Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பிலான இரு தரப்புப் பேச்சை தட்டிக் கழித்துவந்த மஹிந்த அரசு இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றதெனில் சர்வதேச அழுத்தமே அதற்குக் காரணமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். "இரு தரப்புப் பேச்சு தொடர்பில் அரசு எமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாடு திரும்பியவுடன் அரசின் கோரிக்கைகளுக்கான பொருத்தமான பதில் வழங்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்புப் பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால், அது பற்றி பரிசீலிப்ப…

  2. அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும் என தமிழ்நாடு மாற்றம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப்குமார் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/33424/57//d,article_full.aspx

  3. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள். இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர். - http://malarum.com/article/tam/2014/08/27/4903/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%…

  4. இம்முறை நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவிழாக் காலத்தில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபா யாழ்.மாநகர சபைக்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாக சபையின் பிரதம கணக்காளர் தெரிவித்தார். இது முன்னைய வருடங்களில் மாநகர சபை ஈட்டிய வருமானங்களை விடவும் அதிகமான தொகையாகும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக சபை வருமான வரிப் பிரிவினர் நேற்று இடம்பெற்ற சபைக் கூட்டத்தின்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரால் பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ரூபா 96 லட்சமும் 2013 ஆம் ஆண்டு ஒரு கோடியே 14 லட்சமும் நல்லூர் திருவிழாக் காலத்தில் சபைக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது. http://malarum.com/article/tam/2014/08/28/4954/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%A…

  5. சம்பந்தன் நாடு திரும்பியவுடன் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கான பொருத்தமான பதில் வழங்கப்படும் சம்பந்தன் நாடு திரும்பியவுடன் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கான பொருத்தமான பதில் வழங்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையை தட்டிக்கழித்த அரசாங்கம் இப்போது கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்கின்றதெனில் சர்வதேச அழுத்தமே அதற்குக் காரணமாகும். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாடு திரும்பியவுடன் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கான பொருத்தமான பதில் வழங்கப்படும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா எம்.பி. தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது எமக்கு நன்ற…

    • 0 replies
    • 502 views
  6. இலங்கை நிதி நிலைமையில் சீனாவில் தங்கியிருக்கும் நிலை வேகமாக அதிகரிக்கிறது. 29 ஆகஸ்ட் 2014 2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சீனாவிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றமை, இலங்கை சீனாவில் பெருமளவு தங்கியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள். இலங்கையின் புதிய விமானநிலையமாகிய மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமானநிலையம் அமைப்பதற்கு சீனா பண உதவியளித்தது. 2009 இல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கடன்கள், கொடைகள் மற்றும் உதவிகளாக சீனாவிடமிருந்து பெற்று நிதி நிலையில் இலங்கை சீனாவில் தங்கியிருப்பது அதிகரித்து வருகிறது. அரசாங்கம் கடனைப் பேணுவதன் மூலம் அதிகம் தேவைப்படுவதாக சொல்லி உட்கட்டமைப்புத் திட்டங்களை …

  7. எட்டுவருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – மண்முனை மக்கள் கவலை! சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட தமக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் 1,476 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற போதிலும், 75 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர். எவ்வித வசதிகளுமற்ற இந்தப் பகுதியில் வசிக்கும் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி, தொழில்வாய்ப…

    • 0 replies
    • 365 views
  8. ஐ.நாவில் பேச மஹிந்தவை அனுமதிக்கக்கூடாது – வேல்முருகன் அறிக்கை ஐ.நா.வில் பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணைக் கமிஷன் அமைத்தது. ஆனால், ஐ.நா.வின் விசாரணைக் கமிஷனையே இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி தர ராஜபட்ச மறுத்துவிட்டார். இந்நிலையில், ஐ.நா. பொது அவையில் பேசுவதற்கு ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி ராஜபட்சவுக்கு முன்னுரிமை கொடுத்து உரையாற்ற அனுமதித்திருப்பதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஐ.நா.சபை அவமதித்துள்ளது. எனவே, ஐ.நா.வில்…

    • 0 replies
    • 389 views
  9. எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும், எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம். புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் வலிகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம் .எமது தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது.ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம் . அவ் வகையில் நடைபெற இருக்கும் ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை இனவாத அரசுக்கு பல்வேறு பக்கங்கள் ஊடாகவும் பாரிய அழுத்தங்கள் எழும்புகின்றன . இலங்கையின் வெளியுறவு தொடர…

