ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
கனடிய அரசு மீது சிறீலங்கா அரச பத்திரிகை மனிதவுரிமை குற்றச்சாட்டு! Jan 29 2013 13:07:42 சிறீலங்காவின் அரசு மேற்குலகின் ஆலோசக, மற்றும் விளம்பர நிறுவனங்களினைப் பணிக்கு அமர்த்தியுள்ளதா என்று நோக்குமளவிற்கு அதன் பத்திரிகைகள் செய்தி வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றன. சிறீலங்கா அரசின் பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகை முதற்பக்கத்தின் முக்கிய செய்தியாக கனடாவைத் தாக்கி “லங்கா கனடாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது… பாராதூரமான மனிதவுரிமை மீறல்க் குற்றச்சாட்டுக்கள்” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. அண்மையில் கனடாவில் பூர்விகக் குடியினரால் நடத்தப்பட்ட போராட்டங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் கனடியப் பூர்வீகக் குடியினரின் சரத்துக்களை மதிக்காமல் செய…
-
- 1 reply
- 514 views
-
-
ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் பிழைகளைத் திருத்துமாறு மனோ கணேசன் பணிப்புரை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் தமிழ் அறிவித்தலில் உள்ள பிழைகளை அவதானித்து அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார். Share This http://newsfirst.lk/tamil/2016/09/ரயில்-நிலையத்தின்-பெயர்ப/
-
- 3 replies
- 404 views
-
-
தேசியப் பட்டியல் தெரிவு குறித்து தயாசிறி ஜெயசேகரவின் விசனம் தேவையற்றது- சுரேன் ராகவன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் தான் நியமிக்கப்பட்டமை குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர விசனமடைவது தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய்பபட்டியலில் தெரிவுசெய்யுமாறு தான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே தன்னை தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் பரிந்துரையில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடி…
-
- 3 replies
- 659 views
-
-
US President-elect Barack Obama: Sri Lanka afflicted with "problem of the other" Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war" President-elect Barack Obama said during an interview that "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us " and mentioned Sri Lanka as an example pointing out that war rages even when "everybody there looks exactly the same." Characterization of conflicts in the 21st century this way Obama said is an extention to the American Civil Rights era activist W.E. Dubois' quote "The problem of the 20th century…
-
- 2 replies
- 1.7k views
-
-
அமைச்சர் பொன்சேகாவால் நாடாளுமன்றில் அமளி கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பான புகைப்படமொன்றையும் வெளியிட்டதைத் தொடர்ந்து சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் பிரதமர் ரணில் முன்வைத்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத் பொன்சேகா கடந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். கடந்த காலத்தில் மிகவும் மோசமான ஆட்சியே முன்னெட…
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் பெரும் களேபரத்தின் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்களிற்கும், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் அணியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, பதற்றமான நிலைமை ஏற்பட்டது. காங்கேசன்துறையிலுள்ள கட்சி அலுவலகத்தில், காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் நேற்று (27) மாலை இடம்பெற்றது. இதில் உரையாற்றிய மாவை சேனாதிராசா பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார். கட்சிக்குள்ளேயே தனக்கு எதிராக உறுப்பினர்கள் சதி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். அத்துடன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் குழுவினர் தொடர்பாக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். சுமந்திரன், சிறிதரன் மீது பல்வே…
-
- 14 replies
- 1k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் அதிகாரி ஒருவர் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தினது ஆனந்த குமாரசாமி மாணவர் விடுதியினது வாடனாகக் கடமையாற்றும் 41 வயதான எம் பிரேமச்சந்திரன் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.2k views
-
-
பொதுநலவாய நடுகளின் கொள்கைகளை இலங்கை பின்பற்றாத பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என சர்வதேச மனிதவுரிமைகள் கண்ணகாணிப்பகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நியதிகளை மீறிச் செயற்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ் விடயம் குறித்து, மனித உரிமை கண்காணிப்பகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவருக்கு, கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் காத்திரமான மேம்பாட்டை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்தக் கூடாது என அக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட …
-
- 1 reply
- 350 views
-
-
சர்வதேச தகவல் அறியும் உரிமை தொடர்பான மாநாடு நாளை கொழும்பில் சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் . மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா…
-
- 0 replies
- 239 views
-
-
(எம்.மனோசித்ரா) காணி உறுதிப்பத்திரம் இன்மையால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டுக்கும் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில் காணி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பிரச்சி…
-
- 0 replies
- 249 views
-
-
மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துவது தெற்கில் இனவாதமாக சித்தரிக்கப்படுகிறது.முதல்வர் விக்கி மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வ ரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது நீண்டகாலமாகவே அதிகாரங்கள் மேலிருந்து கீழாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் தங்களு…
-
- 1 reply
- 383 views
-
-
