ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
கலாசாரப் பேரவைகள் களத்தில் குதிக்கவேண்டும் எங்கள் இளம் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்துப் பலரும் வேதனைப்படுகின்றனர். அதிலும் பள்ளி மாணவர்கள் எந்தவித அச்ச உணர்வும் இன்றி மாணவர்களுக்குரிய கட்டுப்பாடுகளை மீறிச் செல்வதானது,தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கும் பண்பாட்டுப் பேணுகைக்கும் ஆரோக்கியமானதன்று. அதேநேரம் எங்கள் பல்லைக் குத்தி நாங்களே முகர்ந்து கொள்வது அழகல்ல என்ற நிலையில் எதையும் மூடி மறைக்கும் ஒரு வகைப் பண்பாடும் எங்களிடம் இருக்கவே செய்கின்றது.இத்தகைய ‘அம்மல் பண்பாடு’ தவறுகளை தூண்டுவதாகவும் தப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவும் இருக்கும். எங்கள் பல்லைக் குத்தி நாங்கள் முகர்ந்து கொள்வதுகூட ஒரு வகையில் எங்கள் பற்றிய சுய மதிப்பீட்டுக்கு உதவும்.எனவே எங்கள் …
-
- 1 reply
- 684 views
-
-
சனிக்கிழமை, 30, அக்டோபர் 2010 (9:55 IST) இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல்: வாசன் தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் என, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம பேசிய மத்திய அமைச்சர் வாசன், தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் இயக்க இந்தியா, இலங்கை அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும். நாகையிலிருந்து, சென்னைக்கும், சிங்கப்பூருக்கும் இடையே இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து 1977 ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்…
-
- 2 replies
- 776 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் இவ்வாறு டக்ளஸ்ஆலோசனை கூறியுள்ளார். நேற்று பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும் என்பதை இங்கு சுட்டிக் காட்டிய டக்ளஸ் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமாம். பல்கலைக்கழக மாணவர்களின் கடத்தல்கள் மற்றும் வளாகத்திற்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன்…
-
- 11 replies
- 1.6k views
-
-
கடந்தவியாழன் அன்று தாய்லாந்தில் தங்கியிருந்த தமிழர்களில் 116பேர் சுற்றி வளைக்கப்பட்டதாகவும், அவர்களில் முறையான பயண ஆவணங்கள் வைத்திருந்தோர் தவிர மிகுதி அறுபத்து ஒரு தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த சில வாரங்களின் முன்பும் தாய்லாந்தில் இவ்வாறு தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். மேற்கோள் மூலம்: Bangkok Post
-
- 1 reply
- 687 views
-
-
லெப்.கேணல்கள் அகிலா.உருத்திரா.வரதா(ஆதி) வீரவணக்க நாள். யாழ்.வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும் 30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிய இந்த மாவீரர்களுக்கும் இதே நாளில் தாயக மண் மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். http://www.thar…
-
- 0 replies
- 998 views
-
-
யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் நிலைகளிற்கு ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலிகளின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 10 replies
- 1.1k views
-
-
ஐ நா போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவுக்கு உங்களிடம் இருக்கும் சாட்சியங்களை ஒரு விரிவான மடலுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பவும். மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் முகவரி : panelofexpertsregistry@un.org 15 Dec 2010 வரை நீங்கள் அனுப்பும் சாட்சியங்கள் ஐ நா செயலரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை மற்றும் விசாரணைகளில் இடம்பெறும். நீங்கள் அனுப்பும் சாட்சியங்களைப் பொறுத்தே போர்க்குற்ற விசாரணைக்கான அடுத்த கட்ட நகர்வை ஐ நா சபையினால் முன்னெடுத்துச் செல்ல முடியும். நாம் இதை செய்ய தவறுவோமாயின் போதுமான சாட்சியங்கள் இல்லை ஆதாரம் இல்லை என்று எமது போர்க்குற்ற விசாரணைகளுக்கான வேண்டுகோள்கள் ஐ நா சபையினால் நிராகரிக்கும் நிலை தோன்றலாம். இல்லையேல் ஐ நா தன்னிடம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் விருந்தோம்பல் கலாசாரத்தையும், பகிர்ந்து உண்ணும் பண்பாட்டையும் உள்ளம் மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார் பிரதமரும், பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண. இவர் கொழும்பு-பம்பலப்பிட்டியில் உள்ள கதிரேசன் மண்டபத்தில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதே இவ்வாறு உள்ளம் நெகிழ்ந்து பேசினார். அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு: நான் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மைய நாட்களில் விஜயம் செய்திருக்கின்றேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களை சந்தித்து இருக்கின்றேன். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து தேநீர் …
