ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று காலை 9 மணிக்கு மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். தனது டெம்போ வானத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தொடக்க விழா முடிந்து காலை 11.30 மணிக்கு கிளம்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று பொய்யான தகவலை கூறிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி செய்கிறது கேரள அரசு. பேபி அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த அணையையும் உடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு 1200 கிலோ வெடிபொருளை தயாராக வைத்துள்ள கேரள அரசு. இந்த சதியை முறியடிக்க மத்திய ரிசர்வ் போலீசை பாதுகாப்புக்கு போட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி…
-
- 0 replies
- 693 views
-
-
மாவீரர்நாள் 2011 பிரான்ஸ் வரவு செலவு அறிக்கை. மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவால், பிரான்சில் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வுகள், மிகச் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும், தாயகத்தை முன்னிறுத்தும் வண்ணமும் நடைபெற்றன. எமது தேசிய மாவீரர்களை நினைவுகூறும் தமிழீழ தேசிய பண்பாட்டு நிகழ்வுக்கு, மாவீரர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தந்த ஆதரவு மற்றும் போராளிகள், பொதுமக்கள், மற்றும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் காட்டிய ஈடுபாடும், ஆற்றிய பணியும் இந்நிகழ்வின் சிறப்பிற்குச் சான்று. இந்தத் தேசிய நிகழ்வை நடாத்துவதற்கு, பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கும், இந்த நிகழ்வை நடாத்த எமக்கு ஏற்பட்ட செலவீனத்திற்கும் பொதுமக்கள் மன்றில் கணக்கைச் சமர்ப்பிக்கவேண்டி…
-
- 7 replies
- 1.8k views
-
-
கேரளத்தில் தமிழர்களைத் தாக்கினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கேரள அரசு அணை உடையப்போவதாக திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்கள் அங்கு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் விளை பொருட்களும் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழகத்தில் வாழும் 40 லட்சம் மலையாளிகள் பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சகிப்பு தன்மை தொடரும் என எதிர்பார்க்க முடியாது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம் மே…
-
- 1 reply
- 1k views
-
-
2010ஆம்ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே 4,434 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம் பெற்றிருப்பதாக சிறீலங்காவின் கைத்தாழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்கின்ற ஐரோப்பிய யூனியனின் பிரதான நாடுகளாக பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆகியன உள்ளன. ஸ்ரீலங்காவில் இந்நாடுகள் பல துறைகளில் முதலீடு செய்துள்ளன. 1992 இலிருந்து ஸ்ரீலங்காவில் உள்ள நலிந்த சமூகத்தினருக்கு ஐரோப்பிய ஆணைக்குழு ஆதரவளித்து வருகின்றது. 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் ஐரோப்பிய ஆணைக்குழு தொடரான நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளது. http://www.eeladh…
-
- 0 replies
- 513 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரம் மேன்மையடைந்து வருவதாக கூறுகின்றது. ஆனால் நிலமை அப்படியல்ல அரசு சொல்வதற்கு எதிராகவே காணப்படுகின்றது. அதாவது தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தெரிவித்துள்ளார். அதனால் குறித்த பிரதேசங்களுக்கு குறிப்பாக நிவாரண கிராமங்களுக்குச் செல்ல இன்னும் பலருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தான் இன்று மெனிக்பாம் முகாமிற்குச் சென்றதாகவும் அதன் உட்செல்ல தனக்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி அளிக்கவில்லை எனவும் அஜித் குமார குறிப்பிட்டார். இந்த முகாம் மீள்குடியேற்ற அமைச்சின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதனால் நேற்று அமைச்சின…
-
- 0 replies
- 498 views
-
-
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் 707 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக யுனிசெவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் 374 ஆண் சிறுவர்களும், 333 பெண் சிறார்களும், அடங்குகின்றனர் எனவும், காணமல் போனவர்களில் 116 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 31 சிறுவர்கள் அவர்களது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், 22 சிறுவர்களை குடும்பத்தினருடன் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் யுனிசெவ் கூறியுள்ளது. மேலும், 63 சிறுவர்களுடைய பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்தச் சிறுவர்களை அடையாளப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் யுனிசெவ் அமைப்புத் தெரிவித்துள்ளது. 2011 யூ…
