ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=2] [size=3]ஐ.நா.வின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய இலங்கை அரசாங்கம், இப்போது தன்னுடைய நிலைப்பாட்டைப் பெருமளவுக்கு மாற்றிக்கொண்டுவிட்டது. ஐ.நா.வின் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்பட்டுள்ள ஒரு நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், இது உண்மையா அல்லது எதிர்வரும் நவம்பரில் ஜெனீவாவில் எதிர்கொள்ளப்போகும் அடுத்த கட்டத் தடையை எதிர்கொள்வதற்கான உபாயமா என்பதுதான் இன்று எழும் கேள்வியாகவுள்ளது.[/size][/size] [size=2] [size=3]ஐ.நா. விவகாரத்தில் இணங்கிப்போகும் உபாயத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கு அரசாங்கம் வகுத்துள்ள செயற்திட்டம் எந்தளவுக்…
-
- 0 replies
- 602 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நவம்பர் 26ம் நாளை மலேசியா வாழ் தமிழீழ அகதிகளுக்கு உதவி வழங்கும் நாளாகக் கொண்டாடப் போவதாகப் பிரபல தொழிலதிபர் வேல்முருகன் தனது பிறந்த நாள் விழாவில் தெரிவித்தார். அவருடைய பிறந்த நாள் விழா மலேசியாவின் பூச்சொங் மாநிலத்தில் ஆகஸ்து 18ம் நாள் சனிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மலேசியாவில் வாழும் தமிழீழ அகதிக் குடும்களில் நூறு குடும்பங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டன. மலேசியாவில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ அகதிகள் வாழ்கின்றனர். இவர்களில் இரண்டாயிரம் பேர் மாத்திரம் மலேசியா வாழ் தமிழீழ அகதிகள் அமைப்பில் தமது பெயர் மற்றும் குடும்ப விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்குப் பொருளாதார ரீதியில் மேம்பாடு …
-
- 1 reply
- 564 views
-
-
பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுபட்டு இந்திய நாடு உருவானதன் அறுபத்தைந்தாவது வருட நிறைவு இவ்வாரம் கொண்டாடப்பட்டது. இவ்வேளையில் தற்கால இந்தியா பற்றிய பல ஆய்வுகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாயிருந்தன. இந்த ஆய்வுகளில் மோகன்தாஸ் காந்தியின் கனவுத்திட்டமான ‘கிராம சுயராஜ்ஜியம்’இ; அதனிலிருந்து விலகிய சந்தைப்பொருளாதாரத்தை ஒட்டிய நேருவின் கொள்கைகள், இந்திய அரசின் தற்போதைய வல்லாதிக்கக் கனவு, பொருளாதாரம் என பல்வேறு விடயங்களை ஒட்டியிருந்ததைக் அவதானிக்க முடிந்தது. இவற்றுள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை பற்றிய கருத்துகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தியாவிடம் குறித்துச் சொல்லக்கூடியதான வெளிவிவகாரக் கொள்கை இல்லாமலிருப்பது இதற்கான காரணமாக அமைந்திருக்கலாம். பல்வேறு போதாமைக…
-
- 1 reply
- 828 views
-
-
தமிழ் மக்கள் ஈழக் கனவோடுதான் இன்னும் வாழ்கின்றார்கள்; விக்ரமபாகு கருணாரத்ண தெரிவிப்பு தமிழ் ஈழம் அழியவில்லை. அது அங்கேதான் உள்ளது. அது தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழ் ஈழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ட தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான சுய உரிமையோடு ஒன்றி வாழலாம் என்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் விருப்பப்பட்டார். ஆனால், சிங்கள இன வெறியர்கள் அதனை ஏற்கவில்லை. வருங்காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழலாம் என்று தமிழ் மக்கள் எண்ணினால் வாழலாம். இல்லாவிட்டால், அவர்களுக்கான சுய உரிமை கொண்ட தேசத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தம…
-
- 2 replies
- 507 views
-
-
வேலூர் சிறையிலிருந்து தப்பித்த விடுதலைப் புலிகளை நான் தான் அனுப்பிவைத்தேன் - வைகோவின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு! [sunday, 2012-08-19 10:02:31] வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைத…
-
- 13 replies
- 1.9k views
-
-
[size=4]மட்டக்களப்பு நகரில் உள்ள ஈரோஸ் கட்சி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.[/size] [size=4]இதன்போது ஈரோஸ் தலைவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தலைமை வேட்பாளருமான பிரபாகரனின் வாகனம் அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.[/size] [size=4]தோல்வியை எதிர்நோக்கி இருக்கும் பிள்ளையான் [/size][size=3][size=4]குழுவே [/size][size=4]இத்தாக்குதலை நடத்தியதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.[/size][/size] http://www.thinakkathir.com/?p=40436
