ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
ஆனி 2, 2013 தமிழினத்தை வேரறுத்து வரும் மகிந்த கும்பலின் உறுப்பினன் நாமல் ராஜபக்சவின் காலில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி தமிழ்த்தாய் ஒருத்தி நேற்று விழுந்து அழுத காட்சி அண்மையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ரணிலின் காலில் ஒருதாய் விழந்து அழும் காட்சிஇது சிங்கள காடைகளின் கால்களில் விழுந்தழும் எம் தமிழ்தாய்களின் இந்த நிலைகண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே… http://urumal.com/archives/நெஞ்சு-பொ
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன இன்று காலமானார். மேலும், http://tamilworldtoday.com/?p=12963
-
- 19 replies
- 1.1k views
-
-
புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் வெள்ளை வானில் கடத்தல்; மனைவி பொலிஸில் முறைப்பாடு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான சிவராசா சிவகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவரது மனைவி உதயனுக்குத் தெரிவித்தார். கிளிநொச்சியில் உள்ள அரச சார்பு அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரே தனது கணவரைக் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் தன…
-
- 4 replies
- 732 views
-
-
மட்டக்களப்பு, கல்முனை, குருக்கல்மடம் பிரதான வீதியிலுள்ள களுவாஞ்சிக்குடி ஸ்ரீ செல்லக் கதிர்காமம் ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று (01) இரவு 10 மணியின் பின்னதாக கோயிலின் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்தார். இதன்போது ஆலயத்திலிருந்து பெரும்பாலான விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 19 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு சுமார் பத்து மணிக்கு மேல் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கூறும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://www.adaderana.lk/tamil/
-
- 2 replies
- 828 views
-
-
அமெரிக்காவுடனான உடன்படிக்கையை ரத்து செய்யத் தீர்மானம் - திருகோணமலை நகரசபை 02 ஜூன் 2013 அமெரிக்காடவுனான உடன்படிக்கையை ரத்து செய்ய திருகோணமலை நகரசபை தீர்மானித்துள்ளது. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்திற்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கன் கோர்னர் என்ற தகவல் நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளதாக நகரசபையின் செயலாளர் அப்துல் லத்தீப் மொஹட் நாபீல் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நகரசபையொன்று வெளிநாட்டுத் தூதரகமொன்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட முடியாது என வெளிவி…
-
- 4 replies
- 681 views
-
-
எமக்கு தேர்தலில் ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றம் - டக்ளஸ் தேவானந்தா! [saturday, 2013-06-01 20:34:36] 'வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும்' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'நாய் குரைத்தாலும் வண்டிபோகவேண்டிய இடத்தைப் போய் சேரும்'என்ற பழமொழிக்கு இணங்க அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யு…
-
- 6 replies
- 630 views
-
-
விடுதலைப் புலிகள் அன்று பாலசிங்கத்தை இழந்தது போன்று இன்று ஐ.தே.க ஜயலத்தை இழந்துள்ளது! - மகிந்த தெரிவிப்பு!! 'தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று தமது தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்தை இழந்தது அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாக இருந்தது. அதேமாதிரி இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாபெரும் இழப்பாகும். இவர் எமது அரசைக் கடுமையாக விமர்சித்தாலும் நல்ல பண்புடையவர்' என சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளார். அன்னாரது பூதவுடல் ஜா-எலயிலுள்ள அ…
-
- 6 replies
- 754 views
-
-
பிள்ளையாரடியில் புத்தர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்ய தீர்மானம் மட்டக்களப்பு நகரில் (வடக்கு பிரதான நுழைவாயில்) பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தான் கொழும்பு மேல் நீதிமன்றத்தை நாடப் போவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன ரத்தன தேரர் தெரிவிக்கின்றார். குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த புதன்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான வேலைகளுக்கு தடை விதித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ´ஏற்கனவே பிள்…
-
- 1 reply
- 601 views
-
-
இலங்கை மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது கேள்விக்குறி! - மூத்த தலைவர்களுடன் ஆலோசனை!! இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்தான தமது முடிவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீள்பரிசீலனை செய்து வருவதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக அறியமுடிகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முக்கிய சில நாடுகள் புறக்கணிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாநாட்டை இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என தமிழகத்தின் அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் காங்கிரஸ்…
