Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 வது திருத்த சட்டட்தின் கீழ் தீர்வு மஹிந்த இணக்கம் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 10, 2010 MR and Sngh இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம். சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார். போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடி…

    • 3 replies
    • 905 views
  2. புதைகுழிகள் மீது கட்டப்படும் சீன நெடுஞ்சுவர்கள் Posted by: on ஜூன் 10, 2010 சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதிலும், அடக்கு வதிலும், இந்தியா - சீனாவின் பங்களிப்பு எவ்வாறு இருந்ததென்பதை ஈழத் தமிழினம் நன்கறியும். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்த கணத்திலிருந்து, இவ்விரு வல்லரசாளர்களும் தமக்குள் முட்டிமோதுவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். 2004இல் 0.7 பில்லியனாக இருந்த சிறீலங்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. விசேட பொருளாதார வலயம், 1000 ஏக்கர் ரபியோகா பண்ணை அம்பாந்தோட்டை துறைமுகம், 900 மெகாவட் நுரைச்சோலை அனல் மின் நிலையம், கொழும்பு - கட்டு நாயக்கா துரிதகதிப்பாதை…

  3. பொன்சேகா பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்வார். வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 10, 2010 கென்யாவில் இவ் வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை பிரதிநிதிகளில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்தக் குழுவினர் தெரிவு செய்யப்பட்ட போது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளும் கட்சியின் சார்பில் இருவரும் எதிர்க்கட்சிகள் சார்பில் இருவரையும் தெரிசெய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதன் படி ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவு செய்யப்பட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E…

  4. கொழும்பு வெள்ளவத்தையில் தனது தாயிடம் 10 லட்சம் ரூபாவை கப்பமாக பெறமுயன்ற மகனும் அவரது நண்பர் 4 பேரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக வெள்ளவத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மகனை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும் அவரை மீட்க 10 லட்சம்ரூபாவை பெற்றுத் தருமாறு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக அறிவித்தாக வெள்ளவத்தையை சேர்ந்த பெண்மணி ஒருவர் வெள்ளவத்தை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப காவற்துறை பரிசோதகருமான நளின் பிரியந்த தலைமையிலான காவற்துறை குழுவினர், மீண்டும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால், கப்ப பணத்தை 5 லட்சமாக குறைக்குமாறு குறித்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கியுள்…

  5. ஓங்கி ஒலித்த தமிழனின் எதிர்ப்புக் குரல் புதன், 9 ஜூன் 2010( 16:55 IST ) FILE ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்து முடித்து, அம்மக்களின் வாழ்க்கையை சின்னா பின்னப்படுத்திய இனவெறி சிறிலங்க அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ச டெல்லி வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு, இலங்கையில் தங்கள் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள், அதற்கு நீதி பெறாமல் விடவும் மாட்டார்கள் என்பதையே பறை சாற்றுவதாக இருந்தது. சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு அமைப்புகள் இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நடத்தியுள்ள கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும், அதில் ஈடுபட்டு பல…

  6. ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!! தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகில் 300 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த படகி…

  7. குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம் வியாழக்கிழமை, ஜூன் 10, 2010, 9:07[iST] கொழும்பு: கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் …

  8. வியாழக்கிழமை, 10, ஜூன் 2010 (11:46 IST) டக்ளஸ் தேவானந்தா கைதாவாரா? ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் பரவுகிறது. இத்தகவலால் பரபரப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இவர் மீதான கொலை,கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிக்கப்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா. தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி நேற்று ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார். அம்மனுவில், ’’இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்ப…

  9. தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்கள் யார்? BBC Harftalk

    • 3 replies
    • 1.7k views
  10. இந்தியா வந்திருக்கும் டக்ளஸை கைது செய்யக் கோரி வழக்கு திகதி: 09.06.2010 // தமிழீழம் ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகமக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு: இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார். 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டு…

  11. தமிழர்கள் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு திருப்பி அளிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு, டி.ஆர்.பாலு தலைமையில் இன்று சந்தித்தது. இதன்போது, இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை, அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர் மறுவாழ்வு பணிகளை விரைவுப்படுத்துமாறும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், "ராஜபக்ஷவுடனான சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே…

  12. இலங்கைப் படுகொலை குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது: லூயிஸ் ஆர்பர் குற்றச்சாற்று புதன், 9 ஜூன் 2010( 16:30 IST ) FILE இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று …

    • 0 replies
    • 335 views
  13. இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து புதுடெல்லி , புதன், 9 ஜூன் 2010( 15:51 IST ) தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு, முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராஜபக்சவுடன், பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்த நிலையில், இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. இலங்கை அதிபராக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நான்கு நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார் ராஜபக்ச.அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜபக்ச, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை முகாம்களில் அடைக்…

    • 0 replies
    • 605 views
  14. தமிழ் மக்களுக்கான தேவையை அறிந்து தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றிக்கொள்ளுமாயின் சர்வதேசத்திடம் இலங்கைக்கு உதவிகோர தயாராகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் கடமையிலிருந்து அரசாங்கம் விலகக் கூடாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சம்பந்தன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இக்கருத்தை வலியுறுத்தினார். அங்கு அவர் உரையாற்றுகையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டு அங்கு தமிழ் மக்கள் எ…

