Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை வடிகட்டத் தயாராகிறது சிறிலங்கா -பின்னணியை ஆராய்ந்தே அனுமதி [ திங்கட்கிழமை, 14 ஒக்ரோபர் 2013, 00:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டு செய்திகளைத் திரட்டுவதற்கு, பின்னணியை ஆராய்ந்த பார்த்த பின்னரே, அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் ஊடகதுறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்திய, சனல் 4 தொலைக்காட்சிக்கு கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெல பதிலளித்துள்ளார். “ எந்த ஊடகத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வருகிறார்கள் என்பதை நாம் பொரு…

  2. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்குமா? 14 அக்டோபர் 2013 இலங்கையின் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் இரசாங்கத்தின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடமாகாண சபையின் முதல் அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை. இந்தக் கூட்டங்களில்…

  3. இலங்கைக்கு எதிராக போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன – பாதுகாப்பு அமைச்சு 14 அக்டோபர் 2013 இலங்கைக்கு எதிராக போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் கொலை உள்ளிட்ட பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச அரங்கில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளது. எனினும், நிராயுத பாணியான பின் லேடனை, அமெரிக்க துருப்பினர் ஹெலிகொப்டர் மூலம் சென்று பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் …

  4. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் புறநெகும (நெல்சிப்) திட்டத்தில், 2013ம் ஆண்டில் செய்யப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும், 2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும், உலக வங்கியைச் சேர்ந்த நிபுணத்துவ ஆலோசகர்களான திரு.சரத் விக்கிரமரட்ண, திரு.எம்.டி.ஏ. உறரோல்ட், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து நெல்சிப் திட்டத்திற்குப் பொறுப்பான சமூக அபிவிருத்தி அலுவலர் திரு.ஞானவேல்ராஜா ஆகியோரைக் கொண்ட குழுவினர் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்தனர். கடந்த வருடம் நெல்சிப் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வேலைகளில் ஒன்றான நெற்கொழு வைரவர் ஆலய முன்வீதி, ஆதிகோயிலடியில் சிதம்பரா வடக்கு கடற்கரையோரமாக அமைக்கப்ப…

  5. நாடாளுமன்ற தெரிவுக்குழு வாயிலாக ஒருதலை பட்சமான தீர்மானங்களை முன்வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பேச்சாளர் ஹசன் அலி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும், திஸ்ஸ விதாரணவையும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் இணைத்துக்கொள்ளாமை, மாற்றுக்கருத்துக்களை கொண்ட எந்த தரப்பினரையும் இணைத்துக்கொள்ள அரசாங்கம் இணக்கமில்லை என்பதனை தெளிவாக எடுத்துணர்த்துவதாக அவர் மேலும் குறிப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பேச்சாளர் ஹசன் அலி கருத்து தெரிவிக்கையில். அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும்…

    • 0 replies
    • 407 views
  6. வடகிழக்கு இணைந்த தாயகமே இறுதித்தீர்வு: அரியநேந்திரன் எம்.பி வட கிழக்கு இணைந்த தாயகம் தான் இறுதித்தீர்வு. இதையாரும் பிரித்துப் பார்க்கவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நவம்பர் 27ம் திகதியை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் கனவை சுமந்து நாம் எமது மண்ணில் தமிழர்களாக வாழக்கூடிய தீர்வுக்காக உழைக்க வேண்டும். அத்துடன் வட கிழக்கு இணைந்த தாயகம் தான் இறுதித்தீர்வு. இதையாரும் பிரித்துப் பார்க்கவேண்டாம். இலங்கை இந்திய ஒப…

  7. தகர்க்கப்படும் தமிழர்களுக்கான நியாயங்கள் அக் 13, 2013 உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான நியாயங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம் அதனை மறுபரிசீலனைக்கு நிர்ப்பந்தப்படுத்தியது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுடன், ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்குக் களம் அமைத்துக் கொடுத்த உலக நாடுகள் முள்ளிவாய்க்கால் கற்றுக்கொடுத்த பாடங்களுடன் சிங்கள ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்றம் சுமத்துகின்றன. இலங்கைத் தீவில் பாரியதொரு பேரவலம் நிகழப் போகின்றது என்று தெரிந்தும், அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிய ஐ.நா. பெருமன்றம், தனது கடமையிலிருந்து தவறித் தான் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டுள்ளது. 'நடைபெற்று முடிந்த கொடூரங்களுக்கு நீதி வழங்…

    • 0 replies
    • 520 views
  8. ' 13 அக்டோபர் 2013 இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத் தலைவர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை கணக்கில் எடுக்காது தமிழரசுக் கட்சி தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக டெலோ அமைப்பிலிருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள கே. சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவ…

