ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
புதுக்குடியிருப்பிற்கு மீள்குடியேற்றம் இல்லையாம்!! lமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டினை அரசு மேற்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த போர் நடவடிக்கை காரணமாக வன்னிப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட போது புதுக்குடியிருப்புப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களும் இடம்பெயர்ந்து இறுதியில் வவுனியா நலன்புரி நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டு இரண்டு வருடங்களை அண்மித்துள்ள நிலையிலும் குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படமாட்…
-
- 0 replies
- 922 views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் பயணம் இன்று 25வது நாளைத் தொட்டிருக்கின்றது. கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கடும் மழை இன்று காலையில் சற்று ஓய்வடைந்து காணப்படுகின்ற போதிலும், மீண்டும் மழை பெய்வதற்கான வானிலைத் தோற்றம் இருப்பதாக சிவந்தனுடன் இணைந்து நடப்பவர்கள் கூறுகின்றனர். மழைக் குளிரினால் உடலும், கால்களும் விறைப்படைவதனால் மிகுந்த சிரமத்தின் மத்தியில், ஆனால் மன உறுதியுடன் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார். இன்று காலையில் பரிஸ் நகரில் இருந்து சென்ற இளையோர் உட்பட 8 பேரில் சிலர் சிவந்தனுடன் இணைந்து நடக்க ஏனைய சிலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல…
-
- 0 replies
- 452 views
-
-
யாழ். இயக்கச்சிப்பகுதியில் அமைந்திருந்த பயிற்சிக்கல்லூரி மீது சிறிலங்கா வான்படையினர் 17.08.2006 அன்று நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் வீரசசாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் இராணிமைந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் தற்போது சிறிலங்காவின் தென் பிராந்திய கடற் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது! திகதி:17.08.2010, விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு மலேசியாவில் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ என்ற கப்பல் தற்போது தென்பகுதியில் கடல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. புலிகளின் இந்தக் கப்பல் சில மாதங்களுக்கு முன்னர் மலேசியாவில் கைப்பற்றப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சிறிலங்காவின் தென் பிராந்தியக் கடற்படை தலைமையகத்தினால் திருத்தியமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்போது காலி துறைமுகத்தில் தரித்துள்ளது. இது தென்…
-
- 0 replies
- 653 views
-
-
தன்னுடைய 11 உறவினர்கள் வரை கப்பலில் வந்துள்ளதாக கூறுகின்ரார் இலண்டனில் வசிக்கும் 19 வயது மாணவி நிரஜா கணேசலிங்கம். இவர் மேற்கு இலண்டனில் வசித்து வரிகின்றார். தன்னுடைய உறவினர்களில் பலர் போரில் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்துள்ளதாகவும் கூறும் இவர் ஊரில் இருந்து தனக்கு அடிக்கடி உதவி கோரியும் காப்பாற்றுமாறும் தனது உறவினர்கள் முன்னர் பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சி நியூஸ் இற்கு அவர் தெரிவித்துள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு கூறபப்ட்டுள்ளது. ஈழ நாதம் http://cnews.canoe.ca/CNEWS/Canada/2010/08/17/15047551.html
-
- 0 replies
- 1k views
-
-
ஈழநாதம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17, 2010 அகதி அந்தஸ்து கோருவது ஓர் கிரிமினல் குற்றமல்ல அது சட்டரீதியானது இவ்வாறு கூறியுள்ளது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம். இந்த அமிப்பு தொடர்பாக பேசிய ஆண்ட்ரே மக்கே கனடாவிற்கு வந்துள்ள அகதிகள் உண்மையில் அகதிகளா அல்லது குடிபெயர் மக்களா என்ற வேறுபாட்டை அறிய வேண்டும் எனவும் கூறியுள்ளது. இலங்கைத்தமிழர்கள் அகதியாக 64 நாடுகளில் உள்ளனர் என்றும் தமது கணிப்பின்படி இன்னமும் 64 நாடுகளில் 146,098 பேர் அகதிகளாக உள்ளனர் என்றும் கூறியுள்ளது. இந்தியா 73269 பிரான்ஸ் 20464 கனடா 19143 ஜேர்மனி 12248 பிரித்தானியா 8615 சுவிஸ் 2836 மலேசியா 2132 அவுஸ்ரேலிய 2070 அமெரிக்கா 1561 இத்தாலி 964 ஆகிய…
-
- 0 replies
- 600 views
-
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17, 2010 உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுமால் போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செய…
-
- 6 replies
- 2k views
-
-
இன்று முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு நினைவு நாள் திகதி:16.08.2010, உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற…
-
- 20 replies
- 1.4k views
-
-
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர். வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நெஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனேடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்…
-
- 0 replies
