Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணொளி : புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கே.பத்மநாதனின் நேர்காணல் ... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9485:2013-10-05-17-38-43&catid=1:latest-news&Itemid=18

  2. '13" ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு "மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா. 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது'' என்று அரசு நேற்று அறிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு இனி மேல்சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது. காணி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகள், 18ஆவது திருத்தம் ஆகியவற்றைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தத்ததை பலப்படுத்…

    • 6 replies
    • 986 views
  3. "விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது இங்குள்ள சிலரின் இன்றைய கவலை" 05 அக்டோபர் 2013 சிங்கள வானொலி நிகழ்வில் மனோ கணேசன் இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது. இனவாதிகளின் நாடிபிடித்து பார்க்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புவதால் இது எனக்கு புரிகிறது என வி எப்எம் தனியார் வானொலியில் ஒலிபரப்பாகும் "சித்தாமுல்ல" என்ற பிரபல சிங்கள நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்…

  4. 5 அக்டோபர், 2013 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. ''ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக, அந்த அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு, அரசின் சலுகை, அபிவிருத்தி மாயைகளுக்குள் சிக்கி விடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம், தமது எதிர்ப்பை மக்கள் காட்டியுள்ளனர். இத்தருணத்தில் வட மாகாண முதலமைச்சராக திரு. சி. வி. விக்கினேஸ்வரன் மகிந்த ர…

  5. -சுமித்தி தங்கராசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா, எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா றம்பைக்குளம் கருமாரி அம்மன் கோவிலிருந்து ஆரம்பித்துள்ளார். இது பற்றி தம்பிராசா கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொள்ள வேண்டும், அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும், அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவி…

  6. -எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார். உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன், …

  7. புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை என்பதால் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டது - ருவான் வணிகசூரிய [saturday, 2013-10-05 07:05:23] தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியுடனான வீடு தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின், பாரிய பதுங்கு குழியுடன் அமைந்திருந்த வீடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகர்க்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்க…

  8. தெற்கை விடவும் வடக்கிற்கு அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது – ஜனாதிபதி 05 அக்டோபர் 2013 தெற்கை விடவும் வட மாகாணத்திற்கு கூடுதலான அளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையானது தெற்கு அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட தொகையைவிடவும் அதிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் பிரதானமான ஒரு சில நகரங்களில் காணப்படும் அதி நவீன வசதிக் கொண்ட மருத்துவமனையொன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை பிரி;த்தானிய பாராளுமன்ற கூட்டமைப…

  9. மன்னாரில் படகு கவிழ்ந்து 5 பேர் பரிதாப மரணம் [ சனிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2013, 13:41 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] மன்னாரில் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்ளிட்ட 5 பேர் கடலில் மூழ்கி உயரிழந்தனர். இன்று பிற்பகல், மீன்பிடிப் படகு ஒன்றில் 16 பேர் கடலைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தனர். இதன்போதே, படகைத் திருப்பும் போது, அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, சிறிலங்கா கடற்படையினர் விரைந்து சென்று 11 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. குழந்தை ஒன்று காணாமற்போயிருந்தது. இறுதியாக, குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20131005109196

  10. ஜனாதிபதியுடன் பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து பேசினேன்! - மகிந்தவுடனான சந்திப்புத் தொடர்பில் சம்பந்தன் கருத்து!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து பேசியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததாகவும், இதன்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து பேசியதாகவும் சம்பந்தன் கூற…

  11. வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது – அரசாங்கம் 05 அக்டோபர் 2013 வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் நோர்வே அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜீ.லோச்சனுக்கு உறுதியளித்துள்ளார். வடக்கில் நடைபெற்ற தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்றது என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டிய காரணத்தினால் வடக்கு அபிவிருத்திப் பணிகள் முடங்கி விடும் என்ற வதந்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிரு…

