ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்திப்பதற்கு இரசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமானதாக மாற்றி இருக்கிறது. பராக் ஒபாமாவின் நண்பர் ஒருவர் மூலமாக ஒபாமாவை இரகசியமாக சந்தித்து, யுத்தக் குற்ற விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக மில்லியன் கணக்கான டொலர்களை அரசாங்கம் செலவிட்டு வந்தது. மிகவும் இரகசியமாகவும், அதிகாரபூர்வமற்ற நிலையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த திட்டத்தை தற்போது மத்திய வங்கியின் ஊடாக மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்த மக்கள் சிறிலங்கா தொடர்பில் பரப்புகின்ற பிரசாரங்களை முறியடிக்கும் வேலைத்திட்டம் என்ற பெயரில், மத்திய வங்கியின் நிதி…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கையில் சிறுபான்மையினர் எதிர்பார்க்கும் உள்நாட்டுப் பொறிமுறையான திருப்திகரமான அதிகாரப்பகிர்வூ ஒருபோதும் கிடைக்காது என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் புதுடெல்லி பயணத்திற்கு தென் இலங்கையிலுள்ள பெரும்பான்மை அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில். அரசாங்கத்திலுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்க் கூட்டமைப்பின் டெல்லி பயணத்தில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளது. திருப்திகரமான அதிகாரப் பகிர்வொன்று கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் இந்திய பயணம் சிறுபான்மை மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என எமது செய்தி…
-
- 1 reply
- 572 views
-
-
உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் குவந்தனாமோ சிறைச்சாலையின் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினவரின் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் கால வரையறையின்றி முகமாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்தும் விதம் குறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்…
-
- 0 replies
- 214 views
-
-
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில் பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தாபய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார். அமைச்சரின் மெய்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்த நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்த நபர் சகல உண்மைகளையும் கக…
-
- 0 replies
- 474 views
-
-
ஓஸ்மானியாவில் அரசியல் புகுந்து விளையாடுகிறது சந்திரசிறி– டக்ளஸ்- சுபியான்கூட்டு IN - ரிசாத்பதியுதீன் ஆதரவு அதிபர் OUT யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக்கல்லூரியின் அதிபர் எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக குறித்த பாடசாலையின் கல்வி நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறி தலையிட்ட ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அதிபரை உடனடியாக இடமாற்றஞ் செய்யப்போவதாக அங்கு நடத்திய கூட்டமொன்றில் அறிவித்துமிருந்தார். அதன் படியே தற்போதைய அதிபர்; எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அங்கு அவரிற்கான பணிகள் ஏதும் ஒதுக்கி வழங்கப்படாது வெறுமனே அம…
-
- 0 replies
- 403 views
-
-
உலகின் மிகப்பெரும் கொலைஞர்கள் மக்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்துவிட்டு முழு மிருகத்தையே உட்கொண்டுவிட்டு மனித இரத்தம் குடிக்கும் கோரத்தை தன்னார்வ தொண்டு என்கின்றனர். உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில்ஒருவரும், இலங்கை அரசின் உற்ற நண்பருமான கே.பி என்றழைக்கப்படும் பல்வேறு பெயர்களைக் கொண்ட கிரிமினல் செஞ்சோலைச் சிறுவர்களுடன் விடுமுறை நாளைக் கொண்டாடினார். இப்போதும் இலங்கை அரசுடன் இணைந்து ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வட கொரியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்த ஆயுதங்கள் நிறைந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் இடை நிறுத்தபட்டமை இச்சந்தேகங்களை வலுப்படுத்தியது. தாய்லாந்திலும் இலங்கையின் மாறி மாறி வசிக்கும் கே.பி ஆட்கொல்லி ஆ…
-
- 0 replies
- 582 views
-
-
புன்னாலைக் கட்டுவனில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம். [Monday 2014-08-25 12:00] புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம இளைஞர்களுக்கு இடையே நிலவி வந்த பகைமையின் தொடர்ச்சியாக நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தையல் கடையின் முன்பாக நின்று மத்தாளோடைப் பகுதியைச் சோந்த சில இளைஞர்கள் மதுபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறான முறையில் நடந்துள்ளார்கள். இதனால் தையல் கடையின் உரிமையாளர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் இதனால் வாடிக்கையாளாகள் பாதிக்கப்படுகின்றனர் எனவு…
-
- 16 replies
- 915 views
-
-
