Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் இரண்டு புலனாய்வு அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் திணைக்களத்தின் திறமைவாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரச புலனாய்வுத்துறையும் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறையுமே பிரஸ்தாப அறிக்கைகள் இரண்டையும் தயாரித்துக் கையளித்துள்ளன. அதன் பிரகாரம் விடுதலைப்புலிகளின் பலம் பொருந்திய படையணிகளுள் ஒன்றாக இருந்த ஜெயந்தன் படையணியின் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகள் பலமாகச் செயற்பட்ட காலத்தில் கிழக்கில் உருவாக்கப்பட்டிருந்த பிரதான ஆயுதக் களஞ்சியமும் யுத்…

  2. தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் அமைச்சர் பீரிஸ்! - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!! சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மீது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாடன் ஆலோசனை நடத்துவதற்காக புதுடில்லிக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அந் நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சிறிலங்காவும், இந்தியாவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந் நிலையில், இந்தியாவுடன் இண…

    • 0 replies
    • 1.1k views
  3. விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்ல நோர்வே உதவியது என்கிறது அந்நாட்டுப் பத்திரிகை! Posted by admin On May 13th, 2011 at 8:21 pm விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் அவ்டன்போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வே தூதரக அதிகாரிகள், இவ்வாறு சுமார் 12 பேருக்கு குறுகிய காலத்தில் விஸா வழங்கியதுடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள நோர்வே எதிர்க்கட்சி, …

    • 5 replies
    • 1.3k views
  4. சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ""இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்…

  5. "தேசிய நூதன சாலையில் துட்டகைமுனுவின் அஸ்தி" என்ற செய்திக்கான எதிர்வினையினை சிந்தனைக்கூடம்-யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனரும் தமிழரசுக்கட்சி முக்கியத்தவருமான பேராசிரியர் இரா.சிவசந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கை. கொழும்பு தேசிய நூதன சாலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பார லங்கா கண்காட்சியை திங்களன்று ஆரம்பித்து வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கிறீஸ்துவுக்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த துட்டகைமுனு மன்னனின் அஸ்தியை புதிய கலசத்தில் இட்டு காட்சிப்படுத்தியே நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். இது ஒரு தேசிய பாரம்பரிய கண்காட்சி என கூறப்படுகின்றது. இலங்கை தேசிய பாரம்பரியம் எனும் ப…

    • 2 replies
    • 1.2k views
  6. சிங்கப்பூன் நிதியமைச்சராக விளங்கிய தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூன் பிரதி பிரதமராக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையின் நியமனங்களின்போதே அவருக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதியமைச்சராக சண்முகரட்ணம் சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூல் சிரேஷ்ட அரசியல்வாதியான தர்மன் சண்முகரட்ணம் சர்தேச நாணய நிதியம், சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின் றார். இந்தக் குழுவே நிதிக் கொள்கையில் பிரதான பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது. 1957 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கை பூர்வீகத்தைக்கொண்டவர். அவரது பாட்டனார் யாழ்ப்பாணம் ஊரெழுவை சேர்ந்தவர். இவர் இலங்கையில் ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின் பின்னர் 20…

  7. எமது தேசிய தலைவர் அழுவதற்காக நாட்களை தெரிவு செய்தது இல்லை! வெள்ளி, 20 மே, 2011 பலமாக உருவாக்கப்பட்ட குழப்பங்களின் மத்தியில் இந்த வருடம் நடைபெற்ற மே 18 போர்க் குற்ற நாள் புலம்பெயர் தமிழர்களால் பேரெழுச்சியுடன் நடாத்தப்பட்டது. லண்டனில் 20,000 இற்கும் அதிகமான மக்களும், பிரான்சில் 5,000 இற்கும் அதிகமான மக்களும், கனடாவில் 40,000 இற்கும் மேற்பட்ட மக்களும் எனப் புலம்பெயர் தேசங்கள் எங்கும் மக்கள் வெள்ளம் திரண்டெழுந்து சிங்கள தேசத்தின்மீது போர்க் குற்றம் வாசித்தது. மே 18 நிகழ்வுகளைக் குழப்ப சில புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளிவிட சில தமிழ் சக்திகள் முயன்றது. போராட்டமும் அதன் தலைமையும் முடிவுபெற்றுவிட்டது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க பலர் முயன்றனர். ஆனால் மக்கள் திரண்டு ஒ…

  8. ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மற்றும் இன விவகாரங்களுக்கான தீர்வு தொடர்பாக கொழும்பு சிங்கள பத்திரிகையாளர்களின் ஒளிவு மறைவற்ற பேட்டிகள்.இதில் பிரபல சிங்களப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களின் பேட்டிகள் வருமாறு. மனிக் டி சில்வா பிரதம ஆசிரியர் “ஞாயிறு ஐலண்ட்' பத்திரிகை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது மிகவும் நியாயமற்ற அறிக்கை என்றே நான் கருதுகிறேன். இந்த அறிக்கை குறித்து நாட்டில் பெரும்பாலானோர் அதிருப்தியையும், வருத் தத்தையும் தெவித்து வருகின்றனர். இதில் இருக்கும் நியாயமற்ற விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு, பான் கீ மூனுக்கு சேறு பூச…