-
- 5 replies
- 904 views
-
-
தமிழ் டயஸ்பொறாவை முன்வைத்து சில கேள்விகள் -நிலாந்தன்- 02 ஜூன் 2013 ஒரு தலைமுறைக்கு முன் நாடு கடந்தார்கள். அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல மொழி இழக்கும் தருணத்தில் தீராப் பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது. --- சேரனின் கவிதை. சில வாரங்களுக்கு முன்பு தினக்குரலில் நான் எழுதிய தமிழ்ச் சிந்தனைக் குழாம் என்ற கட்டுரை தொடர்பாக நாட்டுக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நண்பர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அக்கட்டுரையின் முடிவில் ஒரு தமிழ்ச் சிந்தனைக் குழாம் உருவாகக் கூடிய அகபுற நிலைமைகள் தமிழ் டயஸ்பொறாவில் தான் அதிகம் காணப்படுவதாக நான் எழுதியதற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்தன. தமிழ் டயஸ்பொறாவைக் குறித்த மிகை மதிப்பீடு அது என்று பலரும் கருத்துத…
-
- 4 replies
- 870 views
-
-
9 கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிக்கிறது சிங்கள ராவய [ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 11:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] 13வது திருத்தச்சட்டத்தை ஒழிப்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக, சிங்கள, பௌத்த அடிப்படைவாத அமைப்பான சிங்கள ராவய எச்சரிக்கை விடுத்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், மிருகவதையை தடை செய்ய வேண்டும், பௌத்த சட்டத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும், வடக்கு கிழக்கில், சிங்களவர்களுக்கு நில உரிமையை உறுதிப்படுத்தும் சமமான சட்டத்தை கொண்டு வர வேண்டும், பௌத்தர்கள் ஏனைய மதங்களுக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், முஸ்லிம் தீ…
-
- 7 replies
- 897 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=13455
-
- 0 replies
- 613 views
-
-
ஆஸி. கடற்படை கப்பல் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2013 08:38 0 COMMENTS அவுஸ்திரேலியா கடற்படைக் சொந்தமான கப்பல் 'ஹமஸ்ட் டூவும்பா' எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 118 மீற்றர் நீளமும் 3600 டொன் நிறையும் கொண்ட குறித்த கப்பலில் 192 கடற்படையினர் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருதந்துள்ள கப்பல் எதிர்வரும் நான்காம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கும் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69275-2013-06-02-03-12-26.html
-
- 0 replies
- 380 views
-
-
தூதரங்களிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பொய்யான தகவல்களையே வளங்கியுள்ளனர்: - படைப்புலனாய்வு பிரிவினர் மறுப்பு [saturday, 2013-06-01 10:43:47] தடுப்பிலிரந்து விடுதலையான முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களில் 50 பேர்வரை கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்களிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் சிலர் பெண்களும் அடங்குகின்றனர். புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள தமக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக காரணம் காட்டி மேற்குலக நாடுகளின் தூதரங்களிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. …
-
- 2 replies
- 546 views
-
-
அநுராதபுரத்தில் அன்ரனோரவை சுட்டது போராளி புலவன்! சுட்ட சாம்-7 படையினரிடம்!! ஆனி 1, 2013 சிறிலங்கா விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் – 32 விமானத்தை சரியாக கால 11.45 மணிக்கு ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டுவீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தில் 32 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். சுட்டுவீழ்த்தப்பட்ட அன்டனோவ் -32 ரக விமானம் முன்னதாக, இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால்,…
-
- 5 replies
- 2.1k views
-
-
இதன்பின்னர் பங்காளிக் கட்சிகளைப் பயன்படுத்தி, நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திட்டமொன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=13238
-
- 1 reply
- 555 views
-
-
'இலங்கை ரக்பி நடுவர்கள் விரக்தியால் ஓய்வுபெறுகின்றனர்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மே, 2013 - 15:13 ஜிஎம்டி ரோஹித்த ராஜபக்ஷ(22) நடுவரைத் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர் இலங்கையில் ரக்பி போட்டி நடுவர்கள் பலரும் தொழில்களிலிருந்து ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கம் கூ றுகிறது. இதனால் அடுத்துவரும் கழக மட்ட போட்டிகளின்போது பணியாற்றுவதற்கு கூட நடுவர்கள் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்தின் தலைவர் ஓவில் பெர்ணான்டோ பிபிசி தமிழோசையிடம் கூறினார். ஆனால் சம்பவம் தொடர்பில் இலங்கை ரக்பி விளையாட்டுச் சங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட கு…