- 905 views
-
-
யாழ்ப்பாணம் கொக்குவிலில் 2 சிங்கள வர்த்தகர்கள் இனந்தெரியாதவர்களால் வெட்டப்பட்டுள்ளனர்‐ திட்டமிட்ட சதியா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது‐ GTNசெய்தியாளர் 16 August 10 03:25 pm (BST) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 2 சிங்கள வர்த்தகர்கள் இனந்தெரியாத நபர்களால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளனர். கொக்குவில் ஆடியபாதம் வீதிப் பகுதியில் மரத் தளபாட வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிங்கள வியாபாரிகளே இன்றிரவு 7மணியளில் வெட்டப்பட்டுள்ளனர். நான்கிற்கும் அதிகமான முகத்தை கறுப்பு துணிகளால் மூடிய மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயததாரிகளே இவர்களை வாள்களால் வெட்டிவிட்டு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இரண்டு சிங்கள வியாபரிகளும் மொறட்டுவைப் பகுதியைச் சேர்ந்தவர…
-
- 1 reply
- 1.4k views
-
-
கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை - சேரமான் யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும்இ பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது. வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே போர்க்களத்தில் இருந்து தனது கவனத்தை புகலிட தேசங்களை நோக்கி சிங்களம் குவிமையப்படுத்திக் கொண்டதோடுஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைத்தெறியும் போர்வையில்இ புகலிட தமிழீழத் தேசிய அமைப்புக்களையும்இ தமிழகத்தின் தமிழ்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு. இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி,எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண…
-
- 13 replies
- 2.3k views
-
-
... பர்மா பசாரிலும், தேக்கா மாக்கட்டிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஹெலிகொப்ரலில் ஒன்றை வாங்க முயற்சித்தாராம். http://www.tamilmirror.lk/index.php?option=com_content&view=article&id=5641:2010-08-15-09-30-29&catid=1:latest-news&Itemid=107
-
- 40 replies
- 5.2k views
-
-
ம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து அடைந்திருக்கும் ஈழத் தமிழர்கள் 490 பேரில் இருவர் ஊடகவியலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்களை அவர்களுடைய ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்திருக்கின்றார்கள். யுத்தக் குற்றச் சாட்சிகள் என்கிற காரணத்தினால் உயிருக்குப் பயந்தே பேராபத்தான இக்கடற்பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரையும் கனேடிய தமிழ் பேரவையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8477:2010-08-16-14-28-11&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், மஹிந்த அரசின் இந்நாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்க உள்ளார். கடந்த கால யுத்தங்களின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் சாட்சியங்கள் எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் செவிமடுக்கப்பட உள்ளன. இந்நிலையில் அவரும் சாட்சியம் வழங்கத் தயாராக உள்ளார் என்றும் ஆணைக்குழுவிடம் இதற்கான அனுமதியை ஏற்கனவே கோரி உள்ளார் என்றும் மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். http://ww…
-
- 0 replies
- 924 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களின் உறவினர்களுக்கு பயணச்செலவுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை ஐசிஆர்சி ஆரம்பித்துள்ளது 16 August 10 10:37 am (BST) விடுதலைப்புலிகளின் சந்தேக நபர்கள் என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட, சந்கேதநபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பயண செலவுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருவதால், செஞ்சிலுவைச் சங்கம் இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது. விடுதலைப்புலிகளின் சந்தேக நபர்கள் பொலன்னறுவை, வெலிகந்த, ரத்மலான, களுத்துறை, ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தடுத்து…
-
- 0 replies
- 581 views
-
-
தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து கலந்துரையாடுவதற்கான எவ்வித அழைப்பிதழ் எதுவும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார். தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்க் கட்சிகள் ஒன்றினைந்த ‘‘தமிழ்க் கட்சிகளின் அரங்கம்’’ ஐந்தாவது தடவையாக மட்டக்களப்பில் கடநத சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப் (நாபா), டெலோ மற்றும் புளொட், …
-
- 1 reply
- 773 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 468 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 92 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 897 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்றும் சிலர் இணைந்து நடப்பதுடன், ஏனைய பலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர். இன்று மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருவதாலும், சிறிய வீதிகள் ஊடாக சிவந்தன் நடந்து செல்வதாலும், பலர் இணைந்து நடக்க முடியாது ஒரு சிலர் மட்டுமே இணைந்து நடந்து செல்ல ஏனையவர்கள் ஊர்திகளில் பின்தொட…
