ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
ஜோசியர் பேச்சைக் கேட்டு, மண்ணைக் கவ்விய ராஜபக்ச! இலங்கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும் என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி புதைகுழியில் விழுந்து புதைந்து போய் விட்டார் ராஜபக்சே. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலர் ஜோசியக்காரர்களை நம்பித்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள். அதேபோலத்தான் ராஜபக்சேவும். அவரும் ஜோசியம், நாள் நட்சத்திரம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என அனைத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவரது ஆஸ்தான அதிர்ஷ்டக் கணிப்பாளராக பல காலமாக திகழ்ந்து வருபவர் சுமனதாச அபயகுணவர்த்தனா என்பவர். பார…
-
- 1 reply
- 1.8k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 06:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா பெரும் நெருக்கடி ஒன்றை சந்திக்கவுள்ளது. இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமா…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனித உரிமைகள் குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா உடனடியாக ஈடுபட வேண்டும் – ஜோன் கெரி JAN 12, 2015 | 13:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் மனித உரிமைகள் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விரைவில் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், குஜராத் மாநிலம் காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வாழ்த்து தெரிவித்திருந்தார் ஜோன் கெரி. இந்த நிலையில் இன்று சிறிலங்கா விவகாரம் குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவின…
-
- 9 replies
- 731 views
-
-
வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம் - இந்தியாவில் நாமல் வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எமது கட்சி பல கட்சிகளை உள்ளடக்கியுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரைத் தெரிவு செய்வோம். இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம். மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை நாங்கள் இந்தியாவின் உதவியுடனேயே நிர்மாணிக்க திட்டமிட்டோம். ஆனால் அப்போது…
-
- 1 reply
- 498 views
-
-
சிறிலங்கா வான்படையினரின் பெறியியல் பகுதிக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 11:59 கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான விடுதலைப்புலிகளின் வான்படையினர் வீசிய குண்டுகள் வான்படையின் பொறியியல் பகுதிக்குள்ளும் வீழ்ந்து வெடித்ததாக சிறிலங்காவின் படைத்துறைத் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இத் தாக்குதல்களில் விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பி.பி.சி வான்படைத்தளப் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்து குடிசார்வான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை அங்கிருந்தும் வெளியேற…
-
- 0 replies
- 1.3k views
-
-
Jun 10, 2011 / பகுதி: செய்தி / திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில். “பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், சிறிலங்கா அனுபவம்” என்ற தலைப்பில் சீன அரச ஆதரவுடன் இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்த மூன்று நாள் மகாநாட்டில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் இறுதி நாளன்று ஆற்றிய உரை வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மைக் காலமாக ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்தக் கருத்துக்கள் இவருக்குச் சொந்தமானவையா அல்லது இவர் மீது திணிக்கப்பட்டவையா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. பல வரலாற்றுத் திரிபுகள் இவருடைய இராணுவ மாநாட்டு உரையில் அடங்கியுள்ளன. திருமதி …
-
- 37 replies
- 3.2k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இடங்களும் கூட அதிகரித்துள்ளன. கடந்த 14 நாள்களில் 6 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறு தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.யாழில் கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி கடந்த வருடம்பல இடங்களில் பலர்; வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.சிலர் உயிரிழந்துள்ளனர். புதுவருடம் தொடங்கி 14 நாள்க…
-
- 1 reply
- 497 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, பொங்குத் தமிழ் நிகழ்வு என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைகழகத்தில், நாட்டைத் பிளவுபடுத்தும் இதுபோன்ற தீவிரவாத செயற்பாடுகளை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதியளித்தது எனவும் அந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், அவர்களது கொள்கையான தனி தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்வே பொங்குத் தமிழ் நிகழ்வு என கூறிய அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, இந்நிகழ்வு யாழ் பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியின் தலைமையில், நடைபெற்றதாகவும் கூறினார். பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நி…
-
- 1 reply
- 1.5k views
-
-
