Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் வலி-வடக்கிலும், திருகோணமலை சம்பூரிலும் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை உடனடியாக அகற்றுங்கள். யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி சிறைச்சாலைகளிலே உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். இவை இரண்டு விடயங்களையும் உடனடியாக அரசாங்கம் செய்தாகவேண்டும் என மனோ கணேசன் பா.உ. வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் வலி-வடக்கிலும், திருகோணமலை சம்பூரிலும் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை உடனடியாக அகற்றுங்கள். யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி சிறைச்சாலைகளிலே உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். வெற்று வாய்ப்பேச்சுகளை நிறுத்திவிட்டு, இந்த இரண்டு காரியங்களையும் உடனடியாக அரசாங்கம் செய்தாகவேண…

    • 0 replies
    • 463 views
  2. சண்டே ரையிம்சின் கீழ்க் காணும் கட்டுரையின் தகவலின் படி இலங்கயின் வட கிழக்கில் சீன அரசின் கடன் உதவியுடன் நடைபெற இருக்கும் வீதி மற்றும் புகையிரதப் புனரமைப்பு வேலைகளில் இருபத்தையாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இந்த புனரமைப்புத் திட்டங்கள் அனைத்துமே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட நிதிப் பெறுமானங்களின் அடைப்படையில் அமைந்த வர்த்தக வட்டி வீதக் கடன்களின் அடிப்படையிலையே அமைந்துள்ளன.இந்தக் கடன்கள் அனைத்துமே இலங்கை மக்களால் கட்டி முடிக்கப்பட வேண்டியவை.வர்த்தக வட்டி வீதக் கடன்கள் இலங்கை மக்களின் வரிச் சுமையை இன்னும் அதிகரிக்கும்.மேலும் இந்தத் திட்டங்களால் உள்ளூர் மக்களுக்கோ தேசிய நிறுவனங்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது.அனைத்துத் தொழிலாளர்களும் சீனாவ…

    • 48 replies
    • 4.1k views
  3. Tamil doctor on the mat for expressing private opinion A Tamil doctor has been interdicted by the ministry of health allegedly for expressing a private opinion to a Sinhala doctor that was interpreted as “causing disrepute to the Government of Sri Lanka”. The incident has caused ripples among Tamil academia and begs the question where freedom of speech is the prerogative of the majority community - and whether only certain types of views are tolerated under the brand of “free speech” now practised in Sri Lanka. One Tamil activist questioned how it was possible for a Sinhala doctor to complain about a Tamil doctor on a matter of ethnic interest or disp…

  4. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரண்டாவது தடவையாக கூடி ஆராய்ந்த போதிலும் எந்தவொரு தீர்மானமும் எடுக்காத நிலையில் நாளை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர். கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடிய போது 9 பேர் மட்டுமே சமூகமளித்திருந்ததாகவும் ஏனையோர் கொழும்பிற்கு வெளியே தங்கியிருப்பதால் கலந்துகொள்ளவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தனக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இரா.சம்பந்தன் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள…

  5. போராட்டத்திற்கு மக்கள் வழங்கிய சொத்துக்களை பதுக்கியவர்கள் வரலாற்றின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது மக்கள் பலமாக இருந்தால்தான் போராட்டம். மக்களை பலவீனமாக வைத்துக்கொண்டு எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது. எனவே மக்கள் போராட்டத்திற்கு வழங்கிய சொத்துக்களை பதுக்குவது திருட்டை விட மோசமானது என “ஈழம் இ நியூஸ்” (www.eelamenews.com) இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர். கேள்வி : முள்ளிவாய்க்கால் படுகொலைக…

  6. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல மதத் தலைவர்களையும் சந்தித்து ஜெனரல் சரத் பொன்சேவுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. மஹிந்த இராஜபக்‌ஷ இன்று புது மாத்தளன் பகுதிக்கு இன்று செல்கின்றார். புது மாத்தளன் பகுதியில் கொல்லப்பட்ட சிங்கள சிப்பாய்களுகாக நிறுவப்பட்ட நினைவு தூபியினை திறந்து வைப்பதற்கே அங்கு செல்வதாக கூறப்படுகின்றது. புதுமாத்தளன் பகுதியில் சிங்கள சிப்பாய்களினால் கொல்லப்பட்ட 1000 க்கணக்கான மக்களின் உடலங்களை எரித்தும், புதைத்தவற்றை கடலில் வீசியும் அனைத்து தடையங்களையும் அழித்த பின்னர் அந்த நாசகார வேலைகளை செய்த படையினரை கெளரவிக்கும் முகமாகவே அங்கு மஹிந்த என்ற இந்த இனவெறி பிசாசு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  8. ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தில் வாடும் மக்கள் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மிகவும் நேர்த்தியாக எழுதப் பட்ட கட்டுரைகள் பல தினம் தினம் எங்கலைப் போன்ற புலம் பெயர்ந்தவர்களால் எழுதப் படுகிறது. எனினும் நெருக்கடிக்குள் அன்ராட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு போதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்து குடும்பங்களோடு பாதுகாப்பாக இருக்கும் எங்களுக்கு மக்களின் அவசரப் பிரச்சினைகளையும் முன்னுரிமை அட்டவணைகளையும் கற்பனையில் உணர்ந்து கொள்ளுதல் இயலாது. காலிக் கோப்பைகளுடன் தொடர்ந்து கண்ணீரும் சென்னீரும் வடிக்கும் மக்கள் தொலைபேசியிலும் கடிதங்களில் அழுத்திச் சொல்லும் விடயங்களுக்கும் புலம் பெயர்ந்த நா…

