ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் முடிவில் குழப்பம்! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்தியாவிடம் குழப்பமான தன்மைகள் தெரிவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முன்னர் முடிவு செய்திருந்ததாக தெரிய வருகின்றது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கொழும்புக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா …
-
- 0 replies
- 878 views
-
-
இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மாலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இலங்கை - ஜேர்மனி தொழில்நுட்பக் கல்லூரியை பார்வையிடுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=72751
-
- 0 replies
- 321 views
-
-
விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது - சுமந்திரன் (ஆர்.யசி) அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது. அதேபோல் விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு மாமா வேலை ச…
-
- 0 replies
- 473 views
-
-
புலிகளின் தபால் முத்திரை குறித்து ஜெர்மனி மன்னிப்பு கோரியுள்ளது தமிழிழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜெர்மன் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வேண்டுமென்றே தபால் முத்திரை வெளியிடப்படவில்லை என ஜெர்மன்அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான புலிச் சின்னங்கள் தாங்கிய தபால் முத்திரைகள்எதிர்காலத்தில் அச்சிடப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தபால் முத்திரைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பைஅறிந்து கொள்ளாமல் முத்திரைகள் வெளியிடப்பட்டதாக ஜெர்மன் தபால் திணைக்களத்தின் துணைத்தலைவர் டொக்டர் ரெனியர் வென்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை மக்களிடமும், இலங்கை அரசாங்கத்திடம்மன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தை தடுத்து வைத்து பொலிஸ் விசாரணை - யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தினரை அழைத்து கோப்பாய் பொலிசார் பல மணிநேரம் தடுத்து வைத்து இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்.பல்கலைகழக கலைப்பீட சிரேஸ்ட - கனிஸ்ட மாணவர்களுக்கு இடையில் கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து 9 ம் திகதியும் 10ம் திகதியும் மாணவர்கள் தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். 10ம் திகதி மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தின் வெளியில் வீதியில் நின்று தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். அதனால் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. அதனை அடுத்து மோதல் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிசார் தெரிவிக்கப…
-
- 0 replies
- 401 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாற, சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஹேமசிறி-பூஜித்தவை-கைதுசெய்ய-உத்தரவு/150-234817
-
- 1 reply
- 364 views
-
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 11:27 PM ரொபட் அன்டனி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார். பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளமையையும் எடுத்துக் கூறினார். பாத்பைன்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற…
-
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று சிறிலங்காவின் மனித உரிமை மீறல் விடயம் தொடர்பில் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உபகுழு இந்த விவாதத்தினை ஆரம்பித்து வைக்கும். இதில் ஜெனீவாவில் எடுக்கப்படவிருக்கும் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கப்படும் என அறியமுடிகின்றது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 604 views
-
-
தென்னாபிரிக்கா-கம்போடிய நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணைபொறிமுறைக்கு பயன்படுத்துமாறு கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட முக்கிய தலைவர்கள் சிலரிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் தென்னாபிரிக்கா ,மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணை பொறிமுறைக்கு பயன்படுத்துமாறு இலங்கையின் கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் சமீபகாலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால்,முழுமையான உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற முடியாது என நாங்கள் கருதுகின்றோம்,மேலும் வெறுமனே சர்வதேசபிரதிந…
-
- 0 replies
- 199 views
-
-
குருணாகலை - ரஸ்னாயக்கபுர பகுதியில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பினை பேணியதாக கைது செய்யப்பட்ட மௌலவி மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ககடந்த மே மாதம் முதலாம் திகதி நிகவெரட்டிய ஊழல் தடுப்பு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மௌலவி தொடர்பான விசாரணைகளை ரஸ்னாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். அதற்கமைய இரு மாத காலமாக சந்தேக நபரை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன் போது சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெறுங்கிய தொடர்பை பேணியுள்ளதாகவும் இஅவரது தலைமையின் கீழ் இயங்கி வந்த பயிற்சி முகாம்களில் சந்தேக நபர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது. …
-
- 0 replies
- 282 views
-
-
விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமால், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனர். இப்படி செய்வதால் எதிhகாலத்தில் தமிழகத்திலும் ஒரு 'யாழ்ப்பாணம்'; உருவாகும் ஆபதது உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் அமைப்புகள் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் தனி நாடு கோரி போர் செய்து வரும் விடுலைப் புலிகளளுக்கு எதிராக, நடுநிலையான சில அமைக்புகள் உள்ளன. முன்னா தமிழ் ஈழததில் சிங்கள அரசு, தமிழ் நிர்வாகத்தை ஏற்படுத்திய போது, இந்த அமைப்புகள் ஒத்துழைப்பைபு அளித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்று வந்துள்ளனர். விடுதலைப் புலிகள்; எதிர்ப்பு அமைப்புகள…
-
- 8 replies
- 3.2k views
-
-
இராணுவ விசாரணை நீதிமன்றினால் வாக்குமூலங்கள் பதிவு ஆரம்பம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறுpத்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்புரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அக்கறையுடையவர்களை இவ்விசாணை நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளிக்கும்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமயகத்தின் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் தலைமையில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றம் கோரியுள்ளளது. அதேசமயம்…
