Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. G.C.E(O/L) பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் வெளியாகின்றது! கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாய…

  2. இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் யுத்த மோதல்களின் போது படுகாயமடைந்து, உடலில் உலோகத் துண்டுகளான குண்டுச் சிதறல்ளுடன் வாழ்கின்ற மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. யுத்த மோதல்களில் சிக்கி படுகாயமடைந்த பலர் குண்டுச் சிதறல்கள் உடலில் பாய்ந்ததனால், உலோகத் துண்டுகளுடன் கடந்த மூன்று வருடங்களாகப் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தத்தின் எச்சங்களான இவற்றை அகற்றுவதற்கு குறிப்பாக மாணவர்களுடைய உடலில் இருந்து அகற்றுவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகக் கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக்…

  3. மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்! 19 Dec, 2025 | 11:45 AM மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப…

  4. கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே? பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்? இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்…

  5. இணையம் மூலம் பகிடிவதை முறைபாடுகளை தெரிவிக்கலாம் என உயர்கல்வி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும், இந்த ஏற்பாடானது மாணவர்களை ஒடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை என இலங்கை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பகிடிவதையானது முற்றாக நாட்டிலிருந்து அகற்றுவதற்காக இணையம் மூலமாக மாத்திரமின்றி விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் மிக நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் மாணவர் ஒடுக்குமுறையின் புதிய ஒரு ஆயுதமாக இப்பகிடிவதையை பயன்படுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கமானது தற்போது இந்…

    • 0 replies
    • 345 views
  6. தலைவர் பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார் கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர். செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை …

  7. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீனவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடல்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என முல்லைத்தீவு கடல்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 5ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் 153 படகுகளுடன் 80 தென்னிலங்கை மீனவர்கள், தொழில் செய்து வருகின்றனர். அத்துடன் கொக்குளாய் பகுதியில் 300 தென்னிலங்கை மீனவ…

  8. கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – பந்துல குணவர்த்தன by : Benitlas கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இப்போதுள்ள நிலையில் நாட்டிற்கான இறக்குமதியை குறைத்தாக வேண்டும். இது குறித்து ஆரம்பத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ இறக்குமதியின் தடைகள் இல்லை. அத்துடன் கட்டுமானப்பணிகளுக்கான பொருட்…

    • 2 replies
    • 659 views
  9. மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர் 08 Jan, 2026 | 04:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மதியிறுக்கம் (ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்…

  10. எழுச்சி கொள்ளும் தமிழகமும் இந்திய மத்திய அரசும் - தாரகா - சமீப நாட்களாக தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுச் செயற்பாடுகள் முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மற்றும் அதற்கான அமைப்புக்கள் சார்ந்த வட்டத்திற்குள் மட்டுமே அதிகம் வெளிப்பட்ட ஈழ ஆதரவு நிலைப்பாடானது, தற்போது கம்யூனிஸ்ட் கட்சியே, ஈழத் தமிழ் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் அளவிற்கு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியம், திராவிட அரசியல் குறித்து விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அனைவரும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஓரணியில் திரள வேண்டிய அவசியப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. கட்சி ரீதியாக கம்யூனிஸ்ட்…

  11. இலங்கையைச் சேர்ந்த முன்னாள் ராஜதந்திரி ஒருவருக்கு பிரித்தானியாவில் தண்டனை 21 நவம்பர் 2012 இலங்கையைச்; சேர்ந்த முன்னாள் ராஜதந்திரி ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. போலந்துக்கான இலங்கை தூதுவரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டியுடர் குணவர்தனவிற்கு எதிராகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடற் பயிற்சி நிலையமொன்றில் கடமையாற்றிய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 77 வயதான டியுடர் குணவர்தனவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் டியுடருக்கு தண்டனை விதித்துள்ளது. 1000 பவுண்ட் அபராதமும், 1000 பவுண்ட் நட்டஈடும், சட்டச் செலவாக 1250 பவுண்ட்களையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட…

  12. ஐக்கியப்பட்ட நடவடிக்கையே தமிழகத்திலிருந்து எதிர்பார்ப்பு [02 நவம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:20 மு.ப இலங்கை] வீரியத்தை விட, காரியம்தான் முக்கியமானது. வேகத்தை விடவும் விவேகம்தான் முக்கிய மானது. எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும் பான்மையினரால் ஈவு, இரக்கமற்ற அடக்கு முறைக்கு ஆளாகியிருக்கின்ற சொற்ப எண்ணிக் கையினரான- சிறுபான்மையினரான-ஈழத் தமிழர்களுக்கும் அவர்க ளது தலைமைத்துவங்களுக்கும் ஆதரவு சக்திக ளுக்கும் இதுதான் பிரதான விடயமாகும். வேகம் காரணமாக விவேகத்தையோ, வீரியம் காரணமாக காரியத்தையோ கோட்டை விட்டுவிட லாகாது. ஈழத் தமிழ் மண்ணில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேரவலத்திலிருந்து அவர்களை விடுவிக்கும் முயற் சியில் இந்த விவேகச் செயற்பாடும் காரியத்தில் கண்ணும் அவசி…