  9. சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இ…

    • 7 replies
    • 1.6k views
  10. சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே…

  11. தென்கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் மனிக்பாம் முகாமிற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர் முகாமிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது இலங்கையில் இடம்பெயர் மக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ரொபர்ட் ஓ பிளகெ; திருப்தி அடைந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இடம்பெயர் மக்கள் சுதந்திரமாக இடம் நகர வழங்கப்பட்ட அனுமதி பாராட்டுக்கு உரியதென அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net

  12. உயிர்த் தியாகங்களைச் செய்து, பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கையில் அது மிகவும் கவலையளிக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்ததன் பின்னரும் எனக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. அதனை செவ்வனே நிறைவேற்றுவேன். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதிப் பதவியில் அமர்வது, சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அல்ல. 30 வருட காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இந்நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அதனை மக்களிடம் ஒப்படைப்பதே எனது பணியாகும் என்றும் அவர் கூறினார். …

  13. வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்திருந்த போதும், 11,000க்கும் மேலான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சட்டபூர்வ ஒழுங்குகள் ஏதுமற்ற நிலையில் - கடும் பாதுகாப்புடன் - இரகசிய நலன்புரி நிலையங்களில்� அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் தி டைம்ஸ் [The Times] வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கத்தினர் [ International Committee of the Red Cross - ICRC ] இந்த முகாம்களுக்குச் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்ட கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் - அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உண்ம…

  14. ஈழத்தமிழ் மக்கள் பிரச்சினையில் சிங்கள இடதுசாரிகளின் மேல்மனச் சோஷலிஸமும், அடிமன இனவாதமும். விக்கிரமபாகு கருணாரட்ண ஒரு விதிவிலக்காவாரா? GTNற்காக செ.தனபாலசிங்கம்‐ 08 December 09 05:42 am (BST) இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவு இரத்தக் குழம்பில் முழ்கியிருப்பதற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, அறிய வேண்டியது அவசியம். தெற்கு, தென்கிழக்காசியாவில் மிகவும் பலம் பொருந்திய இடதுசாரி அரசியல் தோன்றி உருப்பெற்ற நாடு இலங்கைத் தீவாகும். ஆனால் அங்கே அந்த இடதுசாரி இயக்கங்கள் முற்றிலும் படுதோல்வி அடைந்துள்ளன. இனப்பிரச்சனையை கையாள்வதில் அவர்கள் கைக்கொண்ட நிலைபாடுகள் வரலாற்று வளர்ச்சிக்கு எதிர்க்கணியமாய் அமைந்து விட்டன. இத்தகைய நிலை எவ்வாறு ஏற்பட்டது என…

  15. மக்கள் விடுதலை இராணுவம்? புதியதோர் விடுதலை அமைப்பு? யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள் இதைப்பற்றி மேலதிகமாக இங்கு ஆங்கிலத்தில் வாசிக்கமுடியும்: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece#cid=OTC-RSS&attr=797093

  16. ஜேர்மனியில் இலங்கை தூதரகத்தின் முன்னால் இலங்கை தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.அங்கு நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதே இச்சம்பவம் இடைபெற்றுள்ளது.

    • 0 replies
    • 1.6k views
  17. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கால வரையறை இன்றி சிறைகளில் உள்ளோர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பயங்கர வாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், பொலிசாரினால் எதுவித குற்றசாட்டுக்கள் சுமத்தப்படுத்தாது சிறையில் நீண்டகாலம் இருப்போர், சட்ட மா அதிபரினால் எந்தவிதமான குற்ற சாட்டுக்களுக்கும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாமையினால்இருப்போர் ஆகியோர்களின் வழக்குகளை உடனடியாக விசாரித்து நடவடிகை எடுக்கவே இந்த ஏற்பாடு எனவும் தெரிவித்துள்ளார் மஹிந்த சமரசிங்க.

