Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Canada வில் Rogers கைத்தொலைபேசி சேவை இன்று மாலை முதல் வேலை செய்யவில்லை. http://www.cbc.ca/news/business/rogers-wireless-suffering-countrywide-outages-1.1932019

    • 0 replies
    • 524 views
  2. கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும்(வலது) இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸும் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ள கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள், அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை அந்த அமைப்புக்கு வழங்கிவருகிறது. இலங்கையில் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று காரணம் காட்டியே ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் அந்த மாநாட்டை பகிஸ்கரிப்பது என்று அறிவித்துள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்…

  3. படைத்தரப்பின் வசமுள்ள பலாலி விமான நிலையம் விரைவில் தமிழ் மக்களது பயன்பாட்டிற்கான பொது விமான நிலையமாக ஆக்கப்படும். அதே போன்று விரைவில் மன்னார் துறைமுகம் புனரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்களிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப்பேசினார். அதே வேளை யுத்த பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு வர்த்தகர்கள் சிலருக்கும் …

  4. காமன்வெல்த்துக்கான கனடாவின் உதவிகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 அக்டோபர், 2013 - 13:48 ஜிஎம்டி கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும்(வலது) இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸும் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ள கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள், அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை அந்த அமைப்புக்கு வழங்கிவருகிறது. இலங்கையில் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை…

  5. காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,காமன் வெல்த் கூட்டமைப்பில் இலங்கையை நீக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்க்கொண்டு உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத் தென்னரசன்,அறிவுச்செல்வன்,ஆவல் கணேசன், அமுதா நம்பி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் அன்பன்,புகழ் மாறன்,வாகை வேந்தன்,அரசகுமார்,காஞ்சி ராசன் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

  6. வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதனைப் போன்று, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார். இந்தியா தம்மை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாக குறிப்பிடவில்லை என்ற போதிலும், வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே வழியமைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இல…

  7. இந்து சமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றன. தற்போது வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தத்தம் நாடுகளில் தாக்கல் செய்து வரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்த அறைகூவலை விடுத்துள்ளதோடு தமிழீழத் தன…

  8. தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்றால் மட்டுமே அரசியல் தீர்வு! - குர்ஷித்திடம் மகிந்த திட்டவட்டம்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வைக் காணாலாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது, 13வது திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தி அர்த்தமுள்ள அதிக…

    • 10 replies
    • 803 views
  9. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொறுப்புக்களை உணர்ந்தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடக்கு மாகாண சபையை செயலூக்கமுள்ள அரசாக நடத்திச் செல்ல எமது அனுபவப் பகிர்வுகளையும் தேவையான பொழுதில் நாம் வழங்குவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்…

  10. -டியான் சில்வா பொதுநலவாய நாட்டு தலைவர்களின் கூட்டத்திற்கு உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்ப கனேடிய அரசாங்கம் மறுத்ததையிட்டு இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டது. கனடா இந்த மாநாடு தொடர்பில் உள்நாட்டு பிரச்சினைகளை பயன்படுத்தக் கூடாதென இலங்கை கூறியுள்ளது. பொதுநலவாயம் என்பது சுய விருப்பத்தின் அடிப்படையிலான ஒரு கூட்டமைப்பு இதில் எந்த ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டின் விடயத்தை மதிப்பிட உரிமையில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார். பொதுநலவாயத்தில் உள்ள ஏராளமான நாடுகள் மாநாட்டில் பங்கு பெறவுள்ளன என அமைச்சர் கூறினார். கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றப் போவதில்லையெனும் தனது தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்துள்ளார். இலங்க…

  11. 2014ஆம் ஆண்டளவில் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணம் வரையில் பயணிக்க வைக்க முடியும் என இந்திய வெளியறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு சிறு கைத்தொழிலாளர்களுக்கு இந்தியா நிதியதவி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ் இதனை நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த சல்மன் குர்தீஷ், ''பல தசாப்தகால யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யுத்த காலத்தில் அடைமுடியாத இலக்குகளை எட்ட வேண்டும். அதுவே எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும். அடுத்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு யாழ் தேவி ரயிலை சேவையில் ஈடுப…