  12. வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் நிகழ்வில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலரி மாளிகையில் நாளை மறுநாள் காலை நடக்கவுள்ள நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன்பாக, வடக்கு மாகாண முதல்வராக, சி.வி. விக்னேஸ்வரன், பதவியேற்கவுள்ளார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர், சல்மான் குர்ஷித், நாளை மறுநாள் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளார். அவர், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், சாட்சியாகப் பங்கேற்பார் என்று கொழும்பு அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன…

  13. வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்துடன் தோழர் தியாகு தமிழகத்தில் ஆரம்பித்துள்ள உண்ணாநிலைப் போராட்டம் 5ஆவது நாளை எட்டியுள்ளது. தோழர் தியாகு இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாக வேறு அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு தமிழ் உள்ளங்கள் சார்பில் கோரிக்கைள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக தளங்களில் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்வேர்ல்ட் டுடே இணையமும் தோழர் தியாகுவின் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. ”தமிழ் இனத்திற்கான உங்களின் உயரிய கொள்கையுடனான போராட்டத்துடன் தமிழனம் ஒன்றுபட்டுள்ளது. எனினும், உங்களின் உயிரைப் பணயம் வைப்பதற்கு தமிழனம் ஒருபோதும் மனப்பூர்வமாக இணங்காது…

    • 0 replies
    • 520 views
  14. வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் நியமனம் தொடர்பான, இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளதாக, கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்தமாதம், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், வெற்றிபெற்று இரண்டு வாரங்களாகியும், மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிநிலை இருந்து வருகிறது. மாகாண அமைச்சர்களாக நான்கு பேரையே நியமிக்க சட்டத்தில் இடமுள்ளதால், மாவட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. கல்வி அமைச்சர் பதவிக்கு கிளிநொச்சியில் இருந்து தெரிவான குருகுலராஜா…

  15. வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பதை தாம் விரும்பவில்லை என்று வடக்கில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு முன்பாக பதவியேற்கவுள்ளார் என்று நேற்றுத் தகவல் வெளியானது. வடக்கு மக்களுக்கு இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த முடிவை விமர்சித்து முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காரசாரமான விமர்சனங்கள் உடனடியாப் பதியப்பட்டன. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து கருத்துக் கேட்ட போது, வடமாகாணத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்…

  16. மன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ள, தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆவேசமாக தெரிவித்தார். வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு, கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறார் தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு. மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே பட்டினிப் போராட்டம் நடத்துவதாகத்தான் திட்டம். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை வழக்கம் போல் அனுமதிக்க மறுத்துவிட்டது. உயர் நீதிமன்றத்தில் …

  17. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் அமர்வுகளில் பங்கேற்பதனை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியா அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குர்ஷித் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை எட்டும் நோக்கிலான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்…

    • 6 replies
    • 685 views
  18. 'மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை' - அனந்தி சசிதரன் [ செவ்வாய்க்கிழமை, 01 ஒக்ரோபர் 2013, 11:15 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] நடந்து முடிந்த வடமாகாண சபைத்தேர்தலில் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு அடுத்ததாக அதிகூடிய விருப்பு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெறச்செய்த எனது உறவுகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். எத்தகையதொரு எதிர்பார்ப்புடன் நீங்கள் எனக்கு வாக்குகளை அளித்தீர்களோ அவ்வழித்தடத்திலிருந்தும் நான் இம்மியளவும் விலக மாட்டேன் என உறுதி கூறுகின்றேன். இந்நிலையில் ஒரு சில இணைய ஊடகங்களில் அனந்தி சசிதரன் ஆகிய நான் வடமாகாண சபையின் அமைச்சுப் பதவிக்களுக்காக அடிபடுவதாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் சில உள்நோக்கத்து…

    • 47 replies
    • 2.8k views
  19. வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், சிறிலங்கா படையினர் சட்டரீதியான கடமைகளை மீறி நடந்து கொண்டதாக, இராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, இராணுவ நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க கூறியுள்ளார். இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கையில், சட்டவரம்புகளுக்கு உட்பட்டே படையினர் நிலை நிறுத்தப்பட்டதாகவும், ஆனால், அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், தமது கடமைகளுக்கு அப்பால் நடந்து கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து நடக்கும் நீதிமன்ற மற்று…

