Jump to content

ஜெனீவா ஐ.நா முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர் குரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா ஐ.நா முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர் குரல்!

ஜெனீவா ஐ.நா முன்றலில் தமிழீழ தேசிய துக்க நாள் ஒன்கூடல் உணர்வெழுர்ச்சிடன் இடம்பெற்றது.

மே-18 புதன்கிழமை இடம்பெற்றிருந்த இந்நிகழ்வின் பிரதான விடயமாக, ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரியுடான உத்தியோகபூர்வ சந்திப்பும், மனுக் கையளிப்பும் அமைந்திருந்தது.

சுவிசின் சகல மாநிலங்களிலும் இருந்தும், பிரான்ஸ் - இத்தாலி - பிரித்தானியா - ஜேர்மனி - டென்மார்க் என பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுவினைச் சேர்ந்த பீற்றர் சார்ல்ஸ், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா இராஜேந்திரா, மக்கள் பிரதிநிதி பாலன் சிவபாதம் ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி நிகழ்வினை மலர்வணக்கத்துடன் தொடக்கி வைத்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திதிரகுமாரனின் தமிழீ தேசிய துக்க நாள் செய்தியுடன், சிறப்பு அழைப்பாளர்களின் உரைகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் உரைகள் மற்றும் கவிதை, பாடல் ஆகியன இடம்பெற்றிருந்தன.

தமிழர்களுடைய போராட்டத்தை, மனிதவுரிமை போராட்டமாகவோ அல்லது போர்குற்றங்களுக்கு நீதிகேட்கின்ற போராட்டமாகவோ சுருக்கி விடாது, இது இனத்தின் விடுதலைப் போராட்டம் என்பதனை முன்னிறுத்தி, தமிழர்கள் மீது நடாததப்படுவது ஒரு திட்டமிட்ட இனக்கருவறுப்பு என்பதனை வலியுறுத்தவே, ஐ.நா முன்றலில் அணிதிரண்டு நிற்கின்றோம் என தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் (சுதன்ராஜ்) சிவகுருநாதன் தனதுரையில் குறிப்பிட்டார்.

ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை குறித்த விரிவான கருத்தினை சிறப்பு அழைப்பாளராக பங்கெடுத்த மதியுரைஞர் குழுவினைச் சேர்ந்த பீற்றர் சார்ல்ஸ் முன்வைத்தார்.

சுவிஸ்-வோ மாநில நகர சபை உறுப்பினர் நமச்சிவாயம் மற்றும் உணர்வுப் பேச்சளர் சுரேஸ் ஆகியோரது உரைகள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்துரைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dear All,

I would like to take this opportunity to thank all of you who participated in the rally " Justice for Genocide victims of Tamil Eelam" in front of UN in New York. You have done your duty again. In the pouring rain, we all stayed until the end and it was a great success.

On behalf of TGTE, I would like to thank all the other organizations who CAME TOGETHER to mourn the victims of Genocide on this " The mourning day of Tamil Eelam".

We will all continue this every year.

We had the following speakers.

1. Prof.Thasaratha Chetty from South Africa - A member of ANC (African National Congress)

2. Mr.David Poopalapillai - Spokesman for CTC

3. Dr.Elias Jeyarajah - President of USTPAC

4. Hon. Mr.Visuvanathan Rudrakumaran - Prime Minister of TGTE

We received the following messages from

1. Rep. Jason Lewis - Representative from commonwealth of Massachusetts

2. Congressman Danny Davis - House Representative from Illinois

3. Mr.K.Veeramani - President of Dravidar Kazhagam Chennai

4. Prof.Saraswathy Rajendran - Convenor for TGTE Solidarity Center

5. Director Seeman - Recording message

The proceedings were moderated by Dr.Gerard Francis - Member of TGTE Parliament

--

Suba Suntharalingam

Organizer of the event

Member of TGTE Parliament

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.