ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
வன்னி இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவம்- மற்றொரு ஆதாரம்!(Attached Exclusive Photo) சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில தினக்கதிருக்கு கிடைத்திருக்கிறது. அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துடன் அதற்கான படங்களையும் எம…
-
- 3 replies
- 1.8k views
-
-
Monday, March 21st, 2011 | Posted by thaynilam நுரைச்சோலையில் முதலாவது நிலக்கரி மின்உற்பத்தி நிலையம் நாளை திறப்பு இலங்கையின் முதலாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த நுரைச்சோலையில் நாளை 22 ஆம் திகதி திறந்துவைப்பார்.இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் 17 சதவீதத்தை- அதாவது 300 மெகாவொட் மின்சாரத்தை இந்த மின் நிலையம் நாளை முதல் உற்பத்தி செய்யும்.இதன் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆரம்பிக்கப்படும்போது மேலும் 600 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனாவின் உதவித்திட்டத்தின்கீழ் இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்ட ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு சீனா 455 மில்லியன…
-
- 1 reply
- 998 views
-
-
மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார் Posted by admin On March 17th, 2011 at 12:03 am / No Comments தேசிய எழுச்சிப் பாடகர்கள் சாந்தன், சுகுமார் ஆகியோர் பாடிய ‘தேவாவின் கானங்கள்’ குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடக்கம் பெற்றது முதல் அதன் இறுதிக்காலம் வரையில் பலநூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியிருந்த தாயகத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன், சுகுமார் ஆகியோர் பிரதானமாகப் பாடிய பாடல்களை உள்ளடக்கியதாக ஈபிடிபியினரின் குறுவட்டு வெளிவந்திருக்கின்றது. அமைச்சர் டக்கள் தேவானந்தா, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுவட்டினை வெளியிட்டுவைக்க, பாடகர்கள் சாந்த…
-
- 53 replies
- 5k views
-
-
யாழ்நகரில் கலாசார மண்டபம் அமைக்க இந்திய அரசு நிதி உதவி! திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 08:40 யாழ். நகரில் நவீன வசதியுடன் கூடிய கலாசார மண்டபமொன்றை இந்திய அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளது. இக்கலாசார மண்டபம், யாழ்ப்பாண பொது நூலகம் அமைந்துள்ள காணியில் திறந்த வெளியரங்கு அமைந்திருந்த பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படவிருக்கும் காணி பொது மக்களுக்கு வசதியானதாக உள்ளதா என்பது குறித்தும். மண் பரிசோதனை, உத்தேச செலவின மதிப்பீடு ஆகியவற்றுக்கான களநிலை அறிக்கையை தயாரிப்பதற்காகவும் இந்திய அதிகாரிகள் குழுவொன்று யாழ்பாணம் வந்து பணியினை ஆரம்பித்துள்ளது. வடமாகான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்திய அரசாங்கத்துடன் பலமுறை இது குறித்து கலந…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் காணாமல் போயுள்ள சுவீடன் பெண்! தான் கடத்தப்படலாம் என முன்னரே பேஸ்புக்கில் தெரிவிப்பு திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 17:51 சுவிடன் நாட்டு பெண் ஒருவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாத முற்பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் 28 வயதான மேரி ஜோன்ஸன் சிலேன் எனும் இப்பெண் சுவீடனின் மத்திய பகுதியான வெஸ்டர்கொட்லன்ட்டின் வார்கார்டா நகரை சேர்ந்தவர். விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வந்த இப் பெண் தான் தாக்கப்பட்டதாகவும் தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்டாகவும் கடந்த 5 ஆம் திகதி பேஸ்புக் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் கடத்தப்படலாம் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவர் காணாமல் போனமை குறித்து கடந்த 16 ஆம…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ். வடமராட்சியில் சுனாமிப் பீதியினால் மக்கள் ஓட்டம்! திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 13:56 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சுனாமி பீதியால் மக்கள் வீடுகளை விட்டு தறிகெட்டு ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுனாமி பீதியினால் அங்குள்ள கடல் கரையை அண்டிய ஏராளமான மக்களே இவ்வாறு ஓடியதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவித்தார். ஜப்பானில் பயங்கர சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின்னரும் கடந்த 19 ஆம் திகதி சந்திரன் பூமியை நெருங்கியதாலும் பொதுவாக மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. tamilenn
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிய நடேசன்! சிரேஷ்ட ஊடகவியலாளர் வெளியிடும் தகவல்கள் திங்கட்கிழமைஇ 21 மார்ச் 2011 15:42 இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதியளித்திருந்ததாக அமெரிக்காவில் நிலைகொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் இது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் குறிப்பிட்டதாகவும்இ நடேசன் இது தொடர்பாக தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு தான் நடேசனை…