-
- 7 replies
- 2k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 தந்தை செல்வா நினைவுத் தூபியிருக்கும் வளாகத்தினுள் நின்ற மரங்கள் விஷமிகள் குழுவொன்றினால் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோசமான செயல் குறித்து தாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தந்தை செல்வா அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தூபியின் வளாகத்தில் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வாழை, சவுக்கு, தென்னை உள்ளிட்ட பல மரங்கள் நாட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இங்கு நின்ற ஏராளமான வாழைகள் குலைகளுடன் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளதோடு தென்னைகளின் ஓலைகளும் வெட்டியெறியப்பட்டுள்ளன. வாழைக்குலைகள் திருடப்பட்டுமுள்ளன. மரங்களுக்கு நீரிறைப்பதற்காகச் சென்றபோதே தெரியவந்தது.யாழ் .பொது நூலகத்தின் பின்புற வாயிலினூடாக சென்ற விஷமிக…
-
- 0 replies
- 678 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 தாய்லாந்து பொலிஸார் நேற்றுமுன்தினம் மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர். மலேசிய - தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோங்ளா, ஹட்யை ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது செய்தபோது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று தாய்லாந்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர்களில் பெண்கள், ச…
-
- 0 replies
- 835 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010 யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார். யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும். எதிர்வரும் 11 ஆம் திக…
-
- 0 replies
- 514 views
-
-
பொலிஸ்காரரின் பல்லை போதையில் அடித்து உடைத்த விமானப் படை சிப்பாய்கள் கைது! சனி, 30 அக்டோபர் 2010 10:28 பொலிஸ்காரர் ஒருவரின் பல்லை மதுபோதையில் அடித்து உடைத்த விமான படை சிப்பாய்கள் இருவர் கல்கிசை பொலிஸ் நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இரத்மலானை விமான படை முகாமில் கடமையாற்றுபவர்கள் ஆவர். கல்கிசை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் ஒருவர் நேற்று மாலை கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர்களால் தாக்கப்பட்டார். tamilcnn.com
-
- 1 reply
- 567 views
-
-
முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்து வருகிறது. ஹிட்லரின் ஆட்சிபோலவே இலங்கை அரசின் ஆட்சியும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய மங்கள சமரவீர.. முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்து வருகிறது. இச்சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு லட்சம் பேரைத்திரட்டி எதிர்வரும் டிசெம்பர் 10ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். …
-
- 0 replies
- 577 views
-
-
ஈழத்தமிழ் இராச்சியங்கள்'' ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன. இவற்றில், பல்லவத்தில் நல்லூரின் இராசதானி அமைந்திருந்தது. போர்த்துக்கீசர் வருகையின்போது பேரரசன் பரராசசேகரன் நல்லூரில் அரியணையில் வீற்றிருந்தான். போர்த்துக்கீசரினால் வெல்ல முடியாத படை பலமும், நாட்டுப்பற்றும், மக்களின் அரசு பக்தியும் காணப்பட்டதால், அவர்களால் பல்லவத்தினை வெற்றி கொள்ளமுடியவில்லை. நூற்றுப் பதினைந்து வருடங்களின் பின்னர், நாட்டுப்பற்றற்ற நயவஞ்சகர்கள் போர்த்துக்கீசருடன் உறவாடி, ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய கொடுமை தாங்க முடையாமல் மக்…
-
- 8 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29, 2010 பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது, களனியில் பெற்றோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டது ஆகியன தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். இதில் ரம்புக்வெல ஒரு ஊடகவியலாளரை பார்த்து நீங்கள் காணாமல் போகும் நிலைக்கு இன்னும் வரவில்லை என மிரட்டியுள்ளார். கேள்வி: களனியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடைபெற்றபோது பொலிஸார் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயற்படுவது முறையா? பதில்: இது குறித்த அறிக்கை எமக்க…
