒன்றுசேர்ந்தால்தான் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்யலாம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண மீன்பிடி ,போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் பங்களிப்புடன் பருத்தித்துறை தும்பளை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் பற்றிக் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உ…
-
- 8 replies
- 606 views
-
-
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் மிருக பலி பூஜை தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதிக்கு வழங்கப்படும் என்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது. எந்தவொரு வணக்கஸ்தலத்திலும் மிருக பலி கொடுப்பதாயின் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயில் பரிபாலகர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற நிலையிலேயே, இதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33500/57/3/d,article_full.aspx
-
- 0 replies
- 466 views
-
-
வறட்சி காரணமாக 2.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- இணைப்பு 2 2ஆம் இணைப்பு:- 14 மாவட்டங்களில் வரட்சி உதவிகள் இல்லை- கிளிநொச்சி- முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு- இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சியினால் 14 மாவட்டங்களில் வாழும் மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாக அணர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடபகுதியில் யாழ்ப்பாணம், கிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் கிழக்கில் அம்பாறை, திருககோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களும் தென்பகுதியில் அம்பாந்தோட்டை மொனராகலை, பொலநறுவை உட்பட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டள்ளது என்றும் நெற்செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அணர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. உடனடியாக சி…
-
- 1 reply
- 418 views
-
-
இரு பீடங்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்:- உயர்க்கல்வி அமைச்சினால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் ஆகிய இரு பீடங்களும் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சின் உயர் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறிப்பிட்ட சில வசதிகளுடன் மாத்திரம் இயங்கி வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தையும் சகல வசதிகளுடன் கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111050/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 239 views
-
-
27 ஆயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த மண்ணை கொள்ளையர்களுக்கு தாரை வார்ப்பதா? நாட்டின் இறையாண்மைக்காக 27,000 படையினர் உயிர் தியாகம் செய்து பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாகி இம் மண்ணை பாதுகாத்தது ''காணிகளை கொள்ளையர்களுக்கு'' தாரைவார்ப்பதற்கா என கேள்வி எழுப்பும் பொதுபலசேனா. வவுனியா ''சோபால புளியங்குளத்தில் தமிழர்களின் காணிகள் ஏனையோரால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால்'' அனுப்பி வைக்கப்பட்ட கடிதமும் பிரதேச செயலாளரால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இவ்அமைப்பின் தேசி…
-
- 1 reply
- 407 views
-
-
குருநகர் தொடர்மாடிக்குடியிருப்புப் பகுதியினுள் புகுந்து தனித்திருந்த பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முற்பட்ட சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடையப்பட்டுள்ளார். மரம் ஒன்றில் இன்று காலை வரை கட்டி வைக்கப்பட்ட குறித்த சிப்பாய் இன்று காலை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளார். பளை இயக்கச்சி படை முகாமை சேர்ந்த சிப்பாயான மு.சலிந்த (25 வயது) என்பவரே அகப்பட்டு தர்ம அடி வாங்கியுள்ளார். நேற்று புதன்கிழமை நள்ளிரவு குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றினுள்; அத்துமீறிப்புகுந்த சிப்பாயே இவ்வாறு தர்ம அடி வாங்கியுள்ளார். அண்மையில் வடமராட்சி கிழக்கின் வெற்றிலைகேணியில் இதே போன்று கடற்படை சிப்பாய் ஒருவரும் இவ்வாறு அகப்பட்டு தர்ம அடி வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்…
-
- 7 replies
- 671 views
-
-
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 02:15 -எம்.றொசாந்த் கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. இந்தக் கைத்தொழில்பேட்டை புனரமைப்பு செய்யப்பட்டதால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்…
-
- 27 replies
- 1.6k views
-
-
மனித உரிமை விடயங்களில் உலக நாடுகள் எதிர்பார்க்கும் தராதரத்திலிருந்து அமெரிக்க விலகிச்செல்கிறது' இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். CNNனிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையில் புலிகள் என வர்ணிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் உங்களை பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு 'இல்லை நான் தார்மீக அதிகாரத்துடன் தான் பேசுகிறேன் என்பது குறித்து நான் உயாந்தபட்ச நம்பிக்கை கொண்டிருந்தேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார். 'இவ்வாறான கருத்துக்கள் என்னை பாதிப்பதில்லை, நாங்கள் அவர்களுக்கு உதவுவதால் எங்களது அலுவலகத்தின் பணிகளை பாராட்டும் 190 …
-
- 0 replies
- 448 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரும் அடுத்து ஈபிடிபியின் தலைமையினை ஏற்கலாமென நம்பப்படுபவருமான தயானந்தா நேற்றைய தினம் மகேஸ்வரி நிதிய வாகனத்தை தீக்கிரையாக்கியவர்களை கைது செய்யுமாறு காவல்துறைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் அவ்வாறு எவரையும் இது வரை தாம் செய்திருக்கவில்லையென சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.நகரினில் இடம்பெற்ற காவல்துறை பத்திரிகையாளர் மாநாட்டினில் நேற்றைய தீவைப்பு சம்பவம் தொடர்பாக மேலும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவிக்கையினில் குறித்த சம்பவத்தினில் தொடர்புடைய எவரும் இது வரை அடையாளம் காணப்படவில்லை.அதனால் எவரையும் கைது செய்யவும் முடியவில்லை.அதே வேளை மகேஸ்வரி பவுண்டேசனிற்கு ஆதரவாக செயற்…
