ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வியாழன் 28-02-2008 14:16 மணி தமிழீழம் [மயூரன்] அரச அதிபர், மத்திய வங்கியின் தலைவர் ஆகியயோரின் கையெழுத்துக்களுடன் புதிய நாணயத்தாள் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிசாட் காப்ரல் ஆகியயோரின் கையெழுத்துக்களுடன் சிறீலங்காவின் நாயணத்தாள்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் இவர்களின் கையெழுத்துக்களுடன் 2000 ரூபா, 50 ரூபா, 20 ரூபா, 10 ரூபா நாணயத்தாள் நாட்டில் புழக்கத்தில் விடப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்தியா, மாலைதீவு போர்க்கப்பல்கள் கொழும்புத்துறைமுகத்தில். 28.02.2008 / நிருபர் எல்லாளன் இந்தியாவினுடை கரையோரப் பாதுகாப்புப் படையின் கப்பலான சுகன்யாவும் மற்றும் மாலை தீவு தேசிய பாதுகாப்பு கப்பல் படையின் குறுவி ஆகிய இரண்டு கப்பல்களும் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 4 replies
- 1.6k views
-
-
கல்முனையில் சிங்களவர்கள் இருவர் சுட்டுக்கொலை, மற்றொருவர் காயம் அம்பாறை கல்முனை பாண்டிருப்பு பகுதியில் மொறட்டுவையைச் சேர்ந்த இரண்டு சிங்கள வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தளபாட விற்பனையாளர்களான இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மற்றுமொரு சிங்களவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் மொறட்டுவையைச் சேர்ந்தவர்களான 51 அகவையுடைய நிமால் சிறீலால் பெலங்கர், 40 அகவையுடைய பிறேம்லால் பெர்னான்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் மொறட்டுவையைச் சேர்ந்த 31 அகவையுடைய பஸ்கிலால் அல்சிஸ்லல் சந்திரதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மொறட்டுவை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் இன்று சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட இருவேறு கிளைமோர் தாக்குதல்களில் எட்டு அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். முதலாவது தாக்குதல் பகல் 1.50 மணியளவில் மூன்றுமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள பனங்காமம் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. உழவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் இச்சம்பவத்தின்போது உயிரிழந்தனர். உயிழந்தவர்கள் பார்த்தீபன்(18), சண்முகலிங்கம் தவராசா, செல்வரத்தினம் செந்தூரன், மற்றும் குணபாலசிங்கம் ஜெககீர்த்தன் ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருதோடைப்பகுதியில் இருந்து ஒலுமடு நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு 8.30 மணியளவில் இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதும் நான்கு பொதுமக்கள் உயிரிழந்த…
-
- 8 replies
- 3.5k views
-
-
"விடுதலைமூச்சு" திரைப்படம் திரையிடத் தடை விதிக்குமாறு சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுதலைமூச்சு திரைப்படத்தைத் திரையிடுவதற்கு அனைத்துலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அனைத்துலக ரீதியில் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை செய்யுமாறு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், ஆகிய நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. நோர்வேயில் விடுதலைப் புலிகளை தடை செய்யாதபோது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் திரைப்படத்தை தடை செய்…
-
- 3 replies
- 2.2k views
-
-
கரந்தாய்குளம் மீது விமானக்குண்டுவீச்சு 2/28/2008 6:16:18 PM வீரகேசரி இணையம் - வன்னியில் பளை, கரந்தாய்குளம் பகுதி மீது இன்று விமானப்படையினரின் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் ஆட்லறி தாக்குதல்களை நடத்துவதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் நிலையத்தின் மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினராலும் தரைப்படையினராலும் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசத்தின் மீதே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது அந்நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படையினர…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றார் தகவல் கிடைத்துள்ளது என்கிறார் பிரிகேடியர் 2/27/2008 9:55:09 PM வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றார் என்று வன்னியிலிருந்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ; இலங்கை வான் படையினரால் புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளப்படுகின…
-
- 15 replies
- 3.9k views
-
-
சர்வதேச கருத்தியலை உள்வாங்கி தன்னை நெறிப்படுத்துமா கொழும்பு? 28.02.2008 ஆபத்துக்குள்ளான மக்களின் நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் ஆய்வு நடத்திவரும் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிறுபான்மையினருக்கான உரிமைக்குழு, ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது என்பதை அடையாளம் கண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலும், பர்மாவிலும் நிலைமை மிகமிக மோசம் எனத் தெரிவித்திருக்கும் அந்த அமைப்பு, புதுவருடத்துடன் இலங்கையில் நிலைமை கிடுகிடுவென சீரழிந்து மிகமிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 894 views