  20. "வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் குறித்து நாளை மாலை கூடி முடிவெடுக்கப்படும்" - இரா.சம்பந்தன் - சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி செயலாளரின் அழைப்பின் பேரிலேயே தான் இன்று ஜனாதிபதியை சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் பதவியேற்பு மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து இன்று (04.10.13) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் 'பல விடயங்களைப் பற்றி பேசியுள்ளோம். மாகாண சபை என்னவிதமாக செயற்படக் போகின்றது அமைச்சர் பதவிகளை என்னவிதமாகப் பிரிக்க வேண்டும் எவ்வகையான பணிகள் ஒவ்வொரு அமைச்சுக்கும் கிடைக்கப் பெறவேண்டும், அவற்றை எவ்வாறு கையா…

  21. ரஷ்ய கடற்படையின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றும், விநியோக கப்பல் ஒன்றும் நட்புறவுப் பயணமாக இன்று காலை திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் மரபுரீதியான வரவேற்பை அளித்துள்ளனர். வர்யக் என்ற பெயர் கொண்ட, 187 மீற்றர் நீளமான ஏவுகணைப் போர்க்கப்பலும், பொரிஸ் புடோமா என்ற 162 மீற்றர் நீளமான விநியோகக் கப்பலுமே திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. வர்யக் போர்க்கப்பலில், 65 அதிகாரிகள் உள்ளிட்ட 529 கடற்படையினரும், பொரிஸ் புடோமா கப்பலில், 75 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர். ரஷ்யக் கடற்படையின் பசுபிக் கப்பற்பிரிவைச் சேர்ந்த இந்தக் கப்பல்கள், வரும் 8ம் நாள் வரை திருகோணமலையில் தரித்து நிற்கவுள்ளன. http://akkinikkun…

  22. இந்திய மத்திய அரசு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு முழு அதிகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, இலங்கையின் அரசு நடந்து கொள்ளும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, பொலிஸ் மற்றும் காணி சம்பந்தப்பட்ட துறைகளில் அதிகாரம் செலுத்த இயலாது என்றும், அவை மத்திய அரசின் நேரடிப்பொறுப்பில் கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிவுகளை முற்றாக நிராகரிக்கும் செயலாகும். 13 ஆம் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு உள்ள நிலம…

  23. பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் நிறுவனமாக மாற்றமடையக் கூடாது – ஜீ.எல்.பிரிஸ் 04 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் ஒர் நிறுவனமான மாற்றமடைந்து விடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இறைமையுடைய நாடுகளின் தன்னார்வ கூட்டுறவு அமைப்பாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்தை நீதி வழங்கும் ஓர் பொறிமுறைமையைக் கொண்ட அமைப்பாக மாற்றக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில சர்வதேச தரப்பின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். சில சர்வதேச தரப்புக்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறி…

  24. வடக்குமாகாணசபையினை வெற்றி கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனப்படுகொலையினை நடத்திய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னால் சத்தியப் பிரமானம் செய்து பதவி ஏற்கப் போவதான அறிவித்துள்ளது. இதுவரை காலமும் சிறீலங்கா அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொள்ள மாட்டோம் என முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் சிறீலங்கா அதிபர் சந்தித்திருந்தார். இதன் பின்னர் அதிபர் முன்னிலையில் தாம் சத்தியப் பிரமானம் செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் ப…

  25. மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது 04 அக்டோபர் 2013 வடமாகாண சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது வடமாகாண அமைச்சரவை பதவியேற்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக கூறுப்படுகிறது. காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் இந்த தீர்ப்பு தொடர்பில் தான் ஆராய்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது மாகாண சபைக்கான காணி அதிகாரம் குறித்தும் சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.