ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தமிழ் இளைஞர்கள்... புலனாய்வு அச்சுறுத்தலால், நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றார்கள் – சிறீதரன் தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வத…
-
- 0 replies
- 252 views
-
-
விஜேதாச ராஜபக்சவின் கருத்துகளை ஏற்க முடியாது ; அமைச்சர் மனோ கணேசன் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தொடர்ச்சியாக தெரிவித்துவரும் கருத்துகளை ஏற்க முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த கருத்துகள் சிறுபான்மை மக்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் நமது அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துகின்றன. கடந்த தேர்தல் காலங்கள…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும் கெரவலபிட்டி மின் நிலையம் அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும் என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒ…
-
- 2 replies
- 571 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார். உமா குமரனின் பெற்றோர் சிறிலங்காவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் கலைப்பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/index.php
-
- 41 replies
- 2.5k views
-
-
அரசியல் என்பது வாய்ப்புக்கு ஏற்ப வளைவதுதான் இதுவரை காலமும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கூறிவந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இப்போது தனது கொள்கையைக் கைவிட்டு அல்லது தளர்த்தி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது. வடக்கு மாகாண சபை தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல என்ற காரணத்தாலேயே, அதாவது மாகாண சபையை ஒரு தீர்வாகத் தாம் ஏற்காத காரணத்தாலேயே அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அந்தக் கட்சி கூறிவந்தது. இப்போது அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. அது நல்ல விடயம்தான். போருக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழ்த் தேச…
-
- 0 replies
- 386 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைக…
-
- 6 replies
- 890 views
-
-
காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு நிதி சட்டவாக்க அதிகாரங்கள் வடக்கு-கிழக்குத் தமிழர்களுக்குக் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் சேர்த்து நிதி, சட்டவாக்க அதிகாரங்களையும் அரசு மேலதிகமாக வழங்கவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பன்னாட்டு நிகழ்ச்சி நிரலில் நடக்கும் இந்தத் தேசவிரோத அரசமைப்பால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்புக்கு எதிராக இன்று பௌத்த பீடங்கள் களமிறங்கியுள்ளன. பௌத்த தேரர்கள் எல்லாவற்றையும் எத…
-
- 0 replies
- 386 views
-
-
(ஆர்.ராம்) மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் தொடரும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அடுத்து வரும் காலத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…
-
- 2 replies
- 567 views
-
-
அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய் தமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது. அறநெறி பிறழாத, நல்ல தலைவனாய் -பிரபாகரன் -தமிழினத்திற்கு! புத்த நெறியையே பிறழச்செய்த கொடுங்கோலனாய் -மகிந்த- சிங்கள இனத்திற்கு!! இனத்துரோகிகளோடு கை கோர்த்து,சர்வதேசமே சாட்சியாய் நிற்க, மனித பேரவலத்தை நடத்திக் காட்டிவிட்டான் மகிந்த. தமிழர் தாயகத்தில் மகிந்த சகோதர்களின் பிணந்தின்னும் வெறிக்கு தமிழினமே அழிந்து கொண்டிருந்த போது தான்…. தாய் தமிழகமும்,புலம்பெயர் நாடுகள…
-
- 2 replies
- 1k views
-
-
மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெரு…
-
- 20 replies
- 3.5k views
-
-
இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவது தொடர்பில் இலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தமிழகத்தில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் ஒட்டுமொத்தமாக மன்மோகன் சிங் வருகையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில் கடைசியாக வருகின்ற இந்திய செய்திகளின்படி, இந்திய பிரதமர் இலங்கை வந்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார் என்றே தெரியவருகிறது. இந்திய மத்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக தமிழர்கள் தொடர்பாகவும் இந்திய பிரதமருக்கு பாரிய கடப்பாடுகள் உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கையுடனான நட்பை பேணுவதற்காக வரலாறு முழுக்க…
-
- 1 reply
- 471 views
-
-
புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு Published by Gnanaprabu on 2017-07-20 16:57:2 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட…
-
- 6 replies
- 512 views
-
-
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடைநிறுத்தியுள்ளது. எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவருமே இவ்வாறு கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வரவு -செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக, அவர்களிடம் விளக்கம…
-
- 0 replies
- 173 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர். நேற்று மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இது தொடர்பாகக் கூடி ஆராயப்பட்ட போதிலும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தெடர்பாகவும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும், இச்சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்பது குறித்தும் நாடாளுமன்ற…
-
- 1 reply