-
-
சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை [28 - February - 2008] உலகில் இன, மத சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை இருக்கின்றது. அச்சுறுத்தலுக்குட்பட்டிருக
-
- 0 replies
- 962 views
-
-
13வது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் மஹிந்தவும் எதிர்கட்சி தலைவர் ரணிலும் இணக்கம் கண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இருதரப்பும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமையவின் தலைவனும எம்.பியுமான எல்லாவெல மேத்தானந்த தேரோ தெரிவித்தார். இந்தியாவின் தீர்வு திட்டத்துக்கு அமைய இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்துவது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. எமது பிரச்சினையை நாமே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 13வது திருத்த்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க ரணில் இணங்கியுள்ளார். மஹிந்வுடனான சந்திப்பில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 769 views
-
-
வியாழன் 28-02-2008 02:40 மணி தமிழீழம் [மயூரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து , ஒன்பது மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். லெப. கேணல் தணிகைநிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி சுரேஸ்குமார், 2ஆம் லெப்ரினன்ட் வேழினி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தியாம்பிள்ளை தேவஜெனிற்றா ஆகிய இரு போராளிகளும், இராகவன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவசுந்தரம் இராகவன் என்ற போருதவிப் படை வீரரும், கடந்த 25ஆம் நாள் திங்கட்கிழமையன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். லெப்ரினன்ட் குயிலன் என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பேரம்பலம் யோசப், லெப்ரினன்ட் வெற்றிமகன் …
-
- 11 replies
- 2.6k views
-
-
காரைக்கால் அருகே 21 இலங்கை மீனவர்கள் கைது வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008 காரைக்கால்: காரைக்கால் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த இலங்கையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. காரைக்கால் அருகே 15 கடல் மைல்கள் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு படகு அத்துமீறி நுழைவதை கடலோரக் காவல் படை கண்டறிந்தது. இதையடுத்து அங்கு விரைந்த கடலோரக் காவல் படையினர் அந்த படகை மடக்கியது. அதில் 21 பேர் இருந்தனர். தாங்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாமோ என்று கடலோரக் காவல் படையினர் சந்தேகப்படுகின்றனர். …
-
- 0 replies
- 941 views
-
-
இலங்கைத் தமிழர்களின் 'தமிழர் தாயகம' குறித்து பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பெயன் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பேர்னாட்; குணதிலகவிற்கு விடுத்த அழைப்பபை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்க முன்னாள் பிரதிச் சட்டமா அதிபரின் அழைப்பை ஏற்பதற்கு இலங்கை அரசு ஒரு போதும் கட்டுப்பட்டிருக்க வில்லை எனவும், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகளுக்கு உரிமை இல்லை எனவும் அரசு அறிவித்துள்ளதாக அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் ஈழ இராச்சியமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்கப் புலிகள் அமைப்பு இரண்டு லட்சம் டொலர் செலுத்தி, முன்னாள் பிரதிச் சட்டமா அதிபரின் ஆதரவைப் பெ…
-
- 7 replies
- 2.9k views
-
-
கொசோவோ பிரச்சினையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 7 replies
- 3.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் 'தங்களுக்காக அல்ல' என்ற பொதுவான பதிலே அந்த மாவட்ட மக்களிடமிருந்து கிடைத்ததாக அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பொதுமக்கள் சமூகப் பிரதிநிதிகள் நேற்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப…
-
- 18 replies
- 2.7k views
-
-
யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் - பேக்கர் மாமா சங்கரியார் தமிழக தலைவர்களுக்கு அறிவுரை! டெல்கியில் தெருத் தெருவாக அலைந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவு திரட்டி முடித்துவிட்டு. சென்னை திரும்பினர் அந்த மூன்று பேரும். சென்னையில் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளாததால் தாங்களே ஒரு பெயரைச் சூட்டி “இந்திய - இலங்கை அமைதி நடவடிக்கை” பற்றிய கருத்தரங்கு என்று கூறி (என்ன இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யுத்தமா நடைபெறுகிறது அமைதி நடவடிக்கை மேற்கொள்ள?) வழக்கம் போல் சிங்கள இனத்தை நியாயப்படுத்தி யாழ்ப்பாணத்தாரை இழிவு படுத்தியும் பேசியுள்ளார் சங்கரிய! அவரது பேச்சு இதோ:- இங்கே (தமிழக) சில கட்சிகள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சொந்த ல…