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் சென்னைக்குத் திடீர் பயணம்! - ஏனையோர் கொழும்பு திரும்பினர். [Monday 2014-08-25 13:00] புதுடில்லியில் நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்திய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக விஜயத்தின்போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்…
-
- 60 replies
- 3.4k views
-
-
தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை சிதைக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டு வரும் கரி ஆனந்தசங்கரிக்கு இரா. சம்பந்தன் பரிந்துரை மற்றும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்ற விடயத்தை அனந்தி சசிதரன் கொண்டு செல்ல முற்பட்ட போது இம் முயற்சியை கரி ஆனந்த சங்கரி அவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார். இப்படி பட்டவருக்கு இரா. சம்பந்தன் கரி ஆனந்தசங்கரியை தேர்தலில் வெற்றி பெற வைக்குமாறு கனடாவாழ் தமிழ்மக்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் விடுத்த செய்தி : எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் த…
-
- 79 replies
- 5.4k views
-
-
வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்குக்கு வழங்குவது இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெறவும் வழிவகுக்கும் என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டார். தமிழீழ விடுதலை புலிகள், ஐரோப்பாவில் முழுமையாக தொழிற்படுகின்றது. அவர்கள், இலங்கையில் புத்துயிர் பெற அனுமதிக்கப்பட்டால் முதலில் துன்புறும் ஆட்களாக யாழ்ப்பாணத்து மக்களே இருப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊவா மாகாண சபைத்தேர்தல் பிரசாரக்கூட்டமொன்று பசறையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்…
-
- 1 reply
- 426 views
-
-
இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மஹிந்த ராஜபக்ஷ் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாக இருந்தது. எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூ…
-
- 0 replies
- 524 views
-
-
சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாகாணசபை அமர்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தனர். அப்போது தற்காலிக தீர்வாக வடமாகாணசபையால் வலி.தெற்கு பிரதேச சபைக்கு குடிதண்ணீர் விநியோகத்துக்காக தண்ணீர் பவுஸர் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உறுதியளித்திருந்தார். அதன்படி பவுஸர் வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிணறுகளைப் பார்வையிடுவதற்காக நேற்று சனிக்கிழமை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன், வலி.தெற்கு (சுன்னா…
-
- 0 replies
- 465 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் வன்னி பிரதேசத்தை இறுதியாக ஆண்ட வன்னியனாரான பண்டாரவன்னியன், முல்லைத்தீவு கோட்டையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 211ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று திங்கட்கிழமை (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு காலை 8.45 மணியளவில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா வரவேற்புரை, நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவிகளால் வரவேற்பு நடனம், கலாபூசணம் இ. சிவசோதி தலைமையுரை, சிரேஷ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நினைவுப்பேருரை, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கவி மன்றம், வவ…
-
- 0 replies
- 453 views
-
-
-
புலிகளுக்காக மீண்டும் போட்டியிடப் போகிறாராம் ஒபாமா! - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கண்டுபிடிப்பு. [Monday 2014-08-25 12:00] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலி்ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறவே பராக் ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குற்றம்சாட்டியுள்ளார். கம்பளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எமது சிறிய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா செயற்பட, அவர்களின் விடுதலைப் புலி ஆதரவுப் போக்கே காரணம். இலங்கையைப் பிரித்து, தனிநாடொன்றை அமைத்துத் தருவதாக ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு முன்னர் வ…
-
- 6 replies
- 997 views
-
-
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல் [Monday 2014-08-25 21:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது. …
-
- 8 replies
- 715 views
-
-
சுப்பிரமணியம் சுவாமி குறித்து இந்தியா அவதானமாக இருக்க வேண்டும்! - எச்சரிக்கிறது சர்வதேச ஊடகம் [sunday 2014-08-24 09:00] சுப்ரமணியம் சுவாமியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இந்திய அரசாங்கம் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச இணையத்தளம் ஒன்று எச்சரித்துள்ளது. இந்தியாவின் எந்த அதிகாரமும் இல்லாமல் அவர் இந்தியா சார்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்கள், இந்தியாவின அடிப்படை கொள்கைக்கு புறம்பானவை. இலங்கை தமிழர்கள் விடயத்திலும், தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் விடயத்திலும் அவர் வெளியிடுகின்ற கருத்துக்கள், இந்திய மத்திய அரசாங்கத்துக்…
