Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் பிரதேசசபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள தனது கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி…

  2. நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் யாழில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் இடம்பெற்ற இவ் போராட்டமானது யாழ்.பஸ் நிலையத்தின் முன்பாக முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது. இவ் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், அரசே ஜனநாயகத்தை உறுதி செய்! வெளியேறு வெளியேறு! இராணுவமே வெளியேறு! தாக்காதே தாக்காதே உள்ளூராட்சி தலைவர்களை தாக்காதே! எமது கடல் எமக்கு வேண்டும்! எமது நிலம் எமக்கு வேண்டும்! அரசே ஜனநாயகத்தை சீண்டாதே! எமது நிலம் எனக்கு வேண்டும்! எமது தாயகமே எமக்கு வேண்டும்! மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே! எமது உரிமை எமக்கு வேண்டும்! போன்ற கோசங்கள் மற்றும் பதாதைகளை…

  3. [size=1]பீ பீ சீ [/size][size=1]நிருபர்[/size][size=1] /'Still Counting the Dead' எழுத்தாளர்[/size] Frances Harrison [size=1]நேர்காணல்[/size]

    • 5 replies
    • 942 views
  4. வெளி நாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என மஹிந்த உத்தரவு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:51 இந்த மாதத்தின் அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்தையரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது (23 ஆம் திகதி ஆரம்பமாகிறது) பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளமையால் இவை தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்ளவும் அவற்றுக்கு வாக்களித்து நிறைவேற்றிக் கொள்ளவும் வசதியாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, திவிநெ…

  5. சீனா கட்டிக்கொடுக்கும் விமான நிலையத்தில் முதல் தரையிறங்கியது பாகிஸ்தான் விமானம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:21 அம்பாந்தோட்டையில் சிறிலங்காவுக்கு சீனா கட்டிக்கொடுக்கும் மத்தால அனைத்துலக விமான நிலையத்தில் பாகிஸ்தான் நாட்டு விமானம் முதல் முறையாக தரையிறங்கியுள்ளது. மத்தால விமான நிலையத்தின் ஓடுபாதையில் நேற்று நண்பகல் பாகிஸ்தான் குடியியல் விமானத் திணைக்களத்தின், இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பீச் கிராப்ட் என்று அழைக்கப்படும் சுப்பர் கிங் 20 விமானம் தரையிறங்கியது. பாகிஸ்தான் நாட்டு விமானி செலுத்திய இந்த விமானம் பிற்பகல் 12.45 மணியளவில் மத்தாலவில் இருந்து கட்டுநாயக்கவுக்குப் புறப்பட்டுச் சென்றது. சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் மத்தால விமான …

  6. மன்னாரில் காற்றுடன் கூடிய மழை - வன்னியில் மீள்குடியேறியவர்கள் அவதி 17 அக்டோபர் 2012 மன்னார் பகுதியில் நீண்ட வரட்சியின் பின் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது. இவ்வருடம் ஆரம்பம் தொடக்கம் நாட்டின் வடபகுதிக்கு கிடைக்க வேண்டிய பருவ மழை கிடைக்காத நிலையில் கடும் வரட்சி நிலவிவந்தது. இதன்காரணமாக ஆறுகள், நீர்நிலைகள், கிணறுகள் என்பன நீர் இன்றி பெரும் வரட்சியானதொரு காலநிலையே காணப்பட்டு வந்திருக்கின்றது. இம்மாதம் ஆரம்பம் தொடக்கம் பகல் பொழுதில் கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில் தற்போதைய பருவ மழை நேற்று பிற்பகல் (16.10.2012) இடிமுழக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் தற்போது ஆரம்பித்திருக்கும் பருவ மழையினால் பிரதேசத்தில் …

  7. யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி அரசியல் தீர்வு முன்வைக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல் October 17, 2012 10:03 am இலங்கை இனப்பிரச்சினைக்கு துரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இலங்கை மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த போது பான் கீ மூன் இவ்வாறு கூறியுள்ளார். யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்…

  8. டக்ளஸ் பிடிவிறாந்து வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 18ம் திகதி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த போது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவிறாந்தை ரத்து செய்யக்கோரி, சென்னை 4-வது கூடுதல் செசன்சு நீதிமன்றில் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவில், `தன்னை இணைய வீடியோ மூலம் விசாரித்து, தனக்கு எதிரான பிடிவிறாந்தை ரத்து செய்யவேண்டும்` என்று கூறியிரு…

  9. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர் இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை தடுக்கும் வகையிலான முன்னெடுப்புகளுக்காக அவுஸ்திரேலியாவின் இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். அவர்கள் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அகதிகள் தமது நாட்டுக்கு வருவதை தடுக்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கையின் அதிகாரிகளுடன் நடத்தவுள்ளனர் என்று அவுஸ்திரேலியன் செய்திதாள் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரத்துறை பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் மற்றும் வெளியுறவு பேச்சாளர் ஜூலி பிஸப் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை, இந்தோனிசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோவை சந்தித்தபோது தாம் இருவரும் இலங்கைக்கு செல்லவிருப்பதாக குறிப்பிட்டனர் ஒரு மாதக்காலப்பகுதிக்குள் தமது …