-
- 1 reply
- 626 views
-
-
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்று எடுப்பதற்காக இலங்கை நாடாளுமன்றில் முழங்கியதற்காக கோழைத்தனமாக சுட்டு வீழ்த்தப்பட்ட மாமனிதரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜனின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்ரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வன்னியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் சுயதொழிலை ஊக்கிவிக்கும் முகமாக உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக ஏழ்மையிலும் யுத்தத்திலும் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜே…
-
- 0 replies
- 546 views
-
-
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு – அசோக் மேத்தா தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை புதுடில்லி முன்னெடுக்கத் தவறுமாயின் அது மன்னிக்க முடியாதது என முன்னாள் இந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார். நேற்று Daily pioneer எனும் ஊடகத்தில் அவர் எழுதியுள்ள பத்தியிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். தனது மூலோபாய நலன்களை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, இலங்கைத் தீவில் இழந்த தனது அரசியல் செல்வாக்கினை சமப்படுத்துவதற்காக இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்…
-
- 2 replies
- 976 views
-
-
வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் படையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது சிறீலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கே படையினர் சென்று தேடுதல்களையும் கடுமையான விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த தேடுதல் நடவடிக்கையில் படையினர் உட்பட புலனாய்வுத்துறையினரும் ஈடுபட்டுவருவதாகவும் சில கிராமங்களுக்கு சென்று அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் பெயர்களை கூறி அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்றும் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டுவருவதாக மேலும் எமது செய்தியாள…
-
- 0 replies
- 686 views
-
-
மூன்று விடயங்கள் தொடர்பில் மீண்டும் அரசுடன் பேசுவோம்-சுமந்திரன்! Published on December 7, 2011-1:05 pm நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூகையில், நேற்று மாலை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுபோல் அரசாங்க அங்கத்தவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்றைய அந்த பேச்சுவார்த்தையிலே மூன்று முக்கிய விடயங்களை அரச அங்கத்தவர்கள் ஏற்க மறுப்புத் தெரிவித்தனர். வடக்கு – கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகிய முக்…
-
- 0 replies
- 701 views
-
-
ஐ.தே.கட்சியில் உட்கட்சி பூசல் பிளவுபடும் அபாயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடத் தயாரென அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியிலிருந்த உட்கட்சிப்பூசல் நேற்று மேலும் தீவிரமடைந்தது. கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்ற அதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய கரு ஜயசூரிய ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைப்பதவியில் உடனடி மாற்றங்களைச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதென்று தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலும் செயற்குழுவிலும் 75 சதவீதமான ஆதரவு தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாகக் கருதப்படுவதால் ரணிலின் ஆதரவு நாடாளுமன்ற உறுப…
-
- 1 reply
- 681 views
-
-
யாழ். மாவட்டம், வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நான்கு வர்த்தக நிலையங்களின் வெளிப்பூட்டுகள் உடைக்கப்பட்டு சுமார் 10 இலட்ம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்களும் 12 ஆயிரத்து 500 ரூபா ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.நகரின் இதயப் பகுதியிலுள்ள பழைய மெத்தைக்கடைச் சந்தியின் இருமருங்கிலும் பிரதான வீதியில் இருக்கும் புடவைக் கடை, இரும்புப் பொருள் விற்பனை நிலையம், மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையம் ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களிலும் மெத்தைக்கடைச் சந்திக்கு எதிரே தும்பளை வீதியில் இருக்கும் தொலைபேசி விற்பனை நிலையத்திலுமே இக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இவ் வர்த்தக நிலையங்களின் முன்பக்க கதவுகள் ஆயுதங்களால் உடைக்கப்பட்டு இக்கொள்ளை அ…
-
- 1 reply
- 569 views
-
-
