ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கை மகிந்த ராஜபக்சவின் கரங்களைப் பலப்படுத்தும்! – சர்வதேச ஊடகம் கருத்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், உள்நாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் கரங்கள் வலுப்பெறுவதற்கே வழிவகுக்கும் என சர்வதேச ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் உறுதியான வெளிவிவகாரக் கொள்கைகள் எதனையும் கொண்டிராத சர்வதேச நாடுகள் சில ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க தயாராகவுள்ள நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடரும் என இவ்வூடகம் குறிப்பிட்டுள்…
-
- 1 reply
- 730 views
-
-
சர்வதேசம் என்பது வாய்ப்பா இல்லை வாய்க்கரிசியா சிறீலங்கா எதைத் தேர்வு செய்யப்போகிறது.. ஐ.நாவையும் சர்வதேச சட்டங்களையும் மதித்து குற்றவாளிகளை போர்க்குற்ற நீதிமன்று அனுப்புவதே சிறந்த வழி.. சிறீலங்கா அரசைப்போல சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் நல்ல பிள்ளை அரசை எங்கும் பார்க்க முடியாது என்று வெளிநாடுகள் பல வருடங்களாக நம்பி வருகின்றன. பின்லாடனைப் பிடிக்க பயங்கரவாத சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதைத் தலைமேல் வைத்து கூத்தாடியது சிறீலங்கா அரசு. அதை வைத்து புலிகளையும் ஒரு பயங்கரவாத அமைப்பென முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தது பழைய கதை. பின்னர் புண்ணியவான் எரிக் சோல்கெய்ம் வந்த பிறகு புலிகள் பயங்கரவாத பட்…
-
- 0 replies
- 849 views
-
-
இராணுவத்துடன் தர்க்கம் செய்த இரு இளைஞர்கள் தடுத்துவைப்பு! யாழில் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011 13:18 யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பெருங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் இளைஞர் குழு ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. சிவநாதன் அச்சுதன், சந்திரசேகரம் மதுஷன் ஆகிய இரு இளைஞர்களுமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களாவர். சாவகச்சேரியிலிருந்து மட்டுவிலிலுள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இளைஞர்களது துவிச்சக்கர வண்டி ஒன்று இராணுவத்திற்கு உணவு எடுத்துச் சென்ற இராணுவச் சிப்பாயின் துவிச்சக்கர …
-
- 0 replies
- 764 views
-
-
புதிய சானல் 4 போர்குற்ற ஆவண வெளியீடு http://bcove.me/3ews1u8f http://bcove.me/xggd89lu http://bcove.me/e22ay7jh மூடி விட்டு போகலாம் என பார்த்தாலும் சில கோரகாட்சிகள் .. அனைத்துலக ரீதியில் செயல்பட இந்த எளிய தோழரின் ஆலோசனைகள் 1) அந்தந்த நாடுகளில் தமக்கு சார்பாக வாதிட ஈழ தோழர்கள் தலைமையிலான சட்டத்தரணிகளின் அமைப்புகளை உருவாக்குதல் 2) வேலை வாய்ப்புகளில் தாங்கள் உயர் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் 3) வங்கி ஒன்றினை உருவாக்கி அனைத்து ஏழை நாடுகளையும் கவர்ந்திடல்(வருமா வராதா என்பதெல்லா கேட்கபடாது ) 4)சிங்களவனுக்குள் காசு பணத்தால் அடித்து விட்டு உளவு துறையை இறக்கிவிடல்( ஏன் அவந்தான் கால்ம் பூர…
-
- 1 reply
- 1.4k views
-
-
சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்க தயார், மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சவால். [saturday, 2011-04-16 16:30:37] தாய் நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் மகிழ்ச்சியுடன் மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் எதிர்ப் பார்ப்புக்களுக்கு சிலரால் தாய்நாடு தொடர்பிலும் அரசியல் தொடர்பிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையில் சர்வதேசம் சமூகம் சுமத்திவரும் குற்றச் சாட்டுகளுக்கு பதில…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஐ.நா.நிபுணர் குழுவின் நீதியற்றப் பரிந்துரை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையை சர்வதேச சட்டங்களின்படி சிறிலங்க அரசே நடத்த வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா.பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது (செய்தியைக் காண). பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன் சிறிலங்க அரசு நடத்திய அந்த இனப் படுகொலைப் போரில் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர் என்ற தெளிவான விவரம் சிறிலங்க அரசு அமைத்த ‘கற்ற பாடங்கள் ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆதாரம் இல்லாத அவதூறுகளைத் தமிமர் மீது சுமத்தும் கனடா லிபரல் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதா? லிபரல் கட்சி தமிழர்களுக்கு அதரவுக் கட்சி என்று தமிழர்கள் லிபரலுக்கு வாக்கு அளிக்கின்றது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தமிழர் வாக்குகளை கொள்ளையடிக்கப் பாசாங்கு செய்யும் கூட்டம் தான் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள லிபரல் கட்சித்தலைவர் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத்தருகின்றோம். தரக்குறைவான, ஆதாரப+ர்வமற்ற குற்றச்சாட்டுக்களை நாலாந்தர மனிதர்களின் பாணியில் அவரது புத்தகத்தில் எமுதியிருப்பது ஒரு அருவருக்கத்தக்க செயவாகும். இதே போல பலவிடயங்கள் இருக்கின்றன. தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோதெல்லாம் எவரும் இக்கட்சியிலிருந்து வந்து …
-
- 9 replies
- 1.3k views
-
-
இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை, நாளை (ஏப்ரல் 18ம்) திகதி பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருந்தார். எனினும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட இதன் பிரதியொன்று, உள்ளூர் ஊடகங்களில் கசிந்ததை தொடர்ந்து, இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பல வெளியில் வரத்தொடங்கின. இந்நிலையில், பிரிட்டனின் சேனல் 4 ஊடகம், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் கசியவிடப்பட்ட தகவல்களை ஆதாரமாக கொண்டு புதிய வீடியோ தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இதில் இலங்கை அரசின் மீது ஐ.நா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் கொடுக்கிறது. சேனல் 4 தொலைக்காட்சிக்காக செயற்படும் சுதந்திர ஊடகவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
நிபுணர் குழு அறிக்கை: வாயை மூடிக்கொண்டு இருக்கவும் ரணில் எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 ஐ.நா செயலாளர் நாயகம் பான் - கீ - மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கும் வரை அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து எதனையும் வெளியிட வேண்டாம் என அந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாததாலும், அது குறித்து அரசாங்கம் உத்தியோபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடாத நிலையிலும் அவசரமாக அறிக்கைகளை வெளியிடும் தேவையில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடு சென்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வ…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://www.voanews.com/english/news/asia/Law-Student-Accuses-Sri-Lankan-Leaders-of-War-Crimes-119785254.html
-
- 0 replies
- 1.2k views
-
-
'தினக்குரல்' விற்கப்பட்டு விட்டதாம்: சில கோடிகளில் கைமாறிய மாற்றுக் குரல் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியத்தை தமக்கான கருத்தியலாக கொண்டு வெளிவந்த ஊடகங்களின் பங்கு கணிசமானது. சுதந்திரனிலிருந்து இன்று வெளிவரும் தினக்குரல் வரைக்கும் அதற்கென்று ஒரு தனியான வரலாறே உண்டு. எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் அதனை ஆதரிக்கும் ஊடகங்களின் துணையின்றி மக்கள் மத்தியில் நிலை கொள்ள முடியாது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற கடந்த ஒரு காலத்தில் 1995ல் இருந்து தமிழ்த் தேசிய செய்திப்பத்திரிகையான தினக்குரல் கருத்தியல் ரீதியாக கனிசமான பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறது. அதே வேளை கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த …
-
- 3 replies
- 2.1k views
-
-
கழுகார் பதில்கள் ஊரார் எதுவும் சொல்லட்டும்இ கழுகார் கணிப்பு என்ன? - சி.முரளிதரன்இ குரோம்பேட்டை 'வெற்றிக் களியாட்டம் போடும் அளவுக்கு ஜெயலலிதா வென்றுவிடவும் மாட்டார். மூலையில் முடங்கும் அளவுக்கு கலைஞர் தோற்றுவிடவும் மாட்டார்!’ - என்றுதான் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் வரைக்கும் நினைத்தேன். ஆனால்இ மக்கள் வாக்களிக்க வந்த வேகத்தைப் பார்த்தால்... ஆளும் கட்சி மீதான வெறுப்பு இன்னும் தூக்கலாகவே தெரிகிறது! அன்னா ஹசாரே? - கே.சீனிவாசன்இ வில்லிவாக்கம் அன்னா ஹசாரே சொன்ன ஒரு விஷயத்தை நினைவில் கொள்வோம். ''என் நீண்ட அனுபவத்தின் பின்னணியில் சிந்தித்தபோதுஇ நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் ஒழிப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கண்ட…
-
- 5 replies
- 3.8k views
-
-