-
- 4 replies
- 628 views
-
-
விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்குமாறு, தாய்லாந்திடம் சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=13263
-
- 6 replies
- 923 views
-
-
புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது – அமெரிக்கா 01 ஜூன் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவானவர்களின் சர்வதேச நவடிக்கைகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, 2012ம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ n;தாண்டு நிறுவனங்களின் ஊடாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. http://www.global…
-
- 3 replies
- 1.3k views
-
-
நியானி: இணைப்பு திருத்தப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 856 views
-
-
2000 தமிழர்களின் நிலங்களில் ஆக்ரமிப்பு இலங்கை ராணுவத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் கொழும்பு ; "யாழ்பாணத்தில் தமிழர்களின் நிலங்களை ஆக்ரமித்துள்ள ராணுவம்இ அதற்குரிய நிவாரணத்தை ஏன் தராமல் உள்ளது' எனஇ நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில்இ 2009ல்இ ராணுவத்துக்கும்இ விடுதலை புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட சண்டை நடந்தது. இதனால்இ தமிழர்கள் பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டுஇ மறுவாழ்வு முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். விடுதலை புலிகளுடனான சண்டை முடிந்த பிறகுஇ தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவம் புகுந்தது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினர்இ தமிழர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். ஐ.நா.இ வற்புறுத்தலுக்கிணங்கஇ தமிழர்களின் சிலரது வீடுகளை ராணுவம் காலி செய்து கொடுத்து விட்டத…
-
- 2 replies
- 912 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் 01 ஜூன் 2013 ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று ஐரோப்பிய பாராளுமன்றிற்கு விஜயம் செய்திருந்தது. பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இந்தக் குழு விஜயம் செய்திருந்தது. இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிழுருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியுள்…
-
- 0 replies
- 540 views
-
-
கண்டியில் அண்மையில் நடைபெற்ற பிக்கு தீக்குளிப்புச் சம்பவத்தால் புனித நோன்பு, ஹஜ் பெருநாள் கடமைகளில் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. அதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில்தான் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான துரதிஸ்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பௌத்த மேலாதிக்கவாதிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருப்பதன் பின்னணி குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். கண்டியில் பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவத்தையடுத்து பௌத்த பிக்குகள் ஒருசிலரால், முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலுள்ள இறைச்சிக்கடைகளுக்கு விடுக்கப…
-
- 2 replies
- 728 views
-
-
13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யாமல் வடக்கில் தேர்தலை நடாத்தினால் அலரி மாளிகை முற்றுகையிடப்படும் - விமல் வீரவன்ச [Friday, 2013-05-31 20:23:39] அரசிலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யாது வடமாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடாத்தினால் அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிடுவார்கள் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முண்ணனி எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் அழிவுடன் தமிழீழத்திற்கான சந்தர்ப்பம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் வழக்கில் தேர்தலை நடாத்தி பிரிவினைவாதத்திற்கான அதிகாரங்களையும் கொடுப்பது என்பது பயந்து ஒடுகின்ற நாயை தேங்காயைக் கொண்டு அடித்து வீணாக தேங்காயையும் உடைத்தது போன்ற செயலாக மாறிவிடும். ஆகவே…
-
- 2 replies
- 636 views
-
-
இலங்கையர்கள் அதிகளவில் அரிசி மாவை நுகர்வதாக வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் நுகர்வு கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆண்டில் தனி நபர் கோதுமை மா நுகர்வு 35.5 கிலோ கிராமாக காணப்பட்டதாகவும், 2011ம் ஆண்டில் இது 24.2 கிலோ கிராமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே காலப்பகுதியில் அரிசி மாவின் நுகர்வானது 94.1 கிலோ கிராமிலிருந்து 117 கிலோ கிராமாக உயர்வடைந்துள்ளது. கோதுமை மாவிற்கு அதிகளவு வரி விதிக்கப்படுவதனால் இவ்வாறு நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92366/language/ta-IN/arti…
-
- 2 replies
- 724 views
-