-
- 3 replies
- 882 views
-
-
19 ஆகஸ்ட் 2012 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்படப் போகும் நிலப் பகுதியில் பலாலியைச் சுற்றி மேலும் பல நிரந்தரப் படை முகாம்கள் அமைக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதனால் காணிகளை இழக்கப்போகும் தமிழ்…
-
- 0 replies
- 588 views
-
-
[size=4]சிறிலங்கா செல்லும் தமது குடிமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட அறிக்கை சிறிலங்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள தொனி மற்றும் நேரம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தேசியவாத எழுச்சி, மேற்குலக எதிர்ப்பு, பாலியல் குற்றங்கள் என்பன அதிகரித்திருப்பதாகவும் இதனால், தமது குடிமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம், வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. “இதுகுறித்து நாம் கவ…
-
- 1 reply
- 440 views
-
-
[size=2][size=4] இந்தியாவின் கபிலவஸ்துவிலிருந்த புத்தர் பெருமானின் புனித சின்னங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற வைபவமென்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்புனிதச் சின்னங்களை பொறுப்பேற்றார். இந்திய விமானப்படையின் விசேட விமானமொன்றின் மூலம் இச்சின்னங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்திய கலாசார அமைச்சர் குமாரி சேல்ஜா இவற்றை கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டிற்குப்பின் இவை இலங்கைக்கு கொண்டுவரப்படுவது இதுவே முதல் தடவையாகும். இப்புனிதச் சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் கௌத்தம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்களில் உள்ள பௌத்த பிக்குகள் டில்லி விம…
-
- 1 reply
- 397 views
-
-
[size=5]வரட்சியின் தாக்கத்தால்...[/size] [size=2][size=4] மன்னார், கட்டுக்கரைக்குளம் வரட்சி காரணமாக வற்றிவருகின்றமையால் அக்குளத்திலுள்ள மீன்கள் தற்போது உயிரிழக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன், கட்டுகரைக்குளத்திலிருந்து ஏனைய குளங்கள் மற்றும் கால்வாய்களுக்கு செல்லுகின்ற நீரும் தற்போது குறைவடைந்துள்ளமையால்; அக்குளங்கள் மற்றும் கால்வாய்களிலுள்ள மீனினங்களும் உயிரிழக்கின்றன. இதன் காரணமாக அங்கு பாரிய துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்துள்ள மீன்கள் கரையொதுங்கியுள்ளதை படங்களில் காணலாம். (எஸ்.ஜெனி) [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...9-03-50-07.html[/size][/size]
-
- 1 reply
- 360 views
-
-
[size=2][size=4][/size][/size] [size=2](கே.என்.முனாஷா)[/size] [size=2][size=4]நீர்கொழும்பு, ஏத்துக்கால கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குளிப்பதற்காகச் சென்ற இரு ரஷ்யப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸார் தெரிவித்தனர். ரஷ்யப் பிரஜைகளான 54 வயதுடைய ஆண் ஒருவரும் 28 வயதுடைய பெண் ஒருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...9-08-02-35.html[/size][/size]
-
- 0 replies
- 341 views
-
-
[size=3] பாரிசில் வெப்ப அலை காரணமாக காற்று மாசடைந்துள்ளது 2003 ம் அண்டு பிரான்சை தாக்கிய வெப்ப அலையில்[size=4](canicule)[/size]14800 பேர் உயிரிந்த சம்பவத்தை பிரெஞ்சு மக்கள் இன்னமும் மறக்காத நிலையில் தற்போது அதையொத்த வெப்ப அலை பிரான்சை தாக்கியுள்ளது.[/size][size=3] பிரான்சின் 33 மாவட்டங்களில் ஒரேஞ்சு நிற அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அதிலும் 21 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை மிக அதிகரித்து 40°பாகை செல்சியசுக்கு மேல் செல்லும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாரிசிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று இந்த வெப்ப அலை காரணமாக காற்றுமாசடடைந்து[size=4][size=4]([/size][size=4]pollution)[/size][/size]காணப்படும் என்றும் இதனால் உடலில் தாங்க முடியாத சூடும் சுவாச நோய்களும…
