ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
தமிழா நீ இன்னமும் என்ன செய்துகொண்டிருக்கிறாய் உன் இனத்தை அழித்தவன் சுதந்திரமாய் நடமாடித்திரிகின்றான்தமிழா நீ இன்னமும் என்ன செய்கின்றாய்??? என்னசெய்யப்போகின்றாய் தமிழா உன் மண்ணை மீட்டெடுக்க- நீ என்ன செய்யப்போகின்றாய்??? எங்கு போய் எவரிடம் செல்லியும் பயனில்லை வீறுகொள் தமிழா உன் இனத்தை அழித்தேவனுமே இனி தலைதூக்கி நடக்கக்கூடாது.
-
- 0 replies
- 751 views
-
-
காணிகளை விடுவிக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்வதற்கான வாய்ப்புத் தொடர்பாக பேசப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்கு இராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதி என்ற வகையில் உங்களின் மதிப்பீடு என்ன? நாங்கள் விட…
-
- 4 replies
- 601 views
-
-
இலங்கையில் இறுதி யுத்தம் நடை பெற்று கொண்டிருந்த போது தமிழர்களை அழிக்க இலங்கை பவுத்த பேரினவாத சிங்கள அரசு ஒரு செகண்டுக்கு நாலாயிரம் ரூபாய்களை செலவழித்துள்ளது என லக்ஷ்மன் யப்பா அபெய்வர்டென .தெரிவித்துள்ளார் . இலங்கையில் பட்டினியால் பல்லாயிரம் மக்கள் தவிக்கையில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த சிங்கள அரசுகள் மக்கள் வரிப்பணத்தினையும் உலக நாடுகளிடம் இலங்கையை அடகுவைத்து தமிழர்களை அழித்தொழித்துள்ளது குறிப்பிடத்தக்கது . Short URL: http://www.ethirinews.com/?p=7429
-
- 0 replies
- 626 views
-
-
"எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்", "அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்" என்று குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. - http://www.malarum.com/article/tam/2015/01/05/7888/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E…
-
- 0 replies
- 202 views
-
-
விரட்டி விரட்டி வீடியோ எடுத்த தமிழ் ஊடகவியலாளர்! தப்பி ஓடிய சிங்கள புலனாய்வாளர்!! வன்னியில் சம்பவம் வவுனியா வடக்கு பிரதேசத்தில் இந்தியாவில் இரந்து நாடு திரும்பிய மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்காக சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுத:து செய்தி செகரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வுப்பிரிவை சேர்ந்த நபரை ஊடகவியலாளர் துரத்தி துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காஞ்சிம்மோட்டை காட்டுப்பூவரசன்களத்தில் பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்கள் தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு வன இலாகாவினர் தடை செய்து வருகின்றனர். இந் நிலையில் குறித்த மக்களின் இன்னல்களை தொடர்பில் ஆவணப்படம் ஒன்றினை எடுப்பதற்காக வவுனியா ஊடகவ…
-
- 0 replies
- 680 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 12:27 PM (எம்.மனோசித்ரா) சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு…
-
- 9 replies
- 571 views
- 1 follower
-
-
Wednesday, June 1, 2011, 0:40தமிழீழம் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்த…
-
- 0 replies
- 493 views
-
-
08 JUN, 2023 | 09:44 PM யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் எனவும் , ஏற்கனவே போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் ,…
-
- 2 replies
- 507 views
- 1 follower
-
-
இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்க இந்தியா இணக்கம்! இலங்கைப்படையினருக்கு தொடர்ந் தும் இராணுவப் பயிற்சிகளை வழங்க இந்தியா உடன்பாட்டுக்கு வந்திருக் கின்றது என்று இந்தியத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச் சின்போதே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பேச்சில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து, நீண்ட கலந்துரையாடல் நடைபெற்ற தாக வெளிவிவ கார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கை இந்திய கூட்டுக்கடற் படை ரோந்து தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ரோந்து குறித்துப் ப…
-
- 15 replies