- 636 views
-
-
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச்செல்வதால் அதனை மீட்கும் போராட்டத்தில் இணையுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்ப்பதில் உறுதியாக உள்ளன. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் தமிழர்களாகிய நாங்கள் வேறுபாடின்றி ஒற்றுமைப்பட வேண்டும். குறிப்பாக வருகின்ற கிழக்கு மாகாண தேர்தலில் தேசியம் என்று பேசி ஏமாற்றுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கு கிழ…
-
- 13 replies
- 963 views
-
-
இராணுவம் மிகப் பெரும் துரோகம் ஒன்றை சந்தித்துள்ளது - ஜகத் ஜெயசூரிய ஸ்ரீலங்கா இராணுவம் மிகப் பெரும் துரோகம் ஒன்றை சந்தித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று காலை படையினர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த துரோகம் யாரால் இழைக்கப்பட்டது என்பது குறித்தோ எவ்வகையான துரோகம் என்பது குறித்தேர் அவர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. http://www.pathivu.com/news/4603/68//d,view.aspx
-
- 2 replies
- 2k views
-
-
போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 150 மில்லியன் டொலர் அவசர கடனுதவியைத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (Asian Development Bank) சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த வேண்டுகோளை ஆசிய அபிவிருத்தி வங்கி சாதகமாக அணுகுவதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் றிச்சர்ட் வோக்ஸ் ((Richard Vokes), போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு கடனுதவி வழங்குவது பற்றி ஆய்வு செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராகவே இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை விட தேவை அதிகமாக இருந்தால், வடக்கில் மேற்கொள்ளப்…
-
- 0 replies
- 388 views
-
-
அதிகாரிகள் மீது தாக்குதல் – மரம் அரிந்தோரை பிடிக்க முற்பட்டபோது சம்பவம்!! சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களைக் கைது செய்யச் சென்ற வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாதவர்கள், ஏனைய அலுவலர்களையும் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் களப் பயணம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி காட்டுப் பகுதியில் கேட்டதைத் தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றனர். ஜந்து மேற்பட்டவா்கள் மூன்…
-
- 2 replies
- 421 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார். பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் பிரதமர் மஹிந்த | Virakesari.lk
-
- 17 replies
- 1.2k views
-
-
சிங்களத்தின் கூலிப்படைக் கல்விமான்கள்! தனது இனக்கொலையை நியாயப்படுத்த கொழும்பிற்கு உதவும் மேற்குலகில் படித்த நான்கு தனிநபர்கள் - சுவீடிஷ் பேராசிரியர் சுவீடன் உப்சாலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீடர் ஷல்க் என்பவர் சிங்கள இனக்கொலை அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், அதற்கெதிரான சர்வதேச கண்டனங்களைக் கைய்யாளவும் என மேற்குலகில் படித்துப் பட்டம் பெற்ற நான்கு சிங்களவர்களை சிங்கள அர்சாங்கம் பாவிக்கிறது என்று தனது ஆய்வொன்றில் கூறியுள்ளார். இவர்களைக் கூலிப்படை கல்விமான்கள் என்று குறிப்பிடும் இந்தப் பேராசிரியர் இவர்களை சிங்கள அடிப்படை இனவாதிகள் என்றும் அழைக்கிறார். இவர்களிடமிருந்து தமிழருக்கு எந்தவித சாத்தியமான தீர்வுகளோ கிடைக்கப்போவதில்லை என்றும், இவர்களின் …
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக சில வேளைகளில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை வெற்றிக் கொள்ள கட்சி பேதமின்றி அனைதது தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உள்விவகாரப் பிரச்சினைகள் உள்ளக ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர சர்வதேச ரீதியில் அல்ல என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு…
-
- 0 replies
- 330 views
-
-
70ஆவது சுதந்திர தினம்...கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. (படப்பிடிப்பு: தமித் விக்கிரமசிங்க) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/70ஆவது-சுதந்திர-தினம்/46-202397
-
- 0 replies
- 237 views
-
-
கிளிநொச்சியில் உள்ள தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டங்களில் காணப்பட்ட தொல்பொருள் ஆய்வுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கேசேர்த்து மக்கள் பார்வைக்காக வைப்பதற்காகவும் வரலாற்று சின்னங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டும் தமிழ் மக்களினால் கட்டப்பட்டு வந்த தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் முறுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி சென்றுவந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நகர்ப்பகுதியில் பண்பாட்டு மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பெற்ற தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்டையினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதை நேரில் காண…
-
- 0 replies
- 805 views
-
-
வவுனியாவில் பேரூந்து விபத்து – இருவர் பலி வவுனியா- கோகலியா 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த பேரூந்தின் சாரதியும் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு மேலும் 9பேர் படுகாயமடைந்நத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://meenakam.com/?p=3425
-
- 0 replies
- 639 views
-
-
கதிர்காமக் கந்தனுக்கு ஏற்பட்ட பரிதாபம்: கப்புராலவிற்கும் – நிலமேக்கும் இடையில் மோதல் - ஓடித் தப்பித்த பக்தர்கள்
-
- 1 reply
- 336 views
-