-
- 0 replies
- 574 views
-
-
[size=4]தென்னாபிரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்புக் குறித்து தாம் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆராயவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் எப்ராகிம் எப்ராகிம் தலைமையிலான உயர்மட்டக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க குழு கொழும்பு வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவை முதலில் சந்தித்துப் பேசியது.…
-
- 0 replies
- 291 views
-
-
[size=4][/size] [size=4]சிங்கள செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கைக்கான கனேடியத் தூதர் புரூஸ் லீவி புதுவகையான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் - அதில் .. இலங்கைக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா எனத் தெரிவித்த அவர், அங்கே பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிப்பது அனுமதிகப்படமாட்டாது என்று தெரிவித்தார்.[/size] [size=4]அது வழமையான ஒரு கருத்து. மற்றும் கனடா அதனை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கை இரண்டாகப் பிரிவதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்த…
-
- 8 replies
- 822 views
-
-
டெல்லி: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கிய நிதி தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக எஸ்.எம். கிருஷ்ணா அளித்த பதில்: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காகக் அந்நாட்டுக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ. 68.96 கோடி, 2010-11-ம் நிதியாண்டில் ரூ. 93.86 கோடி, 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 181.94 கோடி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியில் ரேஷன் பொருள்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் தாற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. மருந்துகள் வழங்கப்…
-
- 1 reply
- 372 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி ஆகிய அரசியல்வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தி, வெளியிட்டு வரும் கருத்துக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பல தரப்பினர், இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி விட்டு, வாக்குகளை பெற முயற்சித்து வரும் விதத்தை காணமுடிகிறது. முக்கியமாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆசாத் சாலி போன்ற அரசியல்வாதிகள் முஸ்லிம் அடிப்படைவாதத்தை மாகாணத்திற்கு பரப்பி வருகின்றனர். இவற்றை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்…
-
- 4 replies
- 470 views
-
-
[size=2] [size=4](எஸ்.கே.பிரசாத், ஜே. டானியல்) யாழ்ப்பாணத்த்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் சங்கீதத்தை வளர்ப்பதற்கு பயிற்சி நிலையம் ஒன்று அமைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக கர்நாடக சங்கீத வித்துவானும் பிரபல திரைப்பட பின்னணி பாடகருமான பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். "தென்னிந்தியாவில் என்ன கலாச்சாரம் பின்பற்றப்டுகின்றதோ அத்தகைய கலாசாரம் தான் இங்கும் பின்பற்றுகின்றார்கள் ஒரு குறிப்பட்ட காலத்தில் இரண்டுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. இதனை மீளவும் புதுப்பிப்பதற்கான நடவடி…
-
- 3 replies
- 765 views
-
-
[size=4]ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளதாகவும் நாளை ஞாயிறுக்கிழமை நோன்பு பெருநாளை அனைத்து முஸ்லிம்களும் கொண்டாட முடியும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து நாளை பெருநாள் கொண்டாட முடியும் என அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சர்வதேசப்பிறை அடிப்படையில் 30 நோன்புகளையும் பூர்த்தி செய்து புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=216
-
- 8 replies
- 1.1k views
-
-
