ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
-
மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5650 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர். எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடை…
-
- 11 replies
- 1.6k views
-
-
. யாழில் தமிழர் ஒருவரை மணந்த சுவிஸ் பெண் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரிய வருகையில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 62 அகவையுடைய றீட்டா மேர்லின் சிங்ஸ் என்னும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகவும் இவர் மனநலகுறைவுடையவராக காணப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இத்தற்கொலைக்கான காரணம் எதுவென இன்னமும் தெரியவில்லை எனவும் எனினும் தனிப்பட்ட காரணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இதுதொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடாத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - பதிவு - .
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை "மஹிந்த மயம்" மக்களுடன் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவுக்கு சிறு வயதிலேயே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தாரின் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் மேலோங்கி வருவதாகத் தெரிகிறது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஜனாதிபதியின் மூத்த மகன், ஜனாதிபதியின் சகோதரர்கள் இருவர், ஜனாதிபதியின் சகோதரி ஆகியோரும் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கு 23 வயதுதான் ஆகிறது என்றாலும், பெரிய அரசியல் பொறுப்புகளுக்காக அவர் தயார் செய்யப்படுகிறார் போலத் தெரிகிறது. தன் மகனைக் காட்டி 'இவர்தான் எதிர்காலம்' என்று கூறுவது போல கட்டவுட்டாக நிற…
-
- 1 reply
- 1.1k views
-
-
(உருத்திர குமாரன் அவர்களுடனான ஆதவன் இதழ் பொறுப்பாசிரியர் பொன்னில்லா மேற்கொண்ட நேர்காணலின் சிலபகுதிகள் வருமாறு: முழுமையான நேர்காணல் அடுத்த சில நாட்களில் பதிவு செய்யப்படும்.) 2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? * நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிள்ளையான் தோல்வி பற்றி தேசிய ஒட்டுக்குழு அமைச்சர் விளக்கம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 11, 2010 வன்முறை அரசியலை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தோல்வி காட்டுகின்றது. இவ்வாறு தேசிய ஒட்டு குழு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தோல்வியடைந்துள்ளது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஆளும் கட்சி பெரு வெற்றியடைந்துள்ளது. தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும்,அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துச்செல்ல்வதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
. நாச்சிமார் கோயிலடியில் தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளுக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள நாச்சிமார் ஆலயத்தின் முன்பாக கடைகளை திறந்திருந்த தென்னிலங்கை வியாபாரிகளது நடைபாதைக் கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் வந்த இனந்தெரியாத நபர்கள் கோயிலுக்கு முன்பாக தேர்முட்டியுடன் அமைக்கப்பட்டிருந்த கடையின்மீது பெற்றோலை ஊற்றி தீப்பந்தங்களை எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். - பதிவு - .
-
- 9 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா? ''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்'' இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார். மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்) இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும்…
-
- 10 replies
- 1.3k views
-
-
புதிய அரசுடம் எமது நட்புகள் தொடரும் அமெரிக்கா மஹிந்தவுக்கு வாழ்த்து கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 11, 2010 அமையப்போகின்ற புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா தனது நீண்டகால நட்புணர்வுகளை பேணி கை கோர்த்து செல்லும் என்று அமெரிக்கா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. கூடவே மனித உரிமை, அதிகார பகிர்வு ஆகிய விடயங்களிலும் கவனம் தேவை எனவும் கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%…
-
- 1 reply
- 576 views
-
-
செல்வம் அடைக்கல நாதன்வன்னி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 11, 2010 வன்னிமாவட்ட வாக்காளர்கள் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்ற வேளையில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று எமக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். நிவாரண கிராமங்களில் வாழும் மக்களை மீள்குடியேற்றுதல் உட்பட மக்களின் தேவை…
-
- 0 replies
- 545 views
-
-
தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் செட்டிகுளம் முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் இலங்கைப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். …
-
- 14 replies
- 1.4k views
-
-
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா? வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார். அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்…
-
- 27 replies
- 2.1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிட்ட சிவநாதன் கிசோர் வன்னி மாவட்டத்தில் கடைசி இடத்திற்கு வந்துள்ளார். இவருக்கு 1262 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளது. இதே போல மற்றொரு உறுப்பினரான சதாசிவம் கனகரத்னம் 3570 வாக்குக்களைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செல்வம் அடைக்கலநாதன் - 17 366 எஸ். நோகராத லிங்கம் - 12 120 சிவசக்தி ஆனந்தன் - 11 674 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி றிசாட் பதியுதீன் - 27 461 உநாயிஸ் பாருக் - 10 851 ஐக்கிய தேசியக் கட்சி நூர்தீன் மசூர் - 9518 SOURCE: http://www.eelamweb.com/
-
- 6 replies
- 1.6k views
-
-
நாச்சிமார் கோயிலடியில் தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளுக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள நாச்சிமார் ஆலயத்தின் முன்பாக கடைகளை திறந்திருந்த தென்னிலங்கை வியாபாரிகளது நடைபாதைக் கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் வந்த இனந்தெரியாத நபர்கள் கோயிலுக்கு முன்பாக தேர்முட்டியுடன் அமைக்கப்பட்டிருந்த கடையின்மீது பெற்றோலை ஊற்றி தீப்பந்தங்களை எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். globaltamilnews
-
- 0 replies
- 808 views
-
-
அம்பாறை பிரதிநிதித்துவம் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது. இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. ஃபேரியல் அஷ்ரப் தோல்வி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் வேட்பாளர்களாக 5 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் என 10 பேர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவில் பாதுகாப்பு குழு பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி சிறியானி விஜயவிக்கிரம, அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோருடன…
-
- 14 replies
- 1.7k views
-
-
தேர்தல் முடிவுகள் பாடங்களையே கற்று கொடுத்துள்ளது தமிழீழ நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 10, 2010 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன இந்த முடிவுகள் பொதுவான சில முடிவுகளையும் சிறப்பான சில முடிவுகளையும் கூறி நிற்கின்றது. இலங்கை தமிழரசு கட்சி போனஸ் ஆசனம் உட்பட 15 ஆசனங்களை பெற முடியும் ( திருமலை உத்தியோக பூர்வமாக வரவில்லை). இதன்படி இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாகவும் இரண்டாவது எதிர்கட்சியாகவும் மாறியுள்ளது தமிழர் தரப்பு. ஏனைய கட்சிகளை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் மலையக தமிழ் கட்சிகள் கூட்டணி சேர்ந்ததால் தமது சுயத்தை இழந்துள்ளன. அவர்களுக்கு அமைச்சு பதவிகள் தேவை என்பதனால் சுயம் பற்றி யோசிக்க மாட்டார்கள். வடக்கு கிழக்கை பொறுத்தவரை மக்கள் 18-20 வீதமானவர்களே வாக்…
-
- 2 replies
- 636 views
-
-
http://www.puthinappalakai.com/view.php?20100406100862 மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வாக்களிப்பதன் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு காத்திரமான செய்தியை தெரிவிக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். டென்மார்கின் மூன்று நகரங்களில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான விளக்கக்கூட்டங்களில் காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றும் போதே உருத்ரகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். டென்மார்க்கின் Herning, Velje மற்றும் Holbæk ஆகிய நகரங்களில் ஏப்ரல் 4ஆம், 5ஆம் நாட்களில் விளக்கக்கூட்டங்கள் நடைபெற்றன. அவர்…
-
- 5 replies
- 822 views
-
-
ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றியீட்டியதையடுத்து மன்னாரின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. http://www.virakesari.lk/
-
- 16 replies
- 1.6k views
-
-
