ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராகப் போராடிய எங்களை பொலிசார் தாக்கியதுடன் பொய்யான குற்றம் சுமத்தி வழக்குத் தாக்குதல் – அமைச்சர் வியாழேந்திரன் (கனகராசா சரவணன்) தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எங்களைத் தாக்கிய பொலிசார் எம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வி…
-
- 1 reply
- 345 views
-
-
வன்னியில் மோதல் நிகழும் பகுதிகளில் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் பெரும் அளவில் அதிகரித்துவருவதுடன் ஷெல் வீச்சுக்களால் தினமும் பலர் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர் என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி து.வரதராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் செத்தல் மிளகாய் ஒரு கிலோ 18 ஆயிரம் ரூபாவாகவும் லெமன் பப் பிஸ்கட் பெட்டி ஒன்று ஆயிரம் ரூபாவாகவும், மீன் ஒரு கிலோ 2000 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 300 ரூபாவாகவும், பிளேன்டீ ஒரு கோப்பை 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை அரசினால் யுத்த நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட கடந்த 13 ஆம், 14 ஆம் திகதிகளில் ஷெல் வீச்…
-
- 0 replies
- 754 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் புரியப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இட்டுச் செல்வதாக அமையுமென்பதே அமெரிக்காவின் எண்ணமாகும் என சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதவர் மிச்செல் சீசோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். 2013 ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலுள்ள முக்கிய விடயமாகவிருப்பது சுதந்திரமாக கருத்துக…
-
- 0 replies
- 461 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 286 views
-
-
படையினரின் தேவைக்கு காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் இப்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு விவகாரத்தால் மக்கள் அரசின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் விடயத்தை நேரடியாகக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று விரைவில் ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக நம்பகரமாக அறிய முடிகிறது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் சுமார் 10,000 ஏக்கர் நிலம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் படைகளின் தேவைக்காகக் கையகப்படுத்தப்படவுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான அறிவித்தல்களும் அந்தந்த இடங்களில்…
-
- 0 replies
- 531 views
-
-
மாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என்ற காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மாவீரா் துயிலுமில்லங்களுக்கு எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என கிளிநொச்சி காவல்துறையினர் மன்றில் கோரிக்கை விடுத்த போது கிளிநொச்சி நீதவான் நீதி மன்றும் அதனை நிராகரித்துள்ளது. குற்றவியல் சட்டத்திற்கு கீழ் உள்ள வழக்கு ஒன்றின் கீழ் அவ்வாறு தடை விதிக்க முடியாதும் என்றும் இறந்த தங்கள் உறவுகளை நினைவு கூர அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்தோடு பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஜந்து பேரையும் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வ…
-
- 0 replies
- 493 views
-
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சாமச கூட்டம் இன்று (22) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமாசத்தினர் மேலும் தெரிவித்ததாவது, எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்…
-
- 48 replies
- 4.6k views
-
-
வாஷிங்டன் : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது . இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து வெள்ளை மாளிகை முதல் முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஒபாமா கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்ற பிறகு வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவாகும். அதில் இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது . சர்வதேச மனிதநேய கோட்பாட்டுகளை அத்துமீறி இலங்கை ராணுவம் நடக்கிறது .போரை தொடர்ந்து நடத்துவதால் இன பிரச்னை மேலும் தீவிரமடையும். நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் .பாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை இல…
-
- 5 replies
- 1.1k views
-
-
கொழும்பு நகரில் வியாபார அனுமதிப் பத்திரம் வழங்கமுடியாத நிலையில் 300 உணவகங்கள் - கொழும்பு மாநகர சபை [Wednesday, 2013-05-08 10:32:48] வியாபார அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியாத நிலையில் உள்ள சுமார் 300 உணவகங்கள் கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. குறித்த உணவகங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். தகுந்த இடங்களில் உணவகங்கள் அமைக்கப்படாமை, கட்டடங்களில் காணப்படும் குறைபாடுகள், அசுத்தம் போன்ற காரணங்களினால் குறித்த உணவகங்களுக்கு வியாபார அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கொழு…
-
- 1 reply
- 259 views
-
-
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக ஓர் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. ஆனால் இலங்கையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ள பழ.நெடுமாறன், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக கருணாநிதி திட்டமிட்டு நடத்திய இந்த நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்பது போன்ற ஓர் தவறான தோற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது. உலக …
-
- 0 replies
- 1.1k views
-
-
தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 14ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்…
-
- 9 replies
- 3.1k views
-
-
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது – மனோ கணேசன் 22 Views தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது, நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல…
-
- 0 replies
- 461 views
-
-