-
- 5 replies
- 693 views
-
-
சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம் இனந்தெரியாத ரௌவுடிக் கும்பலொன்று பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கியமைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரண்டு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்களில் ஒரு தரப்பினர், சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், நீதிமன்றங்களுக்கு செல்லாது பணிப்புறக்கணிப்பு போராட…
-
- 0 replies
- 294 views
-
-
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு சிறிய குண்டு வெடிப்புக்களும் சதி நடவடிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்று "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதியை சந்தித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு அமெரிக்கா இலங்கைக்கு எதிரான யோசனையை சமர்ப்பித்துள்ள போதிலும் அரசாங்கம் அவசரப்படவில்லை எனவும் அதனைப் பொறுமையுடனேயே அணுகும் எனவும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் கூற முடியும் எனவும் கூறினார். அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போது 7 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான யோசனையை சமர்ப்பித்துள்ளது. ஜெனீவா அமர்வின் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கைக் குழு நாடு திரும்பியதன் பின்னர் நேற்று முன்தினம் அமெரிக்கா அதன் யோசனையை சமர்ப்பித்துள்ளது. …
-
- 1 reply
- 818 views
-
-
இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியரான மு.சின்னத்தம்பி காலமானார் இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமைக்குரிய பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார். கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இ…
-
- 1 reply
- 1k views
-
-
மட்டக்களப்பில் அரசாங்கத் தேர்தல் வேட்பாளர் கடத்தப்பட்டார் ஆளும் அரசாங்கத்தின் சார்பில் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சிவதாசன் சிவகுமார் என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் உள்ள இவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.2k views
-
-
சுற்றுலாப் பயணிகளின் வருகை செப்டெம்பர் மாதத்தில் 1,43,374 ஆக பதிவாகி உத்வேகம் மிக்க வளர்ச்சியை கொண்டிருந்ததுடன் 35.9 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்ததோடு சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் அவதானிக்கப்பட்ட வளர்ச்சியினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 228 மில்லியன் டொலராக 31.9 சதவீதம் கொண்ட மிக உயர்ந்த வளர்ச்சியினைப் பதிவுசெய்தன. அதன் படி, முதல் மூன்று காலாண்டுகளிலும் சுற்றுலாவிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய் 1,763 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 2,095 மில்லியன் டொலராக 18.8 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஆண…
-
- 0 replies
- 372 views
-
-
1 Min Read August 2, 2019 போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு செலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்காக வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் ஆலய பின் வீதியில் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது.வீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இ…
-
- 0 replies
- 278 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
தடுப்பு அணைகள் அகற்றல் வரணி, எழுதுமட்டுவாள் பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட தடுப்பு மண் அணைகள் கடந்த சில தினங்களாக இரண்டு மில்லியன் ரூபா செலவில் மாவட்டச் செயலக ஏற்பாட்டில் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 1996ம் ஆண்டு முதல் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய மக்களின் வாழ்விடப் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தில் படையினர் நிலை கொண்டிருந்ததோடு அப்பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பாரிய மண் தடுப்பணைகளும் அமைக்கப் பட்டிருந்தன. எனினும் இப்பகுதியில் தற்போது மக்கள் குடியிருக்க அனுமதிக்கும் நோக்கில் படையினர் வெளியேறியபோதும் படையினரால் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் அகற்றப்படாத நிலையிலேயே நீண்ட காலமாக காணப்பட்டது. …
-
- 0 replies
- 582 views
-
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல் adminOctober 21, 2024 யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செ…
-
-
- 39 replies
- 2.3k views
- 2 followers
-
-
இந்தியக் குழுவின் விஜயத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 11:03:46| யாழ்ப்பாணம்] இலங்கையுடன் தொடர்பு கொள்ளவும் தயக்கம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக விஜயம் செய்யவிருந்த இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குமா என்பது தொடர் பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்த நிலையிலேயே இச்சந்தேகம் ஏற்பட் டுள்ளது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் குழுவின் தலைவரான நாடாளுமன்ற…
-
- 0 replies
- 984 views
-
-
தீபாவளியை முன்னிட்டு அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் : வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை தீபாவளியை முன்னிட்டு இன நல்லிணக்கதை ஏற்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசில் கைதிகளை விடுதலை செய்யா…
-
- 0 replies
- 392 views
-
-
வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்! October 28, 2024 இன்று நடைமுறையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ‘தலைவராக’ செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நேற்றைய தினம் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அநுர அலை ஒன்று வீசுவதாகவும் அது ஆபத்தானது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’, என்று கூறியிருக்கிறார். ‘தங்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அதிகாரத்தை தமிழ் மக்கள் எங்களுக்கே தரவேண்டும். அநுர அலையை அடியோடு அகற்றிவிட வேண்டும். தமிழ் அரசு கட்ச…
-
- 3 replies
- 273 views
-