எங்கள் பற்றிய பேச்சுக்கள் எங்களுக்கே இரகசியமா? எம் பற்றிய-எம் இனம் பற்றிய விவகாரம்தான் பேசுகிறார்கள். ஆனால் அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. இந்த நிலையில்தான் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் விவகாரம் குறித்து இருவகைப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்று இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் நடத்தும் பேச்சு. மற்றையது இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தும் பேச்சுவார்த்தை. இதில் இரண்டு பேச்சுவார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவையாயினும் பேசும் தரப்பில் இருக்கக்கூடிய அதிகாரத்தன்மை வேறுபட்டுள்ளதைக் காணமுடியும். அதாவது இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுக்கும் அதிகாரம்…
-
- 1 reply
- 325 views
-
-
குற்றச்செயல்கள் பல மடங்காக அதிகரிக்கின்றன - பொலிஸ்மா அதிபர் என எவரும் இல்லாத நிலை Published By: RAJEEBAN 04 JUL, 2023 | 01:06 PM இலங்கையில் பொலிஸ்மாஅதிபர் இன்னமும் நியமிக்கப்படாத சூழலில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. பட்டப்பகலில் துப்பாக்கிசூடு கொலைகள் போன்ற குற்றச்செயல்கள் நாட்டில் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் சட்டமொழுங்கை பேணவேண்டிய குற்றச்செயல்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொலிஸ் திணைக்களம் ஒருவார காலத்திற்கு மேல் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில் இயங்குகின்றது. பொலிஸ்மா அதிபர் சிடிவிக்கிரமரட்ண ஜூன் 26ம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெற்…
-
- 0 replies
- 285 views
-
-
வவுனியா மருத்துவர்களுக்கு கருணா குழுவினர் கொலை மிரட்டல் [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:42 ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா பகுதியில் உள்ள மருத்துவர்களை கப்பம் கட்டுமாறு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் விடுத்து வரும் மிரட்டல்களைத் தொடர்ந்து, வவுனியா பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் சட்டப்படி வேலை செய்தல் என்னும் போராட்டத்தை இரு நாட்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தினால் அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனையின் பல பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கருணா குழுவினர் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோர், தங்களிடம் பெரும…
-
- 2 replies
- 959 views
-
-
Saturday, June 18, 2011, 19:24சிறீலங்கா அரியாலை தபாற்கட்டைச்சந்தியில் இருந்து இடம் பெயர்ந்த 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 வருடங்களாகியும் இதுவரை அந்தப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவில்லை. தற்போது மீள் குடியமர்வு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் இந்த வேளையில் தம்மையும் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தபாற்கட்டைச் சந்திப் பகுதியில் ஜே/94 கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை உள்ளடக் கிய வீடுகளில் குடியிருந்த மக்கள் 20 வருடங்களாக இடம் பெயர்ந்து பெரும் இன்னல்களுடன் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பல இடங்களில் மக்கள் குடியிருப்புக்களில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் வெளியேறி பொதுமக்களிடம் வீடுகளைக் கையளித்து வரும் நிலையில் இ…
-
- 1 reply
- 642 views
-
-
Published By: VISHNU 14 JUL, 2023 | 11:17 AM ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்! IWWWRMP திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குள பிரிவின் கீழ் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்கால் புனரமைப்பு வேலைக்கான அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை (13) கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதில் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்காலில் உள்ள D - 23 வாய்க்காலின் திருத்த வேலை 5 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசன அமைச்சின் திட்ட அமுலாக்கம் மற்றும் ஒழுங்…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
கடுமையான உணவுத் பற்றக்குறையில் வாழும் மட்டக்களப்பு இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேசமயம் கடுமையான உணவு பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தினால் மீண்டும், மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்தவிதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளைகளும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துருக்…
-
- 0 replies
- 706 views
-
-
