Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்திரேலிய நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் "நாடு கடந்த தமிழீழ அரசு" தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் தங்களின் தேர்தல் பரப்புரை காணொளியை வெளியிட்டுள்ளனர்.இந்த தேர்தலில் அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து வாக்கெடுப்பின்றி ஏகமனதாக பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 4 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் 6 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 4 தமிழின உணர்வாளர்கள் கூட்டணியில் போட்டியிடுகின்றனர். 1.குலசேகரம் சஞ்சயன் இவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட கால ஆதரவாளரும்,புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டளரும் ஆவார்.இவர் நீண்ட காலமாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ப…

  2. யாழ்ப்பாணம் கோட்டை, நூலகம், துரையப்பா விளையாட்டரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் வெசாக் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு வெசாக் தின நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்த வடமாகாண ஆளுநர் திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரை பாரிய வெசாக் பந்தல்கள் மற்றும் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களில் சிறிலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தான சாலைகளை அமைத்து மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் மனங்களை வெல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுவதாக வட மாகாண ஆளநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீள் குடியேறிய…

    • 17 replies
    • 1.3k views
  3. தமிழ் மக்களின் நிலங்களைத் தொடர்ந்து அபகரித்து வரும் சிறிலங்கா அரசாங்கம் தனியாருக்குச் சொந்தமான முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தையும் அரச சொத்தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல காலமாகவே தமிழ் மக்களின் போக்குவரத்துத் தெய்வமாக விளங்கி வந்த முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய சூழலில் பல சிங்களக் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகமும் தற்போது இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டு கோயிலில் காணிக்கையாகச் சேரும் பணமும் அரச கஜானாவிற்குச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனிடையே இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலயத்திற்கு உரிமை கோரி சிலர் வந்த போதிலும் அவர்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் …

  4. தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா? லூயிஸ் ஆர்பர் கேள்வி புதன், 19 மே 2010( 17:31 IST ) FILE இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகியும், எந்த விசாரணையும் நடத்தாமல் ஐ.நா. சாதிக்கும் மெளனம், அந்தப் படுகொலையில் அதற்கும் பங்கிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது என்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் (International Crisis Group - ICG) தலைவர் லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக போரின் இறுதி கட்டத்தில் நடந்த படுகொலைக்கு சிறிலங்க இராணுவத்தின் தலைமையிடமிருந்தே உத்தரவு வந்தது என்ற ஆதாரம் சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள நிலையில்,…

    • 6 replies
    • 1.1k views
  5. இலங்கையில் முடிந்த யுத்தத்தின் காயங்கள்...ஹிலாரி இலங்கையின் அனைத்து போர்க் குற்றங்கள் தொடர்பாகவும், ஐ.நா.சபை விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும், ‘’கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட போர்முறை குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். யுத்தம் நிறைவடைந்த பின்னர், அதன் காயங்கள் தொடர்ந்தும் காணப்படுகிறது. இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை முன்வைப்பதன் மூலமே அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும். யுத்த காலத்தில் எத்தனை ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறைத்து, தீர்வுத்திட்டம் ஒன…

  6. பிரபாகரன் தப்புவதற்கு பல வழிகளை வைத்திருந்தார் றொகான் ‐ இப்போது இத்தகவலை வெளியிட்டிருப்பது சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது ‐ இராணுவ ஆய்வாளர் 21 May 10 12:15 pm (BST) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்புவதற்குப் பல வழிகளை வைத்திருந்ததாக சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராக இருக்கும் றொகான் குணரத்ன தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாக கிறிஸ்ரினா என்ற கப்பலை வரவழைத்து அதிலிருந்து ஹெலி கொப்டரைப் பயன்படுத்தி தப்பவது அவருடைய திட்டமாக இருந்தது. கனடாவைச் சேர்ந்த சங்கிலி என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா கப்பலை ஒழுங்கு செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்…

    • 0 replies
    • 3.1k views
  7. போரின் பின்னைய இலங்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பேராசியர் சிவசேகரம் உரையாடலில் கலந்துகொள்கிறார். புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஏழாவது பகுதி வெள்ளி (21.05.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்த…

    • 0 replies
    • 994 views
  8. AR Rahman World Tamil Semmozhi Conference Theme Song REMIX VIDEO AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் ! ( REMIX VIDEO - Eelam Song Azhage Azhage Tamil Azhage ) http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ -----------

  9. சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் அனைத்துலக மட்டத்தில் பெருமளவிலான பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “நாட்டின் சகல பிரதேசங்களையும் அரசாங்கம் மீட்டெடுத்து, சமாதானத்தை நிலைநாட்டியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் அமைப்பு போன்ற பல்வேறு வழிகளில் பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை புலிகளின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஜனநாயக வழிமுறை என்ற போர்வையில் நாட்டை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் மீளவும் தலை …