-
- 3 replies
- 913 views
-
-
http://www.yarl.com/files/101026_colombo_reporter.mp3
-
- 5 replies
- 708 views
-
-
தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்? ராம் – சரி. வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்? ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என…
-
- 6 replies
- 1.5k views
-
-
இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகித்த நோர்வே! வியாழன், 28 அக்டோபர் 2010 15:49 நோர்வே இறுதி யுத்தத்தின்போது இலங்கைக்கு ஆயுதங்களை இரகசியமாக விற்பனை உள்ளது என்று சந்தேகிக்கப்படுகின்றது. நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களில் ஒன்றான Norwegian Church Aid வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இலங்கைக்கு நோர்வே இரகசியமான முறையில் ஆயுதங்களை விநியோகித்து உள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே அமெரிக்காவுக்கு ஏராளமான ஆயுதங்களை விநியோகித்து உள்ளது என்றும் நோர்வேயின் ஆயுதங்களின் உதவியுடன் ஈராக்குடனான அமெரிக்காவின் யுத்தத்தில் 200 ஈராக்கியர்கள் குறைந்தது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இம்மனிதாபிமான அமைப்பின் செயலாளர் …
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கையில் பழைமையான தமிழ் கல்வெட்டு மாயம்? Last Updated : 29 Oct 2010 03:33:54 PM IST கொழும்பு, அக்.29- இலங்கையில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்த பழைமையான தமிழ் கல்வெட்டு காணாமல் போய்விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திசமஹாராம பகுதியில் ஜெர்மனி அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டு திடீரென காணாமல் போயுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் பழங்கால துறைமுகத்துடன் தமிழர்களுக்கு இருந்த தொடர்புக்கு, காணாமல் போன கல்வெட்டு முக்கிய ஆதாரமாக இருந்தது என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி
-
- 2 replies
- 1.3k views
-
-
நீங்கள் படங்களில் பார்ப்பது ஆதிவாசிகள் குடியிருக்கும் பிரதேசம் என்று எண்ணி விடாதீர்கள் மேலதிக படங்கள் ... http://www.tamilcnn.net/detailnews.php?id=566#
-
- 2 replies
- 2.1k views
-
-
-
- 20 replies
- 11.7k views
-
-
வட மாகாணத்தில் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாத் தலமான காரைநகர் கசூரினா கடற்பகுதிக்குச் செல்லும் வீதி கொங்கீரிட் கலவையால் புதிதாக அமைக்கப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ ஆகியோரால் இன்று மாலை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய வீதி 500 மீற்றர் நீளமும் 8 மீற்றர் அகலமும் கொண்டது. இருபுறமும் அழகிய நடை பாதையையும் கொண்டுள்ளது. இவ்வீதித் திறப்பு விழாவில் யாழ்.மாநகர சபை முதல்வர் உட்பட சிவில் அதிகாரிகள் மற்றும் படைத் தரப்பு அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். http://www.tharavu.com/2010/10/blog-post_2593.html
-
- 4 replies
- 1.5k views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29, 2010 இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால் இலங்கை நிலைவரம் குறித்து கியூ பிரிவுப் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் நடந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் படகு மூலம் இராமேஸ்வரம் வந்து பொலிஸ் விசாரணைக்குப் பின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். போர் முடிவுக்குப் பின் அகதிகள் வருகையும் முற்றிலும் குறைந்தது. தமிழக முகாம்களில் தங்கிய அகதிகள் பலர் அரசின் அனுமதி பெற்று இலங்கை திரும்பினர். ஏராளமானோர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனராம். ஆனால் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகின்றது எனவும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாகவுள்ள இலங்கைத் தமிழர்கள் …
-
- 2 replies
- 953 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி எமது நாட்டுக்கு எதிராக காட்சிகளை ஒளிபரப்பியது. இது பொய்யானது என்றும் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் சவால் விடுத்தோம். ஆனால் அவர்களால் உண்மை…
-
- 3 replies
- 881 views
-