Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகாமல் 'உதயன்' நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 'சுடரொளி', 'உதயன்' நாளேடுகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனிடம் உறுதியளித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 413 views
  2. பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு ஆலோசனை June 1, 2021 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்களின் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனாத் தொற்று நாட்டில் அதிகரிக்குமாக இருந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, இதனால் சுகாதாரப் பிரிவு வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி நாட்டை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரும் பொது இலக்கின் கீழ் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்த…

  3. இலங்கை தமிழர்களுக்காக ரூ.500 கோடி எல்லாமே இந்திய அரசின் மாயவித்தை - விஜயகாந்த் வீரகேசரி நாளேடு 7/7/2009 10:36:46 PM - பாராளுமன்றத்தில் நேற்று 2009, 2010ற்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை தமிழர் புனர் வாழ்வு செயற்றிட்டங்களிற்காகவென ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இவை எல்லாமே இந்திய அரசின் மாயவித்தைதான் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரவு செலவு கணக்கை அறிவித்தார்களே தவிர, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இல்லை. இலங்கை …

  4. பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுதவியை ஏமாற்றி பெற விவசாய சிறுகடன் திட்டம் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறீலங்கா அரசு கபடத்தனமான அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. வடக்கில் போர் இடம்பெற்ற பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில், விவசாயத்தினை ஊக்குவிக்க இருப்பதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இதற்கென சிறுகடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும

  5. கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய 'டிவிடி' இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். 'பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர். அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். அரசாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இது குறித்து கவலை அடைகிறேன். பொலிஸாருக்கு எதிரான குற்றச…

  6. கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜை உயிருடன் மீட்பு தென்பகுதிக் கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்ததில் உயிருக்காகப் போராடி கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜையொருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். இச் சம்பவம் ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள கொஹுலன்கல கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு இரு படகுகளுடன் விரைந்த இலங்கை கடற்படையினர் மார்க் அந்திரே பிரான்கோஸ் என்ற பிரான்ஸ் நாட்டவரை உயிருடன் மீட்டதுடன் அவர் பயணித்த படகையும் மீட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து காலிக்கு கடற் பயணமாக பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜையி…

  7. கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயா பெரேராவை சிறிலங்கா அரசு திரும்பி அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசியல் வட்டாரங்களில் தோன்றியுள்ள உள்விவகார நெருக்கடிகளின் காரணமாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தயா பெரேராவை அரசு திரும்ப அழைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. சிறிலங்கா திரும்பியதும் அவர் தனது பதவியில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பாக தயா பெரேரா தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. கனடாவின் நிழல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொப் றே சிறிலங்கா அரசினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் கனடாவுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள…

  8. தனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா? பாரிய கருத்து மோதல்களை சந்தித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்து மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. Image captionமே தினக் கூட்டங்கள் தொடர்பாக சிறிசேன அணியின் சுவரொட்டி ஜனாதிபதி சிறிசேன அணியின் மே தினக் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை கண்டியில் நடைபெறவுள்ளது. கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீ …

  9. கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து இன்றையதினம் விவாதம்! எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று முற்பகல் 10 மணிமுதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. அத்துடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்…

  10. இலங்கையில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதற்கும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படுவதற்கும் அமெரிக்கா உறுதியான ஆதரவு அளிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அவரைச் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக செயலவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க தமிழ்ச் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அமைப்புகளைச் சேர்ந்த 3 தமிழ் நாட்டுத் தமிழர்கள் உட்பட 16 பிரதிநிதிகள் 'அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை' (US Tamil Political Action Council - USTPAC) என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து பங்கேற்றனர். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அத…

    • 0 replies
    • 618 views
  11. அனைத்து மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இன்று வியாழக்கிழமை (29.08.13) பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவவை பிறப்பித்தது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95878/language/ta-IN/article.aspx

  12. பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு (ரொபட் அன்­டனி) இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வியா­ழக்­கி­ழமை மாலை இலங்­கைக்கு வருகை தரு­கின்றார். வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­ மிக்­க­தாக அமைந்­துள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை அவர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­…

    • 1 reply
    • 499 views
  13. பூநகரி- கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம் பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பயனாளர்கள், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன. பொருத்தமான இடங்கள் த…