    • 0 replies
    • 1.3k views
  10. சிறிலங்காவில் போர்க் குற்றம்: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் பரிந்துரைகள் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினால் [international Crisis Group - ICG] மே.17ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் சுருக்க வரைவும், பரிந்துரைகளும் இங்கே தமிழில் தரப்படுகின்றன. 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. 30 ஆண்டுகளாகச் சிறிலங்காவில் தொடர்ந்த போரின் போது சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீண்டும் மீண்டும் மீறி வந்திருக்கிறார்கள். போர் இடம்பெற்ற இந்தக் காலப்பகுதியில் இரண்டு தரப்பினருமே பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களைப் புரிந்து வந்தாலும், போர் உக்கிரமடைந்திருந்த இறுதி நாட்களான சனவரி 2009 தொடக்கம் போரில் தாங்க…

    • 0 replies
    • 647 views
  11. வன்னிப் போரில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் உறவுகளுக்கான வணக்க நிகழ்வுகளை யாழ் குடாநாட்டில் முன்னெடுக்க முற்பட்ட கத்தோலிக்க குருக்களுக்கு சிறீலங்கா படைகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனையும் மீறியும் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை மக்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். இது குறித்து கருத்துரைத்திருக்கும் யாழ் மறை மாவட்ட ஆயர் தொமஸ் சவுந்தரநாயகம் அடிகளார், கத்தோலிக்க குருக்களை மிரட்டியதன் மூலம் தமது சுயரூபத்தை சிறீலங்கா படையினர் காண்பித்திருப்பதாக கண்டனம் வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/?p=684

    • 0 replies
    • 639 views
  12. விக்ரோரியா மாநிலத்தில் 3 வெற்றிடங்களுக்கும் மூன்று நியமனப்பத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால் போட்டியின்றி ஏகமனதாக ஜனனி பாலசந்திரன்,துரைசிங்கம் சண்முகானந்தகுமார், டொமினிக் சவியோ சாந்தியபிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். குயின்ஸ்சிலாந்து மாநிலத்தில் தேவையான ஒரு இடத்திற்கு ஒரு நியமனப்பத்திரம் கிடைத்ததால் இளயதம்பி செல்வநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம்(இங்கு தான் அவுஸ்திரெலியா தலைநகரம் கன்பரா இருக்கிறது),தஸ்மேனியா ஆகிய இடங்களுக்கு தேவையான ஒரு இடத்திற்கு ஒரு நியமனப்பத்திரம் கிடைத்ததால் அபிராமி விஸ்வநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். மேற்கு ஒஸ்ரேலியா, கிழக்கு ஒஸ்ரேலியா, வட மண்டலம் ஆகிய இடங்களுக்கு தேவையான ஒருவர் இன்னும் தெர…

  13. சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல் – சேரமான் By: அதியமான் முள்ளிவாய்க்காலில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் எம் தமிழீழ உறவுகளுக்காக நாங்கள் கலங்கியழும் இவ்வேளையில்… தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழ்ந்து வீரகாவியமாகிய எங்கள் மானமாவீரர்களை இதயங்களின் ஏந்தி நாங்கள் பூசிக்கும் இந்த நாட்களில்… இருபது ஆண்டுகளாக எங்கள் சூரியத்தேவன் ஆட்சிசெய்த தமிழீழ அரசை இழந்துபோன துயரில் இருந்து மீண்டெழுவதற்கு நாமெல்லாம் முற்படும் இக்காலகட்டத்தில்… ‘தேசியத் தலைவன்’ என்று தமக்குத்தானே மகுடம்சூடிக் கொள்வதற்கு கயவர்கள் கும்பலொன்று முற்படுகையில்… ‘‘தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்தி…

    • 16 replies
    • 2.1k views
  14. வியாழக்கிழமை, 20, மே 2010 (23:27 IST) இலங்கை குடும்பியான் மலை காட்டுக்குள் செல்லும் சிங்கள வீரர்கள் பிணமாக திரும்புகிறார்கள் தமிழீழத்தின் தென்பகுதியை இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டிலேயே பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதோடு, விடுதலைப்புலிகள் யாருமே இல்லை என்றது. இனி தென் தமிழீழம் வளர்ச்சி பெறும் என்று இலங்கை ஜனாதிபதி அப்போதே அறிவித்திருந்தார். அதன்பின் வடக்கு பகுதியை பிடிக்க போர் நடந்து 2009 மே- 18ல் முடிந்தது. இலங்கை பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று பாராளுமன்றத்திலேயே ராஜபக்சே அறிவித்தார். அதைச்சொல்லியே அதிபர் தேர்தல், எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார். போர் முடிந்து ஒரு ஆண்டு ஆனபின்பு இலங்கை ராணுவ…

    • 5 replies
    • 2.3k views
  15. முகாம்களுக்கு செல்ல வேண்டும்-ஐசிஆர்சி இலங்கையில் தாம் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டிய தேவை இன்னமும் உள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் நலன்புரி நிலையங்களுக்கும், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடங்களுக்கும் சென்றுவர தங்களுக்கு அனுமதி வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் கெல்லன்பர்கர் கோரியுள்ளார் இந்த இரண்டு கோரிக்கைகளுமே "அங்குள்ள மக்களின் பாதுகாப்பை கருதியே" என்றும் அவர் கூறுகிறார். விடுதலைப் புலிகளுடனான போர் உக்கிரமாக நடைபெற்று வந்த இறுதி நேரத்திலும் அதற்கு பிறகும் சில சதுரக…