-
- 2 replies
- 2.1k views
-
-
பகவான் சாயிபாபா இலங்கை வருவார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-20 08:20:49| யாழ்ப்பாணம்] உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர் களைக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடை களுக்கென அவருடன் சேர்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வர வுள்ளதாகவும்,அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. valampurii.com
-
- 30 replies
- 3.4k views
-
-
2003 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு வெற்றியளிக்காத முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது ஆக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சை பிரிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கில் இராணுவ விவகாரங்களில் செயல்திறன் வாய்ந்த கட்டுப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்க முடியும் எனவும் ஸ்தம்பிதமடைந்த சமாதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருக்க முடியும் எனவும் இந்தியா யோசனை தெரிவித்திருந்தது. அச்சமயம் இந்தியத் தூதுவராக இருந்த நிருபம் சென்னின் யோசனையானது ரணில் விக்கிரமசிங்கவுக…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்டுவரும் உலர் உணவு நிவாரணம் முற்றாக நிறுத்தப்படலாமென அஞ்சப்படுகின்றது. இதனையடுத்து வட பகுதி மக்கள் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இவ்வுலர் உணவு நிவாரணத்தை நம்பியே யாழ்.குடாநாட்டிலும் வன்னியிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உலர் உணவு நிவாரணம் முற்றாக நிறுத்தப்பட்டால் அக்குடும்பங்கள் நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டிவரலாமெனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம் தடைப்படும் நிலையை எய்தியுள்ளது. முதலாவது தவணைக்கான ஐம்பது சதவீத, உலர் உணவுப் பொருட்களே பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந…
-
- 0 replies
- 828 views
-
-
குடாநாட்டில் கசிப்பு உற்பத்தி வீழ்ச்சி; கள்ளின் பாவனை அதிகரித்துச் செல்கிறது:மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் தகவல் தற்போது யாழ். மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் நுகர்வு கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியடைந்துள்ளமை நல்லதொரு மாற்றம் என்கிறார் யாழ். மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் என்.சோதிநாதன். கசிப்பு நுகர்வு வீழ்ச்சியடைந்து செல்கின்ற அதேவேளை கள்ளு நுகர்வு அதிகரித்துச் செல்கிறது. இது குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் மேலும் தெரிவித்தவை வருமாறுயாழ்.மாவட்ட மதுவரித்திணைக்களம் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மல்லாகம், சங்கானை, சாவகச்சேரி…
-
- 1 reply
- 470 views
-
-
சென்னையில் நாளை பார்வதி அம்மாள் அஸ்தி கரைப்பு: வைகோ அஞ்சலி First Published : 21 Mar 2011 11:24:03 AM IST சென்னை, மார்ச் 21: நாளை பார்வதி அம்மாள் அஸ்தி வங்கக் கடலில் கரைக்கப்படவிருப்பதாகவும், அதனை ஒட்டி அஞ்சலிக் கூட்டம் வைகோ தலைமையில் நடைபெறவிருப்பதாகவும் மதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்த மதிமுகவின் அறிக்கை... உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் மறைந்த 31 ஆவது நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைநகர் சென்னையில், வங்கக் கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ. நெடுமாறன் தல…
-
- 0 replies
- 590 views
-
-
உள்ளூராட்சி அதிகாரங்களை தன்வசப்படுத்த அரசு திட்டம் நாடாளுமன்றம் வருகிறது சட்டமூலம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-21 09:19:14| யாழ்ப்பாணம்] 59a7c799-7cb7-4277-8787-cab9f3ea783e1பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்கான மக்கள் சபைகளை உருவாக்குவதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதி காரமும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத் திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடுகளைக் கோரும் அதிகாரமும் இச் சபைகளுக்கு வழங் கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அந்தந்த பிரதேச மக்கள் சபையின் அனுமதியின்றி எந்தவொ…
-
- 0 replies
- 387 views
-
-
எக்ஸ்போ யாழ்.நிறுவனத்தின் முகாமையாளரைக் காணவில்லை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-21 09:25:35| யாழ்ப்பாணம்] நல்லூரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்போ விமான சேவை யாழ்ப்பாண நிறுவனத்தின் பொதுமுகாமை யாளராக இருந்த கு.வசீகரன் என்பவரே காணாமல் போயுள்ளார். யாழ்.கச்சேரிப் பகுதியில் உள்ள எக்ஸ்போ விருந்தினர் விடுதியை பார்வையிட்டு வருவதாகச் சென்ற பின்னர் வசீகரன் இதுவரை வீடு திரும்ப வில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. valampurii.com
-
- 0 replies
- 869 views
-
-
