ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ர…
-
-
- 7 replies
- 568 views
- 2 followers
-
-
இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமலாபா நிதியை வங்கியில் வைப்பு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்பவர்கள் அதிகம் எனவும் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இலங்கையில் தமது இறுதி காலத்தில் சிரே…
-
-
- 34 replies
- 2.5k views
- 1 follower
-
-
அதிக வட்டிக்கு கடன் இலங்கை அரசு நிரூபிக்குமா? சீனத்தூதுவர் சவால் கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை இலங்கை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் சீனா மறைமுகமான எந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டிருக்க வில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறேன். முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் நாம் பிரதான கவனத்தைச் செலுத்துவோம். …
-
- 1 reply
- 288 views
-
-
இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் ரஜிதா கூறும்போது, முதலில் சுனாமி வந்து எங்கள் சமூகத்தை அழித்தது. அடுத்ததாக போர். இப்போது சிறு வணிக கடன் நிறுவனங்கள் எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. கடன் சுமையால் மிகவும் சிரமப்படுவதாக அன்றாடம் யாராவது ஒருவர் என்னிடம் புலம்பிக் கொண்டுதான் உள்ளார் என்றார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாண கிராமப்புற மக்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. குறிப்பாக மிக வும் வறிய மாவட்டங்களில் ஒன் றான மட்டக்களப்பு பகுதி மக்கள் கடன் பிரச்சினையால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு சராசரி ம…
-
- 6 replies
- 633 views
-
-
-வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகமான வயல்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், விவசாயிகள் மத்தியில் மறுபயிர் செய்கையை விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தி நெல் வயலில் கிடைக்கும் வருமானத்தை விட 03 மடங்கு வருமானம் மறுபயிர்ச் செய்கையில் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.குசைன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் மறுபயிர்ச் செய்கை பற்றி அவரிடம் கேட்டபேதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், 'அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் இவ்வருட இறுதிக்கு முன்னர் மாற்றுப்பயிர்ச் செய்கையின் உற்பத்திகளை இறக்குமதி செய்வதைக் குறைத்து உள்ளூர்; உற்பத…
-
- 1 reply
- 500 views
-
-
07 AUG, 2023 | 03:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களை சேர்ந்த சுமார் 90ஆயிரம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் சப்பரகமுவ, கிழக்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களுக்குரிய 18 பிரதேச செயலக தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 27ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89ஆயிரத்து 485 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பது யாழ்ப்பாணம் மாவட்டமாகும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் 5பிரதேச செயல…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சிக் க…
-
- 16 replies
- 894 views
-
-
பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜ…
-
- 6 replies
- 2k views
-
-
அதிக விலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை (நா.தனுஜா) சீனியின் விலையதிகரிப்பிற்கு சீனி இறக்குமதியாளர்கள் பல்வேறுவிதமான காரணங்களைக் கூறுகின்ற போதிலும், அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை. அவர்கள் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே சீனிக்கு அதிக விலையை நிர்ணயித்திருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணயவிலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச்சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகி…
-
- 0 replies
- 163 views
-
-
30 OCT, 2023 | 04:57 PM அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ 260 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசிக்கு 210 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் ஒ…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
அதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்! மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கு எதிராக இன்று (22) சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார். ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவா…
-
- 0 replies
- 276 views
-
-
அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை! அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசம் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. N95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபாய் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளை விட அதிகரித்த விலையில் முகக் கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என தேசிய மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அல்லது அவற்றை பதுக்கும் நபர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நாடளாவ…
-
- 0 replies
- 208 views
-
-
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்ளுக்கு எதிராக வழக்கு By T. SARANYA 25 AUG, 2022 | 07:47 PM (எம்.வை.எம்.சியாம்) அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கமைவாக…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
அதிக விவசாய விளைச்சளைப் பெற ஜனாதிபதியின் யோசனை பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விவசாய விளைச்சளை அதிகரிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக பல யோசனைகளை முன்வைத்தார். கொவிட் நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை கண்காணித்து தேசிய விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விதை மற்றும் கன்றுகள் உற்பத்தி உரப் பாவனை, விவசாய புத்தாக்க ஆராய்ச்சிகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்து துறைகள் குறித்தும் கவனம் செலுத்தி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் சவாலான இலக்கை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.…
-
- 2 replies
- 723 views
-
-
புத்திசாலித்தனமாகச் செயற்படுவதன் மூலமும் வைத்தியர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை தொடர்பில், சுகாதார அமைச்சின் நல்வாழ்வுத்துறைத் திணைக்களம், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுற்றுச்சூழல் வெப்பநிலையானது, சாதாரண நிலைமையை விட, இந்நாள்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த அதிக வெப்பநிலை காரணமாகவும் அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் அவதானமான இருக்கவேண்டும். அதிக ஆபத்துள்ள பிரிவுகள்: சாதாரணமாக, உட…
-
- 1 reply
- 547 views
-
-
அதிக வெப்பத்தால் பாடசாலைகளுக்கு பூட்டு மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் பூட்டப்பட வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.எம்.என்.டபிள்யூ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் காரணமாக, பாடசாலை மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இன்று பிற்பகல் இரண்டு மணி வரையில், அநுராதபுரத்தில் 36 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், பொலன்னறு…
-
- 0 replies
- 404 views
-
-
அதிக வெப்பத்தால் பூநகரி பெண் மரணம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை (02) அனுமதிக்;கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 0 replies
- 503 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 03:21 PM நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் உடலில் ஏற்படும் நீரிழப்பில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். எனவே, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் தொடர்ந்து அதிகளவு நீர் அருந்த வேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
அதிக வேட்புமனு நிராகரிப்பால் ஆளும் கூட்டணிக்குள் குழப்பம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்ட விவகாரம் ஆளும் கூட்டணிக்குள் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளன. இறுதிநேரத்தில் சுதந்திரக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவர்கள் வேட்பாளர் பட்டியல்களில் திருத்தம் செய்யுமாறு வற்புறுத்தியதாலேயே குழப்பங்கள் ஏற்படக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாததால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக சுதந்திரக் கட்சியின் தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால் அவரிடம் இது…
-
- 1 reply
- 806 views
-
-
ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை:- பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொலபொடத்தே ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம், ஞானசார தேரரை நாட்டு;க்குள் அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்களின் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக இலங்கையில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள…
-
- 5 replies
- 673 views
-
-
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 ஆகும். அதன்படி, அரிசி சந்தைகளில் 2,800 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பான 915 சோதனைகளும் அடங்கும். இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பது நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாவதுடன், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம்…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது: மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகி…
-
- 4 replies
- 1.9k views
-
-
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குவது தேர்தலின் பின்னரே என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அதிகபட்சமாக குறித்த மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அவர் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் அவரது சுய நிலைமையை பரிசீலனை செய்தே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (30) ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்ததை அடுத்து வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் யார் என ஊடகங்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்க…
-
- 0 replies
- 796 views
-
-
-
அதிகமான காணாமல் போதல்களுக்கு இராணுவமும், கருணா குழுவுமே காரணம்: அனைத்துலக மன்னிப்பு சபை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 20:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை சிறிலங்கா இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 1,000 பேர் காணாமல் போனதாக பதிவுகள் கூறும் நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக ஓகஸ்ட் மாதம் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் காண…
-
- 1 reply
- 840 views
-