  10. ஐநா அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதமளவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தேசிய இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். அண்மையில் இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் தொழினுட்ப குழுவின் அறிக்கையும் இந்த பேரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் குழுவினர் இலங்கைக்கு வர சந்தர்ப்பம் அளித்தமை தொடர்பில் வசந்த பண்டார தமது கண்டனத்தை வெ…

  11. யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார். இலங்கை ஜனநாயக வரம்புகளை தொடாத ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு. பல இனங்கள் கலந்துவாழும் வளர்ச்சியடைந்துவரும் இத்தகைய நாட்டில் இனங்களின் ஜனத்தொகை என்ற விடயம்தான் இனவுரிமைகளை நடைமுறையில் தீர்மானிக்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நாட்டில் சிங்களவர்கள் 51 % தமிழர்கள் 49 % வாழவில்லை. சிங்கள மக்களின் ஜனத்தொகை 75 % நெருங்கிவிட…

  12. அமெரிக்க வல்லரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல நாடுகளில் மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளில் நோர்வே முதன்மை வகிக்கிறது. பிற நாடுகளின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் இல்லாததினாலும், பல மேற்கத்தைய நாடுகளின் சொல்லைக் கேட்பதினாலும், அபிவிருத்தி அடைந்துவரும் அல்லது அபிவிருத்தி அடையாத நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்கிவரும் நாடு என்பதினாலும் நோர்வேயை அனைவரும் விரும்புகிறார்கள். இதனை நன்கே பாவித்து வருகின்றன சில உலக வல்லரசுகள். இந்த வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நேரடி வேண்டுதலின்பேரில் விடுதலைப்புலிகளுக்கும் மற்றும் சிங்கள அரச தலைமைக்கும் மத்தியஸ்தம் செய்யும் பணி 2000-ஆம் ஆண்டளவில் நோர்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. நோர்வேயும் இதய சு…

  13. [size=4]இந்திய மத்திய உளவுத்துறையான ‘ரா’இந்தியாவின் அயல்நாடுகளில் பேசப்படும் சிங்களம் உட்பட்ட மொழிகள் தெரிந்தவர்களை உளவுத்துறையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது, அயல்நாட்டு மொழி அறிவுடைய மிக சிலரே ரா உளவுத்துறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களம் (இலங்கை), பாஸ்தோ ( ஆப்கான் ), தாரி ( ஆப்கான் மற்றும் ஈரானில் சில பகுதிகள்), மியான்மாரி ( மியான்மார்), மான்டரின், கான்டனீஸ் ( சீனா) ஆகிய மொழிகளை அறிந்தவர்கள் ரா அமைப்பில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள் என தெரியவருகிறது.[/size] [size=4]இவர்களில் சிங்களம் தெரிந்தவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிலும், மற்றைய மொழி அறிந்த வர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் நியமனம் செய்யப் படவு…

  14. மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தில் பிரதேசச் செயலாளரும், அயல் கிராம அலுவலரும் இணைந்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேவன் பிட்டி, பாலியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேளாண்மைச் செய்கைக்காக ஓர் ஏக்கர் வீதம் வழங்குவதற்கு உலக உணவுத்திட்ட செயலகத்தின் மூலம் காடுகள் துப்புரவாக்கி மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். குறித்த மீள் குடியேற்றத்தின் பின்னர் பல முறை அரச அதிகாரிகளி…

  15. முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய இன்றைய இலங்கைத் தீவின் சூழலில் ஈழத்தமிழர்களின் நிலையான இருப்புக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென கனேடிய எதிர்கட்சிப் பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிட்சபைஈசன் பிரதான எதிக்கட்சியான NDP கட்சியின் வெளிவிவகார விமர்சகர் Paul Dewar மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Dan Harris MP for Sc. Southwest- NDP ஆகியோர் கனேடியத் தமிழர் அமைப்புகளுடனான சந்திபொன்றினை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பில் பங்கெடுத்துக் கொண்ட பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மேற்குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர். ச…

  16. சரத் பொன்சேகாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் 60 ரூபாய் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவாரப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறையில் சரத் பொன்சேகா இருந்த போது, அங்குள்ள அழுக்குதுணிகளை துவைக்கும் பிரிவில் பொன்சேகா ஒருநாள் பணியாற்றியுள்ளார். அதற்கு 60 ரூபாய் வேதனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனையும் சிறைச்சாலை அதிகாரிகள் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாதாரண 60 ரூபாய் கட்டணத்தை வழங்க முடியாதுள்ள அரசாங்கம், எவ்வாறு மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் எ…