  9. ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எமக்குக் கவலை இல்லை: ஆனால் இராணுவ அநியாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தோரணையில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து [Friday, 2011-05-20 05:13:45] ஆட்சி மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கிடையாது. அதற்கான எந்தத் தேவையும் இல்லை. என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆனால்,ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவாஜ் வலியுறுத்தியுள்ளார்.. ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை என அவர் சுட்டிக்காட்டிய அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறு…

  10. தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்க.. எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் அழைப்பு: [Friday, 2011-05-20 05:39:32] எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாடு மாநிலத் தோ்தலில் அமோக வெற்றியீட்டி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தபோதே பிரஸ்தாப அழைப்பையும் விடுத்துள்ளார். கடந்த 17ம் திகதி இரவு இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் வரை தொடர்ந்த அவர்களின் தொலைபேசி உரையாடலின் போது இலங்கையின் வடக்கு மற்றும்…

  11. ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தட்டவர்கள் பத்திரமாக டெல்லியில் பதுங்கி இருக்க அந்தக் கொலையை காரணம் காட்டி தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Rajiv assassins hiding in Delhi: CPI With the DMK ouster by the AIADMK on Friday the 13th, pro-LTTE parties are demanding that the Rajiv Gandhi assassination case be re-opened to find the “real” culprits. At a public meeting here on Tuesday commemorating the second anniversary of the Mullivaikkal tragedy, D Pandian, state secretary of the CPI, an AIADMK ally, who witnessed the former PM's assassination said: “The Rajiv Gandhi assassinat…

  12. இறுதி யுத்த வீடியோ காட்சிகளை விஜய் நம்பியார் பார்வையிட்டார் - ஐ.நா.சபையில் தகவல் தெரிவிப்பு ஐ.நா.செயலரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் இலங்கை அரசாங்கத்தின் வீடியோ காட்சிகளை பார்வையிட்டதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.ஐக்கிய நாடுகள் செயலாளரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் தொடர்பில் நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. வன்னி இறுதி யுத்தத்தின் போது ஆளில்லாத வானூர்தி மூலம் பெறப்பட்ட நேரடி வீடியோ தொடர்பான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளி யிட்டிருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கியிடம் நேற்று முன்தினம் கேள்வி யயழுப்பப்பட்டது.ஆளில்லா…

    • 0 replies
    • 1.5k views
  13. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற இந்தியாவின் வலியுறுத்தல் இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை இந்தியாவின் தேசிய நலனுக்காக பயன்படுத்தாது தமிழ் மக்களின் விடிவுக்காக பயன்படுத்தவேண்டுமென்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெவித்துள்ளனர்.ஐ.நா.வின் அறிக்கைக்கு முகம் கொடுக்க இந்தியாவின் உதவி அரசாங்கத்திற்கு கட்டாயம் தேவையாகும். எனவே, இதனை பயன்படுத்தி இலங்கையில் அதிகாரத்தை பகிர்வதற்கு இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை இந்திய கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புளெட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இலங்கை இந்தியா இணைந்து வெளியிட்டுள்ள கூட்ட…

  14. ICC குற்றவியல் நீதிமன்ற பிரதம சட்டவல்லுனரை தமிழர்கள் சந்தித்தனர் ! அனைத்துலக மக்களவைகளின் ஆதரவோடு டென்மார்க் தமிழர் பேரவை அமைப்பின் உறுப்பினர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் ‘நீதி கேட்டு 1000 கிலோமீற்றர்கள்’ என்னும் மிதிவண்டிப் போராட்டத்தை கடந்த மே முதலாம் நாள் டென்மார்க் நாட்டிலிருந்து தொடங்கி, மே 17ம் நாள் நெதர்லாந்து நாட்டிலுள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தைச் சென்றடைந்தனர். அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதம சட்டவல்லுனர் திரு Jos� Luis Moreno Ocampo அவர்கள் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்று, சிறிலங்கா அரசுகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட தமிழினவழிப்புப்பற்றிக் கேட்டுக் கொண்டதுடன் தமிழ்மக்கள் இனிவரும்காலங்களில் முன்னெடுக்க வேண்ட…

    • 0 replies
    • 904 views
  15. பல்லாயிரக்கணக்கான மக்களோடு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம…

