ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாரியளவில் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளின் ஆரம்ப உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈராக் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பாரியளவில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். பாரியளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையிலான பொறிமுறைமை ஒன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் சில நாடுகள் பாரியளவு குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவை சம…
-
- 3 replies
- 693 views
-
-
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி அவர் தனது பேச்சின் மூலம் இந்தியாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் டக்ளஸ் தேவானந்தா, 1986 ஆம் ஆண்டு ஒன்பது நபர்களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப்பத்திரிகை …
-
- 2 replies
- 371 views
-
-
பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட இரகசிய அறிக்கை - விபரம் வெளியிட சிறிலங்கா மறுப்பு [ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 02:14 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை இந்த அறிக்கை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவினால் கையளிக்கப்பட்டுள்ளது. பாலித கொஹன்னவுடன் இணைந்து ஜப்பானிய நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, பங்களாதேசின் நிரந்தரப் பிரதிநிதி அபுல் கலாம் அப்துல் முமேன், ருமேனியாவின் நிரந்தரப் பிரதிநிதி சிமோனா ம…
-
- 17 replies
- 815 views
-
-
இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை அமைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கொன்றில் சிறிலங்கா அரசாங்கத்தினை அம்பலப்படுத்தவும் – தனிமைப்படுத்தவும் – தமிழர்களின் நியாயமான உரிமைப்போராட்டத்தினை வலியுறுத்தியும் ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கூடிவருகின்றனர். இந்நிலையில் இலங்கைத்தீவில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்…
-
- 1 reply
- 704 views
-
-
கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள், மலேஷியாவில் கைது 25 பெப்ரவரி 2013 கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள், மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.ரீ.எம் மற்றும் கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட 25 பேரைக் மலேஷிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், இதில் இரண்டு கனேடியர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மலேஷிய மற்றும் கனேடிய காவல்துறையினருக்கு இடையில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதன் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு கனேடியர்கள், போலியான கடன் அட்டைகளை தயாரித்து அவற்றை கூரியர் சேவை மூலம் மலேஷியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கடன் மற்றும் ஏ.ரீ.எம். அ…
-
- 0 replies
- 480 views
-
-
சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்கும் முயற்சியில் நோர்வே By J.Stephan 2013-02-25 18:45:10 நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறுவர்கள் விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களை பலவந்தமாக குற்றவாளிகளாக்கி அதன் மூலமான அறிக்கை ஒன்றை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து தமது செயற்பாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான சூழ்ச்சிகர நடவடிக்கைகளில் நோர்வே அரசாங்கம் இறங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நோர்வே அரசாங்கத்தி;ன் நேரடி கண் காணிப்பின் கீழ் இயங்குகின்ற சிறுவர் நலன் காப்பகங்களால் வெளிநாட்டுப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகவும் அதேநேரம் கடத்தல…
-
- 0 replies
- 530 views
-
-
ஈரானின் யுத்தக் கப்பல் தொடரணி ஒன்று சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழையவுள்ளதாக கடற்படை பேச்சாளர் காமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த போர் கப்பல் தொடரணி சிறிலங்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்ட கடற்பரப்பில் நங்கூரமிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க, சிறிலங்காவிலுள்ள ஈரான் தூதுவருக்கும் பொதுபல சேன அமைப்புக்குமிடையே இன்று (25) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இஸ்லாத்தைப் பரப்பும் வகையில் இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு ஈரானிய தூதரகத்தினால் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் தொடர்பிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%…
-
- 1 reply
- 397 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதனை விடவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது மிகவும் சவால் மிக்கது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 40 - 45 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியொன்று இருந்தது. அந்த எண்ணிக்கை 50 வீதமாக குறைவடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் நிலவி வரும் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் கட்சியில் ஒற்றுமை கிடையாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தயார், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்த…