    • 1 reply
    • 590 views
  15. ஆயுதக் குழுக்களுக்கு கவசமாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்2010-06-09 06:18:56 ; ஆயுதக் குழுக்களுக்கு கவசமாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் கொழும்பு, ஜூன் 9 குடாநாட்டில் தொடரும் குற்றச் செயல் களின் பின்னால் சட்ட விரோத ஆயு தக் குழுக்களும் அவர்களுக்கு கவசமாக அரசி யல் பலமும் இருப்பதையே புலபடுத் து கின்றன. ஜனநாயக நீரோட்டத் தில் தம்மை இணைத் துக்கொண்டு விட்டதா கக் கூறிக் கொள்ளும் முன்னாள் ஆயுதக் குழுக்களே இக்குற் றங் களின் பின்னால் நிற்கின்றன என்ற சந் தேகம் மக்கள் மத்தி யில் மேலோங்கி நிற்கி றது. மக்கள் தமக்கு இழைக்கப்படும் குற் றங்களை நேரடியாக பொலிஸில் முறை யிட முடியாத அளவுக்கு கண்ணுக்குத் தெரி யாத பயங்கரவாதம்…

    • 0 replies
    • 813 views
  16. அதிகளவான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர் 06 June 10 01:25 am (BST) அதிகவளான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக உயர்ஸ்தானிகராலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய கடவுச் சீட்டுடைய இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்வதாக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.எம். அம்ஸா தெரிவித்துள்ளார். நாளந்தம் 30 வீசாக்கள் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையினால் சொத்துக்களை விற்பனை செய்த தமது மருத்துவரின் நண்பர…

  17. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதியில் நேற்றிரவு கொள்ளையர்களின் கைவரிசையில் வயோதிபரான கணவனும் மனைவியும் கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வயோதிபரான இந்தத் தம்பதியினர் இரவு வேளையில் மற்றுமொரு வீட்டிற்குச் சென்று நித்திரை கொள்வது வழக்கம் என்றும் அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது திடீரென பற்றைக்குள் இருந்து வெளிப்பட்ட திருடர்கள் கணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மனைவியின் கையிலிருந்த காப்புக்காக அவரது கையைத்துண்டித்து எடுத்துச் சென்றதாகவும் தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் காயமடைந்த இந்த வயோதிபத் தம்பதியினர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…

    • 4 replies
    • 757 views
  18. செவ்வாய்க்கிழமை, 8, ஜூன் 2010 (11:27 IST) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே உருவமொம்பை எரிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், தா.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டனப்பேரணியுடன் சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட உள்ளார்கள். இதனால் இலங்கை தூதரகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் மதிமுகவின கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரித்த சிவசேனாவினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் சமத்து மக்கள் கட்ச…

    • 8 replies
    • 1.3k views
  19. ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் …

    • 8 replies
    • 2.3k views
  20. ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் சந்திக்க டி.ஆர். பாலு ஏற்பாடு இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் பயணமாக நாளை மறுநாள் டெல்லி வருகிறார். இந்நிலையில் இலங்கைத்தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ’’இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும், மறுகுடி அமர்த்தம், மறு கட்டுமான பணிகளையும் விரைவில் மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நடவடிக்கையாக, டெல்லியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசும் வகையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை முதலமைச்சர் கருணாநிதி டெ…

    • 4 replies
    • 1k views
  21. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா மகிந்தா? – இல்லை என்கிறார்கள் பல இந்தியர்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு காத்திரமான வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதனையும் செய்யப் போவதில்லை. இலங்கையின் தேசிய நல்லிணக்கம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டுள்ள கருத்துக்கும், இலங்கையின் தேசிய நலன்களில் கரிசனை கொண்ட ஏனையோரின் கருத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். ஆனால், இவ் விவகாரம் தொடர்பில் இந்தியா தனது அழுத்தங்களைப் பிரயோகி…

  22. ஈழத்தமிழர் விவகாரம் : இலங்கை கண்டிப்பாக தீர்க்க வேண்டும் : கனிமொழி ------------------------------------------------------------------------------------------------------------------------------------ http://ibnlive.in.com/videos/123500/sri-lanka-must-solve-the-tamil-issue-kanimozhi.html?from=rhs

    • 0 replies
    • 1k views
  23. ஈழத் தமிழர்கள் உரிமையை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்த, மன்மோகன் கைச்சாத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்று பி.பி.சி தொலைக்காட்சிக்குப் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோடாபய ராஜபக்ச நேர்காணல் வாழங்கியுள்ளார். இந்நிலையில் இந்தியா சென்றுள்ள ராஜபக்ச குழுவினர் இந்தியாவுடன் வர்தக ஒப்பந்தங்களும், குற்றவியல் ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. குற்றவியல் ஒப்பந்தத்தில் கைதிகள் பரிமாற்றம் பிரதானமான அம்சமாக அமைந்திருப்பதாக மேல…

  24. ராம ராவணன் என்ற மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இப்படம் தமிழ் ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கொதித்தனர். இந்த விசயம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்தப்படத்தை உலகம் முழுவதும் திரையிட விடமாட்டோம் என்று அறிவித்துள்ளார். அவர், ‘’சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.