  16. ஜெனீவா ஐ.நா முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர் குரல்! ஜெனீவா ஐ.நா முன்றலில் தமிழீழ தேசிய துக்க நாள் ஒன்கூடல் உணர்வெழுர்ச்சிடன் இடம்பெற்றது. மே-18 புதன்கிழமை இடம்பெற்றிருந்த இந்நிகழ்வின் பிரதான விடயமாக, ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரியுடான உத்தியோகபூர்வ சந்திப்பும், மனுக் கையளிப்பும் அமைந்திருந்தது. சுவிசின் சகல மாநிலங்களிலும் இருந்தும், பிரான்ஸ் - இத்தாலி - பிரித்தானியா - ஜேர்மனி - டென்மார்க் என பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுவினைச் சேர்ந்த பீற்றர் சார்ல்ஸ், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா இராஜேந்திரா, மக்கள் பிரதிநிதி பாலன் சிவபாதம் ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி நிகழ்வினை மலர்…

  17. காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார். ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உற…

  18. சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் இப்போது இலங்கைத் தீவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், உண்மையில் என்ன செய்வதென்றெ தெரியாத ஒரு நிலைக்குள் இலங்கை அரசு சிக்கிப் போயுள்ளது. இதன் காரணமாகவே பல குழப்பகரமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களை அரசாங்கமே முன்னெடுத்தது. இப்போதும் கூட அரசாங்கம் சரி அமைச்சர்களும் சரி என்ன செய்கிறார்கள் என்றே சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.கடந்தவாரம் அமை…

    • 3 replies
    • 1.6k views
  19. சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி பூண்டிடும் நாளாக இது அமைய வேண்டும் என நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.. அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே! இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்! சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள். தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொ…

    • 1 reply
    • 733 views
  20. புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? - புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..? -சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..? புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..? புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது. நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள் என்ற அமைப்பு …

  21. போரக்குற்றவாளியான சர்வேந்திர சில்வா பதவி உயர்வுடன் ஐ.நா.தூதுவராக நியமனம்! Published on May 19, 2011-11:27 am · No Comments போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சர்வேந்திரா சில்வாவை பதவி உயர்வுடன் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராக சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது. இந்நியமனம் மே 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று இவரிடம் இதற்கான நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முதல் மேஜர் ஜெனரல் சர்வேந்திரா சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிட…

  22. ஆளில்லா விமானம் மூல்ம் பெறப்பட்ட வன்னி நிலவரக் காணொளியைப் பார்வையிட்டமை தொடர்பில் விஜய நம்பியாரிடம் கருத்தறியப்படும்: பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவிப்பு [Thursday, 2011-05-19 12:41:35] ஐக்கிய நாடுகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், நேற்யை தினம் இலங்கை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.இதன்போது இறுதி யுத்தத்தின் போது, ஆளில்லா வானூர்தி மூலம் பெறப்பட்ட நேரடி காணொளிகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசக்கியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. ஆளில்லா வானூர்தி மூலம் பெறப்பட்ட காணொளி காட்சிகளை, ஐககிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் பார்ப்பதற்கு …

  23. பிரதான செய்திகள் இலங்கைப் படைகளின் மிருகத்தனமாக போர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் பங்குபற்ற பல நாடுகள் ஆர்வம்! Share இலங்கைப் படையினர் மேற்கொண்ட மிருகத்தனமான போர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்வதில் பல நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன என இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எட்வேட் மொற்றிமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் போர் நிறைவடைந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. அங்கு போரின் இறுதி மாதங்களில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. இரு தரப்பும் போர்க்குற்றங்களை மேற்கொண்டபோதும்…

  24. அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே! இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்! சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள். தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள். தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வழிநடத்தலாலும் மாவீரர்களின் ஈகத்தாலும் வீரத்தாலும் உருவாக்கப்பட்ட நிகழ்வுபூர்வமான தம…

  25. இந்தியா சிறிலங்காவின் போருக்கு உதவி செய்தது என்பது வெள்ளிடைமலை. அதேபோல சிறிலங்காவில் தமிழர்க்கு எதிரான போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த நிலையில் சர்வதேச விசாரனை ஒன்று வருமாக இருந்தால் நிச்சயமாக இந்தியாவின் போர்க்குற்றத்திற்கான பங்களிப்பினை சர்வதேச விசாரணை குழு கண்டறிந்து அதனை சுட்டிக்காட்டும். ஆகவேதான் இந்தியா சிறிலங்காவை போர்க்குற்றம் தொடர்பில் தொடர்ந்தும் பாதுகாக்க முற்படுகின்றது. . சரி இந்தியாவை போர்க்குற்றத்தில் தொடர்பு படுத்தினால் என்ன பாதிப்பு? இது இந்தியாவிற்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைதான். இந்தியா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவந்து தன்னையும் ஒரு நிரந்தர நாடாக இணைக்க மிகப்பெரும் முஸ்தீபுகளை மேற்கொண்டு வரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.