-
- 4 replies
- 662 views
-
-
தங்காலை சிறையில் வைத்து தமிழ் கைதியான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவர் தாக்கப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கைதி தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆணைக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் மக்கள் கண்காணிப்புக்குழுவின் பிரதிநிதி மேலும் குறிப்பிடுகையில், 22 வயதான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் தங்காலை சிறையில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பில் நான் சிறைச்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரிக்கு அறிவித்துள்ளேன். சிறைச்சாலை அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அந்த முயற்சி கைகூடவில்லை. ம…
-
- 0 replies
- 539 views
-
-
பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இந்திய தூதுவர் ஆசோக் கே. கந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார். இந்திய அரசின் நன்கொடை நிதியில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தது. எனினும் இன்றைய நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதன்படி அடிக்கல் நாட்டும் வைபவம் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்படும் என அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வ…
-
- 1 reply
- 486 views
-
-
பாலச்சந்திரன் படுகொலை குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டியது இந்தியாவுக்கு முக்கியமானது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் நொறுக்குத் தீனி உண்ணக் கொடுத்த பின்னர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டும் ஒளிப்படங்கள் பிரித்தானிய ஊடகம் மூலம் வெளிவந்துள்ளன. இது இந்தியா ஆதரவு அளித்த போருடன் சம்பந்தப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டு. இது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான அரசு ஒன்றின் மிருகத்தனமான, வெறுக்கத்தக்க செயல். எனவே, மனிதாபிமான கரிசனைகள், இந்தியாவின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் குறித்து நடுநிலையான விசாரிக்கப்பட வே…
-
- 3 replies
- 895 views
-
-
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் எச்சரிக்கை – நடுக்கத்தில் அரச உத்தியோகத்தர்கள் அண்மையில் கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகள் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அடுத்தநாள் அதனை பிறின்ட் எடுத்து அரச அதிபருக்கு அனுப்பிய தரப்பினர் தாம் உங்களுடன் கதைப்பது எல்லாம் இணையத்தில் வெளிவருகிறது என முறையிட்டுள்ளனர். அது குறித்து கோபம் அடைந்த அரச அதிபர் அந்த உரையாடல் இட்பெற்ற போது தனக்கு அருகில் இருந்தவர்கள் யார் என்று எல்லாம் தேடி விசாரித்து எச்சரித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை எச்சரித்த அரச அதிபர் மாவட்ட செயலகத்தில் உள்ள கணனிகளை …
-
- 0 replies
- 594 views
-
-
-நவரத்தினம் 'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி உதயமாகுவதாகக் கூறி வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை விரைவுபடுத்தவதற்காய், எமது தேசத்தை நாமே ஆளும் சக்தியாக உருவெடுப்பதற்காய், மேலும் பல அரசியல் புதுமைகளுக்காய் இந்தக் கட்சி உதயமாகின்றது என சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சி தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக 024 2226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்…
-
- 1 reply
- 395 views
-
-
-எஸ்.கே.பிரசாத் 'இந்திய மக்களின் வரிப்பணத்தின் மூலம் இந்தியாவினால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிகைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' என்று சிறு கைத்தொழில் மற்றும் தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், இந்திய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்திய ஊடகவியாளர்கள், இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய மக்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 'இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்படுகின்ற திட்டங்கள் தமிழ் மக்களுக்குரிய முறையில் கிடைப்பதில்லை என்று ஊடகங்களில் செய்தி…
-
- 0 replies
- 251 views
-
-
ஜெனிவா - படம் பார் பாடம் படி - நிலாந்தன் 18 பெப்ரவரி 2013 யுத்தம் முடிந்த பின் வந்த மூன்றாவது சுதந்திர தினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது. இதில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையை தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றில் நிராகரித்தன அல்லது பொருட்படுத்தாது விட்டன. ஆனால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அந்த உரைக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் கவனிப்பிற்குரியது. குறிப்பாக, இந்திய மற்றும் மேற்கத்தேய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினரை பிரதிபலிக்கும் ஊடகங்கள் மேற்படி உரைக்கு வழங்கிய முக்கியத்துவத்தைப் பார்த்தால் அந்த உரை யாரை சென்றடையவேண்டுமோ அவர்களைச் சென்றடைந்தது என்றே பொருள்படும். தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் அந்த உரையில் புதி…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஜெனிவாவுக்கு மஹிந்த சமரசிங்க ஆடை அணிந்தா செல்கிறார்? – டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா கேள்வி! ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதன் முழுப்பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும். சர்வதேச நாடுகள் நாட்டின் இறைமையில் தலையிடுவதற்கு அரசாங்கமே வழிவகுத்துள்ளது. கடந்த ஜெனிவா கூட்டத் தொடரில் மஹிந்த அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாதுள்ள நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ம…