ஆரம்பம் முதலே 2006ம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அதற்கு முன்னரும் பின்னரும் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழீழத்தை விட்டு தப்பிக்கவில்லை என்றும் அவர் நீர்மூழ்கி மூலமோ அல்லது வேறு வழியிலோ தப்பிக்க முனைந்திருப்பின் இந்திய ரடார்களும் உளவு விமானங்களும் அவற்றை இனங்கண்டிருக்கும் என்று இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் தெரிவித்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து சிறீலங்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஆ…
-
- 3 replies
- 2.1k views
-
-
அதிகாரங்களை இல்லாதொழித்தல் என்ற வாதம் பரவலாக ஓங்கி நிற்கின்ற நிலையில், சிறுபான்மை சமூகத்தினரை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு வெளிப்பட்டிருக்கிறது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளது. கிழக்கு இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. இதனைத் தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துவருவதாகவும் ஹசன் அலி எம்.பி தெரிவித்தார். இதுகுறித்து கருத்துரைத்த ஹசன் அலி எம்.பி, கிழக்கில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக தகவல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதனையும் கூறமுட…
-
- 2 replies
- 379 views
-
-
சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றன – குணவங்ச தேரர் 19 Views சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் செயற்படுகின்றன என்றும், தேசிய சக்திகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்சதேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:- “தேசிய சக்திகள் இணைந்துதான் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தன. எனவே, மக்கள், அரசு மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக மேற்படி சக்திகள் தொடர்ந்தும் செயற்படும். எனவே, தேசிய அமைப்புக்களுக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்ப…
-
- 0 replies
- 337 views
-
-
போர் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டிருப்பது ஒருவித வேதனை. எறிகணைகள் மற்றும் ஆயுதங்களின் தாக்குதலில் அகப்பட்டு எப்போது உயிர் பிரியுமோ என்ற மரண பயம் வினாடிக்கு வினாடி மக்கள் மனங்களைக் கொன்று கொண்டிருப்பது அந்த வகை வேதனை. ஆனால் உயிரைத் தக்க வைத்து விட்டோம், அது பறிக்கப்படும் ஆபத்து 90 முதல் 95 வீதம் நீங்கிவிட்டது என்ற ஆறுதலுடன் நலன்புரி நிலையங்களுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் படும் வேதனை இன்னொரு விதம். எதுவுமற்ற ஏதிலிகளாக, உடுத்த உடையுடன் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி வந்த மக்கள்வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் அடைபட்டிருக்கும் மக்கள்படும் துன்ப துயரங்கள் நீண்ட நிரல் வரிசைப்படுத்தக் கூடியவை. இங்கே வந்து இத்துணை வடிவங்களில் அல்லற்பட்டு ஆற் றாது வி…
-
- 0 replies
- 900 views
-
-
தம்புள்ளை: ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மே, 2013 - 15:08 ஜிஎம் பௌத்த வரலாற்று சிறப்புமிக்க தம்புள்ளை புண்ணிய பூமி பிரதேசத்தில் பாதெனிய பிரதேசம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர் இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது. இக்குடும்பங்களை திங்களன்று அழைத்துப் பேசிய மாதளை மாவட்ட அரசாங்க அதிபர், மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கேட்காமல் உடனடியாக இடத்தை விட்டு அகலவேண்டும் என்று தெரிவித்ததாக ஒரு சில …
-
- 4 replies
- 750 views
-
-
மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு 18 Views உக்குளாங்குளம் மக்கள் குயிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்புபட்ட அதிகாரிகளை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் தொலைத் தொடர்பு கோபுரம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகரசபைய…
-
- 0 replies
- 748 views
-
-
“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people,” said Selvarasa Pathmanathan, the LTTE’s head of International Relations, in a statement issued Saturday. LTTE takes heed to Obama's call: Pathmanathan
-
- 0 replies
- 1.1k views
-
-
1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் கல்வி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் …
-
- 0 replies
- 358 views
-
-
மக்களை நீங்கள் கொல்லவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்கள்
-
- 3 replies
- 658 views
-
-
24/05/2009, 13:14 [சுடர்நிலா] “சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்” சன்டே ரைம்ஸ், மேரி கொல்வின் “அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப்போகும் ஒருவரின் அழைப்புமாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லைபோலும்.” ஏன சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார். “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப்பகுதியில், கடைசியாக புலிகள…
-
- 0 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதாவின் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு! கணவர் கைது (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று மாலை 4 இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்ட…
-
- 5 replies
- 572 views
-
-
அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம் இவ் விடயம் 02. 06. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 16:07க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈ…
-
- 0 replies
- 1.6k views
-
-
முஸ்லிம் பெண்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. அண்மைய சம்பவங்களின் மூலம் முஸ்லிம் பெண்கள் தலையுடன் அணியும் இந்த நிஜாப்பினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் முஸ்லிம் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் இந்த ஆடையை அணிந்து குற்றச் செயலில் ஈடுபட்டமை அம்பலமாகியிருந்தது. மத ரீதியான விடயம் என்பதனால் பலர் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அறிவிக்க உள்ள…
-
- 6 replies
- 545 views
-