ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
அதிகாரங்கள் இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி…
-
- 7 replies
- 681 views
-
-
இந்திய நாடாளுமன்றக்குழு இன்று காலை 10 மணிக்கு வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினர். எனினும் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் சென்றதால் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உலங்குவானூர்தி மூலம் வவுனியாவுக்கு சென்ற அவர்களுடன் மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் வன்னிக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுனந்த பெரேரா உட்பட சிறிலங்கா அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் என பெருந்தொகையானோர் மெனிக்பாம் முகாமுக்கு சென்றனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நலன்பு…
-
- 5 replies
- 1.3k views
-
-
'13+' உறுதியளித்து 3 வருடங்கள்! டிட்டோ குகன் பொருளாதார அபிவிருத்தி போன்றே வட மாகாண சபைத் தேர்தல் உட்பட அரசியல் ரீதியான மேம்பாடும் மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ள இந்தியத் தூதுக் குழுவினர் இலங்கை அரசு பெற்றெடுத்த குழந்தையான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கொழும்பு முழுமையாக அமுல்படுத்துமென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 13+ வழங்கத் தயாரென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அது தொடர்பான முன்நகர்வு எதனையும் பார்க்க முடியவில்லையே என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார். எதிர்க்கட்சித்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ந.ஜெயகாந்தன் இந்தோனேஷியாவை அண்மித்த பகுதியில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 10 கோபுரங்கள் செயற்படாதிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்றைய தினம் கடல்கோள் எச்சரிக்கைக் கோபுரங்கள் செயற்படவில்லை என கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்து குறித்த 10 கோபுரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நாட்டின் கரையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள 74 கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 64 கோபுரங்கள் உரிய முறையில் செயற்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவற்றில் 5 கோபுரங்கள் ஏற்கனவே செயலிழந்துள்ளதாகவும் மற்றைய 5 கோபுரங்களும் தொழில்நுட…
-
- 0 replies
- 667 views
-
-
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான அறிக்கை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் சரியானவையா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஏப்ரல் மாதம் 8.4 வீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம், டிசம்பர் மாதம் 4.9 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், இது எவ்வாறு கணிப்பீடு செய்யப்பட்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொருளியல் நிபுணருமான ஏரான் விக்ரமரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏனைய குறிகாட்டிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தொடர்பிலும் சில சந்தேகங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டிக் கணிப்பீடு செய…
-
- 1 reply
- 619 views
-
-
இனப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதில் பயன் இல்லை: சுஷ்மா சுவராஜ் இலங்கையில் இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வை ஒதுக்கிவைத்துவிட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வரவேண்டும் என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமைதாங்கி இலங்கை வந்துள்ள சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். கூட்டு அரசினால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றோ, பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவோ காரணங்களை கூறி அரசியல் தீர்வை தாமதிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகள் அரசியல் தீர்வுக்கு சிறந்த சூழலாக அமைந்திருந்தன. எனினும் அந்த வாய்…
-
- 2 replies
- 810 views
-
-
காணாமற்போன இளைஞன் சடலமாகக் கண்டுபிடிப்பு யாழ். வடமராட்சிப் பகுதியில் காணாமற்போன இளைஞன் பற்றை ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 13ம் திகதி புத்தாண்டில் அன்று மாலை 6 மணிக்கு தனது உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற குறித்த இளைஞன் மறுநாள் வரை வீடு திரும்பாமையை அடுத்து அவர் காணாமல்போனதாக, வல்வெட்டித்துறை காவற்றுறை நிலையத்தில் இளைஞனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இளைஞன், இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றரில் உள்ள ஒரு பற்றைக்குள் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார். கெருடாவில் தொண்டமனாற்றைச் சேர்ந்த சிவலிங்கம் சிவகுமார் என்ற 18 வயது இளைஞனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார். குறி…
-
- 3 replies
- 1k views
-
-
திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள், மற்றும் பயிற்சிகள் தொடர்பான காணொலியைப் பார்த்த நான்கு தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈச்சிலம்பற்று, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போதே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். தகவல் ஒன்றை அடுத்தே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் இருவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் என்று நம்பப்படுவதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான இவர்களின் தொடர்புகள் மற்றும் அந்தக் காணொலி அவர்களுக்கு எவ்விதம் கிடைத்து என்பது குறித்து சிறில…
-
- 1 reply
- 748 views
-
-
வடக்கு கிழக்கில் தமிழீழ விடுலைப் புலிகளின் ஆட்சி இல்லாமல் போனதைத் தொடர்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற சிறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிறிலங்காப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழில் பொலிஸ் பிரிவுகள் வரையறுக்கப்பட்டு பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் கிராமப்புறங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களில் பொலிஸார் அக்கறை எடுப்பதில்லை. கிராமப்புறங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொலிஸார் இருந்தும் இல்லாதது போலவே நாங்கள் உணர்கின்றோம் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். குடா…
-
- 1 reply
- 919 views
-
-
வவுனியா – கந்தரா வீதி, உந்தளக்குளம் பகுதி கிணற்றில் இருந்து 25 வயது நிரம்பிய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்று (17) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – திருநெல்வெளி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மரியகந்தாஸ் வவிஜியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வவுனியாவிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த வேளை, நேற்று (16) மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.இவரை தேடும் பணியில் ஈடுபட்ட உறவினர்கள் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்டுள்ளனர். வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=15977
-
- 3 replies
- 1.1k views
-
-
சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது. The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.
-
- 19 replies
- 1.2k views
-
-
இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார். பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். பலாத்காரமாக பாலியல்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு.ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன் இலங்கை அரசின் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தையும் அக்குவேறு ஆணி வேராகப் புட்டுப்புட்டு வைத்தன. இதனால் அரச தரப்பு பெரும் சங்கடத்துக்குள்ளானது. உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிய…
-
- 0 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஸ்டீபன் ராப் தலைமையிலான பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழு பதிலளிக்கத் தவறிய நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்தப் பரிந்துரையை கடுமையாக விமர்சித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபை, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசா…
-
- 1 reply
- 586 views
-
-
வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்தபோது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு, பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஆறு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினர்,இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்து அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து உரையாடினர். அப்போது அபிவிருத்தி பணியை காட்டிலும் இனப்பிரச்னைக்கான உடனடி அரசியல் தீர்வு அவசியம் என்று சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அரசு பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.அத்துடன் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவையும் அவர் சந்தித்துப் …
-
- 1 reply
- 892 views
-
-
மலர்ந்த இந்த சித்திரைப் புத்தாண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அபசகுணமாக அமைந்ததாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதியின் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ”விருந்தோம்பல்” நேரத்தில் ஜனாதிபதிக்கு ஊண்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த சகுணம் அபசகுணமானது என சிரேஷ்ட ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர். இந்தத் தருணத்தில் மன ரீதியாக குழப்பமடைந்த ஜனாதிபதி மகிந்த அவ்விடத்தைவிட்டு வெளியேறி, நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பையும் உடடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் நிலைமைகளை நேரில் அறிவதற்காக வந்திருக்கும் இந்திய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். சுயாதீனமான முறையில் அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும். அப்போதுதான் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளது. ஆறுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு கொழும்பு வந்தடைந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்றத் தூதுக்குழு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை மாலை விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொழும்பில் இடம்பெற்ற பேச்…
-
