ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மையுடன் கூடிய விடுதலைக்காக 2006 இல் இருந்து செயற்படும் பிரித்தானிய தமிழர் பேரவை 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்னரும் பின்னரும் பிரித்தானிய தமிழ் மக்களை அணிதிரட்டி தாயக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருகிறது. குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் பிரித்தானிய தமிழ் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சி மிக்க கூட்டங்கள், ஊர்வலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்தது. 2009 மே முள்ளிவாய்க்காலின் பின்னர் பிரித்தானிய தமிழ் மக்களை தட்டியெழுப்பி சோர்வடையாது செயற்பட்டுவருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்துவை…
-
- 0 replies
- 553 views
-
-
நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர். எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலை…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (20-04-2012) மாலை Geelong தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப்பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார். நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள் …
-
- 4 replies
- 734 views
-
-
ஈழத்தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. தனி ஈழம் அமைப்பதற்கு ஐ.நா தலையீட்டுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்து, கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தனித் தமிழீழம் விடுதலைப் பாடலாக ஒலிக்கிறது. சிறிலங்காவில் தமிழர்கள் சிந்திய குருதியும் செய்த உயிர்த் தியாகங்களும் வீண் போகாது. நாளை இல்லாது போனாலும்,தமிழீழம் ஒரு நாள் உருவாகும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://w…
-
- 8 replies
- 1.3k views
-
-
தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை பொலிஸாரினால் மீண்டும் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் முஸ்லிம் மீடியா போரம் தலைவருமான என்.எம். அமீன் ஆகியோர் கொண்ட குழு இன்று காலை இப்பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களையும் சந்தித்து பேசினர். இக்குழுவினர் பள்ளிவாசலை அடையும் முன்னர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு தூய்மையாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக என்.எம்.அமீன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். தம்புள்ளையில் வசிக்கும் பல்லின மக்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றும் பள்ளிவாச…
-
- 6 replies
- 913 views
-
-
இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும். களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் …
-
- 6 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான். ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தமிழகத்தில் ஓங்கிக் குரல் கொடுக்கும் ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஆரம்பத்திலேயே இந்தக் குழுவில் இல்லை. அடுத்து அ.தி.மு.க. விலகிக்கொள்ள, தி.மு.க-வும் பின்னர் வெளியேறியது. அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியும் விலகிக்கொண்டன. இந்த நிலையில், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட குழ…
-
- 2 replies
- 519 views
-
-
இலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்ற கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்க முடியாது. நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. நாம் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கை வந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர். அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்தியாவுக்…
-
- 3 replies
- 956 views
-
-
மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மூன்று லட்சம் பேர் இருந்தனர். இப்போது 6000 பேர் மாத்திரமே உள்ளனர். அப்போது வடபகுதி மக்களிடையே தங்கள் எதிர்காலம் குறித்து அச்ச உணர்வு காணப்பட்டது. இப்போது அவர்கள் ஓரளவு சுதந்திரமாக உணர்கிறார்கள். எனினும் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புவதை உணர முடிந்தது' என தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் கொழும்பில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இந்திய நாடாளுமன்றத் தூது வட பகுதிக்கு சென்றபோது அவதா…
-
- 0 replies
- 577 views
-
-
யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழர் பிரச்சினைக்கு இதுவரையில் காத்திரமான தீர்வுத் திட்டங்கள்எதுவும் முன்வைக்கப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜீ.ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட்டு பூரண சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட அலகு ஒன்றை உருவாக்குதல் மற்றும் உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் . இலங்கையில் பலவருட காலமாக நிலவிவரும் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் பொறிமுறையில் திராவ…