Sunday, 20 March 2011 12:58 கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும்: கருணாநிதி இலங்கையிடமிருந்து கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தோ்தல் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் தி.மு.க. கட்சியின் தோ்தல் பிரகடனம் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ்நாட்டில் ஏழைக…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் ! March 20, 2011 டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம் ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் …
-
- 6 replies
- 1.8k views
-
-
லிபியாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்தும் நாடுகள்: இந்தியா வன்மையான கண்டனம் [sunday, 2011-03-20 14:01:15] லிபியாவில் கடாபியின் இராணுவத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல் நாடுகள் லிபியா மீது போர் தொடுத்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது 50 மேற்பட்டோர் கொல்லப்பட்டதகவும் 150 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. லிபியா மீது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு படைகள் ஆகாய மற்றும் கடல்வழி மூலம் தாக்குதல்களை நடத்தி வருவதுடன் இந்நாடுகளின் மேலும் பல படைகள் லிபியாவை நோக்கி புறப்படத் தயாராகி வருகின்றன. அமெரிக்க யுத்த கப்பல்களும் பிரித்தானிய நீர்மூழ்கிகளும் நேற்று சனி…
-
- 0 replies
- 926 views
-
-
உலக அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் லிபிய நாட்டின் அதிபர் கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. ஐ.நா.சபையின் அனுமதியை அடுத்து கடாபி மீது எந்நேரமும் தாக்குதல் இடம்பெறலாம் என்பதற்கு முன்னதாக,ஐ.நா.பாதுகாப்பு பேரவையின் முடிபுக்கு அஞ்சி ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை கேணல் கடாபி அறிவித்துள்ளார். கேணல் கடாபியின் இந்த அறிவிப்பு தொடர்பில் கடாபி பயந்துவிட்டார் என ஒரு தரப்பும், அவர் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுத்துள்ளார் என இன்னொரு தரப்பும் வாதப்பிரதிவாதம் செய்யலாம். ஆனால், பொதுவில் நின்று ஆராய்வோர் ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் தீர்மானம், அதனை அடுத்து கடாபி அறிவித்த யுத்த நிற…
-
- 3 replies
- 1k views
-
-
http://www.bbc.co.uk/news/world-africa-12801812 http://pktube.onepakistan.com/anti-aircraft+missiles/
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழத்துக்கு ஒப்பான ஒரு அலகு வேண்டும் என தேர்தலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவுகொடுக்காததை வைத்தே தாயகத் தமிழர்கள் அதை (தமிழீழத்தை) நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழர்கள் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். இன்று சிட்னியில் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுமக்களுடனான சந்திப்பிலே பொதுமகன் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்து பலரின் கோபத்துக்கு ஆளானார் சட்டத்தரணியான சுமந்திரன். பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லையென்ற கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாரும் சொல்லித் தந்து நாங்கள் இதை சொல்லேல...! from : Facebook
-
- 39 replies
- 5.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் வெற்றி – ஒடுக்கு முறைக்கு எதிரான போர்க்குரல் : சபா நாவலன் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற வட கிழக்கில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபடி அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றிகண்டுள்ளது. போரின் கோராத்தால் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் சார்பிலிருந்து தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மறுபடி மறுபடி ஒரே செய்தியைத் தான் கூறிக்கொண்டிருக்கிறது. புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளிருந்து அன்னியப்பட்ட சந்தர்ப்ப வாதிகள், முன்னை நாள் புலி ஆதரவாளர்கள், இலங்கை அரசின் தமிழர் தரப்பு நீட்சிகள் என்ற அனைவருமே ‘பாதிக்கப்பட்ட மக்கள் அரசியலை எதி…
-
- 1 reply
- 883 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஸ் செல்வன் என்பவர் கடந்த 14 ஆம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ளார். யுhழ்ப்பாணத்திலுள்ள இவருடைய நண்பரைப் பார்ப்பதற்கான வீட்டிலிருந்து சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிகின்றது. இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
வன்னியிலிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்ற இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர், அவர்களது பெற்றோர்களிடம் பிள்ளைகளது கைத்தொலைபேசி இலக்கங்கள், வங்கிக் கணக்கிலக்கங்கள், அவர்களது கல்விக்கு உதவி செய்பவர்களது விபரங்கள் உள்ளிட்ட சகல விபரங்களையும் திரட்டியுள்ளனர். இதனால் அவர்களது பெற்றோர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளார்கள். வன்னியைச் சேர்ந்த பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவருவதும், அவர்களது கல்விக்கு பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே உதவிசெய்தும் வருகின்றார்கள். இவ்வாறு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையா அல்லது மாணவர்களைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கையா இது என்று தெரியாமலுள்ளதாக கிளி…
-
- 0 replies
- 885 views
-