சீனா இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியை நாடுவோம் - கோத்தா எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 ஐக்கிய நாடுகள் சபையானது வரம்பு மீறி செயற்படுகின்றது, நிபுணர் குழு அறிக்கை மூலம் இலங்கையினை கையகப்படுத்த முயற்சிக்கின்றது மேற்குலகம். இவ்வாறான ஓர் சூழலில் நாம் சீனா , இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியினை உத்தியோக பூர்வ ரீதியாக நாடுவோம். என ஐக்கிய நாடுகளையும் மேற்குலகத்தினையும் எச்சரித்துள்ளார் கோத்தபாய இராஜபக்ஷ. . இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உறுப்புரிமை நாடு அந்த உறுப்புரிமைக்கு ஐக்கிய நாடுகள் சபை மதிப்பு கொடுக்க முடியாவிடின் நாம் சீனா இரஸ்யாவிடம் சரணடைவதனை தவிர்க்க முடியாது என கூறியுள்ளார் கோத்தபாய. . கோத்தபாய இந்தியாவிற்கும் மறைமுக எச்சரிக்கையின…
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
Leaked report talks of 'credible allegations' against troops By Andrew Buncombe, Asia Correspondent Sunday, 17 April 2011SHARE PRINTEMAILTEXT SIZE NORMALLARGEEXTRA LARGE AFP/GETTY IMAGES Sri Lankan Tamils captured by government forces and held in a camp for displaced people in the northern district of Vavuniya in 2009. Some were not allowed home for a year ENLARGE The authorities in Sri Lanka are under mounting pressure to agree to an independent inquiry into a military operation against Tamil rebels, after a UN panel found "credible allegations" that the government committed war crimes and offences against humanity. A leaked report by a team esta…
-
- 0 replies
- 1.2k views
-
-
த ஐலாண்டில் வெளிவந்த செய்திபற்றி இன்றசிட்டி பிரஸ் On Sri Lanka War Crimes, After Ban Ki-moon Gives Rajapaksa a Head Start, a Partial Text Emerges, Criticism of UN போர்க்குற்றங்கள் சம்பந்தமான அறிக்கையில் ராஜபக்சே, முதல் நகர்வு. ஐ.நா.வை சாடல் On April 15 a website in Sri Lanka published, somewhat confusingly, some 3500 words of text, which we will reproduce below. Some of the paragraphs are numbered while others are not. There are misspellings, for example a reference to “a climates of fear.” The text does say, bringing to mind for example the role of Ban's chief of staff Vijay Nambiar in the so-called white flag killings: “Considering the response of t…
-
- 1 reply
- 991 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை 18ம் திகதி பகிரங்கப்படுத்தப்படும் ! [ பிரசுரித்த திகதி : 2011-04-16 03:57:31 PM GMT ] இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை எதிர்வரும் 18ம் திகதி பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கையின் ஒரு பிரதியை இலங்கை அரசாங்கத்துக்கும் வழங்கியிருந்தார். அதன் சில பகுதிகள் இன்றைய த ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. த ஐலண்ட் பத்திரிகை நிர்வாகம் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பது மட்டுமன்றி ஜனாதிபதியின் அரசியல் சாக்கடை வேலைகளை சிரமேற்கொண்டு செயற்படுத்தும் ஒரு பத்திரிகை நிறுவனமுமாகும்.…
-
- 1 reply
- 906 views
-
-
மஹிந்தருக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் பொன்சேகா! (ஆவணம் இணைப்பு) (2 ஆம் இணைப்பு) சனி, 16 ஏப்ரல் 2011 21:29 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான போர் தயார்ப்படுத்தல்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கும் பொன்சேகா ஈடுபட்டு வருகின்றாரா? என்று அரசியல் அவதானிகளிடையே அண்மை நாட்களில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொன்சேகாவுக்கு சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஜோர்டான் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பொன்சேகா கொள்வனவு செய்திருக்கின்றார். சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றே இந்த நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஆயுதப் பார்சல் தற்போது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது என்று அரச தரப்புச…
-
- 3 replies
- 1.7k views
-
-
வாகரை, தட்டமுனி இராணுவ முகாம் சிப்பாய்கள் அனைவரும் கூண்டோடு நீதிமன்றில் சனிக்கிழமை , ஏப்ரல் 16, 2011 வாகரை தட்டமுனி இராணுவ முகாமைச் சேர்ந்த அனைத்துச் சிப்பாய்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாழைச்சேனை மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில் வாகரைப் பிரதேசத்தில் பதினாறு வயது தமிழ் யுவதியொருவர் விறகு தேடிக் காட்டுக்குச் சென்றிருந்த போது சிங்கள இராணுவச் சிப்பாயொருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அந்த யுவதி கர்ப்பம் தரித்தார். இந்த விடயம் வெளியே தெரிய வந்ததனையடுத்து நேற்று முன்தினம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் ஏறாவூர் பொலிஸார் வாழைச்சேனை மஜிஸ்திரேட்டின் கவனத்துக்கு …