    • 4 replies
    • 936 views
  12. பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச்செயலாளர் ஜே.டி. திலக்கசிரி என்றழைக்கப்படும் ஹட் திலக்கசிரி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கடத்தப்பட்டுள்ளனர். கொழும்பு டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் வைத்து சற்றுமுன்னர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் பயணித்த மொண்டேரோ ஜீப் டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் மருதானை பொலிஸார் தெரிவித்தனர். அந்த வாகனத்தின் கண்ணாடிகள் கீழே இறக்கப்பட்டிருந்ததாகவும் கையடக்கதொலைபேசிகள் இரண்டு மற்றும் பாதணிகள் இரண்டும் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. வாகனத்தின் திறப்பு அருகிலிருந்த வீதியில் வீசப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திலக்கசிரி செல…

  13. மருத்துவமனை என்றாலும் சிறைச்சாலை என்றாலும் வெற்றி அல்லது வீரச் சாவுதான் என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அறிவித்துள்ளார். தோழர் தியாகு தனது பட்டினிப் போராட்டத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 9 ஆம் நாளாக முன்னெடுத்து வருகிறார். மருத்துவர்கள் உடல்நிலை கருதி குல்கோஸ் ஏற்ற முயற்சித்த போதும் தோழர் அதை உறுதியாக மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மறுத்தால் நிலைமை மோசமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துளு;ளனர். அதற்குப் பதிலளித்துள்ள தோழர் தியாகு, ''அப்படி ஆகட்டும் என்றுதான் மறுக்கிறேன்'' எனக் கூறியுள்ளார். ''கோரிக்கைதான் என் உயிர். எனைக் காப்பதில் யாருக்காவது அக்கறை இருக்குமானால் கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்யட்டும் என தோழர் தியாகுவின் உறுதியா…

    • 0 replies
    • 1.2k views
  14. தமிழர் தரப்பின் நல்லெண்ண நோக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு முன்பாக பதவியேற்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இந்தச் சமிக்ஞையை சிங்கள அரசியல் தலைமை ஏற்றுக்கொண்டு தமிழர்களுக்குரிய தீர்வைத் தராவிட்டால் அதன்பின் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்க எடுத்த முடிவு தொடர்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் எதிர்ப்புகள் வலுத்திருந்தன. இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை போர்க்க…

  15. -சுமித்தி தங்கராசா 'தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுமென அவர் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவு இதுவரையில் வெளியிடப்படாதது தொடர்பாக கேட்டபோது, அமைச்சர்கள் தெரிவு நாளை வியாழக்கிழமை நிறைவு பெறாவிட்டால், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாண நிகழ்வின் போது அமைச்சர்களின…

  16. தெமட்டகொடவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் சடலம் காரிலிருந்து மீட்கப்பட்டது. குறித்த காரினையும் நீதவான் விசாரணை மேற்கொள்வதனையும் படங்களில் காணலாம். படங்கள்: நிசால் பதுகே http://tamil.dailymirror.lk/--main/85198-2013-10-09-07-27-33.html

  17. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உச்சநீதிமன்றத்திலேயே பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உச்சநீதிமன்றத்தில் , சட்டத்தரணி பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்திய நாடாளுமன்றத்தில், 1983 ஆம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து உச்ச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றம் 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது. பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய 'சக்காஷ்' என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் ம…

  18. 'இலங்கையிலுள்ள தமிழ் மக்களை ஆள தமிழரொருவர் முதலமைச்சராக பொருப்பு ஏற்கிறார். அந்த விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும். எம் மக்களுக்கு தனி சுதந்திரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இனியும் எம் மக்கள் எங்களைப் போல அகதிகளாக செல்லக் கூடாது' என்று தமிழகத்திலுள்ள இலங்கை மூதாட்டியொருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மனு நீதி நாள் என்ற நிலையில் அதிகளவில் மக்கள் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் 75 வயதுடைய மூதாட்டியொருவர், கையில் ஒரு துணிப் பையுடன் வந்தார். முதியோர் உதவித் தொகை கேட்டு வந்துள்ளார் என்று அனைவரும் நின்ற நிலையில் திடீரென தன் கை பையில் இருந்து ஒரு இந்திய தேசிய கொடியை எடுத்து உயர்த்திப் பிட…