  9. மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தப்பி தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பில் காட்டு யானைகளை வனஉயிர் அதிகாரிகள் விரட்டிய பின்னரும் யானைகள் கிராமங்களுக்குள் வந்துவிடுவதாக மக்கள் கூறுகின்றனர் போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதே கிராமத்தில் நேற்று 12 வயது சிறுவனொருவன் யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான். தமது கிராமத்தில் மழை வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த சிறுவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம…

  10. ஸ்ரீலங்காவின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதியமைச்சர் சஜித் பிரேமதாசவை அரச அதிபர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார அரச அதிபர் முறைமையை இல்லாதொழிக்க இணங்கினால் மட்டுமே அரச அதிபர் வேட்பாளராக சஜித்தை நியமிக்க முடியும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜே.ஆர். ஜயவர்தனவைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஸ்ரீலங்காவின் அரச அதிபர்களும் தாங்கள் கட்சித் தலைவர்களாக இல்லாத காலத்திலேயே அரச அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். அதேபோன்று சஜித் பிரேமதாசவிற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென்று கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர், http://www…

  11. பிரித்தானியாவின் சனல் 4 செய்தியாளர் ஒருவர் ஸ்ரீலங்காவுக்குச் சென்றுள்ளமை தொடர்பில், சிங்களப் படைத்தரப்பினரை விழிப்பாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த செய்தியாளரும் அவருடைய நண்பியும் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறி, ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சிங்கள புலனாய்வு பிரிவின் தகவல்படி குறித்த செய்தியாளர் கொழும்பு ஹில்டனில் தங்கியிருந்த அதேநேரம் அடுக்குமாடியிலும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் சனல் 4 செய்தியாளரும் அவருடைய நண்பியும் தனிப்பட்ட வியாபார நோக்கத்துக்காக அடிக்கடி ஸ்ரீலங்காவுக்கு சென்று வருவதாக தெரியவந்துள்ளது.…

  12. கிளிநொச்சியில் ஆட்டோக்கார்களின் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பண்ணிய இராணுவத்தினர் - 13 அக்டோபர் 2013 குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் கிளிநொச்சி நகரத்தின் டிப்போ சந்தியில்; இன்று ஆட்டோ நிறுத்தும் இடத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையில் சிறிய முரண்பாடு ஏற்பட்டது. தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்காக அவர்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த முரண்பட்டில் சிக்கி ஆட்டோ ஓடடுனர்களும் நிறுத்தத்தில் நின்ற ஏனைய ஆட்டோ ஓட்டுனர்களும் அதனைப் பெரிது படுத்தாத போதும் அப்பகுதியால் ரோந்து வந்த இராணுவத்தினர் இது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். குறித்த இடத்தில் இலங்கை பொலிசார் சிலர் கடமையில் நின்ற பொழுதும் ஆட்டோக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையை வீதியில் மாலை வேளையில் சைக்கிளில் செ…

  13. கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் முன் பாய்ந்து தாய் மற்றும் மகள் பலியாகியுள்ளனர். வெயங்கொட - பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் கீனவல பிரதேசத்தில் இச்சம்பவம் இன்று (13) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் இவ்வாறு ஓடும் ரயில் முன் பாய்ந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது தாயும் ஒரு மகளும் ரயிலுடன் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் உயிர்த் தப்பியுள்ளார். உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெயங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamilworldtoday.com/home

  14. 'மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்' 12 அக்டோபர் 2013 'வாக்கு வேட்டைக்காக பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்' மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபையிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர். இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில் நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்த…

    • 17 replies
    • 1.3k views
  15. "சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" இவ்வாறு IRIN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் முன்னைய போர் வலயத்தில் பெண்கள் குடும்பங்களைத் தலைமை தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இவர்களில் பலர் பாலியல் தொழிலாளிகளாகவும் மாறிவருவது அதிகரித்துள்ளது. சிறிலங்காவின் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் 7000 வரையான பெண்கள் தமது வருமானத்தை அதிகரிப்…

  16. இன்னும் இராணுவ ஆட்சியிலிருக்கும் வடமாகாணத்தில் மக்கள் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருப்பதாகவும், செல்வம் அடைக்கலநாதன் 25 வருடம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இப்போது திருந்தி ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளதாகவும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னை நாள் போராளிகள் அச்சம் காரணமாகவும் வேறு பல சமூக ஒடுக்குமுறைகள் காரணமாகவும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலம் பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது குற்றச் செயல் போன்றும் செல்வம் அடைக்கலநாதன் இப்போது திருந்தியுள்ளதாகவும் கூறும் விக்னேஸ்வரன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுமாறு சமூகத்திடம் விண்ணப்பிக்கிறார். போ…

  17. வாராந்தரம் இடம்பெறும் அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக கடும் அரசியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் வேளையிலேயே ஜனாதிபதி வடமாகாண முதலைமைச்சருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு சி.வி. விக்னேஸ்வரன் தயாரானால் முழு வடமாகாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடு…