- 2.6k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 00:09 GMT ] [ கார்வண்ணன் ] தனக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி நாட்டுத் தூதுவரை பாதுகாப்பு அமைச்சுக்கு அவசரமாக அழைத்து கண்டித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து கடும்தொனியில்- எச்சரிக்கை விடுக்கும் இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை ஜேர்மனித் தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருக்கு அனுப்பியிருந்தார். இதையடுத்து அவரை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்த கோத்தாபய ராஜபக்ச, தனக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதன் மூலம் இராஜதந்திர வழி முறையை மீறியுள்ளதாக கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றிக் கவலை கொண…
-
- 0 replies
- 750 views
-
-
தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினால் அமோக வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொ…
-
- 1 reply
- 416 views
-
-
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மதஸ்தலம் அமைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு முல்லைத்தீவு, குருந்தூர் மலைப்பகுதியில் அனுமதியின்றி மதஸ்தலங்களை அமைக்க முடியாதெனவும், இருக்கும் சைவ ஆலயத்தினை மக்கள் தடையின்றி வழிபட முடியுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 4 ஆம் திகதி பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந…
-
- 1 reply
- 610 views
-
-
கட்டுநாயக்கா தாக்குதலில் சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கு ஏற்;பட்ட பாரிய இழப்புகள் மூடிமறைப்பு. - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 11:23 நேற்று அதிகாலை 12.45 மணியளவில் சிறிலங்காப் படையினரின் அதியுயர் பாதுகாப்பு தளமான கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் போது சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கும், இராணுவத்தினருக்கும் பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலின் போது இரண்டு போர் உலங்கு வானூர்த்திகள் மாத்திரமே சேதமடைந்தன என சிறிலங்கா அரசாங்க தரப்புத் தெரிவித்தாலும், தளப்பகுதி தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததாகவும் அப்பிரதேசம் புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் உடனடியாக வெளிவந்த …
-
- 0 replies
- 1.4k views
-
-
கொக்கச்சான்குளம் தமிழ் கிராமம் கலாபோவசேவ என பெயர் மாற்றம்- 165 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்! Thursday, June 9, 2011, 18:26 தமிழீழம், முதன்மைச்செய்திகள் நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராமசேவை அலுவலர் பிரிவைச்சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற தமிழ் கிராமம் இன்று கலாபோவசேவ என்ற சிங்களகிராமமாக மாறியுள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்தார். செழிப்பு மிக்க வயல் நிலங்களை உள்ளடக்கிய கொக்கச்சான்குளம் கிராமத்தில் இன்று சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.வவுனியா சேமமடு வழியாக ஊத்துக்குளம் சென்று அரியகுண்டான் கிராமம் அருகே அமைந்துள்ள …
-
- 0 replies
- 720 views
-
-
தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா, “அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது. விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. …
-
- 7 replies
- 1.4k views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவை இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவது சாத்தியமற்ற விடயம் - ஜஸ்மின் சூக்கா Published By: Rajeeban 25 Jun, 2023 | 10:02 AM இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது ஜேவிபி காலத்தில் கோட்டாபய ர…
-
- 2 replies
- 298 views
-
-
Monday, June 13, 2011, 21:58உலகம், தமிழீழம் நாடு கடந்த அரசாங்கத்தின் ஏப்ரல் 02, 2011 அறிக்கையின்படி சத்தியப்பிரமாணம் செய்யாத காரணத்தால் தாமாகவே பதவி துறந்தார்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் வெற்றிடங்கள், தேர்தலில் போட்டியிட்டும் தெரிவு செய்யப்படாமல் அடுத்த நிலையிலுள்ளவர்களாலும், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டவர்களின் தொகுதிகளில் போட்டியிருப்பின் தோ்தல் மூலமும் நிரப்பப்படும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் திருமதி ஸ்ரீதாஸ், 11-06-2011 அன்று ஒப்பமிட்டு 13-06-2001 அன்று வெளியீட்டிற்காக உள்துறை அமைச்சின் ஒன்ராறியோ செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுளளது. ந…
-
- 0 replies
- 568 views
-
-