  14. கொழும்பு டும்பிகேஷன் வீதி பம்பலப்பிட்டி முதல் லிப்டன் சுற்றுவட்டம் வரையில் அபிவிருத்தி செய்வதற்காக (பாதசாரிகள் நடப்பதற்கு கற்களை நட்டு, பூச்செடிகளை வைப்பதற்கு) பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கமைய முன்வைக்கப்பட்ட அனுமதிப்பத்திரற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் மகிந்த ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த அனுமதிப் பத்திரத்திரத்தின் மதிப்பீடு 1032 மில்லியன் ரூபாவாகும். கொழும்பு மாநகரின் அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீதியின் நீளம் 3.8 கிலோமீற்றராகும். இதற்கமைய ஒரு மீற்றர் நீளத்திற்கு 2.6 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. http://goldtamil.com/?p=7982

  15. சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது! சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச வெசாக் மாநாடு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது நபரொருவர் மதகுரு போன்று வேடமிட்டு சர்வதேச வெசாக் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைசெய்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/20038

    • 3 replies
    • 448 views
  16. நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு – 10 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை! நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடையடுத்து, 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவ…

  17. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 29/08/2009, 18:44 இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் பதவி சரத்பொன்சேகாவின் துணைவிக்கு? சிறீலங்காப் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் துணைவியாருக்கு இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் பொறுப்பு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ சேவை அதிகார சபையின் உறுப்பினரான திலின் ஜயவீர தொலைக்காட்சி ஒன்றில் வழங்கிய தகவலை வைத்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் சரத்பொன்சேகாவை நெருக்கமாக உறவைப் பேணுவதற்காக இப் பொறுப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ சேவை அதிகார சபையில் தற்போது நிரந்தர தலைவர் ஒருவர் இன்மையினால், ஜெனரல் பாலித பெர்ன…

  18. இளவயது திருமண எதிர்ப்பு பிரச்சாரம் இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார். சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய …

  19. ‛மன்மோகன்சிங் மரணம்' ; ரவி கருணாநாயக்க பெயரில் டுவிட் ; அரசாங்கம் அதிரடி நடவடிக்கை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டு, உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/20395

  20. தமிழ்மாறன், ஐரோப்பா 11/09/2009, 20:36 மீள்குடியமர்த்துதல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியில்லை - அமெரிக்கா வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டு்ளள மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்பதியளிக்கவில்லை என அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டு்ளளது. முன்னாள் சிறீலங்காத் தூதுவரும் தற்போதைய அமெரிக்காவுக்கான ஆசிய பிராந்திய துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவா இதனைத் தெரிவித்து்ளளார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாத் தடுப்பு முகாங்களில் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்க…

  21. NOORUL HUTHA UMAR - யாரும், எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால் அந்த காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குறித்த காணிக்கு அண்மையில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட கோயில் உள்ளது. தமிழர்களின் மரபுகள், கலாச்சாரம் இதன்மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முஸ்லிங்கள் செறிந்துவாழும் பிரதேசத்தின் நடுவில் இந்துக்கடவுள் சிலைகளை நிறுவினால் எப்படி இருக்கும். அதுபோலவே இந்த செயலும் உள்ளது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத…

  22. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாட்களின் நான்காம் நாள்(18-09-1987) இன்று அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார்.அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன். நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும்…

  23. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவிலுள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். எனினும், இந்த வீடு தானாக தீப்பற்றிக் கொண்டதாகவும், இதுவொரு விபத்து எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த வீடு எரியுண்ட காட்சிகள் வெளிநாட்டு கண்காணிப்பாளர் ஒருவரின் கமராவில் பதிவாகியதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறினார். எனினும், வேட்பாளரின் வீடு திட்டமிட்டு கொளுத்தப்பட்டதா? அல்லது விபத்தா? என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. http://tamilworldtoday.com/home

  24. "எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மீள் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20638

  25. வணக்கம் உறவுகளே, தயவுசெய்து இப்பிரதிகளை கீழே தரப்பட்ட முகவரிகளிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் உங்களைக்கேட்டுக்கொள்கின்றே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.