மங்களவுக்கு நேசக்கரம் நீட்டும் மகிந்த [ ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீரவுக்கு மகிந்த ராஜபக்ச நேசக்கரம் நீட்டுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தேசிய புதுவருட நல்லெண்ண முயற்சியாகவும், மீண்டும் தமது நட்பை புதுப்பிக்கும் முயற்சியாகவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோருக்கு இடையிலான சமரச முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியுள்ள மங்களவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை அனுப்புவதனை நிறுத்தும்படியும், ஆனால் முன்னாள் அமைச்சர் சிறீ…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்.பிராந்தியத்துக்கான சிங்கள ஆக்கிரமிப்பு படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை இராணுவத்தின் பீரங்கிப் படையணியின் எந்த வைபவத்துக்கும் அழைப்பதில்லை என அந்தப் படையணியின் பிரதானி தரப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. . இராணுவத்தைப் பொறுத்த வரையில் மஹிந்த ஹத்துருசிங்க ஒரு சிரேஷ்ட, பொறுமிக்க படையதிகாரி என்ற பதவி நிலையைக் கொண்டவராக இருந்தாலும் தமது படையணி அவருக்கு எந்தக் கௌரவத்தையும் இனி வழங்கமாட்டாது எனவும் பீரங்கிப் படையணியின் பிரதானிகளில் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். . தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் கப்பம் பெற்றுக் கொண்டிருந்த தேசத் துரோகியான மஹிந்த ஹத்துருசிங்க, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் …
-
- 0 replies
- 726 views
-
-
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/266053
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
தமிழர்களின் அவலக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை சர்வதேசம் தனது அலட்சியப் போக்கை நீடிக்காது, தமிழர்களின் அவலக் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும். அவ்வாறின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும். இவ்வாறு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் இளம் சந்ததியினர் பெரும் எண்ணிக்கையில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். ஆனால், அத்தகைய அநீதிகள் வெளி உலகத்திற்குத் தெரியாதவாறு அரசினால் திட்டமிட்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்…
-
- 0 replies
- 730 views
-
-
200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை – UNHCR 03 ஜூலை 2011 வடக்கில் சுமார் 200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பகரமான தரவு மூலங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி எலினா பெர்ட்டெரி தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் இந்த எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் 102000 பேரும், புத்தளத்தில…
-
- 0 replies
- 507 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாதோர் அழைப்பு October 22, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழில் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பார் என தெரிய வருகிறது. இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் ச…
-
- 1 reply
- 479 views
-
-
போர்க்குற்றவாழி மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்துள்ளார். தனக்கு வெளினாடுகளால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகள் பற்றி பேரினவாத பீடாதிபதிகளிடம் ஆலோசித்துள்ளார். . அதன் பின்னர் கண்டி தலதா மாளிகையில் பூஜை நிகழ்வுகளில் கலந்துக் கொண்ட மஹிந்தர; எந்த ஒரு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்துக்கும் அடிப்பணிந்துவிட வேண்டாம் என, பீடாதிபதிகள் போர்க்குற்றவாழி மஹிந்தருக்கு ஆலோசனை கூறியுள்ளனர். My link
-
- 5 replies
- 972 views
-
-
ஐ. நா விசாரணை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தமை இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டுள்ளர். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.நாவின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள வெளிவிவகாரப் பிரதி அமைச்சர், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பாரிய பிரதிகூலங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எண்ணம். ஐ…
-
- 8 replies
- 588 views
-
-
யாழில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு October 28, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரில் சட்டவிரோத கேபிள் இணைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில்இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி 55 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்துக்கொண்ட போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே பெண் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில்…
-
- 0 replies
- 298 views
-
-
எஸ்.எம்.எம்.முர்ஷித் முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிராசையாக போய்விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன் போன்ற அரசியல்வாதிகள் இன்று களத்திலே இறங்கி, இனவா…
-
- 8 replies
- 711 views
-
-
இடம்பெயர்ந்தோர் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் மூவரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டியில் ஒரு பெண் உட்பட மூவரை ஞாயிற்றுக்கிழமையயன்று சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. குடாவெட்டை இறால்குளத்தைச் சேர்ந்த பொன்னுசாமி செல்லதுரை (வயது 46), சித்தாண்டி பெருநாவேலியைச் சேர்ந்த நாகலிங்கம் திருச்செல்வம் (வயது 42) பூபாபல பிள்ளை பூமணி (வயது 30) ஆகியோர் தங்களது விவசாய செயற்பாடுகளை பார்க்கச் சென்றபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மூவரின் உடல்களும் சிறிலங்கா இராணுவ காவலரண் அர…
-
- 0 replies
- 748 views
-