  17. [size=4]மீண்டும் ஏமாற்ற மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வாக்குறுதி அளிப்பாரேயானால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் செல்லத் தயாராக இருப்பதாக புதுடெல்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தில் இருந்து மீண்டும் ஏமாறத் தயாரில்லை என்ற கருத்து உறுதியாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, தெளிவான உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இருந்து பெற்றுக்கொள்ளாமல், தெரிவுக்குழுவுக்குச் சென்று தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னர் தான் அவர் இவ்வாறு கூறியிருந்தார். இது இலங்கை அரசுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்றே கருதலாம். ஏ…

  18. வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது களநிலைமைகளை உளவு பார்ப்பதற்காகத் தமது அமைப்பு சுமார் 300 பேரை நியமித்திருந்ததாகவும் இவர்களில் 95 சதவீதமானோர் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களே என்றும் கெயார் அமைப்பின் முக்கியஸ்தரான நீல்ஸ் மோர்சஸ் தெரிவித்துள்ளார் என திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு வன்னி யுத்த நடவடிக்கைகளை உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களுக்கு செய்மதி தொலைத்தொடர்புக் கருவிகளும் வழங்கப்பட்டிருந்தன. அவர்களால் வழஙகப்படும் தகவல்களைச் சேகரித்துக் கொள்ளும் வகையில் இந்த அமைப்பின் முக்கிய அதிகாரி இலங்கையில் செயற்பட்டார். நோர்வேயைச் சேர்ந்த கெயார் அமைப்பின் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்டவரே நீல்ஸ் மோர்சஸ் என்றும் இந்த விவகாரம் அமெரிக்க ராஜாங்கத் திணைக…

  19. [size=2] [size=4]கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வட மாகாண சபையின் ஆளுனரால் வெளியிடப்படும் கருத்துகள் அந்த மாகாண சபையினால் வெளியிடப்படும் உண்மையான கருத்துகளாகுமா என்பது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் பரிசீலனைக்கு எடுக்கும்.[/size][/size] [size=2] [size=4]அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானம் கோரப்பட்ட மேன் முறையீட்டு நீதிமன்ற ரீட் மனுவையே ஒக்டோபர் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தீர்மானித்தது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதியரசர்கள் கே. ஸ்ரீபவான், சந்திரா எக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று எடுக்கப்பட்ட போதே பரிசீலனைக்கு எடுக…

  20. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றய தினம் திங்கட்கிழமை(15-10-2012) அன்று இடம்பெயா்ந்துள்ள கேப்பாபிலவு மக்கள் அவா்களது விருப்பத்திற்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சீனியாமோட்டை பகுதிக்குச் சென்றிருந்தனா். அங்கு தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த வறிய மாணவா்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கல்வி உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது. அத்துடன் அங்கவீனமடைந்தவா்கள் உட்பட போரால் பாதிக்கப்பட்டவா்களில் ஒருபகுதியினருக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபதலைவா்களில் ஒருவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவருமான இ.எ.ஆனந்தராஐா, தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இளைஞா் அணித் தலைவா் இ.கிருபாகரன…

  21. வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கலாகாது என்ற அறிவித்தலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. …

  22. அண்மையில் இடம் பெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் சார்பில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டார். அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. வழமையாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தவறாது பங்குபற்றும் ஜனாதிபதி இந்த முறை அதனைத் தவிர்த்ததேன்? என்ற கேள்வி பலரது மனதைக் குடையும் ஒன்றாக அமைந்தது. இலங்கை ஒரு சிறிய நாடான போதிலும், உலகின் எந்தவொரு வல்லரசுக்கும் முன்னால் தலை தாழ்த்த மாட்டாது என்பதை வெளிப்படுத்தவே ஜனாதிபதி மஹிந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு முன்னர் தாம் பங்கேற்ற சகல பொதுச் சபைக் கூட்டத் தொடரிலும் ஜனாதிபதி இதனையே மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளார். …

  23. [size=4]தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவிடம் போய் முறையிட்டு எந்தப் பயனும் இல்லை, இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்று கொக்கரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்குச் சென்று இந்திய அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியாவிற்கு சென்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தியாவிடம் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட…

  24. இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மாறிவரும் அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது. இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது. இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எ…

  25. சிறிலங்கா அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் ஒன்றை நிர்மாணிக்க உதவிகளை வழங்கவுள்ளது. இந்தக் கலாசார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் சுமார் 900 மில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசுக்கு வழங்கவுள்ளது. 600 பேர் அமரக் கூடியதான கேட்போர் கூடம், அங்கவீனர்களுக்கான நூல் நிலையம். தொல்பொருட் காட்சியகம் ஆகியனவற்றைக் கொண்டதாக இந்தக் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படும். தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஒரு கலாசார மையமாகவே இது செயற்படும் என அறிவிக்கப்படுகிறது. http://thaaitamil.com/?p=35356

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.