  13. கழிவகற்றலில் அக்கறையில்லை சுப்பிரமணியம் பாஸ்கரன் 'கிளிநொச்சி நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சேரும் கழிவுகள் உரிய முறைகளில் அகற்;றப்படாமல் காணப்படுவதுடன், கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையினர் அக்கறை செலுத்துவதில்லை' என்றும் பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள கிளிநொச்சி பொதுச்சந்தை, பஸ் தரிப்பிடம், இரணைமடு பொதுச்சந்தை, இரணைமடுச்சந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேர்கின்ற கழிவுகளை அகற்றுவதற்கான முகாமைத்துவம் பின்தங்கிக் காணப்படுவதாக, வர்த்தகர்கள், பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக…

  14. மகா ஒயா பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி: 3 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 05:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியான மகா ஒயா பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மகா ஒயா பிரதேசத்தில் உள்ள தம்பட்டி எனும் இடத்தில் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை பி…

    • 0 replies
    • 959 views
  15. யுத்தத்தின் போது அமெரிக்கா உதவியது: டிலான் By J.Stephan 2012-11-30 16:03:37 யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா எமக்கு உதவியது அதேவேளை சில பிரச்சினைகளையும் கிளப்பினர். இதனால் எந்தப் பிரச்சினையையும் கிடையாது என பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இந்தியா இன்று பெரிய அண்ணாவாக அன்றி பெரிய அக்காவாக மாறியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில். யுத்தத்தின் போது இந்தியா சீனா பாகிஸ்தான் என பல…

    • 6 replies
    • 426 views
  16. வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கட்டையால் தாக்கினர் – மாற்றுத்திறனாளி முறைப்பாடு! மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதா…

  17. By J.Stephan 2012-12-04 16:00:58 ஆபிரஹாம் லிங்கன், அதிகாரத்தை பரவலாக்கி அமெரிக்காவை ஒன்றுபடுத்தினார். ஆனால் இலங்கையிலுள்ள சில முட்டாள்கள் அதிகாரங்களை ஓரிடத்தில் கையளித்து நாட்டில் இனரீதியான இராச்சியங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என ஐ.தே.க. எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'பாராளுமன்றம் இன்று சேறுபூசும் இடமாக மாறியுள்ளது. அதன் இறையாண்மைக்கு கொச்சைப்படுத்தும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புரிமை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தாம் எதிர்ப்பவர்களை கீழ்த்தரமாக விமர்…

  18. மட்டக்களப்பு பங்குடாவெளியிலுள்ள கருணா குழுவினரின் முகாம் கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளானமை யாவரும் அறிந்ததே. செங்கலடி- பதுளை வீதியில் பங்குடாவெளியிலுள்ள இந்த முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணா குழுவினரின் இந்த முகாமில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கருணா குழு உறுப்பினரான முகாம் பொறுப்பாளரும் மற்றொருவரும் உடனிருந்த பிள்ளையான் குழு உறுப்பினர்களால் உணவருந்திக்கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொலைசெய்த 7 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில…

  19. தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக ஜே.வி.பி போராடும்.-அநுரகுமார தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராடுவோம் என்று ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க, யாழ் வணிகர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ இந்தச் சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்திருந்தது. இதன்போது எமக்கு தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்கள். குறிப்பாக காணிப் பிரச்சினை முகாம்களில் உள்ள மக்களது மீளக்குடி…

  20. போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் தாயாரில்லை என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர் நிறுத்தம் ஒன்றுக்கு நாம் தயாரில்லை. இதனால் வரும் எந்த சவாலையும் நாம் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். விடுதலைப் புலிகளால் யுத்த நிறுத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் அதனுள் நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம்.பயங்கரவாதம் இன்று எம்மிடம் சிக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை இல்லாது அழிக்க வேண…

    • 9 replies
    • 1.6k views
  21. சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் cash/voucher (C/V) திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என உலக உணவு நிகழ்ச்சித் திட்ட அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. "யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 15,000 ற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் அடுத்த இரு ஆண்டுகளில் 45,000 பேர் இதில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது" என உலக உணவு திட்டத்தின் சிறிலங்காவுக்கான பதில் பிரதிநிதி மட்ஸ் பொல்வல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் ஒரு மாதத்திற்கு 11 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சான்றுச் சிட்டை பெற்றுக் கொள்வர். இது ஆறு மாதகாலத்திற்கு பயன்படுத்தக் …

  22. மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை முன்னால் இந்த ஜனனதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கலந்து கொண்டு கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். htt…

  23. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் காவல்துறையினரின் புதுவிதமான சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 619 views
  24. குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்குமாறு மக்கள் கோரிக்கை 1996 ஆம் ஆண்டு மூதூர் – குமாரபுரத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை – குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் க…

  25. சந்தேகநபர் ஒருவரை அவசரகாலச்சட்டத்தின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஒன்றரை வருடங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபர் ஒருவரை 90 நாட்களுக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு அனுமதிப்பதற்கும், விளக்கமறியலில் வைத்திருப்பவரை மீண்டும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் சட்டமா அதிபருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த வர்த்தமானியை ரத்துச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.