9 கிராம அலுவலர் பிரிவுகள் வலி.வடக்கில் பறிபோகும் நிரந்தரமாக ஆக்கிரமிக்க இராணுவம் திட்டம் முன்னதாக 12 பிரிவுகளை விடுவிக்கவும் முயற்சி வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றனர் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிகின்றது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்படப் போகும் நிலப் பகுதியில் பலாலியைச் சுற்றி மேலும் பல நிரந்தரப் படை முகாம்கள் அமைக்கப்படும் என்று பாதுகாப்ப…
-
- 0 replies
- 339 views
-
-
[size=4]ஒரு பக்கம் கலைஞர் டெசோ வெற்றிக்கரமாக நடந்த முடிந்தது என கலைஞர் முரசு கொட்ட, மறுப்பக்கம் தமிழ் அமைப்புகள் எல்லாம் ஒரே கொதிப்போடு தமிழகமெங்கும் கூட்டம் போட்டு கருணாநிதியை வாட்டு வறுத்தெடுக்கின்றன. கருணாநிதியின் நிலையில்லாத பேச்சை திமுக தொண்டர்களே விமர்சிப்பதும் நடக்கின்றன. இத்தகைய தகிப்புகளுக்கிடையே நாம் தமிழர் கட்சி ஆகஸ்ட் 17 ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், 'ஈழம் அரசியல் அல்ல..! அவசியம் ! ’என டெசோ எதிர்ப்பு கூட்டத்தை, கொட்டும் மழையென பாராமல் நடத்தி முடித்தது.[/size] [size=4]நாம் தமிழர் கட்சியின் சேப்பாக்க பகுதி செயலாளர் சிவக்குமார்[/size] [size=4]" சொந்த தொகுதி மக்கள் எங்களையே காப்பாற்றாத கலைஞரா ? ஈழ மக்களை காப்பாற்ற போகிறார்.சுதந்…
-
- 3 replies
- 804 views
-
-
ஒபாமாவுக்கும் சோனியாவுக்கும் சொந்தமானதல்ல வடக்கு - கிழக்கு தேசப்பற்று இயக்கம் சீற்றம் வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை அந்நிய சக்திகளுக்கு மீண்டுமொரு தடவை தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், நாட்டின் இறையாண்மையைக் கூறுபோடுவதற்கு இடமளியோம் என்றும் சூளுரைத்துள்ளது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அரசு, நாட்டுக்குப் பொருந்தாததை ஒருபோதும் செய்யக்கூடாது என்று தேசிய அமைப் புகளின் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: "டெசோ' என்ற பிரிவினைவாத அமைப்பால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை…
-
- 6 replies
- 753 views
-
-
சிறிலங்காவில் உள்ள சிறைகளில் இடம்பெறும் மிகமோசமான வன்முறைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடவேண்டும் என்று சிறிலங்காவில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். சிறிலங்கா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகளின் மரணத்தைத் தொடர்ந்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் வரை கோமாவில் இருந்த சிறைக் கைதி ஒருவர் கடந்த வாரம் மரணமடைந்திருந்தார். அண்மைய மாதங்களில் சாவைத் தழுவிக் கொண்ட இரண்டாவது சிறைக் கைதி இவராவார். இவ்விரு சாவுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் இதற்கான பொறுப்பை ஏற்க சிறிலங்கா அரசாங்…
-
- 1 reply
- 498 views
-
-
[size=6]http://ttnnews.com/35481.html[/size] பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்) பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது. மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது. போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந…
-
- 27 replies
- 6.4k views
-
-
[size=4]ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்பவில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் ௭ன தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகைய…
-
- 4 replies
- 583 views
-
-
வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான படையினர் நிலைகொண்டுள்ளநிலையில் மிக குறைந்தளவு மக்களே அங்கு வாழ்ந்துவருகின்றார்கள் எங்கு பார்த்தாலும் படைமுகாம்களும் காவலரண்களும் இவற்றிற்கு மத்தியில் அரச இயந்திரங்களின் செயற்பாட்டினை தீர்மானிக்கும் சக்தியாக அங்குள்ள படையினரே காணப்படுகின்றார்கள். எங்கு பார்த்தாலும் பாடசாலை நிகழ்வாக இருந்தாலும்,கோவில் நிகழ்வாக இருந்தாலும் அங்கு படையினரின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகின்றது இதில் பெருமளவான மக்களின்காணிகள் படையினரின் வசம் காணப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மக்களே போரின் போது அதிகளவான உயிர் இழப்பினையும் சொத்திழப்பினையும் எதிர்கொண்டு இன்னும் மீள்குடியேறாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தற்போது குறிப்பாக மு…
-
- 2 replies
- 668 views
-