  18. மட்டக்களப்பு கல்குடா கடற்கரையிலிருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற நபரொருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாளான நேற்றிரவு சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். சம்பவதினமான கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத பயணத்தை மேற்கொள்வதற்காக கல்குடா கடற்கரையில் குறித்த நபர்கள் இன்னும் சிலருடன் நின்று கொண்டிருந்த வேளை இராணுவத்தின் நடமாட்டததைக் கண்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். அவ்வேளையில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். தப்பிச்செல்ல முயன்ற இருவர் அதன்போது அந்த பகுதியிலுள்ள நீரோடையொன்றில் தவறி விழுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் முதலைக்கடிக்கு உள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில்…

  19. மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி மக்கள் பேரணி, தீபமேற்றல் ஆகிய நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளில் சூரிச் பாணியில் தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகள் ஒரே மேடையில் கூடி நிகழ்வை கொண்டாட இருக்கின்றனராம். வீரசிங்கம் மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறும். அதைத் தொடர்ந்து முத்தமிழ் சங்கமத் துடன் மக்கள் பேரணி இடம்பெற்று மாலை 6.30 மணிக்கு தீபமேற்றும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிர…

  20. ஜனாதிபதித் தேர்தல் தமிழன் பேரம் பேசும் பலத்தைப் பரிசோதித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பு என்றே அரசியல் ஆய்வாளர்களால் கருதப்பட்டு வந்தது. விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பிறகு தமிழன் பேரம் பேசும் பலம் இல்லாது போய் விட்டதாக புளொட் தலைவர் சித்தார்த்தன் பேட்டியொன்றில் கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தின் மூலம் உருவாக்கி வைத்திருந்த பேரம் பேசும் பலம் ள்ளிவாய்க்கால் இறுதிச் சமருக்குப் பிறகு முற்றாகவே இல்லாது போய் விட்டது. இந்தக் கட்டத்தில் தமிழன் பேரம் பேசும் பலத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பல்வேறுபட்ட முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் வந்தன. சூரிச்சில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் மூன்று நாட்கள் சந்தித்துப் பேசி இனப்பிரச்சினைத் தீர்வ…

    • 2 replies
    • 1.7k views
  21. எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்களைப் பதிவுசெய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். முக்கிய அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதி காவல்துறை கீர்த்தி கஜநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பணிகளுக்காக 17 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்குத் தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன, டி.எம்.ஜயரத்ன, அனுர பிரியதர்ஸான யாப்பா, மகிந்த யாபா அபேவர்தன, பத்ர…

  22. யார் கட்சியை விட்டு வெளியேறினாலும், பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியை தடுக்க டியாது. க்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தில் எஸ்.பி.ஜனாதிபதியுடன் கூட்டு சேர்ந்திருப்பதானது ஐக்கிய தேசிய கட்சியை காட்டிக் கொடுக்கும் ஒரு செயலாகும் என்று அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கியெல்ல தெவித்தார். தன்னை பொது வேட்பாளராக நியமிக்காமையினாலேயே எஸ்.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்துள்ளார். அவர் ஒன்றை புந்துகொள்ள வேண்டும்.சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுகையில் எஸ்.பி. மடுவை போன்றவர் ஜெனரல் மலையைப் போன்றவர் என்றும் அவர் கூறினார். எஸ்.பி. திசாநாயக்க கட்சியை விட்டு வெளியேறியமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெவித்தார். இது தொடர்பில் அவர்…

  23. பல வருடங்களாக அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளின் உள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி (இன்று) 8ம் திகதி முதல் சாகும் வரையிலான அகிம்சைரீதியிலான உண்ணாவிரத்தினை மேற்கொள்ளப்போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத்தினை மேற்கொள்ளபோவதாக தெரிவித்துள்ளனர். தொடர்புபட்ட செய்திகள்: பல வருடங்களாக அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுத…

    • 0 replies
    • 531 views
  24. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் உண்மையான நிலையை புரிந்துகொள்ள இந்திய அரசு தவறிவிட்டது என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு எம்.பி., இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தமும், வேதனையும் இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் உள்ளது. இலங்கையில் உள்ள முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை பார்வையிட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை இந்திய அரசு அனுப்பி, அவர்களது மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இலங்கை போரினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணிகள் மிகவு…

  25. வவுனியா தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் வங்கி சேவைகள் மூலம் 2000 மில்லியன் ரூபா வரையான வைப்புக்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆணையாளர் கப்றாள் கூறியுள்ளார். இதில் 50 வீதமானவை தங்க நகைகள் என்றும் மீதமானவை வெளி நாடுகளில் இருந்து உறவினர்களால் அனுப்பபட்ட பணம் எனவும் கூறியுள்ளார். குறிப்பிட்ட 05 மாதத்தினுல் இவ்வாறான வைப்புக்களை இதுவரை பெற்றதில்லை எனவும் அவர் கூறியுள்ளதுடன் இந்த வைப்பில் 50 வீதமானவற்றை திரும்ப கடன் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார் கப்புறாள் . இதுவரை 51 வங்கி கிளைகள் வடபகுதியில் திறக்க விண்ணப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.