    • 0 replies
    • 412 views
  10. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணையத்தின் (OHCHR) சிறிலங்காவின் மனித உரிமைக்கான விசாரணiயில் (OISL) நீங்களும் துணை நிற்கும் வகையில் நமது நடுவம் உங்களுக்கு துணை செய்ய தயாராகவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனிதவுரிமை மீறல்களை ஆவணப்படுத்தியும், இன்று இந்த சாட்சியங்களை உறுதிப்படுத்தி மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு துணை செய்ய தயாராகியுள்ளோம். இப்பொமுது நாம் வெளியிட்டுள்ள விசாரணை பற்றிய வினா விடைக்கொத்து உங்களனைவருக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கும் என நம்புகின்றோம். இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்கு உதவுங்கள் தகவல்கள், குற்றச்சாட்டுகள், ஆவணங்கள், சாட்சியங்களை அனுப்புங்கள். ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மனித குலத்து…

    • 0 replies
    • 252 views
  11. இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணையில் சாட்சியம் அளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திடமும் ஐ.நா. மனித உரிமைகளின் உறுப்பு நாடுகளிடமும் இவ்வாறு கேட்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமை பேரவையால் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணைகளில் தகவல் கொடுக்கக்கூடியவர்களுக்கு எதிரான மிரட்டல்கள், பயமுறுத்தல்கள், பழிவாங்கல்கள் பற்றி அறியாது நாம் அச்சம் கொண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் 'பவுடெலெயர் என்டொங் எல்லா'வுக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவுக்கும் அனுப்பிவைத்துள்ளது. ஐ.நாவுடன் ஒத்துழைப்பதற்காக மேற்கொள்ளப்ப…

    • 0 replies
    • 303 views
  12. இலங்கை - இந்திய மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இருநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையொன்று புதுடெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில், மீன்பிடித்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி, அமைச்சின் ஆலோசகர் கலாநிதி எஸ். சுபசிங்ஹ மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவரும் பங்கேற்கவுள்ளனர். இருநாட்டு மீனவர்களுக்கு இடையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இனங்காணப்பட்ட விடயங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் இந்த இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படவிருப்பதாக, இலங்கை- இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர் பி. அந்தோனிமுத்து த…

    • 0 replies
    • 224 views
  13. தமிழக அரசின் மாநில மலரான செங்காந்தள்மலர். தமிழ்நாடு அரசின் மாநில மலரான செங்காந்தள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், புற்று நோய் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டுள்ளதால், உலக அளவில் அதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக அரசின் மலராக செங்காந்தள் மலர் போற்றப்படுகிறது. சங்க இலக்கியமான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றில்ஏழு இடங்களில் செங்காந்தள் மலர் இடம் பெற்றுள்ளது. இதில் 64 இடங்களில் காந்தள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்காந்தள் மலர் உயர்ந்த மலைகளிலும், மலை முகடு, சரிவுகளிலும் அதிக அளவு காணப்படும். மலரின் நிறம் நெருப்பு போன்றதாக வும், குருதி வண்ணம் மிக்கதாகவும், ஒளி பொருந்தியதாகவும் புலவர்களால் வர்ணிக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்தில் வேடுவர்களிடம…

  14. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கொக்கிளாய் ஆற்றுத் தொடுவாயில் கடந்த புதன்கிழமை தொடக்கம் அனுமதிப் பத்திரங்கள் இன்றி சுமார் 50 உழவு இயந்திரங்கரளைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்காகப் பெருந்தொகை இல்மனைற் கனிய மணல் அகழ்வு நடைபெற்று வந்த நிலையில் தகவல் அறிந்து நேற்று சம்பவ இடத்துக்கு சென்ற வட மாகாண விவசாய அமைச்சர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்டு வந்த பெறுமதிமிக்க கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் ஊடாக மணல் அகழ்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. …

  15. வரலாற்று சிறப்புடன் விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=438103362324373548

  16. கர்ப்பிணி பலி; யாழில் பதற்றம் வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 12:44 - யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார். விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனத்தை தீயிட்டு கொளுத்தியவர்க…

  17. ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தமை குறித்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் விளக்கமளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயமானது த…

    • 0 replies
    • 377 views
  18. முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 250 ஏக்கர் நிலப்பகுதியும் இலங்னை அரசிற்கு சொந்தமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டதில் 245 ஏக்கர் வயல் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகள் அமைத்திருந்த விமான ஓடுபாதையை குறித்த பிரதேசத்து பொதுமக்களின் எதிர்கால பயன்பாட்டிற்கென இராணுவத்தினர் அபிவிருத்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மொத்தம் 250 ஏக்கர் விவசாய காணிகள் உள்ளன. அவற்றில் இந்த 5 ஏக்கர் தவிர்த்து மீதி 245 ஏக்கர் வயல் காணிகளையும் விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள…