    • 16 replies
    • 1.7k views
  18. அண்மைக்காலங்களில் கொமன்வெல்த் மாநாடு ஒன்று இந்தளவுக்கு விமர்சனங்கள், சர்ச்சைகளைச் சந்தித்ததில்லை. இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாடு அந்தளவுக்கு மோசமான சர்ச்சைகளை சந்தித்துள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், மாநாட்டைப் புறக்கணிக்கும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது ஒன்றும் மாநாட்டைப் பாதிக்கப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவின் முடிவு குறித்தும் கருத்துகள் குறித்தும் எதிர்கால உறவுகள் குறித்தும் விவாதிக்க கனேடிய தூதரக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது இருதரப்பு இராஜதந்திர முறுகல்களை இ…

  19. மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்காவுக்கு உடந்தையாகச் செயற்படுவதாக, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மீது கனடா நேரடித் தாக்குதலைத் தொடுத்துள்ளது. சிறிலங்கா தலைமையையும், அதன் எல்லா தவறுகளையும் தற்காத்துக் கொள்ள உடந்தையாக இருப்பவர் என்று கமலேஸ் சர்மாவை, கொமன்வெல்த்துக்கான கனேடிய சிறப்புத் தூதுவர் ஹியூ சீகல், விமர்சித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கத் தவறிவிட்டதால், கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். அத்துடன், கொமன்வெல்த்துக்கு நிதியுதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடான கனடா, கமலேஸ் சர்மா தலைமையிலான கொமன்வெல…

  20. கனேடிய இராஜதந்திரிகளுக்கு உடனடியாக அழைப்பாணை அனுப்பும் நகர்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது தொடர்பாக விளக்கமளித்த, கனேடிய பிரதமர் மற்றும், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த, சிறிலங்காவின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கனடாவுடனான எதிர்கால உறவுகள் குறித்து முடிவு செய்வதற்கும், கனடாவின் கருத்தைக் கண்டிப்பதற்கும், கனேடிய இராஜதந்திரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும். இதுகுறித்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தனது பெயரை வெளியிட வ…

  21. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஒரு அடுக்குமாடியில், சனல் 4 ஊடகவியலாளரும், அவரது துணையும், தங்கியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள், தீவிரவாத விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், குறிப்பிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி ஊடகவியலாளரும் அவரது துணையும், அடிக்கடி சிறிலங்கா வந்து செல்வதும், அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காகவே வந்திருந்ததும் தெரியவந்தது. எனினும், அவர்கள் சிறிலங்காவின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் தகவல்களைத் திரட்டுவதற்காக…

  22. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக், “அந்த நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஐ.நா எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. அந்த சமயத்தில் நாம் வெளியிட்ட அறிக்கைகளை பார்க்க வேண்டும். அமைதிக்கான வழிகளுக்கு அழைப்பு விடுத்தும், போர் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுத்திருந்தோம். ஒவ்வொரு சூழ்நிலைகளும் வித்தியாசமானவை. அறிக…

  23. இந்திய வெளிவிவகாரச் செயலராக அண்மையில் பொறுப்பேற்ற சுஜாதா சிங், சவுத் புளொக்கில் முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிஎஸ்எம் பிரிவு என அழைக்கப்படும், பங்களாதேஸ், சிறிலங்கா, மியான்மர், மாலைதீவு விவகாரங்களைக் கையாளும் பிரிவில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சிறிலங்கா - மாலைதீவு விவகாரங்களைக் கையாள ஒரு பிரிவும், மியான்மர் - பங்களாதேஸ் விவகாரங்களைக் கையாள மற்றொரு பிரிவும், தனித்தனியான இணைச்செயலர்களின் கீழ் உருவாக்கப்படவுள்ளன. சவுத் புளொக்கிலுள்ள பிஎஸ்எம் பிரிவின் கண்காணிப்பில் உள்ள நான்கு நாடுகளுக்குமான இந்தியாவின் உதவி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதி…

  24. கடந்த 25 வருசமாக மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளியிட முடியாமல் தவித்தார்களாம்.. இப்போ மாகாண சபை தேர்தலில் வெளியிட்டு விட்டார்களாம்..??! இதன் அர்த்தம்...????????????! எமது போராட்டத்தையும் போராளிகளையும் மாவீரர்களின் தியாகங்களையும் போராளிகள் ஏற்படுத்திய அரசியல் தெளிவுகளையும்.. ஏன் தமிழ் தேசிய அடையாளம் என்பதையும்.. இவர் கொச்சைப்படுத்த நினைக்கிறாரா..???! விக்கியர் தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக.. ஒவ்வொன்றைப் பேசுவதை நிறுத்திக் கொண்டு.. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அப்பால் அலட்டுவதை தவிர்ப்பது நல்லது..! https://soundcloud.com/tamilnet/npc_cm_wigneswarans_maiden_speech/s-5kGZ3 http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36739

    • 5 replies
    • 1.1k views
  25. TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா? http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு GTMN Audio தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. …

    • 14 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.