ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
யாழில் ஹெரோயின் கடத்திய பெண் கைது யாழ்ப்பாணம் – அரயாலை பகுதியில் வைத்தியசாலை ஊழியர்போல் மோட்டார் சைக்கிளில் மருத்துவ குறியீடு பொறித்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியமான நபர் சிறையில் உள்ளதாகவும், அவரே இவற்றை வழிநடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/அரியாலையில்-ஹெரோயினுடன்…
-
- 0 replies
- 391 views
-
-
சுகததாஸ விளையாட்டரங்கில் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற" வாட்டர் போலோ' விளையாட்டின் போது கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையின் மாணவிகள் மீது விமானப்படை விளையாட்டு வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டின் இறுதிப்போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த முறைப்பாடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.தண்ணீரில் இடம்பெற்ற இந்தப்போட்டியின் போது தம்மை பாலியல் ரீதியான முறையில் மோசமாக துன்புறுத்தியதாகவும் இது இந்த விளைய…
-
- 0 replies
- 2.5k views
-
-
கெரவலபிட்டியவில் 500 மெகாவாட் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை இந்தியா அமைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்டிருந்தார். இதையடுத்து, இதுபற்றி கலந்துரையாடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரிகளைப் பணித்திருந்தார். இதுதொடர்பாக இந்திய-சிறிலங்கா கூட்டு பணிக்குழு பல்வேறு தெரிவுகள் தொடர்பாக ஆராய்ந்தது. இந்தநிலையிலேயே கெரவலப்பிட்டியவில், 500 மெகாவாட் திறன்கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன…
-
- 1 reply
- 336 views
-
-
பல்கலையில் இடம்பெற்ற சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் நேரடியாக எமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். வடக்குக்கான பயணத்தை கடந்த 12 ஆம் திகதி மேற் கொண்ட, இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரீட் லொட்சன் யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். இதன்போது யாழ்ப் பாணத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், யாழ். ஆயர் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தார். பின்னர் கொழும்பு திரும…
-
- 10 replies
- 925 views
-
-
ஈழத்தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் வி.பி.சிங்கின் பெயர் இடம்பெற்றே தீரும். ராஜிவ்காந்தி அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக் கொண்ட புண்ணியம் இவருக்கே உரித்தானது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மைந்தனாக ஜூன் 25, 1931-ல் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங்கை, மண்டா என்ற அரச குடும்பம் தத்தெடுத்துக்கொண்டது. பூனேவில் இருக்கும் ஃபெர்குஸன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போதே அவருக்கு காதல் வந்துவிட்டது. காதலியின் பெயர், காங்கிரஸ். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது சிங்குக்கு அதீத ஈர்ப்பு இருந்தது, தனக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுக்கும் அளவுக்கு. …
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழில்.பந்தல் சேதம்,கழிவு ஊற்றி நாசம், உண்ணாவிரதமும் ஆரம்பம் வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012 08:29 (சுமித்தி) கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர். அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண…
-
- 6 replies
- 1.1k views
-
-
பல்லேகலையில் பிறந்த மேனியுடன் ஓட்டம் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில், வெளிநாட்டு பிரஜையொருவர், உடம்பில் ஒருதுண்டு துணியில்லாமல், மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்துள்ளார். மழை பெய்துகொண்டிருந்த போதே அவர், மைதானத்தைச் சுற்றி நிர்வாணமாக ஓட்டமெடுத்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார், அவரை மிக இலாவகமாக பிடித்து, மைதானத்துக்கு அப்பால்…
-
- 3 replies
- 698 views
-
-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் நாம் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூறவில்லை. விக்னேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார்? …
-
- 16 replies
- 2.1k views
-
-
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார். எலிக்காய்ச்சல் காரணமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சேற்று நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தொழில்புரிவோருக்கு எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162526&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 278 views
-
-
ஒரே தினத்தில் இலங்கை வங்கியின் 3 கிளைகள் புதிய இடங்களில் திறப்பு - கே.எல்.ரி. யுதாஜித் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மூன்று கிளைகள், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத் தொகுதிகளுக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருமதி. குமுதினி யோகரட்ணத்தினால் இந்தக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, ஆரையம்பதி ஆகிய கிளைகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் கிளையும், இவ்வாறு புதிய முகவரிகளில் திறந்து வைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 431 views
-
-
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியமைக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் மன்னார் பேராயர் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு முன்னர் சில தடவைகளும் மன்னார் ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தைரிமான முறையில் மன்னார் பேராயர் குரல் கொடுத்து வருவதாகவும், இது பெருமையளிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜனநாயகத்திற்காகவும், நீதிக்காகவும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் எழுப்பப்படும் குரல்களுக்கு புலி ஆதரவு முத்திரை குத்தப்படு…