-
- 0 replies
- 594 views
-
-
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய எம்.பி.க்கள் குழு, எம்மை ஏன் சந்திக்கவில்லை என்று காணாமற் போனோரை தேடியறியும் குழு, கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'காணாமல் போனோர் தொடர்பான விடயமே தமிழ் மக்களை வாட்டி வதைக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இன்று உள்ளது. எந்தவொரு தூதுக்குழுவினரிடமும் மக்கள் அதனையே கேட்கின்றனர். தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவிடமும், காணாமல் போன தமது உறவுகளையே அம்மக்கள் கேட்டுள்ளனர். காணாமல் போனோரை தேடியறியும் குழு, காணாமல் போனவர்கள் தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எம்மிடம் 5000க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர…
-
- 0 replies
- 460 views
-
-
என்ன மோனே!... இந்தியக் குழுவால ஏதேனும்... இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்திய நாடாளுமன்றக் குழு அந் நாட்டு எதிர்க் கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ளது. இலங்கை வந்த அந்தக் குழு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கும் வந்தி ருந்தது. யாழ்ப்பாணம் வந்த குழுவிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட சமூகப்பிரதிநிதிகள் நிலைமையைக் கூறினர். இந்தியக் குழு யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள தென்பதை அறிந்த பழம்.பண்டிதர் ஒருவர் இந்தியக் குழுவை சந்தித்த ஒரு அன்பரைப்பார்த்து என்னமோனே! இலங்கை வந்துள்ள இந்தியக் குழுவால் எங்களுக்கு ஏதேனும் விமோசனம் கிடைக்குமோ என்று வினவினார். அதற்கு அந்த அன்பர் " கண்டதால் இன்பம் கதைத்தால் பேரின்பம்" அவ்வள…
-
- 3 replies
- 886 views
-
-
ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி] Published By பெரியார்தளம் On Friday, April 20th 2012. Under காணொளி, சென்னை, பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று (20.04.2012) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார். http://www.periyarthalam.com/2012/04/20/eelam-ta…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பயணம் செய்த உலங்குவானூர்தி இன்று பிற்பகல் மின்னேரியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மாலை சிறிலங்கா அதிபருடன் இடம்பெறவிருந்த சந்திப்பு நாளை காலைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றுகாலை ஹற்றனுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கு தமது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்குப் புறப்பட்டனர். கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக தொடர்ந்து பறக்கமுடியாமல் மின்னேரியாவில் அவசரமாகத் தரையிரக்கப்பட்டது.…
-
- 6 replies
- 879 views
-
-
சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.saritham.com/?p=57286
-
- 20 replies
- 2.1k views
-
-
டக்ளஸ் தேவானந்தா. அதே போல கடந்த கால எமது அரசியல் வாதிகள் போன்று தூண்டிவிட்டு இடைநடுவில் கைவிட்டு ஓடிவரப்போகின்ற ஆளுமல்ல.நானே எமது மீனவர்களுக்கு தலைமை தாங்கி தமிழ் நாட்டிற்குப் போகப்போகின்றேன் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா. வடமராட்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கடற்பகுதிகளிலிருந்து ஆயிரம் படகுகளில் ஜயாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அறிவிப்பையடுத்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஈ.பி.டி.பி தலைமையகமான சிறீதர் திரையரங்கில்; நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே …
-
- 0 replies
- 1.9k views
-
-
மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு – பிள்ளையான். இந்தியாவின் ஒத்துழைப்பினால் 1987 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அமைய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கிடைக் இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன் இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது. இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரை குறித்த இந்திய நாடாளுமன்றக்குழு சந்தித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த சந்திப்பின் ப…
-
- 4 replies
- 519 views
-
-
ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவித…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக, எம்எஸ்டி எனப்படும் சிறிலங்காவின் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவு ஐதேகவுக்கு எச்சரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் இம்முறை கூட்டு மே நாள் நிகழ்வுகளை நடத்த ஐதேக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கூட்டு மே நாள் நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை. கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து உருவாகாத நிலையில், இதுதொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால் ஐதேக யாழ்ப்பாணத்தில் இம்முறை மே நாள் நிகழ்வுகளை நடத்தும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தநிலையிலேயே, விடுதலைப் புலிகளால் முக்கிய பிரமுகர்களுக்கு அச்…
-
- 3 replies
- 710 views
-
-
பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு விவகார அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய நாடாமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாய்ன் மெக்டொனாக் கேள்வி எழுப்பியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் அது போர்க் குற்றவாளிகளை சகித்துக்கொள்ளவதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்கு பங்கமாகிவிடும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி எம்பியான மெக்டொனாக் வியாழனன்று கூறினார். மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த குறிப்பொன்று 3 மாதங்களுக்குமுன் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவ…
-
- 0 replies
- 877 views
-
-
போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் குறித்தான விவகாரம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timms அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்விவகாரத்தினை எழுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 1ம் நாள் லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுருந்த பொதுக்கூட்டமொன்றில் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்து சர்வதேச நெருக்கடிக்கான குழுவினால் வெளியிடப்பட்ட ஆய்வற்றிகையினை மைப்படுத்தி நா.த.அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகாரங்களுக்கா…
-
- 0 replies
- 977 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது மட்டக்களப்பு விமானப்படையின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த ஆலையடிச்சோலை பொதுமயானத்துக்கு அருகில் செல்லும் வீதி விமானப் படையினரால் திறக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் புத்தூர் விமானப்படைத்தள விரிவாக்கத்தின் போது ஆலையடிச்சோலை பொதுமயானம் உட்பட சில குடியிருப்புக்களும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்வாங்கப்பட்டன. குறித்த பொதுமயானம் விமானப்படையினரால் பொது மக்கள் பாவனைக்காக அண்மையில் கையளித்திருந்த போதிலும் மக்கள் பூதவுடல்களை நல்லடக்கத்திற்காக அங்கு கொண்டு செல்வதற்கான மாற்றுப் பாதை ஒன்றே வழங்கப்பட்டுவந்தது. இந்தப்பா…
-
- 0 replies
- 725 views
-
-
தம்புள்ளையில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிராக இமானுவேல் சுமங்கள தேரரை மகிந்த ராஜபக்ஷ தூண்டிவிட்டுள்ளதாக தெரியவருகிறது. மகிந்தரின் ஆலோசனையின் பேரிலேயே பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு இனுமானுவேல் தேரர் தீர்மானித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அரசாங்கத்தின் முழுமையான வளத்தைப் பயன்படுத்துமாறும் மாத்தளை மாவட்ட பிரேச செயலாளருக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. \ இமானுவேல் சுமங்கள தேரர் மகிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமானவர் என்பதுடன், அரசாங்கத்திலிருந்து பல்வேறு சலுகைகளையும் சுமங்கள தேரர் பெற்று வருகிறார். ஜனாதிபதியின் விசேட வரப்பிரசாதத்தின் கீழ் தேரருக்கு தொலைக்காட்சி, …
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்ற ஆணித்தரமான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம்மீது பிரயோகிக்காத இந்தியப் பாராளுமன்றக் குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப் பயணமாகுமென விமர்சிக்கும் நவ சம சமாஜக் கட்சி, ஆதிவாசிகளைப் பார்வையிடுவது போன்று தமிழ் மக்களை இக்குழு பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், இந்திய, இலங்கை உடன்படிக்கை 1987 இல் கையெழுத்திட்டு அதன் மூலமே 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்களையோ அரசியல் தீர்வையோ வழங்கவில்லை. அதேபோன்று யுத்தம் முடிந்து 3 …
-
- 0 replies
- 853 views
-
-
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசு, அவர்களை வெறுங்கையுடனேயே நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.இதனால் கொதிப்படைந்த சன் ரி.வி. செய்தியாளர்கள் விமானநிலைய சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை பயணம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன் டி.வியின் செய்தியாளர்கள் சிலர் இலங்கை வந்தனர். இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரனி…
-
- 8 replies
- 1.6k views
-