மஹிந்த இராஜபக்ஷவின் 2012 வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்தவுடன் கோத்தபாய இராஜபக்ஷவிற்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கவுள்ளார் மஹிந்த. இதன்படி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படும். த்னது தம்பி பற்றி தவறாக கூறும் அமைச்சர்களை மஹிந்தர் கடிந்துள்ளார். தம்பி இல்லாவிட்டால் தனக்கு இந்த நாட்டின் தலைவர் பதவியே வந்திருக்க முடியுமா என கேல்வியும் கேட்டுள்ளார். . இது தொடர்பில் மஹிந்தர் அலரி மாளிகையில் உரையாடியவை வருமாறு; . 'தற்போது ரணிலும் வீதியில் இறங்கி விட்டார். ஜே.வி.பியினரும் தற்போது, இரும்பு வேலிகளை புரட்டி போட்டு விட்டு, கொழும்பில் ஊர்வலம் செல்கின்றனர். கோதா தனது வேலையில் இறங்கியிருந்த போது, இந்த விளையாட்டுகள் இருந்ததா?" என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ந்தும் படையெடுத்து செல்லும் ராஜதந்திரிகள் மத்தியில் நோர்வே தூதரும் யாழ் சென்றுள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ள நோர்வே தூதரும் அவரது குழுவினரும் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதேவேளை குடாநாட்டின் பல்வேறு தரப்புகளையும் குழுவினர் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர். கடந்த வாரம் பிரிட்டன் துணை தூதர் உள்ளிட்ட குழுவினர் இதே போன்று குடாநாட்டிற்கு சென்று பல்வேறு தரப்பகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். உண்மையான கள யதார்த்தத்தினை கண்டுகொள்ளவே இந்த விஜயங்கள் தொடர்வதாக நம்பப்படுகின்றது. குறிப்பாக மீள்குடியமர்வு முன்னாள் போராளிகளது நிலை என்பவை பற்றியும் குழுவினர் ஆர்வம் காட்டிவருகின்…
-
- 1 reply
- 784 views
-
-
உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சித்து வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோற்கடித்த காரணத்தினால் இவ்வாறு சில சக்திகள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக முறியடிக்க சகல இன சமூகங்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை இன சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தின் மூலமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்பதனை தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் விளங்கிக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் தமிழ் சமூகம் ஒரு அரசியல் கட்சி நிலை…
-
- 0 replies
- 652 views
-
-
சிறிலங்காவில் போர்த்தளபாடங்களைப் பராமரிக்கும் நிலையங்களை அமைக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளதாக ‘வொய்ஸ் ஒவ் ரஸ்யா‘ தகவல் வெளியிட்டுள்ளது. ரஸ்யா அல்லது சோவியத் தயாரிப்பான போர்த்தளபாடங்களின் சேவை மற்றும் பராமரிப்புக்காகவே இந்தப் பராமரிப்பு நிலையமங்கள் அமைக்கப்படவுள்ளன. ரஸ்யாவின் பாதுகாப்புத் தளபாட ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமான Rosoboronexport நிறுவனத்தின் பிரதிப் பொதுப் பணிப்பாளர் விக்ரர் கொமர்டின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக ஆயுததளபாடக் கண்காட்சி ஒன்றிலேயே அவர் இந்த தகவலைக் கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு ரஸ்யா நான்கு எம்.ஐ-17 உலங்கு வானூர்திகளையும், இரண்டு காலாற்படை சண்டை வாகனங்களையும், 19 துருப்பு…
-
- 0 replies
- 694 views
-
-
வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடுவீடாகச் செல்கின்ற இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், திருமணமாகாத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாருக்கோ கிராமசேவை அதிகாரிக்கோ அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கோ அறிவிக்கப்படாமல் இராணுவத்தினரால் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் இருப்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் திரட்டப்படுவதுடன் திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் பிரதேச பொலிஸார் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் த…
-
- 0 replies
- 575 views
-
-
முல்லைத்தீவு – முள்ளியவளை – காட்டுவிநாயகர்புரம் பகுதியில் இளைஞர் ஒருவர்கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்றிரவு 7 மணியவில் அவருடைய வீட்டுக்கு வந்த சிலர் தம்மை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் என்கூறி தனது மகனை அழைத்துச் சென்றதாக கடத்தப்பட்டவரின் தாய் எமக்குத் தெரிவித்தார். மணல் ஏற்றிச் செல்லும் தொழிலில் ஈடுபட்டுள்ள 23 வயதுடைய கணேசமூர்த்தி ரதன் என்ற இளைஞரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்தபோது, முல்லைத்தீவு பொலிஸார் தீவிரவாத தடுப்புப் பிரிவினரிடம் தொடர்பு கொண்டு வினவியுள்ளனர். கணேசமூர்த்தி ரதன் என்பவர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தற்போத…
-
- 0 replies
- 539 views
-
-
சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல புலிகளின் வீழ்ச்சியும் தமிழக* ஆதரவு சக்திகளின் அரசியல் புரிதலும்: சில குறிப்புகள் - யதீந்திரா எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும் என்றறியாமலே இருளில் நாங்கள் ஒரு பாதையைத் தேர்ந்தோம். - ஸபான் இலியாஸ் மேஸடோணுயா 01. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான சூழல் குறித்து எழுதவோ பேசவோ முயலும்போதெல்லாம், முதலில் சிறிய வயதில் படித்த சைவ சமயவழிக் கதையொன்று நினைவுக்கு வருவதுண்டு. அது உலகத்தை முதலில் சுற்றிவருபவர்கள் யார் என்ற போட்டி தொடர்பான கதை. இதில் தமிழர்களின் முழுமுதற் கடவுளென அறியப்படும் சிவபெருமானின் புதல்வர்களான முருகனும் தும்பிக்கையான் எனப்படும் விநாயகனுமே போட்டியாளர்கள். முருகன் தனது…
-
- 11 replies
- 1.4k views
-
-
உயிருடன் இருந்த தந்தைக்கு மரண சான்றிதழ் காட்டி வீசா பெற விண்ணப்பித்த மகன் கைது Tuesday, December 6, 2011, 20:46 இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல வீசா பெறுவதற்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த இலங்கையரொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.பிரித்தானியாவில் கடமையாற்றும் தாயுடன் இணைவதற்காக தனது இளைய சகோதரனுடன் குறித்த விண்ணப்பதாரி பிரித்தானிய தூதுவராலயத்தில் விண்ணப்பித்திருக்கிறார். போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ள இவர் உயிருடன் உள்ள தந்தையை இறந்ததாக போலி மரண சான்றிதழையும் வழங்கியுள்ளனார். மேலும்,18 வயதிற்கு மேற்பட்ட குறித்த விண்ணப்பதாரி போல…
-
- 0 replies
- 692 views
-
-
சரத் பொன்சேக்காவிற்கு சுதந்திர தினத்தன்று விடுதலை Wednesday, December 7, 2011, 6:11 அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரத் தினதன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அவரை விடுதலை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கில் வழங்கப்பட்ட பிளவூப்பட்ட தீர்ப்பானது அரசாங்கத்தின் பெரும் பாதகமாக அமைந்துள்ளதாகவும் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்து வரும் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி இப்படியான தீர்மானத்தை எடுப்பது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக ப…
-
- 0 replies
- 926 views
-
-
லண்டனை மையப்படுத்திச் செயற்படும் இலங்கையர்களைச் சந்திப்பதற்காக 40 வயதிற்குபட்ட எம்.பிக்கள் குழுவொன்று எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை லண்டன் பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்குழுவில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஹரின் பெர்னான்டோ, நிரோஷன் பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் வசந்த சேனநாயக, ஹுனைஸ் பாரூக் மற்றும் எரிக் வீரவர்த்ன போன்றோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச அலர்ட் மற்றும் கொமன் வெல்த் சமூகத்தின் அழைப்பிற்கு இணங்க லண்டன் செல்லும் இவர்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள், இளம் வர்த்தகர்கள், பொதுநலவாய…
-
- 3 replies
- 752 views
-
-
வெள்ளைக் கொடி வழக்கில் மூன்று வருடங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகிறார் என்றால் சிறைச்சாலையில் உள்ள அனைத்து சிறை கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொது சன உறவுகள் மற்றும் பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்யகிழமை காலை (06.12.2011) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சரத் பொன்சேகா நீதிமன்றத்திலும் வைத்தியசாலையிலும் அரசாங்கத்திற்கெதிராக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை அரசாங்கத்தால் தடுக்க …
-
- 3 replies
- 1.1k views
-
-
தனுஸின் கொலைவெறிக்கு பலிக்காடாவாகும் தமிழர்கள். அந்தக்காலத்தில் சினிமா கதைகளும், காட்சிகளும் சமுதாயச்சீர்திருத்தங்களுக்காகவும் சமுதாயத்தைப் பிழையான பாதையில் கொண்டு செல்லாதவகையிலும் நுணுக்கமாக ஆராயப்பட்டு சினிமா தயாரிக்கப்பட்டு வந்தது. சமுதாயத்திற்கு நல்ல சிந்தனைகளைச் எடுத்துச் சென்றது. இன்றைய சினிமாக்கள் சமுதாயத்தின் பண்பாடுகளை மறந்து, சமுதாயத்தை பிழையான சிந்தனைக்கு இழுத்துச் செல்லும் ஒரு வியாபார சிந்தனை உள்ள சினிமாக்களும் அத்துடன் ஒரு சிலரின் கைகளில் தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒரு இனம் அடையாளம் காணப்படுவது அதன் பண்பாட்டாலும், நன்நடத்தையாலும் தான். இன்றைய தமிழர் பண்பாட்டில் அதிக ஆதிக்கம் செலுத்துவது சினிமாதான். அந்த ரீதியில் தான் தனுஸின் கொலைவெறி…
-
- 20 replies
- 2.9k views
-
-
ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார். அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று …
-
- 2 replies
- 647 views
-