    • 0 replies
    • 490 views
  19. வீட்டினுள் அத்துமீறி நுழைந்த படைவீரர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நயப்புடைக்கப்பட்ட சம்பவமொன்று குருநகர் தொடர் மாடிப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, குறித்த வீட்டினுள் பெண்கள் தனியாக இருந்ததை அறிந்த படைவீரர் உள்நுழைந்துள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட்டதை தொடர்ந்து அயலவர்களால் மடக்கி பிடித்த சிப்பாய் மரத்தில் கட்டிவைத்து நயப்புடைக்கப்பட்டார். காலையில் யாழ். பொலிசில் ஒப்படைக்கப்பட்ட படைவீரர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=176653373228494435#sthash.DvtygGvT.dpuf

  20. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை தான் பத்திரிகை வாயிலாகவே அறிந்துகொண்டதாக வட மாகாண சபை தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதுவுமே இல்லாத 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசுவதில் எவ்விதப் பயனும் இல்லை, அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்தியப் பயணம் குறித்து விளக்கமளித்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசின் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் பற்றியும், 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்த இந்தியா மேற…

    • 0 replies
    • 481 views
  21. சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர். நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் அவர் அமெரிக்காவுக்கே அழத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந…

    • 34 replies
    • 1.7k views
  22. மே 2009ன் பின்னர், சில ஊடகங்கள் இணையதளங்கள், தாம் நினைத்தவாறு, ஊடகத்துறையில் தமது அனுபவத்திற்கு ஏற்றவாறு, மிகவும் பண்பற்ற முறையில், பல பிரமுகர்கள், தனி நபர்கள், வியாபார ஸ்தாபனங்கள், ஆலயங்கள் ஆகியவை பற்றி, பல அனாமதேயமாகவும், சில பொய்யான பெயர்களுடனும் வெளியிட்டு வருவது தெரிந்ததே. இவ்வடிப்படையில், 1990ம் ஆண்டு முதல், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும், தமிழர் மனிதர் உரிமை மையமும், கடந்த 24 வருடங்களாக சர்வதேசத்தில் மனிதர் உரிமை செயற்பாட்டாளராக திகழும், இதன் பொதுச் செயலாளரான, திரு. ச. வி. கிருபாகரன் பற்றி, சில மோசமான விசமத்தனமான விமர்சனங்களை மிக அண்மைக்காலத்தில் சில இணையதளங்களில் வெளியாகியிருந்தது. இப்படியான பல செயற்திட்டங்களை, முன்பு பல வருடங்களாக, சிறிலங்கா அரசு ஆதரவு கொழு…

    • 2 replies
    • 604 views
  23. -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட வளலாய், அக்கரை பகுதியை 20 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் தளமாக மாற்றவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை வியாழக்கிழமை (28) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட மேற்படி பிரதேசம் கடந்த மார்ச் மாதம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேசத்தில் 50 குடும்பங்கள் வரையில் மீளக் குடியேறியுள்ளனர். இம்மக்கள் அங்கு பிரதானமாக மீன்பிடித் தொழிலை, மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் வீச்சு வலை மூலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்படி பிரதேச கடற்கரை பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் இருப்பதுடன், விடுவ…

  24. நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும் . எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை , உறுதியை , ஓர்மத்தை , வேட்கையை , நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி ஒரு தளமாக அமையும் . ஐரோப்பிய புலம் பெயர் மக்களை இப் பேரணியில் பெரும்திரளாக கலந்துகொள்ளும் படி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் . http://www.pathivu.com/news/33450/57//d,article_full.aspx

    • 17 replies
    • 780 views
  25. அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்கு தயார். சுமந்திரன் அறிவிப்பு- UNP மீதும் குற்றச்சாட்டு:- 28 ஆகஸ்ட் 2014 இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இருதரப்பு பேச்சுக்கு தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேச்சை ஆரம்பிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேச்சை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூட்டமைப்பன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த சுமந்திரன் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் இருப்பதால் கூட்டமைப்புடன் பேச முடியாது என அரசாங்கம் முன்னர் கூறுவதாகவும் ஆனால் நிரந்தரமான உறுதியான அரசியல் தீர்வு ஒன்றுதான் கூட்டமைப்பின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.