-
- 3 replies
- 769 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புனரமைக்கப்பட்டுள்ள கைத்தொழிற்பேட்டையில் ஏழு வர்த்தகர்கள் மாத்திரமே தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 24 கைத்தொழில்களை ஆரம்பித்துச் செயற்படுத்தத் தக்கவகையில் இந்தத்தொழிற்பேட்டைக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கென இந்தியா 225 மில்லியன் ரூபாயையும், இலங்கை 50 மில்லியன் ரூபாயையும் செலவு செய்திருக்கின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா சகிதம் இதனை வைபவரீதியாகத் திறந்து வைத்தார். இந்தக் கைத்தொழிற்பேட்டையின் மூலம், 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், சுமார் பத்தாயிரம் பேர் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்களை…
-
- 1 reply
- 437 views
-
-
Surge of radical Buddhism in South Asia - தெற்காசியாவில் பௌத்தத்தின் தீவிர எழுச்சி- Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- இலங்கையிலும் மியன்மாரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள மத வன்முறைகள் பௌத்த மதகுருமார் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டுவது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. யூன் 15ம் திகதி இலங்கையின் தென்பகுதியில் பௌத்தர்கள் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது அளுத்கம, பேருவல, தர்ஹா நகர் பகுதிகளில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் காயமடைந்தனர். பௌத்த துறவியை முஸ்லீம் ஒருவர் தாக்கிவிட்டார் என்ற வதந்தியே இந்த வன்முறைகளுக்கு காரணம். எனினும் உண்மையில் இடம்பெற்றது பௌத்த மதகுருவின் வாகனச்சாரதிக்கும் முஸ்லீம்…
-
- 0 replies
- 535 views
-
-
நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை வழக்கினில் கைதாகியிருந்த ஈபிடிபியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் ,வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவராக இருந்தவருமான கமல் என்றழைக்கப்படும் கமலேந்திரனை பிணையினில் செல்ல யாழ்.மேல்நீதிமன்று அனுமதித்துள்ளது. பிணை கோரும் மனு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை கடும் நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்.குடாநாட்டில் தங்கியிருக்ககூடாது காவல் நிலையத்தில் வாரந்தோறும் ஒப்பமிட வேண்டும் கடவுசீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவேண்டுமென்ற நிபந்தனைகளின் கீழ் காசு பிணையில் கமலேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே வேளை கைதாகி கமலேந்திரனுடன் தடுத்து வைக்கப்பட்டிர…
-
- 0 replies
- 525 views
-
-
2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சீனாவிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றமை, இலங்கை சீனாவில் பெருமளவு தங்கியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள். இலங்கையின் புதிய விமானநிலையமாகிய மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமானநிலையம் அமைப்பதற்கு சீனா பண உதவியளித்தது. 2009 இல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கடன்கள், கொடைகள் மற்றும் உதவிகளாக சீனாவிடமிருந்து பெற்று நிதி நிலையில் இலங்கை சீனாவில் தங்கியிருப்பது அதிகரித்து வருகிறது. அரசாங்கம் கடனைப் பேணுவதன் மூலம் அதிகம் தேவைப்படுவதாக சொல்லி உட்கட்டமைப்புத் திட்டங்களை செயற்படுத்தி முடிக்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாடு நிதிநிலையில் சீனாவில் தங்கியிருக்கும் ப…
-
- 0 replies
- 533 views
-
-
ஐக்கிய நடுகள் பாதுகாப்பு பேரவையில் ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவை, ஸ்பெய்ன் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆதரவு திரட்டும் நோக்கில் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ்; மனுவெல் கார்சியா மார்கலோ (துழளé ஆயரெநட புயசஉíய-ஆயசபயடடழ) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவினை திரட்டும் முயற்சியில் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மனுவெல் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். ஜோஸ் மனுவெல், இன்று இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவுஸ்திரேலியாவிற்கும் ஜோஸ் மனுவெல் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 565 views
-
-
-வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்மந்தமான மீளாய்வுக்கூட்டத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உரிய இடத்தில் ஆசனங்கள் வழங்கப்படாமையால் முறுகல் நிலையுடனேயே கூட்டம் ஆரம்பமானது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமணிக்கம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இமா. நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர். இங்கு மீள…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நடத்தும் விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அல்லது மனு மூலம் விடயங்களைத் தெரிவிக்குமாறு கனடிய தமிழர் பேரவை கோரியிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் பன்னாட்டு அணி விடுத்துள்ள செய்திக் குறிப்பின் முழுவிவரம் வருமாறு:- ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) கடந்த ஓகஸ்ட் 05, 2014 அன்று ஓர் அறிவித்தல் விடுத்திருந்தது. அந்த அறிவித்தலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை (UNHCR) தனது 25 ஆவது அமர்வில் தமக்குக் கொடுத்த ஆணை தொடர்பாக பெப்ரவரி 2002 - நவம்பர் 2001 இடையிலான காலப்பகுதியில் சிறீலங்காவில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் கடுமையான மற்றும் முறைகேடான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பொதுமக்களிடம் இருந்…
-
- 0 replies
- 515 views
-