யாழ்பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களில் ஐவர் மரணம் - 140 பேரை காணவில்லை யாழ்பாணத்தில் கடந்த மூன்று மாதகாலப்பகுதியில் யாழ் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஐந்து பேர் மரணமானதாகவும் 140 பேரை காணவில்லை எனவும் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்குழு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இறந்த ஐவரில் மூவர் தற்கொலை செய்துள்ளனர். ஒருவர் கொலை செய்யப்பட்டும் மற்றயவர் டெங்கினாலும் மரணமடைந்துள்ளார்கள். தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் யுத்தத்தின் பின் தாம் எவ்வாறு வாழ்வது என வழிதெரியாது விரக்தியுற்றநிலையிலேயே இடம்பெற்றதாக தெரியவருகிறது. இவர்கள் நலன்புரி நிலையங்களில் வசித்து வந்தவர்கள் அரசாங்கம் இவர்களுக்கு உரிய எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழர சுக் கட்சி) மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. வடக்கு கிழக்கில் 13 ஆசனங்களைப் பெற்றுள்ள இக்கட்சியில் தேசியப் பட்டியல் உறுப்பினர் களையும் சேர்த்து 15 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங் களையும் வன்னியில் 3 ஆசனங்களை யும்கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் அம்பாறையில் ஓர் ஆசனத்தையும் திருகோணமலையில் ஓர் ஆசனத்தையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது. தி…
-
- 0 replies
- 979 views
-
-
கெடுபிடிகளுக்கு மத்தியில் போட்டியிட்டோம்'' பல்வேறு நெருக்கடிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியிலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் செவ்வி பல்வேறு தமிழ் அரசியல் குழுக்களும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டதன் காரணமாக மக்களிடையே ஆரம்பத்திலிருந்து குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாகவும் இல்லாவிட்டால் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை தமது கட்சியினால் பெற்றிருக்கமுடியும் எனவும் சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் காரணமாக பெறப்பட்ட வெற்றியை இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெறமுடியாது போயுள்…
-
- 3 replies
- 899 views
-
-
கூட்டமைப்பின் வெற்றி... 2004 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களை வென்றிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் அந்தக் கூட்டமைப்பு 12 இடங்களையே வென்றுள்ளது. அந்தக் கூட்டமைப்பு மேலும் சில ஆசனங்களை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவான சிலர் அதிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர். அப்படியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வெற்றி இம்முறை வெற்றி பெறவில்லை. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்த சில பழைய முகங்கள் மீண்டும் இம்முறை தெரிவாகியுள்ளனர். மேலும…
-
- 2 replies
- 893 views
-
-
வணக்கம் . எம் தமிழ் உறவுகளே .. தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் இலங்கை இந்திய கூட்டு சதிகள் நடைபெற்ற காலத்தில் தமிழ் ஈழ தேசிய தலைவரின் நேரடி வழி காட்டலில் அரசியல் கட்சியாக பதிவு செய்யபட்ட தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சி இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய பட்டு மக்கள் சனநாயக கட்சியாக பதிவு செய்யபட்டு செயல் படுத்த பட்டது . தற்பொழுது தமிழ் ஈழ விடுதலை புலிகளின் பலம் தமிழ் தாயக பகுதிகளில் வலுவிழந்த நிலையில் பிரித்தானியாவில் 10/02/2010 அன்று அரசியல் கட்சியாக பிரித்தானிய நாட்டின் சட்ட திட்டங்களிட்கு அமைவாக பதிவு செய்யபட்டுள்ளது . இந்த வீரமிகு வரலாற்று திருப்பத்தை மூவராக நின்று கடுமையாக உழைத்து இந்த அரிய தமிழ் பங்களிப்பை செய்திருப்பது வேறு ய…
-
- 14 replies
- 2.6k views
-
-
"தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" சார்பாக சைக்கிள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டு போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. செல்வராசா கஜேந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் எமது அடிப்படைக்கொள்கையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை இலட்சியமாகக் கொண்டு அன்று தொட்டு இன்று வரை எமது தேசத்திற்காக குரல் கொடுத்து வருகின்றார்கள். அதன் தொடராக இன்று நாடாளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகின்றார்கள். அன்பான எம் தேசத்தின் உறவுகளே! நாம் அனைவரும் ஓர் அணியாக திரண்டு எமது பொன்னான வாக்குகளை சைக்கிள் சின்னத்திற்கே அளித்து வெற்றியடையச்செய்வதன் மூலம் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்கு உறுதி எடுத்துக்க…
-
- 6 replies
- 896 views
-
-
தமிழர் தாயகத்தில் இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்பது எதனை? இலங்கையின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து வெற்றி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் தேர்தலில் இம்முறை தேர்தலில் மக்கள் அதிகம் நாட்டம் காட்டாது தவிர்த்துள்ளமை பல்வேறு விடயங்களை உணர்த்தி நிற்பதாகவே பார்க்கப்படுகின்றது. தமிழர் தாயகததில் 5 பிரிவுகளில் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை), வன்னி (மன்னார், வவுனியா, முல்லைத்தீவு), யாழ்ப்பாணம் (கிளிநொச்சி உட்பட) ஆகிய 5 பிரிவுகளில் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். திருகோணமலை தென் தமிழீழத்தைப் பொறுத்தளதில் திருகோணமலை மாவட்ட முடிவுகள் இதுவரை முழுமையாக வ…
-
- 1 reply
- 956 views
-