-
- 0 replies
- 486 views
-
-
புலிக் கொடி ஏற்றியவர்களை துரத்திப் பிடித்தவர்களுக்கு பாலியல் வன் கொடுமையாளர்களை தெரிவதில்லையா? தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கோரி ஈபிடிபியின் அனுசரணையுடன் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை மண்டைதீவில் நடத்தப்பட்டுள்ளது. ரோஜா சிறுவர் அமைப்பு எனும் பேரில் நடத்தப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டம் அண்மையில் நான்கு வயதேயான சிறுமி மீதான பாலியல் வன்முறை மற்றும் படுகொலையை கண்டித்து நடத்தப்பட்டிருந்தது. சுமார் முந்நூறிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் கூடிய அளவில் அரச பணியாளர்களும் கலந்து கொண்டனர். வேலணையிலுள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை கூட்டுறவு அமைப்புக்களது அங்கத்தவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர…
-
- 2 replies
- 1.3k views
-
-
அரசாங்கம் எமக்கு புனவர்வாழ்வளிப்பதாகக் கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தைச் செய்து நம்பவைத்து ஏமாற்றியுள்ளது என முன்னாள் போராளியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கு சர்வதேசமும் தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் போராளியான சுப்ரமணியம் தவமணி என்பவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நான் 2009.05.11இல் ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தேன். பின்பு எம்மை வவுனியா பூந்தோட்ட முகாமிலும், செட்டிகுள முகாமிலும் தடுத்துவைத்தார்கள். அங்கெல்லாம் எமக்கு கோழி இறைச்சியே உணவாகத்தருவார்கள். ஒருநாள் மீன்தரப்படும். நாம் உணவு சமைப்போம். ஆனால் அவர்…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டம் : தம்மை விடுதலை செய்விப்பதாக அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கமைய தாம் விடுவிக்கப்படவில்லை எனவும், இதன்காரணமாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் களுத்துறை, வெலிக்கடை, பூசா, மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200க்கும் அதிகமான கைதிகள் ஈடுபடவுள்ளனர். ஏற்கெனவே உண்ணாவிரதம் மேற்கொள்ள தாம் எடுத்த முடிவை அரசியல்வாதிகள் தந்த உறுதிமொழி காரணமாகக் கைவிட்டதாகவும் இம்முறை உறுதிமொழிகள் எதனையும் கேட்கப்போவதில்லை…
-
- 0 replies
- 581 views
-
-
நல்லூர் திருவிழாவுக்கான காளாஞ்சி கையளிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை, வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி (கலசம்) கையளிக்கும் நிகழ்வு இன்று (16) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. நல்லூர் ஆலயத்தில் இருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்து…
-
- 0 replies
- 351 views
-
-
பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 07:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகால…
-
- 8 replies
- 3.3k views
- 1 follower
-
-
ஐ.நா செயலா, தமிழக முதல்வர் ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை ஆக்கிரமித்து சிறிலங்காப் படையினர் வன்னிப் பகுதியில் உள்ள மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வான் தாக்குதல்கள் மூலம் மக்களை படுகொலை செய்து வருகின்றனர். சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையின் உச்சகட்டமாகவே எமது மாணவர் ஒன்றியம் இதனைப் பார்க்கிறது. எனவே சிங்கள அரசின் திட்டமிட்ட இவ் இனப் படுகொலையை உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிற்கும் தமிழக முதல்வரிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. சங்கதி
-
- 0 replies
- 789 views
-
-
50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் மீட்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் வைத்து 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 1000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு மாத்திரையினதும் பெறுமதி 4500 தொடக்கம் 5000 வரை என சுங்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த மாத்திரைகள் அடங்கிய பொதி அஞ்சல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் பெயருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10792
-
- 0 replies
- 346 views
-
-
மட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது! மட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த கடமையில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் முருகன்சிலையை கைப்பற்றியுள்ள சம்பவம் நேற்று (திங்கட்கிழமை ) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன்…
-
- 0 replies
- 397 views
-
-
சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த இளஞ்செழியன் மறுப்பு சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர…
-
- 7 replies
- 1.6k views
-
-
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களின் மீள்குடி…
-
- 6 replies
- 536 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
புதியரக முச்சக்கரவண்டிகள் விற்பனையில் கொழும்பு - வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று நேற்றைய தினம் புதியரக முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்ட முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. புது விதமான முறையிலும் பயணத்துக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கபட்ட இந்த வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். http://onlineuthayan.com/news/17672
-
- 0 replies
- 376 views
-
-
பொன்சேகா கூற்றை நிரூபிக்கும் தலைவர்கள் தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமாவும், ஆழமாக…
-
- 0 replies
- 982 views
-