-
- 8 replies
- 467 views
-
-
சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிபதிகளும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டுப்பாட்டில்- சரத் பொன்சேகா தகவல் 25 ஆகஸ்ட் 2014 சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் உihயாற்றிய சரத் பொன்செகா தேர்தல் திணைக்களம் உட்பட அனைத்து முக்கியமான அரச நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார். ஊழல் மோசடி மலிவடைந்துள்ளது. குடு வியாபாரமும் போதைப் பொருள் கடத்தல்களும் பாதுகாப்பு செயலாள…
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா சென்று திரும்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம்தான் தீர்வுகாண முடியும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது. புதுடெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் மீண்டும் தமிழகத்திற்கு செல்வதற்கு முன்னர் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து இதனைத் தெரிவித்தார். இந்திய விஜயம் குறித்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வட மாகாண முதலமைச்சரை சந்திக்க விருப்புவதன் பின்னணி என்ன என்பது குறித்தும் எமது செய்தியாளர் கேட்டபோது, வலுவிழந்துள்ள மாகாண சபையை இந்தச் சந்திப்பின் மூலம் வலுப்பெற…
-
- 0 replies
- 893 views
-
-
திகதி மாற்றத்தை கோட்டை விட்ட கோத்தாபயவின் புலனாய்வுப்பிரிவு:- வடமாகாணசபையின் பெண் உறுப்பினர் அனந்தி சசிதரனிற்கு எதிராக மீண்டும் முல்லைதீவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் உள்ளிட்ட தரப்புகளால் தாக்கல் செய்யபட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெறவிருந்தது. இதற்கு அவர்கள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. தொண்டர் இராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோருடன் இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வார்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்று இடம்பெற உள்ளதாக கூறியே தாம் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தி…
-
- 0 replies
- 770 views
-
-
சித்தப்பு - மகன் முறுகல் நிலை நீடிக்கின்றது- முறுகல் நிலை நீடிக்கின்றது குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள் வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார். காலி மாநகர சபை மேயருக்கும் நகர அபிவிருத்தி…
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கையின் அழைப்பை ஏற்றுக்கொள்வாராம் மோடி! - நம்பிக்கையில் அரசாங்கம். [Monday 2014-08-25 12:00] இலங்கைக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் விமர்சிக்கும் போது அவற்றை ஒளிபரப்ப உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி உள்ளது என்பதே எவ்விதமான ஊடக தணிக்கைகளும் நாட்டில் இல்லை என்பதற்கு உதாரணமாகும். அரசாங்கம் தனது கர…
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கையின் பிடிவாதம்: சாடுகிறது நியூயோர்க் டைம்ஸ் [Monday 2014-08-25 12:00] ஐ.நா போர்க்குற்ற விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்காததன் மூலம், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் பிடிவாதம் என்ற தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட உள்ளுர் விசாரணை தோல்வி கண்டுள்ளது.அதேநேரம் போர்க்குற்ற விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கான பாதுகாப்பு உறுத…
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கை இராணுவ வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று முன்தினம் வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது. 25 ஆகஸ்ட்டு 2014, திங்கள் 10:45 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=795843364525316613#sthash.n3scNC3x.dpuf
-
- 4 replies
- 808 views
-
-
கொழும்பு நகரில் யுத்தத்திற்கு பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசு பல காணிகளை சுவீகரிக்கின்றது திகதி: Aug 25, 2014 | இணைத்தவர்: மாலதி கொழும்பு நகரில் யுத்தத்திற்கு பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசு பல காணிகளை சுவீகரிக்கின்றது. ஆனால் இதன்போது காணி திணைக்களத்தின் சட்டங்களை கடைபிடிக்காது நகர அபிவிருத்தி அதிகார சபை அத்துமீறி செயற்படுவதாக மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார். இதனால் கொழும்பில் உள்ள நடுத்தர வருமானம் பெரும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேல்மாகாண சபையில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட அரசினால் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பான பிரேரணையொன்றை முன்வைத்தது. …
-
- 0 replies
- 415 views
-