    • 2 replies
    • 744 views
  16. ஈழத்தமிழருக்கான தனித்துவமான திரைப்படத்துறையை சிறப்புற கட்டிஎழுப்புவதட்காக கலேஞ்சர்களையும் அவர்களின் படைப்புகளையும் அவை குறித்த செய்திகளையும் மற்றும் தொடர்புகளையும் ஒரு இணையத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கமிக்க செய்வதின் மூலம் ஊக்குவித்து மக்கள் மையபடுத்தி தொழில்மயமாக்கல் http://www.eelamcinema.com/ Diaspora cine artists initiate web project to promote Eezham Cinema [TamilNet, Thursday, 20 May 2010, 12:21 GMT] A web-based project to launch a bilingual database and news services related to Eezham Cinema has been initiated by some Tamil diaspora film artists. The move was launched on 18 May, the Gencidal War Crimes Day against Eezham Tamils, and the f…

  17. ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர். 2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந…

  18. முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்? : கீர்த்தி கீர்த்தி அனுப்பியிருந்த இந்தக் கட்டுரை இனியொருவின் கருத்தல்ல. இங்கு கூறப்பட்ட சம்பங்களிற்கும் கருத்துகளுக்கும் நாம் பொறுப்பாளிகளுமல்ல. எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும் புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலம் இலங்கையில் மக்கள் யுத்தமொன்றை உருவாகுமானால் அங்கு மக்கள் விடுதலை பெற வாய்புண்டு. விடுதலைக்காகவே பங்களித்த மக்கள் தன்னம்பிக்கை இழத்தலாகாது என்ற வகையில் இக்கட்டுரை ஒரு உரையாடல் வெளியை உருவாக்குமானால் மகிழ்ச்சியடைவோம். -இனியொரு மூன்று தசாப்த கால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது நம்புதற்கரிய இழப்பொன்று. எனினும் அந்த உண்ம…

  19. ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக, நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள் விமர்சனங்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. மாறாக, விமர்சனம் நம்மை செழுமைப்படுத்தும், கூர்மையாக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு அசைவில்லாமல் அழைத்துச் செல்லும். அதே நேரத்தில் விமர்சனம் என்பதற்கும், புழுதி வாரி தூற்றுதல் என்பதற்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது…

    • 2 replies
    • 1.9k views
  20. கடல் தொடர்பான சர்வதேச சட்டங்களை இந்தியா மீறி வருவதாக இலங்கையின் மீன்பிடி அமைச்சர் றாஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக எல்லை மீறும் மீனவர்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள அமைச்சர் இது வருந்தத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச கடல் சட்டத்தின் கீழ் எல்லையைத் தாண்டும் மீனவர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கு அதிகாரம் இல்லையென்றும் அவர்கள் பிணையில் உடனடியாகவே விடுவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் எனினும் இந்திய அதிகாரிகள் இந்த விதியை மீறியே செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் மட்டும் 996 இலங்கை மீனவர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்…

  21. இந்தக்குரலுக்குரியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. 2000ம் ஆண்டு ஆனையிறவு வெற்றி வர தன்னை களத்தில் நிறுத்தியவள். ஆனையிறவு வெற்றிகாண இவள் இடது காலை இழந்து போனாள். அன்றிலிருந்து இடுப்பின் கீழ் உணர்வினை இழந்து போனாள். இன்றுவரை இவள் ஒரு ஊனமடைந்த பெண்ணாகவே வாழ்கிறாள். இவளது காதல் கணவன் இவனும் ஒரு போராளி. சாமிகளாய் மதிக்கப்பட வேண்டியவர்களுள் இவளது காதல் கணவனும் ஒருவன். இரண்டு பிள்ளைகளுடன் இவளையும் ஒரு குழந்தையாய் தன் கண்ணுக்குள் சுமக்கிறான். கடவுள் இத்தகைய மனிதர்களில் தான் வாழ்கிறார்கள்.இதோ இவளது குரலிலிருந்து...

    • 0 replies
    • 790 views
  22. முள்ளிவாய்க்கால்-உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்னமும் சிவந்து கிடக்கிற மண். நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது. உண்ணவும் முடியவில்லை. உறங்கவும் முடியவில்லை. 2007ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை வன்னிப் பகுதியில் வாழ்ந்த நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப இடம்பெயர்ந்த அவலம் நிகழ்ந்தது. வான்வழியாகவும், தரைவழியாகவும் சிங்கள இராணுவம் இடைவிடாது தொடுத்த கொடும் தாக்குதல்கள் அந்த மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து தப்பியோடச் செய்தன. இந்த ஈராண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகளை மக்கள் வெட்டி வைத்து விமான குண்டு வீச்சிலிருந்து தங்களை…

  23. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக கனடாப் பிரதிநிதி பொன் பாலராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தேசியம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் நிதானமான அணுகுமுறை கொண்டவருமான பாலராஜனின் தெரிவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. SOURCE: http://www.eelamweb.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.