- 0 replies
- 452 views
-
-
இம்முறை சித்திரைப் புத்தாண்டு அனுஷ்டானங்களின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனிமைப்படுத்தப்பட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் அமர்ந்த பின்னர் வழமையாக தங்காலை கால்டன் இல்லத்தில் அல்லது மெதமுலன இல்லத்தில் நடைபெறும் புத்தாண்டு அனுஷ்டானங்களில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் தரப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பெரும்பாலும் பங்கேற்பர். எனினும், இம்முறை புத்தாண்டு அனுஷ்டானங்களில் அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே கலந்துகொண்டுள்ளனர். 13ஆம் திகதி இரவு தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்…
-
- 0 replies
- 444 views
-
-
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்னம், அந்தக் கட்சியின் மகளீர் அணிப் பொறுப்பாளர் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை, மகிந்த ராஜபக்ஷ, கோதாப ராஜபக்ஷ ஆகியோருக்கு தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டச் சம்பவமாக பரிமாணித்துள்ளது. இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட பின்னர் கோதாபய ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய தூதுவரை இலக்குவைத்து காரசாரமான கருத்துக்களை வெளியிட்டமையும், பகிரங்கமாக சில கருத்துக்களையும் வெளியிட்டமையும் தூதரக தரப்பிலும், மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் பாரிய கண்டனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சர்வதேச ரீதியாக குமார் குணரத்னம், திமுது ஆட்டிகல விடுவிக்கப்பட வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
மலர்ந்த இந்த சித்திரைப் புத்தாண்டு மகிந்தருக்கு அபசகுணமாக அமைந்ததாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகிந்தரின் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மகிந்தரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ”விருந்தோம்பல்” நேரத்தில் மகிந்தருக்கு ஊண்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த சகுணம் அபசகுணமானது என சிரேஷ்ட ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர். இந்தத் தருணத்தில் மன ரீதியாக குழப்பமடைந்த மகிந்தர் அவ்விடத்தைவிட்டு வெளியேறி, நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பையும் உடடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக மகிந்தரின் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுகுறித்து கேட்டபோ…
-
- 0 replies
- 677 views
-
-
இந்தியாவினை பிராந்திய வல்லரசு என்பதனை சிறிலங்கா பெரிதுபடுத்தாத நிலையிலேயே, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க நேர்ந்ததென ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயக்கம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் இருந்து வெளியேறி தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள ஜே.எஸ்.திசநாயக்கம் அவர்கள், Global Post என்ற ஆங்கில ஊடகத்தில் வரைந்துள்ள கட்டுரையொன்றிலேயே இக்கருத்தினை முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் எண்ணெய் அகழ்வு எனும் போர்வையில், சீனாவினை இந்தியாவிற்கு மிக அண்மையிலுருக்கும் மன்னார் குடாவினுள் நுழைய அனுமதித்தமை, இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. முன்பு ஆசியாவின் பெரு நாடுகளாக உள்ள இந்தியாவினையும், சீனாவினையும்…
-
- 0 replies
- 600 views
-
-
முல்லைத்தீவு மாஞ்சோலை பொது மருத்துவமனை இராணுவத்தினரால் தீடீர் அழகுபடுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான வீதியில் இருந்து வைத்தியசாலைக்குச் செல்லும் பாதைக்கு தார் இடுதல், வீதியின் இருமருங்கும் அழகுபடுத்தல், வைத்தியசாலைக்கான பெயர்ப்பலகையினை புதுப்பித்தல், வைத்தியசாலையின் விடுதிகளுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல், வைத்தியசாலைச் சூழலை அலங்கரித்தல் போன்ற நடவடிக்கையில் 25ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இன்று முழுமையாக ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் முல்லைத்தீவிற்கான பயணத்தினை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம். இ…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் அக்கறை தொடர வேண்டும். அவர்கள் மூலம் இதற்கு முடிவொன்று வரவேண்டும் என்றே தாங்கள் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.தெரிவித்திருக்கின்றார். இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க. வும் அடுத்த பிரதான கட்சியான தி.மு.க.வும் புறக்கணித்திருக்கின்றன. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளினதும் இந்த புறக்கணிப்பு தீர்மானத்தினால் இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயத்த…
-
- 4 replies
- 523 views
-
-
"அதிகாரம் இல்லாத அதிகாரப் பரவலாக்கம் பயன் தராது" இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்து உரையாடிய போதே கூட்டமைப்பினர் இதை வலியிறுத்தியுள்ளனர். வடகிழக்கு பகுதியில் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது, இராணுவத்தினர் பிரசன்னம், முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ளது ஆகியவை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்திய…
-
- 0 replies
- 454 views
-