-
- 2 replies
- 740 views
-
-
ஜெனிவாவுக்கு 28 ஆம் திகதி பயணமாகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு! ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா பயணமாகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன் …
-
- 2 replies
- 1.4k views
-
-
கடலில் படகுப் பேரணி நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும் நேரே சந்திக்க வைத்து பேச்சு நடத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கச்சதீவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூ…
-
- 5 replies
- 419 views
-
-
சுற்றுலா நுழைவிசைவிலும் மற்றும் புடவை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையிலும் சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ள இந்திய உளவாளிகளைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் முகவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில், புடவை வியாபாரிகள், விவசாயிகள் என்ற போர்வையில் திரியும் ‘றோ’ சந்தேகநபர்களை பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் முன்னர் விடுத…
-
- 5 replies
- 623 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் :மஹிந்த ஹத்துருசிங்க உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக் கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் இருந்த 11,284 ஏக்கர் காணிகளில் 5,282 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டு ள்ளன. ஐந்து கட்டங்களாக இந்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, 2000 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மிகுதியாக இருக்கும் 6000 ஏக்கர் காணியில் 80 சதவீதமான காணிகளில் அரச காணிகளும், தனியார் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ. நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு பங்கேற்கிறது. இலங்கைக்குழுவிலுள்ள பலர் ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளதோடு, நேற்று சிலர் அங்கு பயணமானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சின் இரு உயரதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை மறுதினம் ஜெனீவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.…
-
- 0 replies
- 326 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என உருவாக்கப்பட்ட இந்திய அரசின் ஆதரவுடனான வீடமைப்புத் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வீடமைப்பு உதவி கிடைக்காத அதேவேளையில், பாதிக்கப்படாத பலர் இதனால் பலனடைவதாகவும் இலங்கைக்கான இந்திய உணர் ஸ்தானிகர் அசோக் கே காந்தாவிடம் வன்னிப் பிரதேசத்தைச் சோந்த நான்கு மாவட்டங்களின் பிரதிநிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, வவுனியா நெல்லி ஹொட்டலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்ற…
-
- 1 reply
- 498 views
-
-
-றிப்தி அலி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவுகளில் பன்றி கறியையும் வழங்கலாம் என கடந்த வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்தே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். அத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேட சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலாக மகஜரொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பன்றி இறைச்சியினால் சமைக்கப்பட்ட கறிகள்இ ஏனைய கறிகளுடன் கலந்த…
-
- 2 replies
- 570 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு பொறுப்புக் கூறவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கை அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சமாதானத்தை நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே தோற்றுவிக்க முடியும் எனவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். உலகத் தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 27ஆம் திகதி …
-
- 2 replies
- 674 views
-
-
மதத் தலங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக கலைஞர் கூறியது பொய் - குடாநாட்டில் இராணுவ அச்சுறுத்தல் இல்லை – டக்ளஸ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போதில்லை ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி அதனை முன்னெடுக்க பாடுபடுகின்ற பலருள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று கச்சதீவில் அவரைச் சந்தித்த இந்திய பத்திரிகையாளர்கள் பலரும் அவரிடம் பிரபாகரனது இருப்பு பற்றி தொடர்ந்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காது தவிர்க்க முற்;பட்ட அமைச்சர் ஒரு கட்டத்தில் இவ்வாறு பதிலளித்தார். அத்துடன் யாழ்.குடாநாட்டின் தற்போதைய மேம்பாடு தொடர்பில் உண்மை நிலவரங்களை அறிய இந்திய ஊடகவியலாளர்களை நேரில் வருகைதருமாறு அவர்; அழைப்பும் விடுத்தார். கச்சதீவு புனித அந்தோனிய…
-
- 5 replies
- 1.1k views
-