ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை கண்டுபிடித்துள்ளதாக யாழ்.இளைஞன் தெரிவிப்பு! செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை தான் புதிதாக கண்டுபிடித்தாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுலன் தெரிவித்தார். இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும் என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக இருக்கும். நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இதயமும் நுரை…
-
- 3 replies
- 815 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்நத நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆராய்சிச் சுருக்கங்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. 40 ஆம் அணி மருத்துவ மாணவர்களால் சுமார் 30 ஆராய்ச்சிச் சுருக்கங்கள் இந்த ஆய்வு மாநாட்ட…
-
- 0 replies
- 456 views
-
-
யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா? யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது. அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது. …
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்! 2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதன்படி 14 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவனான இவர், 8ஆம் தரம் கல்வி கற்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எழுதி, 6 மாதங்களுக்கு பின், 9 தரத்தில் க பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இதற்கமைய உயர்தர பிரிவில் இவ…
-
- 0 replies
- 394 views
-
-
யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பம் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். இதேவேளை சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.(15) …
-
- 0 replies
- 160 views
-
-
எங்கள் கடலையும் நிலங்களையும் தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – அங்கஜன் எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பாக இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோம். 2023 தொடங்கியதுமே இந்த நாட்டில் சின்னவெங்காயம், உருளைக்கி…
-
- 0 replies
- 179 views
-
-
அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் வேண்டுகோள் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப…
-
- 0 replies
- 616 views
-
-
தேசிய இன விகிதாசார அடிப்படையில்காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட சடவடிக்கை – சாணக்கியன் தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட ஒழுங்குப்பிரச்சினையினை எழுப்பி கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார், இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும். ஆனால் 94 சதவீதமான காணிகள் பெரும்பான்மையினருக்கு பிரிக்கப்படுள்ள நிலையில் மிகுதிக் காணிகள் சிறுபான்மை ம…
-
- 0 replies
- 222 views
-
-
பல இலட்சம் உயிர்களின் தியாகம் மாவட்ட சபைக்காக அல்ல .. சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழ் மக்கள் இலட்சம் உயிர்களை தியாகம் செய்தது மாவட்ட சபைக்காக அல்ல என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சுயநிர்ணய உரிமை கொண்ட சமஸ்டி ஆட்சியே ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் மேலும் கூறியுள்ளதாவது: இலட்சம் உயிர்களின் இலட்சியம் “ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தாயக ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சுமார் நாற்பதாயிரம் போராளிகள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்புப் போரில் சுமார் இரண்டறை லட்சம் மக்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் உயிர்க…
-
- 0 replies
- 445 views
-
-
ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் - வைத்தியர் பாலகோபி By VISHNU 06 DEC, 2022 | 08:45 PM ( எம்.நியூட்டன் ) ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணருமான பா.பாலகோபி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இன்று (6)குழந்தையின்மைப் பிரச்சினை தீவிரம் பெற்றுள்ளது. குழந்தையின்மைக்கான மருத்துவத…
-
- 0 replies
- 699 views
-
-
மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ, எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக ஆபத்துக்கு வழிவக…
-
- 0 replies
- 646 views
-
-
இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்ற…
-
- 0 replies
- 265 views
-
-
யாழ். பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட…
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது! அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்கு…
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுமா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு சிங்கள மொழியில் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதிலின் ஊடாக, இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக வெளிப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இந்த இருவருக்கும் இடையே நடந்த கேள்வி - பதில் உரையாடலின் …
-
- 0 replies
- 178 views
-
-
சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். Tamilmirror Online || நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்
-
- 19 replies
- 930 views
- 2 followers
-
-
தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை சிறுநீரகம் விற்பனை செய்தமைக்காக பணத்தை தரவில்லை என பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக மிகவும் சிரமத்தை எதிர்கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களே சிறுநீரகங்களை விற்றுள்ளனர். திங்கட்கிழமை பொலிஸில் சரணடைந்த முக்கிய சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 15 கஜிமாவத்தையை சேர்ந்த 41 வயது நபரே சந்தேகத்தின் …
-
- 0 replies
- 357 views
-
-
(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் துப்பாக்கியால் சுடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் போது குறிப்பிட்டார். அவர் தற்போது ஜனாதிபதி ஆகவே ஒரு தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடற்றொழில் அமைச்சரிடம் குறிப்பிட்டார். இதேவேளை ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். இலங்கை -இந்திய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடப்படுகிறதே தவிர தீர்வு எட்டப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 06) இடம்பெற்ற …
-
- 0 replies
- 180 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும். அத்தோடு மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு திங்கட்கிழமை (டிச. 05) ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. ' கொந்தளிப்பில் இருந்து வாய்ப்புக்கு மீள்வது' என்…
-
- 2 replies
- 490 views
-
-
(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) நடைமுறைக்கு பொருந்தும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும்.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர்த்து தற்போதைய நிலையில் மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார். மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்சார கட்டணத்தை மீண்டும் அத…
-
- 1 reply
- 201 views
-
-
மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனப்படுத்தும் சட்டமூலத்தை விரைவாக சமர்ப்பிக்கவும் - சஜித் By T. SARANYA 19 NOV, 2022 | 12:58 PM (இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் மீண்டும் தமது ஆதரவாளர்களை மத்திய வங்கியில் அமர்த்தி மிகுதியாக இருப்பதையும் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள். மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. சட்டமாதிபர் திணைக்களத்தின் ஆலோனை கோரப…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
சமஷ்டியை 'மீண்டும் நிகழ்ச்சி நிரலில்' வைப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டத்தைக் கூட்டினாலும், சமஷ்டி அரசமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்காத வரையில், "ஈடுபடுவதில் அர்த்தமில்லை". சமஷ்டி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியுடனான உரையாடலை நினைவுகூர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி "சமஷ்டியை நிராகரித்தார்" என்றார். “…
-
- 5 replies
- 856 views
- 1 follower
-
-
20 பெண்களை அழைத்து வந்துள்ளேன்.. என்னைக் காப்பாற்றுங்கள்! ஓமான் மற்றும் அபுதாபிக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து வந்த குறித்த நபர் நேற்று (18) இரவு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இவர் 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் வினவிய போது, அவர் அவ்வாறானதொரு செயலை ஒருபோதும் செய்யவில்லை என தெரிவித்தார். ஊடகவியலாளர் - பெண்க…
-
- 0 replies
- 350 views
-
-
இளவாலையில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது By NANTHINI 19 NOV, 2022 | 04:01 PM இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய நபர் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) இளவாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் முதலியன மீட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சந்தேக நபர் தான் திருடிய நகைகள் சிலவற்றினை நகைக் கடையில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட நபர் இளவாலை பகுதி…
-
- 6 replies
- 459 views
- 1 follower
-
-
வட மாகாணத்தின் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி தெரிவிப்பு By T. SARANYA 19 NOV, 2022 | 02:45 PM காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாக…
-
- 2 replies
- 252 views
- 1 follower
-