-
- 13 replies
- 4.6k views
-
-
சேர்பிய வழியில் இலங்கை இராணுவத் தீர்வில் தங்கி நிற்பதில் உள்ள ஆபத்தையே கொசோவோ காட்டுகின்றது' என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரும் பார்வையாளருமான ஜெஹான் பெரேரா தமது கட்டுரை ஒன்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழகத்தில் விடுதலைப் ‘புலிகள்’ நடமாட்டம் பெருகி விட்டது. தி.மு.க. அரசு அவர்களுக்கு ஆதரவாக உள்ளது’ என்று மீண்டும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. தி.மு.க. அரசுக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார் என்ற பேச்சுக்கு நடுவே, கடந்த சனிக்கிழமை மதியம் தமிழக கவர்னரை, சந்தித்தார் சுவாமி. அன்று மாலையே ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசினார். கொஞ்ச காலமாகவே ஜெ.வும் சு.சுவாமியும் அடிக்கடி டெலிபோனில் ஆலோசிப்பதாகக் கூறுகிறார்கள். என்னதான் நடக்கிறது? என்று அறிய, ஜனதா கட்சித் தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை நேரில் சந்தித்தோம். வழக்கம் போலவே தனது அதிரடிகளைத் தொடர்ந்தார் அவர்... தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டாலே நீங்கள் ‘விடுதலைப் புலிகள் நடமாட்டம்... த…
-
- 3 replies
- 2.5k views
-
-
இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் பொதுமக்கள் மரணமடைவது சடுதியாக அதிகரித்திருப்பதாகவும் சமாதானத்திற்கான விருப்பத்தை தற்போதைய அரசாங்கம் சிறிதளவே வெளிப்படுத்துவதாகவும் ஜெனீவாவிலுள்ள சிறிய ஆயுதங்கள் தொடர்பான மதிப்பீட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் ரொபேர்ட் முக்கா தெரிவித்துள்ளார். கனடாவின் 'த ஸ்டார்' பத்திரிகையில் ரொபேர்ட் முக்கா எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. இராணுவத் தீர்வை கைவிடுமாறு கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை இலங்கை புறக்கணிக்குமானால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படும் பொதுவான முறைமைகளிலிருந்து வாபஸ்பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியுமென்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பாக …
-
- 11 replies
- 1.9k views
-
-
புதன் 27-02-2008 23:22 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் மாணவர்கள் முன்னிலையில் கடத்தல் யாழ் கைதடி விக்னேஸ்வரா வித்தியாலத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய 28 அகவையுடைய சின்னத்தம்பி ராஜேஸ்வரன் இன்று காலை 7.00 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பாடசாலைவளாகத்தில் வைத்து மாணவர்கள் முன்னிலையில் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற படைப் புலனாய்வாளர்களாலே இவர் கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பாக கடத்தப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். இதேவேளை, கொக்குவில் ஆடியபாதம் வீதியில் வீட்டின் முன்பாக வைத்து முச்சக்கரவண்டிச் சாரதியான 29 அகவையுடைய ராசலிங்கம் பாலமுரளி ஆயுதம் தரித்த படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன் 27-02-2008 21:45 மணி தமிழீழம் [தாயகன்] வெள்ளவத்தையில் குண்டு வதந்தியால் பதற்றம் வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மின்மாற்றி ஒன்றிலிருந்து எழுந்த புகை மண்டலம் காரணமாக ஏற்பட்ட குண்டுப் புரளியால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நேற்று காலை 9.00 மணியளவில் பெருமளவிலான மக்கள் குழுமி நின்றபோது பழுதடைந்த மின்மாற்றியிலிருந்து புகை கிளம்பியிருக்கின்றது. வெடிகுண்டு வெடித்ததால் இந்த புகை மண்டலம் ஏற்பட்டிருப்பதாக எழுந்த புரளியால் மக்கள் அலறியடித்து ஓடியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மினசார சபை ஊழியர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு நிலமையை மக்களிற்கு விளக்கியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன் 27-02-2008 20:42 மணி தமிழீழம் [தாயகன்] அளுத்கம தொடரூந்தில் குண்டுப் புரளி கொழும்பிலிருந்து அளுத்கம சென்ற தொடரூந்தில் குண்டு இருப்பதாக பரவிய வதந்தி காரணமாக தொடரூந்தில் பயணித்த மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியுள்ளது. இன்றிரவு 8.30 அளவில் மொறட்டுவ தொடரூந்து நிலையத்தில் தொடரூந்து தரித்து நின்றபோது ஏற்பட்ட குண்டுப் புரளியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயணிகள் பதறியடித்து வெளியேறியுள்ளனர். பயணிகள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம், மற்றும் அவசர வெளியேற்றம் காரணமாக சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 932 views
-