மைத்திரி அரசின் மூன்று அதிரடி நடவடிக்கைகள் JAN 22, 2015 | 0:03by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றும், வெளிவிவகாரச் சேவையைச் சாராத, அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சித்திராங்கனி வகீஸ்வரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 57 தூதுவர்களுக்கு இதற்கான உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களை பெப்ரவரி 28ம் நாளுக்குள் நாடு திரும்புமாறும் கோரப்பட்டுள்ளது. 54 நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களில், முன்னைய அரசாங்கத்தினால் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு…
-
- 0 replies
- 640 views
-
-
ஜனாதிபதிக்கும், கனேடிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு! அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் இன்று(திங்கட்கிழமை) நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எவைய…
-
- 2 replies
- 655 views
-
-
யாழ். புத்தூர் தாக்குதல் : தொடரும் கைதுகள் - ஒரே ஊரை சேர்ந்த 58 பேர் இதுவரை கைது ! 04 JUL, 2023 | 12:20 PM யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 25 பெண்களும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் ஏனைய 06 ஆண்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. …
-
- 0 replies
- 322 views
-
-
விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மாத்திரம் விடுக்கப்பட்ட சவால் அல்ல [05 - April - 2007] * இது அரசியல் ரீதியாகத் தனிப்பட்ட விதத்தில் பிச்சுப் பிடுங்கும் வேளையல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வேளையாகும். பிரச்சினை இயல்பான வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதைப் புரிந்துகொண்டு நாட்டின் பொது நன்மையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது முக்கியமானது -விக்டர் ஐவன்- கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்ன? விடுதலைப் புலிகளிடம் இலகுரக விமானங்கள் உள்ளன என்பது ரகசியமன்று. பாதுகாப்புத்துறை தொடர்பான ஆய்வாளர் இக்…
-
- 3 replies
- 1.3k views
-
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து விபத்து – பலர் காயம் October 2, 2018 பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து மாடு ஒன்று பாதையின் குறுக்கே வந்ததனால் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் பூநகரி மற்றும் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/98016/
-
- 1 reply
- 391 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 10:29 AM இளைஞன் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியைச் சேர்ந்த ஜே.தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் நேற்று புதன்கிழமை இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் , இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொல…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
நான்காம் கட்ட ஈழப்போரும் வேறுபட்ட சமர் உத்திகளும் -அருஸ் (வேல்ஸ்)- தரைப்படைகளின் கடுமையான மோதல்கள், விமானத்தாக்குதல்கள், கடற்படையினரின் தாக்குதல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அதனால் அல்லல்படும் மக்களும், தனிமைப்படுத்தப்பட்ட யாழ். குடாநாடு, ஏதிலிகளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் என ஒரு முழு அளவிலான போருக்குள் இலங்கை சிக்கியுள்ளது. எனினும் எந்தத் தரப்பாலும் அது போராக பிரகடனப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போரும் சமாதானமும் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றது, விடுதலைப் புலிகளும் தற்காப்புத் தாக்குதல்களையும், அழித்தொழிப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் இந்த போரில் இருதரப்பினதும் சமராடும் உத்திகள் (வுயஉவiஉள) முற்றிலும் வேறுபட்டவை. அரசு வி…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகளின் நிதிக்கு நடந்தது என்ன? – விசாரணை நடத்தப் போவதாக ரணில் அறிவிப்பு FEB 02, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாவனெல்லையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “கடந்த பல ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அவர்களின் நிதி மற்றும் முன்னைய அரசாங்கத்துடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படும். விடுதலைப் புலிகளின் நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ள விரும்புகிறது. ஊழல் வ…
-
- 2 replies
- 990 views
-