-
- 2 replies
- 1.6k views
-
-
பல்கலைக்கழக மாணவர் உட்பட்ட இருவர் சடலமாக மீட்பு! யாழில். சம்பவம்! Posted by admin On April 16th, 2011 at 10:22 pm / யாழ். கே.கே.எஸ். வீதி தட்டாதெருவைச் சேர்ந்தவரும் கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டு கற்கும் மாணவனுமான தங்கராசா நிறைஞ்சன் வயது 23 என்பவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உறவினர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் குறித்த மாணவன் கொழும்புப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபோது ஏனையவர்களுடன் உறவு பேணுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ளுவதாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்தனர். இன்று காலை யாழ் நகரிலுள்ள கோவிலுக்கு தேர்த் திருவிழாவிற்கு பெற்றோருடன் செல்ல முற்பட்டபோதும் பின்னர் கோயிலுக்குச் செல்லாதுவீட்டில் தனியே நின்றுள்ளார…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறந்த தலைவர்களுக்கான 28 ஆவது இடத்தைப்பிடிக்க அதிபர் மஹிந்தவுக்கு மில்லியன் கணக்கில் செலவு: ஆங்கில ஊடகம் தகவல்! [saturday, 2011-04-16 07:29:33] புகழ்பெற்ற ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய உலகின் வலிமைமிக்க நூறு தலைவர்களுக்கான கருத்துக்கணிப்பில் தனது பெயரும் இடம்பெறவேண்டும் என்பதற்காக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபச்சா இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக புலம்பெயர் நாட்டில் இருந்து இயங்கும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனா என்பவரிடமே இந்த நடவடிக்கைக்கான முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாக அது மேலும் தெரிவித்துள்ளது. அவருக்கு …
-
- 0 replies
- 989 views
-
-
இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம்-இரண்டாம் கட்ட ஆய்வு April 16th, 2011 nila Electricity-Power தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்காக, ராமேஸ்வரம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்தது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்காக பாக். ஜலசந்தி கடல் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தால் கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம், கடல் பகுதியில் நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட பணி, இந்திய கடல் எல்லைப்பகுதியில் நடந்து வந்தது. மத்திய அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ரவீந்திரன் தலைமையில் 10 விஞ்ஞானிகள் உள்ளிட்ட குழ…
-
- 1 reply
- 808 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக்கேல் கிறிம் புதிய மிகவும் காத்திரமான தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புக்களுக்கு ஆதரவுகளை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கப்பாட்டுக்கு உதவிகளை வழங்கு ல் என்பன அமைதியை ஏற்படுத்துவதற்கான காத்திரமான செயற்பாடுகள்.எனினும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என காங்கரஸ் உறுப்பினர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகள், அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் மனித உரிமை அறிக்கை, ஐ.நா போர்க்குற்ற ஆலோசனைக் குழுவின…
-
- 4 replies
- 853 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தி ஐலண்ட் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினர் ஆகிய இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், மக்கள் மீது தாக்குதல் நடத்…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவால் இலங்கை தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற அறிக்கை இலங்கையின் சுயாதீனத்திற்கு எதிரானதெனவும் இது புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டதொன்று எனவும் சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச நீதிமன்றிற்கு இலங்கையை அழைத்துச் செல்வதே ஐநா நிபுணர் குழு அறிக்கையின் ஒரு நோக்கமென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த அறிக்கையை தாம் முற்றாக புறக்கணிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண குறிப…
-
- 2 replies
- 1.2k views
-