விடுதலைப் புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வது இரண்டு அமெரிக்கர்கள்!” என்று திடுக்கிடவைக்கிறார் ஒரு வழக்கறிஞர்.”ஒருவர், கோத்தபய ராஜபக்ஷே. இன்னொருவர், சரத் ஃபொன்சேகா. முன்னவர், ஜனாதிபதியின் சகோதரர். பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். சரத் ஃபொன்சேகா, ராணுவத் தளபதியாக இருக்கிறார். எங்கள் கணக்கின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக் கக் குடியுரிமை பெற்றவர். சரத் ஃபொன்சேகா, அமெரிக் காவின் நிரந்த வாழ்வுரிமை வாங்கியவர். அதாவது கிரீன் கார்டு வைத்திருப்பவர். இப்…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைச் சிறுமி ஒருவரை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவருக்கு சிங்கப்பூரில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதான குறித்த இலங்கைச் சிறுமி வீட்டின் குடும்பச் சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடன்களை செலுத்துவதற்காக இந்தச் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட இணங்கியுள்ளார். எனினும் அவர் கடந்த ஆண்டு மே மாதம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவருக்கும், மூன்று மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136736/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 382 views
-
-
தேர்தல் பிரச்சார ஊர்வலம் நடத்திச் சென்று கொண்டிருந்த போது மனோ கணேசன் உட்பட அவரின் கட்சியினர், மகிந்த அரசின் கட்சியினரால் வழிமறித்துக் காடைத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது மனோ கணேசன் காயங்கள் இன்றி தப்பி விட்டதாக சிங்கள தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே.. இராணுவ வெற்றிக்காக மகிந்தவை ரணில் பாராட்டிய நினைவு மறைவதற்குள்ளாகவே.. ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கும் பணியை மகிந்த ஆரம்பித்திருப்பதுடன் ஐக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் மகிந்த அணியுடன் சேர மகிந்த பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார். அதே நேரம் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு இறுதித் தோல்வியை சந்திக்க முன்னர் சிறீலங்கா படையினரிடம் சரணடையக் கேட்கப்பட்டுள்ளனர்..! Mano rally attacked An elec…
-
- 1 reply
- 832 views
-
-
கவனிப்பாரற்றநிலையில் யாழ்.பண்ணை வளைவு யாழ்ப்பாணம் பண்ணை வளைவு வீதியில் அமைந்துள்ள யாழ் அன்னையின் சிலை,மற்றும் வளைவு பகுதி யாரும் கவனிப்பாரற்ற நிலையில் அசுத்தமாக இருப்பது மிகுந்த கவலை யினை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த வளைவானது கடந்த வருடங்களில் மிக அழகான முறையில் வர்ணங்கள் பூசப்பட்டு, பூந்தோட்டம் என்பன அமைக்கப்பட்டு அழகான முறையில் பராமரிக்கபட்டு வந்தன. ஆனால் தற்பொழுது குறித்த இடத்தில் உள்ள பூங்கன்றுகள் கருகிய நிலையிலும்,சிலையின் வர்ணங்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகிறது. ஆகவே இதனை உரிய முறையில் சீர் செய்து தருமாறு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றனர். http://onl…
-
- 0 replies
- 341 views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
செல்வம் – டக்ளஸை சந்தித்தார்… October 13, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12.10.20) இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் 20 ஆம் திருத்தம் தொடர்பிலோ அல்லது 13 ஆம் திருத்தம் தொடர்பிலோ கலந்துரையாடப்படவில்லையெனவும், வன்னியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்…
-
- 1 reply
- 772 views
-
-
இந்தியாவின் முதனிலை கணனி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை நிராகரித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், நாராயணமூர்த்தி சர்வதேச தகவல்தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இந்தப் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதென நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்தவிற்கு கடித மூலம் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
வன்னியில் நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் மாத்தளன் பகுதியை இலக்கு வைத்து மேற்கொண்ட ஆட்லறி தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் நேற்று படுகாயமடைந்த நோயாளிகளை மாத்தளன் மருத்துவமனையிலிருந்து ஐ.சி.ஆர்.சி. கப்பலுக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோத
-
- 0 replies
- 511 views
-
-
எங்கள் இரத்தத்தின் பாதியே முஸ்லிம், தமிழ் மக்கள் : எந்தவொரு இனவாதியாலும் அவர்களை வெளியேற்ற முடியாது : பிக்குவின் அதிரடி பேச்சு எங்களின் இரத்தத்தின் பாதியே நீங்கள். எங்கள் சதையின் பாதியே நீங்கள். பொதுபல சேனா அல்ல எந்த சேனாவாலும் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதற்கு சமனாகும். நாம் அனைவரும் சமாதானத்தால் நாட்டை வெற்றிகொள்ள வேண்டும் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேற்படி தேரரின் …
-
- 2 replies
- 323 views
-
-
கருணாநிதிய பற்றி சொல்லினம் கேலுங்கோ
-
- 0 replies
- 992 views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தீர்வு விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதி மொழிகள் எதனையும் பின்பற்றவில்லை. இதன்காரணமாகவே தற்போது இலங்கை நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளே இலங்கை விடயத்தில் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளா. http://www.hirunews.lk/tamil/55402 http://www.thesundayleader.lk/2013/03/17/govt-not-committed-to-resolve-conflict-sampanthan/
-
- 0 replies
- 751 views
-
-
அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது. அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/261260?ref=imp-news
-
- 0 replies
- 303 views
-
-
கைது செய்ய வந்த மகன் இல்லாதமையினால் பெற்றோர், சகோதரிகள் கோப்பாய் பொலிஸாரால் கைது மகனை ஒப்படைக்கும் படி கூறி வீட்டுக்கு வந்த பொலிஸார் தேடிவந்த நபர் இல்லாத நிலையில் தந்தை, தாய் மற்றும் சகோதரிகளையும் பொலிஸார் கைது செய்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொறியியலாளர் ஒருவரின் வீட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாக கூறி இரவு வந்தவர்கள் மகன் எங்கே என்று கேட்டுள்ளார்கள். தனது மகன் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து தாங்கள் அவரைக் கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். அதனையடுத்து வீட்டில் பொலிஸாரை காவல் வைத்து விட்டு…
-
- 1 reply
- 521 views
-
-
யாழ்பல்கலையில் பிரபாவின் பிறந்ததினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடை பெற்றுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் கேக் வெட்டி அவரின் பிறந்ததின நிகழ்வு நடைபெற்றது. . http://www.onlineuthayan.com/news/20702
-
- 4 replies
- 1.1k views
-