-
- 0 replies
- 530 views
-
-
பரமேஸ்வரனின் வழக்கில் ஏற்பட்ட வெற்றியைக் கருத்தில் கொண்டு கேட்கின்றேன். புலம்பெயர் தமிழ்மக்களைப் பயங்கரவாதிகள் என்ற வகையில் எழுதுகின்ற ஊடகங்கள், அரசியல்வாதிகள், தொடர்பாக அந்தந்த நாடுகளில் வழக்குப் பதிய முடியாதா? ஆதாரமற்ற வகையில் கண்டமேனிக்கு எழுதுகின்ற இவர்களின் வாயைப் பூட்ட நாம் ஏதாவது செய்தாக வேண்டும். முக்கியமாக தமிழ்மக்களை ஏற்றிய கப்பல் ஒன்று வருவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி, அவர்களின் வருகைக்குப் பின்னர் முக்கியத்துவமாக மாறக்கூடும். அந்த நிலையில் எம் இனத்தைப் பற்றி அவதூறாக நிச்சயம் எழுதுவார்கள். அந்த நிலையைத் தடுத்து அவர்களுக்கு எம் கோபத்தை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் அவசியமாகும். இந்த வழக்கில் தோற்பது வெல்லுவது என்பது 2ம் பட்சம். ஆனால் நாங்கள் இவர்களின் நடவடிக…
-
- 19 replies
- 2k views
-
-
இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம். ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவுதான் ஜெயந்தி அல…
-
- 10 replies
- 1.7k views
-
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சமீபமாக நேற்று நள்ளிரவு வீடு புகுந்து நகைகள், பணம் கொள்ளை! பெண்களுக்கு வாள் வெட்டு: திகதி:15.08.2010, நல்லூர், வைமன் வீதியில் நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வீடு புகுந்த ஆயுதக்குழு ஒன்று அங்கிருந்த பெண்களை வாளால் வெட்டிவிட்டு நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. இந்தத் திகிலூட்டும் கொள்ளைச் சம்பவம் மக்கள் மிகுதியாக நெருக்கமாக வாழும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த நிலையில் கே.பரமேஸ்வரி (வயது 60) என்பவரும் மற்றும் எஸ்.சுரேணுகா (வயது 24) ஆகிய இருவரும் நேற்று அதிகாலை யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர். இந்தச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது : வாள்கள…
-
- 12 replies
- 1.4k views
-
-
ஜிஎஸ்பி+ வரிச்சலுகை விலக்கம் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஜி எஸ் பி+ எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை 15.8.10 அன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவது அங்கு பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றங்கள் தேவைகள் என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியாது என்று அரசு கூறியது. நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த எழுத்துபூர்வமான உத்திரவாதத்தை அரசு அளிக்காத நிலையல். வரிச்சலுகையை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 987 views
-
-
இலங்கை - இந்திய மக்களுக்கிடையில் சரியானதொரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார். இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இந்திய உயஸ்தானிகராலயத்தின் ஆலோசனை பிரிவை யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் திறக்கவுள்ளதாகவும் கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் யாழ், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதுடன் தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்கும…
-
- 2 replies
- 977 views
-
-
தலைமன்னார்இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகும் : -இந்திய உயர்ஸ்தானிகர்- திகதி:16.08.2010, இந்தியாஇலங்கை இடையேயான பாரம்பரிய தொடர்புகளை மீளவலுப்படுத்துவதன் ஒரு கட்டமாக கொழும்புதூத்துக்குடி, தலைமன்னார்இராமேஸ்வரத்திற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார் 64 ஆவது இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது இந்திய தேசியக் கொடியேற்றி ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் சுதந்திர தின உரையினை வாசித்தபின்னர் இந்தியஇலங்கை உறவு குறித்து உரை நிகழ்த்துகையிலேயே உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில…
-
- 0 replies
- 409 views
-
-
இன்று காலை மன்னார் அரச செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மாந்தை மேற்கு பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது விவசாய பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் மன்னார் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். எனினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, இன்று காலை 9.30 மணியளவில், அரசாங்க அதிபரை நேரில் சந்திக்க மன்னார் அரச செயலகத்திற்குச் சென்றனர். கடந்த காலங்களில் தம்மைப் பற்றியும் தமது அரச அலுவலகம் பற்றியும் தவறான செய்திகள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 489 views
-