  19. இப்போது, சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவானந்தவுக்கும் இடையே சில வேற்றுமைகளையும் பல ஒற்றுமைகளையும் மட்டுமே அவதானிக்க முடிகின்றது. அதனால், அந்த இரு மனிதர்கள் குறித்தும் ஆராயப்படவேண்டிய கட்டாயம் தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. விக்கினேஸ்வரனுக்கு முன்னைய காலத்தில், டக்ளஸ் நீதியரசராகப் பதவி வகிக்காவிட்டாலும், தமிழீழப் போராட்ட களத்தில் ஒரு போராளியாக அறியப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் உருவான ஒவ்வொரு போராளியும், அவர்களது தலைவர்களும் ஒரு நீதியரசருக்கு இல்லாத மரியாதைக்கு உரியவர்களாகவே தமிழ் மக்களால் மதிக்கப்பட்டிருந்தனர். அந்தக் கௌரவம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கிடைத்திருந்தது. விக்னேஸ்வரன் போலவே டக்ளஸ் தலைவனாக வராமலேயே தமிழ் மாகாணம் ஒன்றின் முதலமைச்சராக வரம…

    • 10 replies
    • 721 views
  20. கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சத்தி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் CTV நிறுவனம் 09 அக்டோபர் 2013 500 புகலிடக் கோரிக்கையாளர்களை கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக CTV நிறுவன ஆவண செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்டதன் பின் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சுமார் ஒரு வருடகாலம் தான் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சத்தி எனப்படும் சத்தியபவன் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்ததாக பாதிக்கப்பட்ட சத்தியபவன் ஆசீர்வாதம் தனது கனேடிய சட்டத்தரணியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 'என் உடலில் தண்ணீ…

  21. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும் [ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 01:04 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக, இன்று காலை 9 மணியளவில் பதவியேற்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் - *கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன். *இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள். *இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகி…

    • 45 replies
    • 2.9k views
  22. டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கை விஜயம் செய்கின்றார் 09 அக்டோபர் 2013 பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை கமரூன் அறிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார். கனடா அமர்வுகளை புறக்கணித்துள்ள நிலையில் பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது. எனவே, பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்பதனை நியாயப்படுத்தும் வகையில் கமரூன் கடுமையான செய்திகளை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்ல முற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இ…

  23. 'வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை சி.வி. 09 அக்டோபர் 2013 2ஆம் இணைப்பு - 'வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை சி.வி. வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் 'வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன'; என யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று (08.10.13) செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். 'வடமாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் இறுதியான முடிவுக்ள எதுவும் எட்டப்படவில்லை. ஓரளவான முடிவுகள் மட்டுமே எட்டப்பட்டுள்ளன. விரைவில், வட மாகாண சபைக…

  24. வடக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் உருப்படங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களினால் கொளுத்தப்பட்டதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சராக சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு உருவப்படங்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஷ் எம்.பி ஆகியோரின் உருப்படங்களும் எரிக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தச் செய்தியை முல்லைத்தீவில் இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. …

    • 0 replies
    • 716 views
  25. போருக்குப் பின்னான காலத்தில் அநேகவீடுகளில் ஒவ்வொரு தாய்மாரின் உள்ளத்திலும் இந்த ஒப்பாரி மெளனத்திரைக்குள் ஒளிந்து ஒலித்தபடியேதான் இருந்தது. ஏனெனில் போரின் இருளில் எங்களின் இளையதலைமுறையின் உயிர்கள் ஈவிரக்கமின்றி அதிகாரத்தால் காவுகொள்ளப்பட்டிருந்தன. விடுதலைக்காகப் போராடப் போனவர்களை மாத்திரமன்றி, உயிர்ப் பயத்தில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த வர்களைக்கூட தப்பிக்க அதிகாரம் அனுமதிக்கவில்லை. மூன்று தசாப்தங்களா எம்மினத்தின் மீது நிகழ்ந்து வந்த இன அழிப்பின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டிருந்தது. எங்கும் குருதியும், ஓலங்களும், பிணங்களும், தனித்து துடித்தபடி கிடக்கும் உடல் அவயவங்களும் அந்த மணல்வெளியை நிறைத்திருந்திருந்தன. குடியிருக்குமிடமெல்லாம் சவக்கிடங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.